இரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018





#இரும்புத்திரை #IrumbuThirai

இரும்புத்திரை திரைவிமர்சனம்

படம் ஆரம்பித்து பதினைந்து நிமிஷத்தில் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்பட கதை போல இருக்கின்றது என்று மனது Worst மோடுக்கு போனாலும் இன்டர்வெல்லுக்கு பிறகு இரும்புத்திரை திரைப்படம் டாப் கியர் போட்டு பரபரப்பாய் பயணிப்பதில் நிம்மதி..

இரண்டே முக்கா மணிநேரம் படம்... அதற்காக சிலுக்குவார் பட்டி மல்லிப்பூவை வாங்கி காதில் சுற்ற எத்தனிக்காமல் அதற்கு தேவையான தகவல்களை சேகரித்து திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்.. அதற்காக மித்ரன் குழுவினருக்கு வாழ்த்துகள்.
மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து டிஜிட்டல் இந்தியா கோஷம் காதை பிளக்கின்றது…

நாம் இணையத்தில் கொடுக்கும் தகவல்கள் நல்லவர்களிடம் இருந்தால் பிரச்சனையே இல்லை… ஆனால் அதுவே கெட்டவன் கையில் அந்த தகவல்கள் சென்று விட்டால்.. நம்மை படுத்தி எடுத்து யாரிடம் படுப்பது என்பதில் இருந்து யாருக்கு ஓட்டு போடுவது என்பது வரை கெட்டவன் தீர்மாணிக்கு விஷயங்களாக போய் விடும் என்பதே இந்த திரைப்படத்தின் ஒன்லைன்.

விஷால் மிலிட்டரி மேஜர் என்றால் நம்ப முடிகின்றது.. அதே நேரத்தில் சமந்தாவை கோபப்படுத்தி அந்த பாலை அவர் கையில் கொடுக்கும் காட்சியில் செமை சீன்.

படத்தில் அசத்துவது டெல்லிகணேஷும் விஷாலின் தங்கையாக நடித்து இருப்பவரும் ..

படத்தின் இடைவேளைக்கு பிறகு அர்ஜூன் விஷாலின் ஆடுபுலி ஆட்டம் அசத்தல் ஆட்டம்… தனி ஒருவன் திரைப்படத்துக்கு பிறகு வெயிட்டான வில்லன் அவனை துரத்தும் நாயகன்..

முக்கியமாக லிப்ட் சீன் அர்ஜூனின் நடிப்பும் செக் மேட்டும் சான்சே இல்லை…

திரைக்கதையின் பலமே.. விஷால் சிரித்தால் அர்ஜூன் கலவரமாவதும்.. அர்ஜூன் சிரித்தால் விஷால் கலவரமாவதும் என்று அசத்தி இருக்கின்றார்கள்..

மேலும் ரசிக்க




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner