அம்மா...
சொல்லுடி...
பாட்டு கிளாஸ்ல... புதுசா ஒரு ஆண்ட்டி வந்தாங்க.... அவங்களுக்கு ஒரு பொண்ணு... ஒரு பையன்...
ஆண்ட்டி லூஸ் ஹேர் விட்டு இருந்தாங்க... கருப்பு சுடிதார்.. முன்னாடி பக்கம் டிசைன் வேற போட்டு இருந்துச்சி...
சந்தேகமே இல்ல... நீ ஜாக்கி பொண்ணுதான்.. இவ்வளவு டீடெயில் சொல்லுறியே....!!!
படிப்புதான் கொஞ்சம் கம்மியா இருக்கு.... அது மட்டும் இருந்தா.. நீ பாதி அம்மா மாதிரி பாதி அப்பா மாதிரி யாழினி...
ஆங்.... ஒன்னு மறந்துட்டேன் யாழினி ...
எழுதறதுன்னா எட்டிக்காகசப்பு உனக்கு....
ஆனா எம் புருசன்....
சோறு தண்ணியில்லாம எழுத சொன்னா.... எழுதிக்கிட்டே கிடப்பானே...???
ஆனா ஒன்னு மட்டும் யாழினி... உனக்கும் உங்கப்பனுக்கும் ஒரே விஷயத்தல செம ஒத்துமை.
எதுவா இருந்தாலும் இரண்டு பேருக்கும் உடனே வேணும்... இப்பவே இந்த நிமிஷமே, இந்த நொடியே, வேணும்... மத்தவங்க எப்படி இருந்தாலும் உங்க ரெண்டு பேருக்குமே கவலையே இல்லை...
இப்படியே ஆத்தாளுக்கும் மகளுக்கும் பேச்சு நீண்டாலும்...
எந்த விஷயத்தை சொல்றே என்று அப்பாவியாக கேட்க எனக்கு ஆசைதான்...
சில கேள்விகளையோ... ஆச்சர்யங்களையோ நான் கேள்வி கேட்டு உடனே தெளிவுபடுத்திக்கொள்வது இல்லை
உடலுறவின் உச்சத்தில் பெண் பினாத்தும் வார்த்தைக்கும் வாங்கியங்களுக்கும் ஏன் எதற்கு என்று அர்த்தம் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டு இருக்கின்றோமா - என்ன ??
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
26/07/2018
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
0 comments:
Post a Comment