எவரைக் குற்றம் சொல்ல...

சில செய்திகளை படிக்கும் போது வாழ்க்கையே வெறுத்து விடும் இனம் புரியாத கவலை ஒன்று மனதில் வந்து உட்கார்ந்துக்கொள்ளும்...கடந்த மாதம் பிப்ரவரி 25 மற்றும் உ6ஆம் தேதி பெங்களூருக்கு சென்ற போது அங்கே செய்திதாளில் படித்தது.... நேரமின்மையால் இப்போது பகிர்ந்துக்கொள்கின்றேன்.



அந்த வீடியோ ஒரு கன்னட செய்தி சேனலில் ஓடிக்கொண்டு இருக்கின்றது..மணப்பெண்ணோடு  மகிழ்ச்சியாக திருமணமண்டபத்துக்குள்ளே வருகின்றான் மணமகன்.. அவனுக்கு மறுநாள் திருமணம்.. அவன் கண்களில் பெரிய  சந்தோஷம் மணப்பெண் முகத்தில் வெட்கம்..பெண் அழைப்பை முடித்து விட்டு மாப்பிள்ளையும் பெண்ணும் மண்டபத்துக்கு உள்ளே வருகின்றாகள்..

உற்றார் உறவினர்கள் சீண்ட  மணமகள், மணமகன் இருவர் முகத்திலும் உற்சாகம் கரை புரண்டு ஓடுகின்றது...இரவு பத்து மணிஅளவில் மணமகனின் கள்ளக்காதல் திருமண மண்டபத்துக்கு வந்த அத்தனை பேருக்கு தெரிய வருகின்றது.. அத்தனை பேர் மத்தியில் அவனின் கள்ளக்காதல் தெரிய வர அவமானத்தால் விடியலில்  மண்டபத்திலேயே தூக்கில் தொங்கி விடுகின்றான்...


மணமகளுக்கு அவரது உறவுக்கார பையன் அதே முகூர்த்தத்தில் வாழ்க்கை கொடுக்க..  அது பரபரபப்பு செய்தியாகின்றது.. அந்த கன்னட சேனல் முதல் நாள் பெண் அழைப்பின் போது எடுத்த விடியோ கேசட்டை வாங்கி தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டு இருந்தது.,..அந்த வீடியோவில் பெண்  அழைப்பு முடிந்து மிகுந்த வெட்கத்தோடு புதுப்பெண்னோடு நடந்து வரும் அவன் முகத்தில் வெட்கமும் பெருமீதமுமாக நடந்து வந்து கொண்டு இருந்தான்..காலையில் ஆரம்பித்து நண்பகல் வரை திரும்ப திரும்ப உற்சாகமாக சிரித்தபடி மணப்பெண்ணோடு நடந்து வந்துக்கொண்டு இருந்தான்.- அவன் உடல் மார்ச்சுவரியில் இருக்க அந்த கன்னட சேனலில் திரும்ப திரும்ப அவன் சிரித்துக்கொண்டு இருந்தான்..
==============


அந்த பெண் சாப்ட்வேர் கம்பெனியில் எஞ்சினியர்...நல்ல சம்பளம் இன்னும் திருமணமாகவில்லை.. வழக்கம் போல அவள் அலுவலகம் வருகின்றாள்... அவள் அலுவலகம் அமைந்து இருக்கும் இடம் மிகப்பெரிய ஆறு மாடிக்கட்டிடம்.. வேலை நேரத்தின் போது பெங்களூர் தீயணைப்புத்துறை வீரர்கள்.. தீயணைப்பு வாகனத்துடன் வந்து,  அந்த கட்டிடத்தில் இருக்கும் அனைவருக்கும்......... உங்கள் கட்டிடத்தில் தீ பிடித்தால் அவசரகாலத்தில்  நீங்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்று விளக்க நிகழ்ச்சி செய்ய இருக்கின்றோம்.. உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்று தீயணைப்பு சொல்ல, நிர்வாகமும் அனுமதிக்கின்றது..

வேலை நேரத்தில் அத்தனை பேரும் கட்டிடத்தின் ஒரு மூலையில் நிற்க..... தீயணைப்பு துறை தனது டெமோவை அரங்கேற்றியது... நான்காவது மாடியில் நன்றாக தீ பிடித்து  எரிந்தால் எப்படி தப்பிக்க வேண்டும்..?நீங்கள் தீயணைப்பு துறையோடு எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்று டெமோ செய்துக்காட்ட நினைத்தது தீயணைப்பு துறை..

கயிற்றில் கட்டி ஒருவரை இறக்க வேண்டும்... யாரை அழைக்கலாம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் கண்ணில் திருமணமாகாத அந்த இளம் என்ஜினியர் பெண் மாட்டினாள்...

அவளை அழைத்த போது யப்பா எனக்கு மேல இருந்து கீழ பார்த்தாலே தலை சுற்றும்.. என்னை விட்டு விடுங்க.. என்று எவ்வளவோ சொல்லியும் அவளை வற்புறுத்தி அழைத்து வந்து கயிற்றில் கட்டி அவளை நான்காவது மாடியில் இருந்து இறங்க கீழே அவளது அலுவலக ஊழியர்கள் மற்றும் அந்த கட்டிடத்தின் வேலை செய்த ஆயிரக்கனக்கான ஊழியர்கள் முன்னிலையில் முன்றாவது மாடி அருகே கயிற்றில் தொங்கியபடி வரும் அந்த பெண் வரும் போது கயிறு அறுந்து அனைவர்  கண் எதிரில் மூன்று மாடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து இறந்து போனார்... 

அந்த பெண் செய்த பாவம் என்ன? தீயணைப்புதுறை சொல்லுகின்றது.. இது விபத்து என்று....... இவ்வளவு அஜாக்கிரதையாக யாராவது டெமோ செய்வார்களா? கயிற்றில் இறக்கும் போது கீழே மெத்தை போன்றவற்றை வைக்க வேண்டும் என்பது விதி...ஆனால்  அதை பின்பற்றவில்லை... கயிறு அறுந்துக்கொண்டது எதிர்பாராத விதம் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும்...கீழே மெத்தை விரிப்பு வைக்காமல் அலட்ச்சியமாக இருந்தது ஏன்? எந்த பாவமும் அறியாத, காலையில்  வேலைக்கு வந்த ஒரு அப்பாவிபெண்ணை சாகடித்து விட்டார்கள்.. விபத்து என்று கேஸ் பைல் ஆகிவிட்டது.. வழக்கம் போல  நாங்க என்ன செய்ய முடியும்..? அது ஒரு எதிர்பாராத விபத்து  என்று தீயனைப்பு வீரர்கள் கோர்ட்டில் சொல்லத்தான் போகின்றார்கள்...

சார் நாங்க நல்லது செய்யத்தான் டெமோ காட்ட வந்தோம்..ஆனா கயிறு அறுத்துகிச்சி.. நாங்க என்ன செய்ய முடியும்..?

ஆம் நீங்கள் என்ன செய்ய முடியும்--??

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

14 comments:

  1. முதல் சம்பவம் அவன் மேல் தவறு இருக்கலாம். ரெண்டாவது கொடுமை...!

    ReplyDelete
  2. டேமொவிலே கூட தவறு செய்பவர்கள் நிஜத்தில் எவ்வாறு சாதிக்கப் போகிறார்களோ ....

    ReplyDelete
  3. கொடுமையிலும் கொடுமை.

    ReplyDelete
  4. irandu sampavamumee.. thodarpillaa saavukal.. varuththamalippavai...

    ReplyDelete
  5. It was very bad experience those who reads it.I feel Please avoid these kind of incidents.

    ReplyDelete
  6. Dear Jackie sir,
    I am from Bangalore and a regular reader of your blog. That girl who died was interested in social activities and was working in another branch of that company. She came to that branch on that day specifically to attend that fire-drill. And she volunteered as second person after a male colleague. It is sad that such a tragedy happened to her. I'm just writing this to ensure all my fellow readers should know the girl was interested in the fire-drill and came all the way there and was courageous enough to volunteer for climbing down the rope. Her death should not be told along with the fear and reluctance, because she didnt show any, atleast until the rope broke open.
    And those fire-workers who were present had been suspended, except the fire-official who supervised the whole thing. It is all the same all over India, irrespective of the State. The people at the bottom get all punishment.

    P.S:
    That "Naked Fear" film review issue with Bhagya magazine, i found it on the day the magazine came to stands. But i was in my native, and i didn't have internet. So i couldn't inform you. Just thought of letting you know that your fans are out there wishing you well, even if they are not in contact.

    Thanks,
    Elavarasi Mahendiran

    ReplyDelete
  7. muthal story il ippatipattavanudan antha puthu pen vaalaamal ponathu paravaaillai nu thonuthu,

    2nd incident kodumaiyaaka ullathu.

    ReplyDelete
  8. ஜாக்கி சார்.........
    என்னத்த சொல்ல ... ஆண்டவா ..... எல்லாம் தலை எழுத்து.........

    ReplyDelete
  9. A rope not capable to hold a single girl weight.
    no 1 careless

    ReplyDelete
  10. இரண்டாவது சம்பவம்,ரொம்பவும் கொடுமை...
    எவ்வளவு அலட்சியமா இருந்துருக்காங்க.

    ReplyDelete
  11. hi anna, i like the way and the concept of this post. can i share this in my blog if possible????

    ReplyDelete
  12. Hai....this post published in kumudam reporter...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner