கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது...
எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில்தான் எட்டாம வகுப்பு வரை...
சென்ட் ஜோசப் கம்மியம் பேட்டை பள்ளியில் 9ஜி வகுப்புல் நான் சேர்ந்து ஒரு வருடம் பெயில் வேறு ...
அப்பதான் சூரி எனக்கு பழக்கம்..
பத்தாம் வகுப்பு படிக்கும் போது மேக்ஸ் டுயஷனுக்கு காலையில் ஐந்து மணி பேச்சில் நானும் என் அத்தை மகன் முரளியும் சேர்த்தோம் அப்போதுதான் சூரி எனக்கு நெருக்கம்...
அவன் என் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பங்களுக்கு சொந்தக்காரன்...
அவன் மூலமாக எனக்கு அறிமுகமான நண்பன் சுபாஷ்...
படித்து முடித்து நியூசினிமாவுக்கு எதிரில் இருக்கும் பன்னலால் ஜெனரல் மர்ச்சென்ட் கடையை நிர்வாகித்தான்...
நான் நிறைய நேரங்கள் செலவிட்டது அந்த கடையில்தான்.
அவன் கடையில் இருக்கும் போதுதான் என் மனைவிக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டு எதோ ஒரு புள்ளியில் அது காதலாக மாறியது...
நிறைய இரவுகள் பேசி பேசி விழித்து இருக்கின்றோம்.. கொட்டும் மழையில் சென்னைக்கு ரயில் ஏற்றி மழையில் சென்ற அந்த மழை இரவை என்றும் மறக்கவே முடியாது...
பக்கம் பக்கமாக கடிதம் எழுதி கண்ணில் நீர்வர படித்த காலங்கள் ரம்யமானவை..
மொத்தமாக சொன்னால் நானும் அவனும் நகமும் சதையும் போல...
வாழ்க்கை மேம்பட புடித்த தொழில் செய்ய நான் சென்னை வந்து விட முன்னை விட பழக்கம் குறைந்து போனது.... அதற்கு நடுவில் எனக்கும் அவனுக்கும் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபம் காரணமாயிற்று...
ஆனாலும் மற்றவர்கள் என்றால் முஞ்சில் கூட முழிக்காமல் போய் இருப்பார்கள். நான் பழகிய காலங்கள் நினைத்து பார்த்தேன்.. ச்சே இது பெரிய விஷயமா என்று மீண்டும் பேசினேன்.. ஆனாலும் முன்பு அதிகம் பேசிக்கொள்ள முடியவில்லை என்பதும் தூரம் அதிகமாகிவிட்டதும் உண்மை...
அந்த கடை அவனது மாமா கடை... அதில் இருந்து பார்ட்னர்ஷிப் பிரிந்து தனியாக புதுப்பாளயத்தில் புதிய கடை வைத்தான்.. நிறைய காம்படேஷன்... கடையை சின்னதாக வைத்து நடத்தி பார்த்தான்.. பின் உளுந்தூர் பேட்டையில் இருக்கும் அண்ணன் ஜிவல்லரி கடையில் சேர்ந்தான்.. காரணம் குடும்பம் அத்தனையும் கடலுரில் இருந்து உளுந்துர்பேட்டை க்கு போய் செட்டில் ஆகி விட்டார்கள்.
அவ்வப்போது முக்கிய நிகழ்வுகளுக்கு பேசிக்கொள்வோம்.
திருமணத்துக்கு பெண் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்றார்கள்... கொஞ்சம் வருடம் கழித்து விசாரித்த போது ஏதும் செட் ஆகவில்லை என்றார்கள்.
திடிர் என்று அவன் ஜெயின் சாமியாராக ஆக போகின்றான் என்று தகவல்வர துறவரம் பூனும் நிகழ்ச்சிக்கு நான் குடும்பத்துடன் சென்று இருந்தேன்..
எல்லாம் கை மீறி போய் விட்டது... ஒருவேளை நான் உடன் இருந்து இருந்தால் அவன் சாமியயாராக போய் இருக்க மாட்டான் என்று உள்ளுணர்வு சொன்னாலும் நடக்கும் என்றால் அது நடந்தே தீரும் என்று மனதை தேற்றிக்கொண்டேன்...
கடுமையான துறவரம் என்பது ஜெயின் துறவரம்தான்...
சாமியாராக ஆசிர்வாதம் செய்யப்பட்டது...
எங்கு நடந்தாலும் செருப்பு இல்லாமல் நடக்க வேண்டும்... யாசகம் பெற்று உணவு உட்கொள்ள வேண்டும்... சாப்பிடும நேரம் தவிர்த்து எப்போதும் வாயில் துணிக்கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்.
இன்னும் சொல்ல நிறைய இருக்கு சொன்னால் மயக்கம் வரும்.
சூரி சாமியாராக மாறி ஒரு வருடம் ஆகின்றது... போன மழைக்கு ஊட்டியில் இருந்தான்... தற்போது பூந்தமல்லிக்கு நடந்தே வந்து இருப்பதாக தகவல் கிடைக்க நானும் நண்பரும் சென்று பார்க்க போய் இருந்தோம்...
சொன்ன அட்ரசில் இருந்து ஒரு வயதான சாமியார் மிக வேகமாக நடக்க.. கடைசியில் உற்று பார்த்தால் எனது நண்பன் சூரிதான்... வழக்கம் போல எல்லா சந்திப்பிலும் கை குலுக்க நான் கை நீட்ட பக்கத்தில் இருந்த உதவியாளர்.. சாமிஜி யாருக்கும் கை கொடுக்க மாட்டார் என்றார்..
அதன் பின் ஒரு அரைமணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்..
நான் நிறைய பேசுவேன் என்று எதிர்பார்த்தான் நான் பேசவில்லை... என்னோடு வந்த தம்பி வினோத் கேட்டான்... எந்த புள்ளி சாமியாராக மாற்றியது என்று காரணம் சொன்னன்.. என் கணிப்பும் சரியே.
தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மக்களிடம் அன்பை போதித்து வருவதாகவும் சொன்னன்..
தலை நரைத்து உடல் இளகி கன்னம் ஓட்டி பார்க்க என் வயிறுகலங்கியது.. கடந்து கால நினைவுகள்தான் வியாபித்து இருந்ததே ஒழிய... நேரில் இருக்கும் உட்கார்ந்து இருக்கும் சாமியார் என் மனதில் தைக்கவேயில்லை..
அவரவர்க்கு ஒரு மார்கம் உண்டு அவன் சாமியார் மார்கத்தை தேர்ந்து எடுத்துவிட்டான்... அவ்வளவுதான்.
விடைபெற்று வெளியே வந்தோம்... நான் அழைந்து சென்ற தம்பி கேட்டான்.. சாமியாரா மாறினா புது பேர் வச்சிடுவாங்க...
நீங்க ஏன் அவரோடு புது பேர் கேட்கலை..??
அவன் சவுகர்யத்துக்கு மன அமைதிக்கு சாமியார போயிட்டான்..
எனக்கு புது பேர் வேணாம்... அவன் என்னைக்கும் என் சூரிதான் என்றேன்...
(எழுதும் போது கடந்த கால நினைவுகள் மனதில் அழுத்தியபடி கலங்கி இந்த பதிவை எழுதி இருக்கிறேன்.)
ஜாக்கிசேகர்
15/07/2018
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment