பெரிய ஆர்டிஸ்ட் வேல்யூ எல்லாம் இல்லை...
நயன்தாரா மட்டுமே பிரபலமானவர்... அப்புறம் போகிபாபு... அவ்வளவுதான்...
ஆனாலும் காலையில் ஆறுமணிக்கு ஸ்பெஷல் ஷோ போடுகின்றார்கள்... கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்துக்கே காலை பத்து மணிக்கு மேல்தான் படம் போட்டார்கள்...
கோ கோ படம் ஸ்பெஷலுக்கு காரணம் யோகிபாபு மற்றும் நயன் காமினேஷன் லவ் பண்ணவா பட்டு செம... அதே நேரத்தில் டிரைலரை வைத்து பார்க்கும் போது இந்த திரைப்படம் கிரைம் மற்றும் பிளாக் ஹுயுமர் என்பது தெரிந்தாலும் படத்தை பற்றி நிறைய நிறைய எதிர்பார்ப்பு இருந்தது என்பது நிஜம்...
ஆனால் காலையில் ஆறு மணி ஸ்பெஷல் ஷோவுக்கு ஏழுந்து போனது ஒர்த் என்பதை படம் நிருபித்து இருக்கின்றது...
இயக்குனர் நெல்சன் மிக கவனமாக நுனுக்கமாக இந்த படத்தி திரைக்கதை மற்றும் கதை மாந்தர்களை சரியான இடத்தில் பொருத்து இருக்கின்றார்...
எங்க அக்காவை வச்சிக்கிட்டு இருக்கே என்று விக்கு பார்ட்டியாக இருக்கட்டும் எல்கே கேரக்டரைகட்டும்... அதே நேரத்துல மளிகை கடை ஆனந் பையனாக இருக்கட்டும் அசத்தி இருக்கின்றார்கள்..
மிக முக்கியமாக வேன் சீனில் யோகி பாபு லூட்டி சிரித்து சிரித்து வயிறு வலியை ஏற்படுத்துகின்றார்கள்...
எல்லாத்தை விட நயன்தாராவைவிட நயன்தாரா தங்கச்சியா நடிச்ச ஜாக்குலின் அசத்தல் அசத்தல் டயலாக் டெலிவரி மட்டுமல்ல நடிப்பிலும்தான்..
ஜாக்கிசேகர்
#kolamavukokilaReview
#Cocoreview
#Nayanthara
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment