தோழிகளோடு பேசிக்கொண்டு இருந்தேன்.. அவள் குடும்பத்தில் சின்ன ஊடல்..
பேச்சின் சுவாரயஸ்யத்தில் உன் கணவனின் காதலை பார் ... காமத்தை பார் என்று சொல்லிவிட்டேன்..
உற்ற தோழி ஒருத்தி சொன்னாள்... உனக்கு எப்ப பாரு அதே நினைப்புதான் என்றதோடு மட்டுமல்லாமல்... எப்பபாரு எங்க சுத்தினாலும் நீ இங்கதான் வந்து நிப்ப... என்றார்..
சட்டென ஒரு கணம் திகைத்து போனேன்...காமத்தை தவிர்த்து நிறைய எழுதியிருக்கிறேன்... பேசி இருக்கிறேன்.. ஆனால் எப்ப பாரு உனக்கு அதுதான் நினைப்பு என்று சொன்ன போது... சட்டென வருத்தம் மேலிட்டது...
வெளிப்படையாக பேசாத இடத்தில் நான் அப்படி விளையாட்டாக பேசினாலும் தவறுதானே..,--??
தோழிகள் மத்தியில் காமத்தை பற்றியும் காதல் பற்றியும் அந்த குழுவில் பேசியவன் நான் மட்டுமே என்பதால்தான் .. வேறு யாராவது அதே போல பேசி வந்து இருந்தால் அப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை..
ஆனால் உண்மையில் நான் அப்படித்தான்...
ஓகே இருந்தாலும் யார் என்ன நினைத்தாலும் யார் என்ன சொன்னாலும் ....தொடர்ந்து காதலை பற்றியும் காமத்தை பற்றியும் நேரம் கிடைக்கும் போது நான் எழுதத்தான் போகிறேன்..
அந்த 70வதை கடந்த அம்மா என் தோழி ஒருத்தியிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள்..
காதலிச்சிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க..?
புள்ள பொறந்துடுச்சி.. விதவை அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு மாப்பிளை புள்ளையாண்டான் ஆடுறான்.. புள்ள பொறந்துடுச்சி.. ஆபிஸ்ல சிரிச்சி பேசினதுக்கு சந்தேகம் பெரிய சண்டைல டைவேர்ஸ் வரைக்கும் போயிடுச்சி..
இப்ப படுக்கறதுக்கு அவசரத்துக்கு நக்கறதுக்கு என் பொண்ணு வேணும்.. ஆசையா பேசி ஆங்கவா இங்கவான்னு கூப்பிட்டு இருக்கான் இது எனக்கு தெரியாது...
இரண்டு நாளைக்கு முன்னாடி அவ டிரஸ் பண்ணும் போது எதேச்சையாக பார்த்தேன்... உடம்பு புல்லா எல்லா எடத்தையும் கடிச்சி வச்சி இருக்கான்... கருப்பு கருப்பா கண்ணி போய் இருக்கு... என்னடி இதுன்னு கேட்டா... பொல பொலன்னு கண்ணுல தண்ணி..
சில விஷயத்தை பச்சையா ஒரு கட்டத்துக்கு மேல கேட்க முடியலை.. அரிப்பை அடக்க முடியலையான்னு கேட்கலாம்... இந்த வயசுலயும் புருசன் பக்கத்துல படுக்கலைன்னா தூக்கம் வர்ரது இல்லை... அவ சின்ன பொண்ணு.... நான் என்னத்த சொல்ல..
நிறைய இடத்துல பொம்பளை தனிஞ்சி போவ சுயகவுரவம் இழந்து நிக்க இந்த காமமும் ஒரு காரணம்மா என்றார்-..
அப்படியான காமத்தினை நான்கு பெண்கள் எப்படி கையாளுகின்றார்கள் அவர்கள்... சந்திக்கும் பிரச்சனை என்ன என்பதை மிக அழகாக நான்கு பிரபல இயக்குனர்கள் இயக்கத்தில் வந்து இருக்கும் திரைப்படம் லஸ்ட் ஸ்டோரிஸ்...
நான்கு திரைப்படத்தில் கடைசி திரைபடமான கரண்ஜோகர் இயக்கத்தில் கைராஅத்வானி நடிப்பில் பின்னி இருக்கின்றார்.. நான் இல்லை.. அதுவும் அந்த கபி குஷி கபி ஹம் பாடலை மிக்ஸ செய்த விதம் கிளைமாக்சில் எனக்கு இப்ப ஐஸ்கீரிம் வேணும் என்று கேட்பது என்று அசத்தி இருக்கின்றார்..
வைல்ட் டேல் திரைப்படத்துக்கு பின் மிக நேர்த்தியாக இயக்கி வெளிவந்து இருக்கும் படம்.
திருமணமானவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.. இந்த #luststories நெட்பிளிக்சில் இந்த படம் நேற்றுதான் ரிலிஸ் செய்தார்கள்... பார்த்து விட்டு கமென்ட்டில் கருத்து சொல்லவும்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
0 comments:
Post a Comment