அவன் சென்னையில் பெரிய தொழில் அதிபரின் மகன்.. அவனுக்கு சென்னை எங்கும் நிறைய நண்பர்கள்.. நானும் அவனும் நட்பாய் இருந்தது ஒரு விபத்து என்று சொல்லலாம்...அதே நட்பை மலைக்கும் மடுவுக்குமான வித்யாசத்துக்கு முடிச்சி போடலாம்.
நான் தேவி தியேட்டரில் ஆறுஐம்பது டிக்கெட் எடுக்க இரண்டு மணிநேரம் முன்பே காத்திருக்கும் பெரிய கியூவில் காத்து இருந்து. டிக்கெட் கிடைக்கவேண்டுமே என்று குல சாமிகளை வேண்டிக்கொண்டு கியூவில் நான் முன்னேறிக்கொண்டு இருக்கும் போது, அதே தியேட்டருக்கு தன்னுடைய இரண்டு காரில் பத்துக்கு மேற்ப்பட்ட நண்பர்களுடன் வந்து இறங்கி பஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கி கொண்டு படத்துக்கு செல்பவன்அவன்.
அவனை ரவி என்று அழைப்போம்.. ரவி என்று அழைக்க உங்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லையே? சிரமம் இருப்பின் வேறு பெயரை அவனுக்கு வைக்ககலாம்... ஆனால் இப்போது அவனது பெயர் நமக்கு முக்கியம் இல்லை....அதனால் பெயரை மாற்றும் எண்ணத்தை தவிர்த்து விட்டு அவனை ரவி என்றே அழைப்போம்...அப்படியே ரவி என்று அழைப்பதால் நம்மை யாரும் ஜாதியை விட்டு விலக்கி வைக்கப்பபோவதில்லை...
ரவி அப்பாவுக்கு இன்னும் நான்கு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து இருக்கின்றது... சட்டென நண்பர்களை அழைத்துக்கொண்டு தனது காரில் கிளம்பி ஈசிஆர் வழியாக பாண்டிச்சேரி சென்று இரண்டே இரண்டு பீர் சாப்பிட்டு விட்டு பேரருக்கு 500ரூபாய்க்கு பெருமைக்கு டிப்ஸ் வைத்து விட்டு வரும் அளவுக்கு பெரிய பணம் படைத்தவன்..
ஓட்டலுக்கு சென்றால் 100ரூபாய்க்கு குறையாமல் டிப்ஸ் வைப்பவன்..ரவியோடு நீங்கள் பழகினீர்கள் என்றால் அவன் என்ன மாதிரி டைப்பாக இருப்பான் என்று குழப்பி பத்து நாளாக யோசித்த பிறகும் பதினோராவது நாளைக்கு கூட எந்த முடிவுக்கு வரமுடியாமல் தவிப்பீர்கள். அப்படி ஒரு கேரக்டர்..
சிலரோடு நட்புபாராட்ட பெரிய சந்திப்புகளோ பழக்க வழக்கங்களோ தேவையில்லை.. அது போலத்தான் என்னோடு அவன் நட்பு பாராட்டியதும்..
அவனுக்கு சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த வசதி குறைவான கீழ்சாதி பெண் மேல் காதல் பூத்தது..காரில் சென்றும் பைக்கில் சென்றும் அந்த காதலை இறுக வைத்தான்...ரவி பார்க்க ஹேன்ட்சம்மாக இருப்பான்...அந்த பெண் கவிழ இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..
அந்தபெண் மிக அழகு...அப்படி ஒரு ஒண்டுக்குடித்தன வீட்டில் அப்படி ஒரு அழகு தேவதையை யாரும் பார்த்தே இருக்க முடியாது.. அவள் அந்த தெருவில் இறங்கி நடந்தால் அந்த தெருவில் இருக்கும் ஆண்களின் இயக்கம் ஒரு நொடி இரண்டு நொடி, பத்து நொடி,இருபது நொடி என வயதுக்கு ஏற்றது போல அவர்களது இயக்கம் நின்று திரும்ப விட்ட இடத்தில் இருந்து பயணிக்கும்...
அவள் நடக்க ஆரம்பித்தால் தெருவில் திடிர் என்று சைக்கிள்களும், வேகமாக ஆரன் அடித்த படி பைக்குகளும் பறக்கும்... அப்படி ஒரு அழகு தேவதையை இவன் எப்படி வளைத்தான் என்பதை நினைத்து ரவி மீது ஆண் நண்பர்களுக்கே சற்று பொறாமையும் இருந்தது..
நம்மையெல்லாம் எந்த பெண் பார்க்கபோகின்றாள் என்று எனக்குள் ஒரு இன்பிரியாரிட்டி காம்ளெக்ஸ் என்னோடு சரிக்கு சமமாய் மூச்சிரைக்க ஓடி வந்த நேரம் அது.... ஓட்டலில் நான், ரவி, அவனின் காதலியும் மற்றும் சில ஆண் நண்பர்களோடு உணவு உண்ணும் போது அவள் என்னிடத்தில்தான் அதிகம் பேசுவாள்..
என்றாவது அதிக போதையில் ரவி உளறும் போது... மச்சி அவ உனக்கு கூட பொறந்த தங்கச்சி மாதிரி... அவளை அப்படியே உசார் பண்ணிடதே... அவன்னா எனக்கு உயிறு மச்சி.. என்ன கருமம்ன்னு தெரியலை.. அது உன்கிட்டதான் நிறைய பேசுது.. அப்ப அப்ப என்னை பத்தி நல்லவிதமா அவகிட்ட சொல்லு மச்சி என்பான்..
ரவியின் காதலி என்னிடம் பொதுவான விஷயங்கள்,ரிலிஸ் ஆன திரைப்படங்கள் அதன் பிளஸ் மைனஸ் போன்றவற்றை பற்றி அதிகம் பேசுவோம்.. நான் பேசும் போது அந்த இடம் கலகலப்பாக இருக்கும்..அவளும் அதையே சொல்லி இருக்கின்றாள்.. என்னமோ தெரியலை உங்க கூட பேசினா மனசு லேவாயிடுது என்று.. மனதில் பட்டதை பேசுவேன்...அதனால் கூட என்னிடம் அவள் அதிகம் பேசி இருக்கலாம் லாம் ம்......
தினமும் காரில் போய் அவளை அவளது கல்லூரியில் பிக்கப் செய்து கொண்டு மெரினா அல்லது ஸ்பென்சர் போய் அரட்டை அடித்து விட்டு அவளை அவள் வீட்டுக்கு மூன்று தெரு தள்ளி இருக்கும் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டு செல்வது அவனது வாடிக்கை...அவள் அவள் வீட்டில் என்ன காரணம் சொல்லிவிட்டு வருவாள் என்று தெரியவில்லை.,.?..கல்லூரியில் இருந்து நாலு மணிக்கு காரில் ஏறி மெரினா, தியேட்டர், ஸ்பென்சர் என அரட்டை அடித்து விட்டு இரவு ஏட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இறங்கிகொள்ளுவாள்... காரில் போகும் போது யாராவது ஒரு ரவியின் நண்பன் வந்தால் மட்டுமே அவள் காரில் ஏறுவாள்..இல்லையென்றால் ஸ்பென்சருக்கு பஸ் பிடித்து வந்து விடுவாள்...
காரில் அவளை பிக்கப் செய்ய பல நேரங்களில் வாடகை கார்தான் ரவி புக்செய்வான்.. அவன் கார் நம்பர் வைத்து அவன் அப்பாவிடம் யாராவது போட்டுக்கொடுத்து விட்டால்? என்ற தற்காப்புதான் காரணம்...
பொதுவாய் வாடகை காரில் செல்லும் போது டிரைவர் ஓட்ட,பின் பக்கம் ரவியும் அவளும் பேசியபடி வருவார்கள்...அவ்வப்போது முன்னால் உட்கார்ந்து இருக்கும் நானோ அல்லது முன் சீட்டில் உட்காரும் அவனது மற்ற நண்பர்களோ உறுகாய் போல பேச்சின் ஊடே தொட்டுக்கொள்ளுவான்.. அல்லது தொட்டுக்கொள்ளுவார்கள்..
மலைக்கு மடுவுக்குமான காதல் என்பதால் நான் அவ்வப்போது அந்த பெண்ணிடம் எச்சரிப்பேன்..ஆனால் அவள் ரொம்பவே உறுதியா இருந்தாள்.. நான் ரவியை உயிருக்கு உயிராக காதலிக்கின்றேன். அவன் இல்லை என்றால் என்னால் வாழ முடியாது..ரவி என்னை ஒரு போதும் கைவிடமாட்டேன் என்று எனக்கு சத்தியம் பண்ணிக்கொடுத்து இருக்கின்றான் என்று சொன்னாள்...நன்றாக பிரெயின் வாஷ் செய்து இருப்பது அவள் கண்ணில் இருக்கும் காதலில் தெரிந்தது..
சப்போஸ் ரவி வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் நீ என்ன செய்வாய்..? சொத்து கொடுக்காமல் அவனை துரத்தி விட்டு விட்டால்..? நான் இருக்கற மாதிரி ஒண்டுக்குடித்தன வீட்டில் குடும்பம் நடத்த நான் ரெடி என்றாள்..நீ ரெடிம்மா..ஆனா அவன் காரில் ஏசி வேலை செய்யாத வாடகை காரை எடுத்து வந்த, டிரைவரையே காய்ச்சி எடுப்பான்.... உன் கூட எப்படி ஒன்டுக்குடித்தன வீட்டில் அவன் வாழுவான்? என்று வாய் வரை வந்த கேள்வியை முழுங்கினேன் காரணம் அவள் காதல் போதையில் இருப்பதால் எது சொன்னாலும் அவள் மண்டையில் ஏறப்போவதில்லை.....?
அவள் வீட்டில் அவள் காதல் தெரிந்து போனது.. ஒரு மாதத்துக்கு ஹவுஸ் அரஸ்ட்.. ரவி ஒரு மாத தாடியோடு அலைந்தான்..ஒரு மாத ஹவுஸ் அரெஸ்ட்டுக்கு பிறகு இருவரும் சந்தித்தார்கள்..ரவி புக் செய்த காரில் கல்லூரிக்கு போனவளை காரில் அழைத்து போய் அவளையும் ரவியை சந்திக்க நண்ப்ர்களாகிய நாங்கள் உதவி செய்தோம்..
படகு இருட்டில் எங்களை பற்றி கவலைபடாமல் இருவரும் ஆரத்தழுவிக்கொண்டார்கள்.. இதுதான் சாக்கு என்று ரவி மவுத் கிஸ் அடித்தான்..அவளிடம் மறுப்பு ஏதும் இல்லை..ரவி சின்ன பையன் போல குலுங்கி குலுங்கி அழுதான்... உன்னை பார்க்காத காரணத்தால் தாடி வளர்த்த விதத்தையும், கையில் அயன்பாக்சில் சூடு வைத்துக்கொண்ட கதையையும் அவளிடம் சொன்னாள் அவள் உருகினாள்.. சூடு பட்ட இடத்தில் சின்ன முத்தத்தை பதிக்க.. திரும்ப அவன் மவுஸ்கிஸ்சுக்கு டிரை செய்ய அவள் என்னை பார்த்து விட்டு கூச்சம் காரணமாக மறுத்தாள்...
மூன்று வாரம் கழித்து அவளுக்கு பிறந்தநாள்....சேப்பாக்க்ததில் இருந்த ஒரு ஓட்டலில் நண்பர்களுக்கு பார்ட்டி என்று ரவி சொல்லி இருந்தான்..வாடகை காரில் நான் முன்பக்கம் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருக்க,பின்புறம் ஸ்பெஷல்கிளாஸ் என்று சொல்லிவிட்டு பர்த்டே சாரியில் அவள் காரில் ஏற, ரவி அவளை வெறித்தனமாக ஆரத்துழுவிக்கொண்டான்... இது வழக்கம் போல இல்லை என்று நான் நினைத்துக்கொண்டேன்.. கார் தேனாம்பேட்டை சிக்னலில் விடுபட்டு அண்ணா மேம்பாலம் டிராபிக்கில் மாட்டிக்கொள்ள... நான் திரும்பி அவனிடம் ஸ்பென்சர் போலமா? அல்லது மெரினா போலாமா? என்று கேட்க திரும்பினேன்... அந்த காட்சி என்னை நிலைகுலைய வைத்தது..
அவள் கண் சொருகி கிடந்தாள்...ஜாக்கெட் ஹுக்குகள் முழுவதும் விடுதலை பெற்று இருந்தன.. அவளின் பிரா அவசரத்துக்கு மேல் பக்கம் தள்ளப்பட்டு, உதாசீனப்படுத்தப்பட்டு இருந்தது..ரவி அவளின் மார்புகளிடம் ரகசியம் பேசிக்கொண்டு இருந்தான்.. ஒரு மூன்று நொடிகளில் அவள் சுதாரித்து வாரி சுருட்டிக்கொள்ள....நான் அலன்டு போய் திரு திரு என்று விழிக்க....ரவி கோபத்துடன் குரல் உயர்த்தி ஏன் நீ திரும்பின? அப்படியே திரும்பாம எங்க போறதுன்னு கேட்க வேண்டியதுதானே? என்று டிரைவர் எதிரிலேயே என்னை கத்த, நான் சபையர் தியேட்டர் வாசலில் வண்டியை ஓரம் கட்ட சொல்லி ஏதும் பேசாமல் இறங்கிக்கொண்டேன்..
மனம் முழுவதும் எனக்கு கோபம்... அப்படி அரிப்பு இருக்கறவன் ஏதாவது ரூம் போட்டு இருக்க வேண்டியதுதானே...காருல.. அதுவும் டிரைவர், நான் இரண்டு பேரும் இருக்கும் போதே...ச்சே.. அவனுக்குதான் அறிவில்லை இவளுக்கு எங்க போச்சி புத்தி..? எனக்கு அந்த பெண் மீது கோபம் கோபமாக வந்தது.
இரண்டு வாரம் அவனோடு எந்த பேச்சும் இல்லை..ஒரு நாள் அவன் வந்தான்.. என்னை அவள் பார்க்கவேண்டும் என்று சொன்னதாக சொன்னன்.. சமாதானம் பேசினான்..டிரைவர் நான் இருக்கும் போது எப்படி மச்சி???..... ச்சே என்று திட்டினேன்.. மச்சி அவ என் பாதி ஒய்ப் ஆ ஆயிட்டாடா... நான் அவளைதான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்.. அன்னைக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சி...இனிமே இது போல நிகழாது.. என்று சத்தியம் செய்தான்..
பெரிய சமாதனத்துக்கு பிறகு அவளை பெசன்ட்நகர் பீச்சில சந்தித்தேன்.. அவள் தலைகுனிந்து என்னிடத்தில் சாரி சொன்னாள்.. எனக்கு அவளின் மார்பு நினைவுக்கு வர நான் அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் நின்றேன். அவளுக்கு இன்னும் நான் மன்னிக்கவில்லை என்று வருத்தம்.... எனக்கு திரும்பினால் அவள் வெற்று மார்புதான் நினைவுக்கு வந்து தொலைத்தது.. நான் அதிகம் அவள் பக்கம் திரும்பி பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தேன்..
முன்எப்போதும் இல்லாது அவள் இடுப்பு., முதுகு, பின்புறம், காதுமடல்கள்,கழுத்து என்று என் கண்கள் என் அனுமதி இல்லாமல் பயணிக்க ஆரம்பித்த காரணத்தால் அதன் பிறகு அவர்களோடு சந்திப்பதை தவிர்க்க ஆரம்பித்தேன்.
ஒரு இரண்டு மாதம் கழித்து ரவி வீட்டில் விஷயம் தெரிந்து போனது....அவனின் காதலி வீட்டில் போய் ரவி குடும்பம் ஆள் வைத்து மிரட்டியது.. அடுத்த இரண்டு மாதம் கழித்து ஈசிஆர் பக்கம் ரவியையும் அவன் காதலியையும் ஒரு ஓட்டலில் வைத்து பார்த்ததாக நண்பர்கள் சொன்னார்கள்.
நான்கு மாதம் கழித்து பிரச்சனை ரொம்ப பெரிதான காரணத்தால், ரவி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து இருப்பதாக சொல்ல... நான் மகிழ்ந்தேன்..ரொம்பவும் சந்தோஷப்பட்டேன்..
ஒரு பிசினஸ் செய்ய போவதாக என் உதவி வேண்டும் என்ற சொன்னான்.. நான் மற்றும் நண்பர்கள் உதவி செய்தோம்.. ஒரு மாதம் வரை ரவி போராடினான்.. அவன் பணக்கார அப்பாவை எதிர்த்து ரவியால் ஒரு மயிரையும் அவனால் புடுங்க முடியவில்லை..
ஒரு மாதம் அவன் வீட்டுக்கு போகவில்லை..
ஒரு நாள் ரவி அப்பா அவனிடம் உட்கார்ந்து பேசினார்.. அந்த பெண்ணை கட்டினால் என்ன என்ன பிரச்சனை வரும்... சாதக பாதகங்களை பற்றி மிக அழகாக ராஜ தந்திரத்துடன் பேசினார்..
ரவியின் காலடியில் குடும்ப கவுரவம் போய் விடக்கூடாது என்று அவனது குடும்ப உறுப்பினர்கள் விழுந்து கதறினார்கள்.....ஒரு வாரம் ரவி குடும்பத்தோடு கேரளாவுக்கு போய் விட்டு வந்தார்கள்...
ரவி வீட்டில் என்ன பிரச்சனை? என்று என்னிடம் அவனின் காதலி ஒரு பத்து முறைக்கு மேல் போனில் கேட்டு இருப்பாள்.. எனக்கு தெரிந்தால் தானே சொல்வதற்கு....
ரவி கேரளாவுக்கு அவன் குடும்பத்தோடு டூர் போய் விட்டு வந்த இரண்டு வாரம் எங்கள் யார் கண்ணிலும் அவன் படவேயில்லை..நண்பர்களோடு ஒருநாள் இரவு ஓட்டலில் சந்தித்தோம்.. கல்யாண மேட்டர் என்னாச்சி என்றேன்.. அவன் எதுவும் பேசவில்லை.. காலி கோப்பைகளில் சரக்கு ஊற்றுவதிலேயே குறியாக இருந்தான்...ஒரு வில்ஸ் பற்றவைத்துக்கொண்டான். என்னையும் குடிக்க சொன்னான்.. போதையை விட..குடும்பதை எப்படி பேசி கன்வின்ஸ் செய்து இருப்பான்? என்ன பேசி இருப்பான் என்று ஆவலில் நான் இருந்தேன்..இரண்டு லார்ஜ் எனக்கும் ஏறியது..மச்சி கல்யாண மேட்டர் என்னாச்சி என்று திரும்ப கேட்டேன்...
நான், எங்க அப்பா, அவருடைய ஆளுங்க, எங்க பேமிலி பிரண்ட்ஸ் எல்லாரும் புல்லா அவ குடும்பத்தை விசாரிச்சிட்டாங்க...நானும் புல்லா விசாரித்தேன் .. அவுங்க பேமிலி சரியில்லை.. அவ சரியான தேவிடியா மச்சி என்றான்...
எனக்கு ஏறிய போதை சட்டென இறங்க.. நான் அந்த இடத்தை விட்டு காலி செய்தேன்... அவனிடம் அதுக்கு பிறகு எந்த பேச்சும் நான் வைத்துக்கொள்ளவில்லை... அந்த பெண்ணை பற்றி கூட விசாரிக்க மனம் இடம் கொடுக்கவில்லை..ஏதாவது ஒன்டுக்குடித்தனத்தில் இதே பரந்து விரிந்த சென்னையில் இருக்கலாம் அல்லது தென்மாவட்டத்தில் வாக்கப்பட்டு இருக்கலாம்...
அவள் என்னவானாள் என்று எந்ததகவல் எனக்கு இன்று வரை எனக்கு கிடைக்கவில்லை...ஆனால் ஐந்து வருடம் கழித்து ரவி பற்றிய தகவல் கிடைத்தது... ஐந்து லட்ச ரூபாய் பணத்தை நெல்லூரில் இருக்கும் தனது நண்பரிடம் கொடுத்து விட்டு வர ரவியை அவன் அப்பா அனுப்பி இருக்கின்றார்.. காரில் பணத்தை கொடுத்து விட்டு நள்ளிரவில் ரவி மட்டும் தனியாக கார் ஓட்டி வரும் போது டிப்பர் லாரியுடன் மோதி ஸ்பாட் அவுட் என்று சொன்னார்கள்..
உப்புக்காத்து இன்னும் வீசும்.
==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
குறிப்பு...
உப்புக்காத்தில் கன்னியம்மாள் பற்றி எழுதி இருந்தேன் அல்லவா.. கடைசி வரை இளநி கொடுக்கப்படாமல் இருப்பத்திஐந்து நாட்கள் வெறும் பால் மட்டும் அருந்தி.. உடல் எங்கும் தோல் பிய்ந்து நாற்றம் ஓவராய் வீச... கடந்த மார்ச் ஒன்றாம் தேதி விடியலில் இறந்து போனார்.. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Man is a different animal.... No one knows when it will show the real face...
ReplyDeleteகாலத்தின் முடிவுகள் - என்றுமே சரியானதே!
ReplyDeleteJackie,
ReplyDeleteUngal Blog in thevira rasigan naan. ungalathu elluthu style migavum arumai.
Anbudan Amal
காசு கவுரவம்.. பார்ப்பவர் ஏன் காதல் என்று வர வேண்டும்.. காசுக்காக வருபவர் எத்தனையோ உண்டே.. ஆனாலும் கடவுள் இருக்கான்ல.. இருக்கான்ல..இருக்கான்ல..டிப்பர் லாரியை எடுத்துகிட்டுல வந்திருக்கான்..,இப்ப அந்த பொண்ண பத்தி விசாரிச்சு பாருங்க.. நல்ல புருசனோட ,தேவதை மாதிரி குழந்தைகளோட நல்லா இருக்கும்.. சின்ன நெருடல்..அந்த பாதகருக்கு இத்தனை உதவி நீங்கள் செய்திருக்க கூடாது.. வயசுக்கோளாறு?!!
ReplyDeletepoetic justice...
ReplyDelete//கீழ்சாதி பெண் மேல் காதல் பூத்தது..// keezhmaiyum menmaiyum manithanin nadaththaiyile!!!antha penn alla ungal nanbanthaan keezhththaramaana manitha mirugam...enru ninaiththu ezhuthiyirukireerkal! unmai GOK!!!!
ReplyDeleteகாரில் பணத்தை கொடுத்து விட்டு நள்ளிரவில் ரவி மட்டும் தனியாக கார் ஓட்டி வரும் போது டிப்பர் லாரியுடன் மோதி ஸ்பாட் அவுட் என்று சொன்னார்கள்..
ReplyDeletekaaril sentru panathai koduthu
good end anna
//அவனுக்குதான் அறிவில்லை இவளுக்கு எங்க போச்சி புத்தி..? எனக்கு அந்த பெண் மீது கோபம் கோபமாக வந்தது//
ReplyDeleteஎன்ன அண்ணா நீங்களுமா?அதெப்படி பெண் என்பவளுக்கு எந்த உணர்ச்சியும் இருக்கக்கூடாதா?காலங்காலமாக பெண்களையே குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.இந்த நாய்க்கு(ரவி) புத்தி எங்க போய்ச்சி?
அண்ணே உங்க எழுத்த இப்பதான் முதல் தடவ படிக்கறேன், உங்க நடை நல்லா இருக்குன்னா, எனக்கு ஏதேதோ பழைய நினைவுகள் வந்துருச்சு, நல்லா இருக்குன்னே
ReplyDeleteஅண்ணே உங்க எழுத்து நடை வித்தியாசமா இருக்குண்ணே, எனக்கு எதேதோ பழைய நினைவுகள் வர வச்சுட்டிங்க
ReplyDeletekadavul erukirar!
ReplyDeleteஎனக்கு தெரிந்தவன் அவன். ஊரில ஒரு பெண்ணை விட மாட்டான். கல்யாணமான பெண்னைக் கூட. திருமணமான ஒரு பெண் எரியும் விளக்கு முன்னால் தன் மார்பில் அடித்தபடியே சாபமிட்டாள்..அவனுக்கு...
ReplyDeleteகடைசியில் மூளைக்காய்ச்சல் வந்து ஒருமாதம் கோமாவில் இருந்து 23 வயதில் செத்துப் போனான்
Unka 2 perukum eppati natpu erpratuchu?
ReplyDeleteநல்லது செய்தவன் நீண்ட காலம் வாழ்வான் கெட்டது செய்தவன் உடனே சாவான் என்ற கூற்றில் எனக்கு நிறைய மாறுபட்ட கருத்து இருக்கின்றது என்றாலும்.. கெட்டது செய்தவர்களில் சில பேர் நிறைய நொந்து போனதை நான் நிறைய பார்த்து இருக்கின்றேன்..முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பது எல்லாம் ஒரு சிலதில் மட்டுமே சாத்தியம்..
ReplyDelete========
தர்மா உங்களுக்கும் எனக்குமான அறிமுகம் எப்படி ஏற்ப்பட்டதோ அது போல ஒரு அறிமுகத்தில் அந்த நட்பு வளர்ந்தது..
எதை எதையோ சொல்கிறது உங்கள் இந்த பதிவு.அருமை!
ReplyDelete"முன்எப்போதும் இல்லாது அவள் இடுப்பு., முதுகு, பின்புறம், காதுமடல்கள்,கழுத்து என்று என் கண்கள் என் அனுமதி இல்லாமல் பயணிக்க ஆரம்பித்த காரணத்தால் அதன் பிறகு அவர்களோடு சந்திப்பதை தவிர்க்க ஆரம்பித்தேன்." யதார்த்தம்.
ReplyDeleteஒரே வார்த்தையில் “ அவள் தேவிடியா மச்சி “ என்றவனிடம்.. அறுந்த நட்பின் சாபமும்தான் அவனின் முடியுக்கு காரணம் என்பேன்.
kaalam kathirunthu thandanai kodukkum enbathai unarthi viteergal
ReplyDeleteஜாக்கி சார்,
ReplyDeleteகடவுள் கூட தமிழ் சினிமால வர போலீஸ் மாதிரி கடைசில தான் வரார்...
கெட்ட சம்பவங்கள் நடக்காம ஒரு வேலை நல்ல படியா கல்யாணம் முடிஞ்சிருந்தா தென்றல் காத்தா இருந்து இருக்குமோ...
இந்த உப்பு காத்துல உப்பு கொஞ்சம் அதிகம்......
ஜாக்கி சார்,
ReplyDeleteகடவுள் கூட தமிழ் சினிமால வர போலீஸ் மாதிரி கடைசில தான் வரார்...
கெட்ட சம்பவங்கள் நடக்காம ஒரு வேலை நல்ல படியா கல்யாணம் முடிஞ்சிருந்தா தென்றல் காத்தா இருந்து இருக்குமோ...
இந்த உப்பு காத்துல உப்பு கொஞ்சம் அதிகம்......
சில மனிதர்களைப் பற்றி விவாதிப்பதில் பயனும் இல்லை,
ReplyDeleteநான் கன்னியம்மாளுக்காக பிரார்தித்து கொள்கிறேன்.
சிலரைப் பற்றி விமர்சிப்பதில் பயனேதும் இல்லை, நான் கன்னியம்மாளுக்காக பிரார்த்தனை செய்கிறேன்..
ReplyDeletesila nerangalil sila manditharkal..neenga nirya manithargaloda palagiya anubavatha.. romba alaga sollirikkinga boss.
ReplyDeleteஒரு பெண் ஒருத்தன லவ் பண்ணான்னா
ReplyDeleteஅவன் என்ன கேட்டாலும் கொடுத்துடுவா,
பெண்களோட காதலையும், ஆண்களோட காதலையும்
இடை போட்டா பெண்கள் ஜெய்ப்பாங்க,
காருக்குள்ள மேட்டர் நடக்க இதான் காரணம்,