#BiggBoss2Tamil | Day 15 - E 16 - Review By jackiesekar | #பிக்பாஸ்2



#biggbosstamil2 #biggboss2 #பிக்பாஸ்2
#biggbossday15 #biggbossepisode16 #vijaytv
• மும்தாஜ் மமதி பிரிந்த துயரத்தில் இருந்தார். ரம்யா சொன்னார் கேமரா கான்ஷியசோடு இருந்ததுதான் மமதி வெளியேற முக்கியகாரணம் இயல்பாக ஒருவார்த்தை கூட பேசாததே மக்கள் ஓட்டு போடாமல் விட்டு விட முக்கியகாரணம் என்றார்.



• பேஸ்புக்கில் நண்பர் புஹாரிராஜா நான் எல்லாம் எட்டாப்பு படிக்கும் போது மமதிக்காக ஹலோ தமிழா பார்த்து விட்டு செல்வேன் என்று தனது மலரும் நினைவுகளை தெரிவித்து இருந்தார்.
• மும்தாஜ் அழுதுக்கொண்டு இருக்கும் போது கட்டிப்புடிடா என்று மஹத் பாடியது முதிர்ச்சியின்மையை காட்டியது.. நிச்சயம் மும்தாஜ் சிரித்தாலும் வருத்தப்பட்டு இருப்பார்

• மஹத் யாழிகாவிடம் யூ நாட்டி என்று வழிந்துக்கொண்டு இருக்கா டேனியை ஹெல்புக்கு கூப்பிட மாமா இந்த ஹெல்புக்கு எல்லாம் என்னை கூப்பிடாதே என்று நக்கல் செய்தது ஓகே

• மஹத் ஐசுக்கு அட்வைஸ் செய்யும் போது… சிம்பு ஏதாவது மஹத் உடம்பில் பூந்துக்கொண்டு பேசினாரா.? என்று எனக்கு பெரிய டவுட்.. அந்த உலக அனுபவம்.. மனிதர்களை பற்றிய புரிதல் என்று யப்பா.. சாமி ஆளை விடு.

•ஐசு எனக்கு ஷாரிக்கிற்கும் எதுவும் இல்லை என்றாலும் யாஷிகா ஏற்றி விட்டுகொண்டு இருந்தார்.
•யார் கன்பெஷன் ரூமுக்கு முதலில் வருகின்றார்களோ.. அவர்களுக்குதான் இனி வரும் வாரத்து தலைவர் பதவி என்றதும் வைஷனவி ஓடிய ஓட்டம் இன்னும் என் கண் பார்வையில்

• சென்ட்ராயன் வைஷ்னவி இருவரும் ஜெயித்தகாரணத்தால் ஹவுஸ்மெட்டிடம் இருவரில் யார் அதிக ஹக் வாங்குகின்றார்களோ.. அவர்களுக்கே தலைவர் பதவி என்று சொல்ல வைஷ்னவி ஹக் வாங்க தலையால் தண்ணி குடிக்க வேண்டியதாகி விட்டது..

*மஹத்தால் சென்ட்ராயன் வெற்றிவாய்ப்பு பறிபோனாலும்.. ஜனனி இன்னோரு முறை ஹக் வேணுமா என்று கேட்ட போது ஒன்னு போதும் என்று மறுத்ததும் விஷயம் தெரிந்து ரித்விகா மீண்டும் வந்து பாசமாக கட்டி பிடிக்க தன் மார்பு படாமல் பார்த்துக்கொண்ட சென்ட்ராயன் செம.

*வைஷ்னவி தலைவியாக வேண்டும் என்ற பதட்டம் கண்களில் தெரிந்ததோடு சென்ட்ராயன் ஒவ்வோரு அசைவையும் பார்ததுக்கொண்டு இருந்தார்…
பிக்பாஸ் இரண்டு பேரை எலிமினேட் செய்ய வேண்டும் என்று சொன்ன போது. மஹத் வெளியே சென்ட்ராயன் மச்சான் மாமன் என்று சொன்னலும் உள்ளே வந்து சென்ட்ராயனுக்கு தொடர்ந்து ஆப்பு வைப்பது என்ன மாதிரி மனநிலை..?? அதே போல ஷாரிக்… சென்ட்ராயனுக்கு தொடர்ந்து ஆப்பு வைப்பது…

•தொடர்ந்து மும்தாஜ்யை கார்னர் செய்யும் அனந் இந்த முறை பாலாஜியை சொன்னார்..
•மும்தாஜ் ஐனனியை அன் ஹைஜனிக் என்று சொன்ன போது எனது லிட்டில் ஹார்ட் பர்ஸ்ட் ஆனது.

ஆனந் சார், நித்யா, பொன்னம்பலம், பாலாஜி, மும்தாஜ் போன்றவர்கள் எலிமினேட் பட்டியலில் இந்த வாரம் இணைந்தவர்கள்.. பார்போம்.. யார்… இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபடுகின்றார்கள் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner