மனைவிக்கு இரண்டு நாளாய் கழுத்து வலி...
சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது பள்ள மேடுகளை பார்த்தே வண்டி ஓட்டுவேன்..
என் கிரகம் சில மேன் ஹோல்கள் மற்றும் சிறிய பள்ளங்கள் எனக்கு திட்டு வாங்கி கொடுப்பதாகவே வந்து தொலைக்கும்.
நிற்க
சிபி ராமசாமி சாலையில் சென்றுக்கொண்டு இருந்தோம்...
யாழினி அம்மா... இன்னும் ஒருவாரம்தான்... செமைய உடம்பை கொறைக்க போறேன்... டார்கெட் பிக்ஸ் பண்ணிட்டேன் என்று ரொம்ப என்த்துவாக சொன்னேன்....
யாழினி அம்மா சொன்னா... உடம்பைதானே பார்ப்போம் பார்ப்போம் என்று நக்கலாக சொன்னார்.
சிபிராமசாமி சாலையில் இருந்து அடையார் கேட் ஓட்டல் பக்கம் போக அபிராமபுரம் நாலாவது தெருவில் வண்டியை திருப்பினேன்... அந்த பொக்கே கடையை தாண்டி இரண்டு பள்ளங்கள்... இரண்டுமே பந்தல் போட நோண்டிய குழி போல இருக்கும்.. எவ்வளவுதான் பார்த்து ஓட்டினாலும்.. அந்த குழி எனக்கு என்றே தோண்டி வைத்து இருப்பதாகவே படும்...
அதில் வண்டியை இறக்கி விட்டேன்...
யம்மா.. இப்பதான் கழுத்து வலி சரியாச்சி... அதுக்குள்ள இந்த குழியில விட்டு படுத்து எடுக்கறே என்றாள்...
உடம்பு குறைக்க போறேன் சொன்னதை நக்கல் விட்ட இல்லை... அதான் எங்க அம்மா மேல இருந்து பார்த்து உனக்கு ஆப்பு வச்சாங்க என்றேன்...
அப்படிலாம் பார்த்தா நீ பண்ண விஷயத்துக்கு எல்லாம் என் அப்பா மேல இருந்து பார்த்து உன்னை இன்னேரம் குஸ்கா பண்ணி இருப்பார் என்றாள்...
ஏன்டி.... மாமி பேசற பேச்சு போலவா பேசற என்று மீண்டும் ஏதாவது சீண்டலாம் என்று இருந்தேன்...
குஸ்காவோடு நிறுத்திக்கொள்வதே நன்று என்பதால்...
பேச்சை மாற்றினேன்...
ஆமாம் பிக் பாஸ் டூவுல...
யாஷிகா ஆனந்த பார்த்தே இல்லை...
ஆமாம்..
அதுக்கு பதினெட்டு வயசுதானாம்... முகத்தை பார்த்தா அப்படி தெரியலை இல்லை..? என்றேன். அப்பாவியாக ....
திரும்ப சொல்லு எதை பார்த்தா தெரியலைன்னு சொன்னே...? என்றாள்...
சரியான trapped பொசிஷன் அது... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பது தெரிந்து போனது.
வண்டி ஓட்டும் போது பின் புறத்தில் இருந்து கடித்தல் மற்றும் அடித்தல் என்பது கொலட்டிரியல் டேமேஜ் சூழலை உருவாக்கும் என்பதால்..
எதிர் பேச்சே பேச முடியாத வார்த்தையில் வம்பிழுக்க அல்லது தந்திரமாக தப்பிக்க முடிவு செய்தேன்..
ஆமாம் ஒங்க அம்மா மங்கம்மா சபதத்தை உடைச்சி.... பல வருஷம் கழிச்சி அப்பார்மென்ட் விட்டு வெளியே வந்து வாக்கிங் போறாங்களாமே என்றேன்..
பதிலே இல்லை...
யாருக்கிட்டே......?????
ஜாக்கிசேகர்
18/06/2018
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment