சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன்/07/03/2012

ஆல்பம்.

 மெட்ரோ ரயில் புராஜக்ட் நடப்பதால் சென்னையில் எல்லா முக்கிய சாலைகளையும் ஒன்வேயில் சுற்ற விட்டு கடுப்பு ஏற்றுகின்றார்கள்..சென்ட்ரல்லில் இருந்து ஈகா தியேட்டருக்கு வர வேண்டும் என்றால் ஹாரிங்டன் ரோடு சிக்னல் போன்ற இட்ங்களை சுற்றி பார்த்து விட்டுதான்  ஈகா தியேட்டருக்கு வரவேண்டும்....
போக்குவரத்து போலிசாருக்கு வேறு வழியும் இல்லை...தடையற்ற டிராபிக் இயங்க வேண்டும் என்றால் இதுதான் ஒரே வழி...
===================
போன சட்டசபை எலக்ஷனுக்கு குதிச்ச நடுநிலையாளர்கள் மற்றும் பத்திரிக்கை எல்லாம்  சங்கரன்  கோவில் இடைத்தேர்தலுக்கு வாயையே திறக்க கானோம்.. கருணாநிதி ஆட்சியில் கொடுமைகள் பல நடந்தது என்றும்  மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கின்றார்கள் என்றும் கூப்பாடு போட்டன..இப்போது பலாறும் தேனாறும் ஒடுகின்றது போல அதான் யாரும் வாயே திறக்கவேயில்லை.. நடத்துங்கடே...
===========
காங்கிரஸ் எல்லா இடத்திலேயும் மண்ணை கவ்விக்கொண்டு வருகின்றது... வழக்கம் போல நாங்கள் பாடம் படித்துக்கொண்டோம், தோல்விகள் எங்களுக்கு புத்திக்கொள்முதல் என்று மனதை சமாதானப்படுத்துக்கொள்கின்றார்கள்.. வேறு  என்ன செய்ய முடியும்.. ? தேர்தல் முடிந்து விட்டது.. இனி பெட்ரோல் விலை ஏற்ற வேண்டியதுதான் பாக்கி... பாவம் எண்ணெய் நிறுவனங்கள் 900ம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. விலையை ஏத்துங்க ராசா...
====================================
மிக்சர்.
நிறைய உலக சினிமா பார்த்து இருந்தாலும், அதனை இதே பகுதியில் எழுதி இருந்தாலும் தமிழில் அந்த உலகசினிமாவுக்கு இணையான படங்கள் வருகின்றனவா--? என்று ஆர்வம் பொங்க காத்து இருந்தாலும்... சில படங்கள்  உலக சினிமாவுக்கான சாயலோடு சில பல காம்பரமைசுகளுடன் தமிழில் வெளியாகி இருக்கின்றன.. பாடல்கள்  தவிர்க்க முடியாமல் இருக்கும்.. இருந்தாலும்  பல காட்சிகள் ரசிக்க வைத்து இருப்பார்கள்.. அப்படி நான் தமிழில் நன்றாக இருக்கும் பார்த்தே தீரவேண்டிய படங்களை.. உலகசினிமாவுக்கான  தரம் இருப்பாதாக நான் கணித்து எழுதிய படங்கள் இந்த முறை தேசிய விருது பெற்று இருக்கின்றன..அழகர்சாமியின் குதிரை படத்தினை பற்றி விமர்சனம் எழுதிய போது முதன் முறைய உலகசினிமா என்று தமிழ் படத்துக்கு எழுதினேன்.. அதனை எழுத்தாளர் பாஸ்ககர் சக்தியிடம் கூட தெரிவித்தேன்.. இப்படித்தான் எழுதி இருக்கின்றேன் என்று.... அப்புகுட்டி துணைநடிகருக்கான விருதையும் ,ஆராண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜகுமாரசாமி சிறந்த புதுமுக இயக்குனர் விருதையும் வென்று  இருக்கின்றார்..சிறந்த மாநில மொழிப்படம்..வாகை சூடவா..

==========================
என்ன படம்னு தெரியலை..? கேடிவியில  காலையிலேயே......... தேவயானி  கொடியவன் ஒருவனால்  மாருதி ஆம்னி காரில் கற்ப்பழிக்க படுகின்றார்..கிழிந்த ஜாக்கெட்டோடு வீட்டுக்கு வரும் தேவயானியை அவுங்க அண்ணி சீஆர் சரஸ்வதி பார்த்துட்டு, கடைசி வரை கட்டி காக்க வேண்டியதை இப்படி கொட்டி கவுத்துட்டு வந்து இருக்கியே???ன்னு வீட்டை விட்டு துரத்த முடிவு  பண்ணறாங்க.. காலையிலேயே கடுப்பேத்தறாங்க மை லார்ட்.

கரண்ட் கட்டால மின்சாரக்கனவு படத்தை   கதம்பம் போலத்தான் பார்க்க முடிந்தது. இந்த படத்தை பல முறை பார்த்து இருக்கின்றேன்..  ஏன் என்று தெரியவில்லை..  எது என்னை அதிகம் ஈர்த்து இருக்கும் என்று  யோசித்து பார்க்கின்றேன்.. தெரியவில்லை. எல்லா பாடல்களும் ஹிட்..மனா மதுரை மாமரக்குயிலிலே,பூப்பூக்கும் ஓசை, ஸ்டாப்பெரி கண்ணே.. போன்ற பாடல்கள் என்னுடைய ஆல்டைம்ட பேவரிட்..

கஜோல்... அரவிந்சாமி, பிரபுதேவா மற்றும் ஒளிப்பதிவை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.. படம் முழுவதும் ஒரு கலர்புல் இருக்கும்.. அரவிந்சாமி கஜோலிடம் பொக்கே கொடுத்து விட்டு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு ஓடும் போது, வரும் பின்னனி இசை என்னோட பேவரிட்.. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதே போல அரவிந்தசாமி... காதலை கஜோலிடம் சொல்லும் முன்.. பிரியா ஐ மின் லவ் வித்யூ... இன்னும் போல்டா சொல்லனும்.. பிரியா ஐமின் லவ் வித்யூ.. பாரு  கழுத்துகிட்டு வேர்க்குது படபடப்பு இல்லாம சொல்லனும் என்று சர்ச் வாசலில் நின்று கஜோலிடம் காதலை சொல்ல அரவிந்தசாமி பேசும் டயலாக்... சான்சே இல்லை ரகம்..

வெண்ணிலவே பாட்டு முடிந்ததும் கஜோலிடம் காதலை மறுக்க சொல்ல செல்லும் பிரபுதேவா என்ன கண்ணுடா? என்று பீலிங்காய் மருகுவதும் டோன்ட் கால்மீ அம்மா என்று கஜோல் பிரபுதேவாவிடம் சொல்வது.. என அசத்தலாய் இருக்கும்...ரயிலில் தொங்கிய படி வரும் பிரபுதேவாவிடம் வலிக்குது தேவா என்று கஜோல் புலம்பும் இடம்  நெகிழ்ச்சி அடைய வைக்கும் காட்சி.. அப்படி என்ன ஒரு ஆணின் கண்களில்  அல்லது பெண்களின் கண்களில் அப்படி என்ன  ஒரு கவர்சியும் வசியமும் இருக்கப்போகின்றது என்று பலமுறை நினைத்து இருக்கின்றேன்..  அந்த டயலாக்கை நக்கல் கூட விட்டு இருக்கின்றேன்..ஆனால் என் காதலி என்னிடத்தில் காதலை சொல்லிவிட்டு, யப்பா பயங்கரமான கண்ணுப்பா  உன்னுடையது என்று சொல்லி என் கண்களை பார்த்து  சொல்லி இருக்கின்றாள்.. அப்படி பார்க்கதே சேகர்.. ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது என்று பலமுறை சொல்லி இருக்கின்றாள்..

நானும் ஆயிரம் முறைக்கு மேல்  என் கண்களை கண்ணாடியில் பார்த்து இருக்கின்றேன்... அம்மா வயிற்றில் இருக்கும் போதே அம்மாவுக்கு மஞ்சள்காமாலை வந்த காரணத்தால்என் கண்களில் மஞ்சள் தன்மை சற்று   லைட்டாக இருக்கும்...

திரும்ப திரும்ப பார்த்தாலும் என் மஞ்சள் காமாலை  கண்களில் என்ன வசீகரம் இருக்கு என்று தெரியிவில்லை.........ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வோரு பிலிங்... ஒரு குவாட்டர் சொல்லு மச்சி..
================
 மகிழ்ச்சி செய்தி..

மைதிலி போன் செய்தாள்.. 

ஜாக்கிசார்.. வணக்கம்..

சொல்லும்மா  ஊர்ல இருக்கியா??போனையே கானோம்.. 

இல்லை சார்.. கொஞ்சம் வேலை அதான்.. 

சரிம்மா  சொல்லு...

 பஸ்ட் செமஸ்டரில் 80 பர்சென்ட் வாங்கி இருக்கேன் சார்...

ரொம்ப சந்தோஷம்... வாழ்த்துகள் என்று சொல்லி போனை வைத்தேன்..

என் நண்பர்  பாஸ்டன் ஸ்ரீராம், க.ராமசாமி சொன்னது போல அந்த பெண் என்பது பர்சென்ட் மதிப்பெண் வாங்கி இருக்கின்றாள்.. அவள் வீடு இருக்கும் சூழலில் இப்படி  மார்க் வாங்குவது பெரிய விஷயம்...
 
கீழே அவளின் மார்க் லிஸ்ட் இணைத்து இருக்கின்றேன்..

மிக மகிழ்வான  செய்தி இதுதான்....

==================
இந்தவாரகடிதம்
dear jacky,

this is mani, writing from Germany. I am a regular reader of your blog. But, writing you first time. I very sorry that, i have no time to write more and introduce myself clearly. I am researcher, doing PhD in cologne.  I saw this article on net and thinking about our judgement for the Bhopal disaster case. I think you convey this for our readers in a better way than me. Please, have a look at below link. Since, I am running short of time, let me complete my mail at here. Get you back soon. 

http://www.nationofchange.org/monsanto-pays-93-million-victims-settlement-1330446939

 ===========
 அன்பின் மணி நண்பருக்கு இது குறித்தான விரிவான பதிவு எழுத எனக்கு நேரம் இல்லை. இருப்பினும் நீங்கள் கொடுத்த லிங்கை கொடுத்து இருக்கின்றேன்.. அது பலரையும் சென்று அடையும்.

 ================
பிலாசபி பாண்டி.

ஆகாயத்தில் கோட்டை கட்டு தப்பே இல்லை.. ஆனால்  அஸ்திவாரத்தை பூமியில் போடு..

===============
 நான்வெஜ்18+

 What is the difference between Satisfaction and Frustration is only one article.
What "a" fuck and What "the" Fuck!

=========
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

12 comments:

  1. போன சட்டசபை எலக்ஷனுக்கு குதிச்ச நடுநிலையாளர்கள் மற்றும் பத்திரிக்கை எல்லாம் சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு வாயையே திறக்க கானோம்.. கருணாநிதி ஆட்சியில் கொடுமைகள் பல நடந்தது என்றும் மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கின்றார்கள் என்றும் கூப்பாடு போட்டன..இப்போது பலாறும் தேனாறும் ஒடுகின்றது போல அதான் யாரும் வாயே திறக்கவேயில்லை.. நடத்துங்கடே... ...அருமை JACKIE SEKAR

    ReplyDelete
  2. மச்சி, மைதிலிக்கு வாழ்த்துக்களை சொல்லிடு.
    அடுத்த வருச ஃபீஸ் கட்ட வேண்டிய தேதிக்கு ஒரு மாசம் முன்னாடி தகவல் சொல்லச் சொல்லு

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  3. //கரண்ட் கட்டால மின்சாரக்கனவு படத்தை கதம்பம் போலத்தான் பார்க்க முடிந்தது./

    மின்சாரமே கனவா இருக்கும் போது மின்சாரக்கனவை எப்படி பாக்கறது தல...

    ReplyDelete
  4. //கரண்ட் கட்டால மின்சாரக்கனவு படத்தை கதம்பம் போலத்தான் பார்க்க முடிந்தது.//

    மின்சாரமே கனவா இருக்கும் போது மின்சாரக்கனவை எப்படிப் பாக்கறது தல?

    ReplyDelete
  5. Best Wishes Jackie...
    I am regular reader of ur blog.
    This s my first comment.

    ReplyDelete
  6. மைதிலி நல்ல மதிப்பெண்களை வாங்கி, உதவி செய்தோருக்கு பெருமை சேர்த்துள்ளார். மிக்க மகிழ்ச்சி!!

    ReplyDelete
  7. மைதிலி நல்ல மதிப்பெண்களை வாங்கி, உதவி செய்தோருக்கு பெருமை சேர்த்துள்ளார். மிக்க மகிழ்ச்சி!!

    ReplyDelete
  8. Congrats to Mythili and my hearty wishes to Mr.Boston Sriram for continuing the help.

    மின்சாரமே கனவா இருக்கும் போது மின்சாரக்கனவை எப்படி பாக்கறது தல...//

    Ha Ha..Good comment Ram!!!

    ReplyDelete
  9. ஜாக்கி சேகர்,

    உங்களின் இந்த பதிவு நன்று மிக அருமை .... எல்லா பதிவுகளிலும் ஒரு சமூக பிரச்சினை, பொழுதுபோக்கு விமர்சனம், அரசியல் நிலைப்பாடு தெளிவாக விளக்கப்படுகிறது.

    இன்று உள்ள உலக சூழலில் உங்களின் பொது தொண்டை (இந்த பதிவு இடும் செயல் ஒரு தொண்டு தான்) நினைத்து உங்களின் மேல் நான் மரியாதையை செலுத்துகிறேன்.

    போன சட்டசபை எலக்ஷனுக்கு குதிச்ச நடுநிலையாளர்கள் மற்றும் பத்திரிக்கை எல்லாம் சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு வாயையே திறக்க கானோம்.. கருணாநிதி ஆட்சியில் கொடுமைகள் பல நடந்தது என்றும் மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கின்றார்கள் என்றும் கூப்பாடு போட்டன..இப்போது பலாறும் தேனாறும் ஒடுகின்றது போல அதான் யாரும் வாயே திறக்கவேயில்லை.. நடத்துங்கடே... ............. மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று...

    அவர்களை நடுநிலையாளர்கள் என்று அழைப்பது உங்களை போன்ற உண்மையான சமூக அக்கறை உள்ளவர்கள் சொல்ல கூடாது .... என் மொழியில் அவர்களை காரியவாதிகள் என்றே சொல்ல வேண்டும் ... தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்று காய் நகர்த்தினார்கள் பல வழிகளில் ... எது நடந்தாலும் அவர்கள் வாய் திறக்க போவது இல்லை ... ஏனென்றால் வாய் திறந்தாலும் ஒன்றும் நடக்காது என்று அறிந்த புத்திசாலிகள் தான் அந்த காரியவாதிகள் ...

    உங்களின் சமூக பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்களுடன் ... அலியார் பிலால் ....

    ReplyDelete
  10. ஜாக்கி சேகர்,

  11. ஜாக்கி சேகர்,

  12. ஜாக்கி சேகர்,

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner