அன்புள்ள அபி அப்பாவுக்கு நலமா?
நலம் என்று நம்புகின்றேன்.. இங்கு அனைவரும்
நலம்...
நண்பர்களுக்குள்ளும் உறவுகளுக்குள்ளும் கடிதம் எழுதுவது குறைந்து வரும் இந்த
காலக்கட்டத்தில் இணையத்தின் வாயிலாக கடிதங்கள் எழுத ஆரம்பித்தவன் நான்..பல
நாட்களுக்கு முன்பே எழுதிய கடிதம்
இது...ஆனால் வெகு நாட்களாக டிராப்ட்டில் தூங்கி கொண்டு இருந்தது...காரணம் கொஞ்சம்
சோம்பேறித்தனம்தான்.. வெகு நாட்களாக
முற்று பெறாமல் இருந்தது.. இன்றுதான் எழுதி முடித்தேன்..
போனில்,நேரில் சொல்ல முடியாத பல விஷயங்களை கடிதங்கள்
வாயிலாக சொல்லலாம் என்பதால் கடிதங்கள் எழுதுவது
எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
உங்களை எனக்கு இந்த இணையத்தின் வாயிலாகவே தெரியும்.. எனக்கு
சென்னையில் பெரிதாக நண்பர்கள் வட்டமே இல்லை.. இன்றும் அப்டித்தான்... ஆனால் இணையத்தின் மூலமாக நண்பர்கள் அதிகம்...
உதாரணத்துக்கு இணைய நண்பர்கள் லக்கி, அதிஷா போல ஒன்றாக சுற்றுவது போலான நண்பர் என்று சொல்லிக்கொள்ள
எனக்கு சென்னையில் யாரும் இல்லை..
தினமும் போன் செய்து எந்த நண்பர்களிடத்திலும் பேசும் ஆள்
நான் இல்லை... அப்படியே வளர்ந்து விட்டேன்....காரணம் ரொம்ப கோபக்காரன் என்பதால் என்
அலைவரிசைக்கு ஒத்து வரும் நண்பர்களிடம் மட்டுமே நான் நட்பு பாராட்டுவேன்..
வாழ்க்கையில் நம் நண்பர்களை தேர்வு செய்வது நம் கையில்தான்
இருக்கின்றது..யாரை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.. யாரோடு கைகுலுக்க
வேண்டும்... யாரை
இறுக்கப்பற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் மிக கவனமாக இருப்பதில்தான் நம் வெற்றியே....
என் வீட்டிலிருந்து ஏழாவது வீட்டில் இருக்கும் என்
பெரியப்பாவிடம் பேசி இருபது வருடங்களுக்கு மேல் ஆகின்றது.. சிலரோடு ஒத்து வராது
என்று தெரிந்து விட்டால், அவரை அப்படியே புறக்கணிப்பது என் இயல்பு..
ஆனால் உங்களை இறுக்கப்பற்றிக்கொள்ளவே தோன்றுகின்றது.. என் மனைவியின் உறவினர் திருமணம் கும்பகோணத்தில்
நடைபெற்றது..கடைசி வரை கைக்குழந்தையை வைத்துக்கொண்டு எங்கே செல்வது என்று யோசித்து யோசித்து எதிலும் டிக்கெட் புக் பண்ணவில்லை..கடைசியில்
காரில் போக முடிவெடுத்த போது நண்பர் அகநாழிகை
வாசு அவரின் காரை கொடுத்தார்... சட்டென
தனது காரை கேட்க்காமலே கொடுக்க பெரிய மனது வேண்டும்...வாசு கொடுத்தார்..
மூன்று மாத குழந்தை யாழினியோடு சென்னையில் இருந்து திண்டிவனம், பாண்டி , கடலூர், சிதம்பரம்,
மயிலாடுதுறை வழியாக கும்பகோணம் செல்ல தீர்மாணித்து... சென்னையில் காலை எழு மணிக்கு
கிளம்பினோனம்..
இரண்டு மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்து விட்டோம்... குழந்தைக்கு பசி, டயர்ட், காரில் ஏசி சரியாக வேலை செய்யாத காரணத்தால் குழந்தை கசகசப்பில் அழுது கொண்டு இருக்கின்றாள்... இன்னும் ஒரு மணிநேரப்பயணம்... நான் உங்களுக்கு போன் செய்தேன்...அதுக்கு முன் உங்களோடு எனக்கு பெரிதான பழக்கம் இல்லை இரண்டு முறை சாட்டில் பேசி இருக்கின்றோம்.. சில நல்ல கட்டுரைகளுக்கு போனில் பேசி இருக்கின்றோம்.. அவ்வளவுதான்..
இரண்டு மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்து விட்டோம்... குழந்தைக்கு பசி, டயர்ட், காரில் ஏசி சரியாக வேலை செய்யாத காரணத்தால் குழந்தை கசகசப்பில் அழுது கொண்டு இருக்கின்றாள்... இன்னும் ஒரு மணிநேரப்பயணம்... நான் உங்களுக்கு போன் செய்தேன்...அதுக்கு முன் உங்களோடு எனக்கு பெரிதான பழக்கம் இல்லை இரண்டு முறை சாட்டில் பேசி இருக்கின்றோம்.. சில நல்ல கட்டுரைகளுக்கு போனில் பேசி இருக்கின்றோம்.. அவ்வளவுதான்..
ஆனால் பதிவுலக
நண்பர்கள், உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கின்றார்கள்.. மாயவரம் பக்கம் போனால்
அபி அப்பாவை சந்திக்காமல் யாரும் வந்தது
இல்லை என்று... அதே நம்பிக்கையில்தான் நான் உங்களுக்கு போன் செய்தேன்.. குழந்தையோடு வந்து
இருப்பதையும்.. அவளுக்கு வென்னீரில் குளிப்பாட்டு வேண்டும் என்றும் சொன்னேன்..
வீட்டுக்கு வரச்சொல்லி விலாசம் சொன்னீர்கள்..குடும்பத்தோடு வந்தோம்..
உங்களை முதல் முறையாக பார்க்கின்றேன். உங்களை டெல்லிகணேஷ்
போல மனம் சித்தரித்து வைத்து இருந்தது எல்லாம் நேரில் பார்த்ததும் தவிடு பொடியாகி
விட்டது.. ஒற்றை நாடியில் நெடு நெடு உயரமாக...
வீட்டுக்கு வந்த உடன் உங்கள் மனைவி எங்களை விட்டு விட்டு,
குழந்தையை வாங்கி அணைத்துக்கொண்டு அவளை
அழைத்து சென்று குளிப்பாட்ட ஆரம்பித்து விட்டார்கள்..பவுடர், துண்டு, மை என கேட்டு
வாங்கி அவர்களே அவளுக்கு பூசி விட்டார்கள்.. எனக்கு காரை அவ்வளவு நேரம் ஓட்டி
வந்ததுக்கு உங்கள் வீடும் மனிதர்களும் பெரிய இளைப்பாறலை தந்தார்கள்...
குழந்தை குளித்த
அசதியில் தூங்க.... மின்சாரம் போய்
விட... சின்ன நோட்புக் அட்டையை வைத்துக்கொண்டு உங்கள் மகள் அபி வெகு நேரம் குழந்தைக்கு விசிறிக்கொண்டு
இருந்தது இன்னும் என் மனதில் ....
போன் செய்த அரைமணிநேரத்தில எங்களுக்கு மதிய உணவையும் உங்கள்
மனைவி செய்து வைத்து இருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டு வந்து இருப்போம்.. ஆனால் கூடவே வந்த மயில் வீட்டுக்கு அவசரமாக போக வேண்டும் என்று நச்சரித்த காரணத்தால்
அவனை முதலில் இறக்கி விட்ட பிறகே மற்றதை நான் யோசிக்க முடிந்தது...உங்களை நேரில்
சந்தித்தது இல்லை.. போனில் மட்டுமே பேசி இருக்கின்றோம்..ஆனாலும் ஒரு நெடுநாள்
உறவுக்கான மரியாதை வீட்டிலுள்ளவர்களின் எல்வா செய்கைகளிலும் தெரிந்தது..
திடிர் என்று வந்த காரணத்தால் நான்வெஜ் சமைக்க வில்லை..
என்று வருத்தப்பட்டார் உங்கள் மனைவி... அவர் என்ஜினியர் என்று சொன்ன போது என்னால் நம்
முடியவில்லை.. உங்கள் வீட்டை அவர்தான்
கட்டினார் என்பதையும் என்னால் நம்ப முடியவில்லை நல்ல காற்றோட்டமான வீடு.. முக்கியமாக
முதல் தளத்தில் வெயில் தாக்க வண்ணம் நாற்க்கோணமாய் தளம் அமைத்து இருந்ததும்... பின்புறம்
ஓடையில் சல சலத்து ஓடும் நீரும், உங்கள் வீட்டை மறக்கவே முடியாது அபி அப்பா...
நட்டும் நானும் கடைக்கு போய் விட்டு வரும் போதுதான் உங்கள் தம்பி
சௌமி வீடு கட்டிக்கொண்டு இருப்பதை அவன் காட்டினான்..
இரண்டு மணிநேரம் உங்கள் வீட்டில் இருந்தோம்.. கிளம்பும்
நேரம் வந்தது...என் மனைவிக்கு குங்குமம் கொடுத்தார்கள்.. உங்களையும் உங்கள் மனைவியையும் அப்படியே கிழக்கு பார்த்து நிற்க்கச்சொல்லி நெடுஞ்சான்கிடையாக விழுந்து
வணங்கினேன்.
உங்கள் மனைவி நானும் விழுந்து நமஸ்காரம் செய்தமைக்கு சற்றே
பதறிபோனார்..உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள்.. என் வீட்டில் நானே பெரியவன்...எனக்கு
அண்ணனோ அண்ணியோ இல்லை என்று.......
என் அண்ணன் அண்ணி காலில் விழுந்து வணங்கியதாகவே நினைத்து
வணங்கினேன்...
அண்ணிக்கும்
பிள்ளைகளுக்கும் என் அன்பை சொல்லுங்கள்...
சென்னைக்கு வருகையில் குடும்பததோடு என் வீடு வந்து சென்றால் நாங்கள் நிச்சயம்
மகிழ்வோம்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
மாம்ஸ், அருமை, நட்ப்பை பாராட்ட நல்ல மனம் வேண்டும்.
ReplyDeleteகண்ணீருடன் நன்றிகள்.
ReplyDeleteநெகிழ்ச்சியான கடிதம் ஜாக்கி. நன்றி.
ReplyDeleteஇப்படி சிலர் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது. நல்ல உள்ளங்களைப் பாராட்டுகிறேன்
ReplyDeleteஅருமை ஜாக்கி
ReplyDeleteசில விஷயங்களை எழுதவே கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்திருப்பேன். ஏனோ அம்மாதிரி ஒரு விஷயத்தை இன்று எழுதவேண்டும் என்று இக்கடிதத்தை வாசிக்கும்போது தோன்றுகிறது.
ReplyDeleteஒருமுறை மயிலாடுதுறை சென்றிருக்கிறேன். அபியப்பா வீட்டில் இளைப்பாறி, சவுமியனின் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தோம். அபியப்பா-சவுமியன் இருவரும் திராவிட இயக்கம் வலுப்பெற்ற காலத்தில் தூண்களாக விளங்கியவர்களின் குடும்பப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் (கலைஞரின் உறவினர்கள் என்று அவர்களது பேச்சில் யூகிக்கிறேன்). இவ்வளவு சிறந்த பாரம்பரியத்தில் வந்தவர்களாக இருந்தும் அதுகுறித்த பெருமையோ, மமதையோ சிறிதும் அற்றவர்கள். “நாங்கள்லாம் யாரு தெரியுமா?” என்று நேர்விவாதங்களிலோ, இணைய விவாதங்களிலோ ஒருமுறை கூட ‘பந்தா’ காட்டாத சகோதரர்கள் இவர்கள்.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியப் பற்றும், வெறியும் மிக்கவர்கள், தலித்துகளை ஒடுக்கிக் கொண்டிருப்பவர்கள் என்று சமீபகாலமாக ஒரு விஷமப்பிரச்சாரம் இணையத்திலும், பொதுவெளியிலும் வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணன் சவுமியனின் அலுவலகத்தை நேரில் சென்று பார்த்தவகையில் கூறுகிறேன். ’ரமணாஸ்’ அலுவலகம் பெரியார் கனவுகண்ட நிஜமான சமத்துவபுரம். பணியாற்றுபவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே தலித்துகள். முதலாளி-தொழிலாளி வர்க்க சூழல் அங்கில்லை. சாதி பேதமற்ற உன்னதமான நிலையை அங்கே தரிசிக்க முடிந்தது. சவுமியும், அவரது துணைவியாரும் தங்களிடம் பணியாற்றுபவர்களை உறவினர்களாகவே நடத்துகிறார்கள். அப்படித்தான் பழகுகிறார்கள். அங்கே பணியாற்றுபவர்களுக்கு உணவு நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. பணியாற்றுபவர்களே சமைக்கிறார்கள். அதே உணவைதான் முதலாளியும் உண்கிறார். ஒரு பத்திரிகைக்காரனாக எனக்கு அது செமத்தியான செய்தி. ஆனால் செய்தியாக்கினால் அபியப்பா குடும்பத்தினரின் உணர்வை கொச்சைப்படுத்திவிடுவோமோவென்று ஒரு அச்சம். இதை யாரிடமும் பேச்சில் கூட பகிர்ந்துக் கொண்டதில்லை. ஏனோ இந்தக் கடிதத்தை வாசிக்கும்போது சொல்லவேண்டுமென்று தோன்றியது :-)
உங்களுக்கு வேற வேலையெ இல்லையா ஜாக்கி...
ReplyDeleteஅப்பப்ப இது மாதிரி எழுதி கண்களை கலங்க விட்டுவிடுகின்றீர் ...........
arumayana intha kalathirku thevayana katturai thanks jackie anna for sharing it
ReplyDeleteUngaluku ala vekurathe velaiya pochiii.. great tribute abiappa,,,,
ReplyDeleteUngaluku alavekurathe velaiya pochii.. g8 tribute to abhi appa...
ReplyDeleteஜாக்கி, நான் இப்போது இருக்கும் மனோநிலையில் இக்கடிதம், இப்பதிவு என்னை உலுக்கிப்போட்டது என்றே சொல்லத்தோன்றுகின்றது. தம்பி யுவாவின் பின்னூட்டம் உட்பட மற்றும் பலரது பின்னூட்டமும்... காலை 11.50க்கு சௌமியன் போன் செய்து தொண்டை அடைக்க சொன்ன வார்த்தைகள் அதன் பின்னர் 12 மணிக்கு மின்சாரம் போனதும் இப்போது மின்சாரம் வந்ததும் இடைப்பட்ட இந்த மூன்று மணி நேரமும் நான் ஒரு வித வித்யாசமான மனோநிலையில் தான் இருந்தேன். பதிவை படித்தேன். மீண்டும் மீண்டும் பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தேன். என்ன சொல்வது ஜாக்கி, என்னுடைய இந்த கடந்த நான்கு நாட்களின் மனோநிலையில் உங்களின் இந்த பதிவு... உங்கள் தோளிள் சாய்ந்து அழ வேண்டும் போலிருக்கு.... கண்ணீருடன் ... அபிஅப்பா
ReplyDeleteநெகிழ்ச்சியான கடிதம் ஜாக்கி அண்ணா. அபிஅப்பா, சௌம்யன் இருவரின் அன்பையும் மறக்கவே முடியாது. மயிலாடுதுறை சென்றிருந்தபோது அப்படிப் பார்த்துக்கொண்டார்கள். சொந்த அண்ணன்கள் போல உணர்ந்தேன்.
ReplyDeleteஎன்னன்னு சொல்ல உங்கள மாதிரி நல்ல மனுசங்க இருக்குறே சமூகத்துலே நானும் இருக்குறத நினைச்சு சந்தோசப்படுறேன்
ReplyDeleteஜாக்கி உண்மையில் இது நான் எழுத வேண்டிய பதிவு.
ReplyDeleteஆனால் நான் பொதுவாக இம்மாதிரி பதிவுகள் அதிகம் எழுதாத காரணத்தால் தயக்கத்தோடு விட்டு விட்டேன்.
என் தந்தையின் உறவினர் இறந்ததால் அவர் காரைக்கால் செல்ல வேண்டியிருந்தது. தொடர்ச்சியான பயணம் அவரால் முடியாது என்பதால் மாயவரத்தில் இரவு தங்கி,
காலையில் சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.
உடனே எனக்கு அபிஅப்பா தான் ஞாபகம் வந்தார்.
ஏற்கனவே ஆயில்யன் திரும்ணத்திற்க்கு சென்ற போது அவரும் அவர் குடும்பமும் பதிவர்களை கவனித்துக் கொண்டது என் மனம் விட்டு இன்னும் அகலவில்லை.
அதனால் தயங்காமல் அவரிடம் கேட்டேன். அவரும் நான் பார்த்துக் கொள்கிறேன் அனுப்பி வையுங்கள் என்று சொன்னார்.
என் தந்தை அங்கு தங்கியிருந்து விட்டு வந்து சொன்னார்.
“அப்படி கவனிச்சுக்கிட்டாங்க, எனக்கு கண்ணுல தண்ணியே வந்திருச்சு” என்றார்.
ஒரு வாரம் வரை அபி அப்பாவையும், சௌமியனையும் சிலாகித்துக் கொண்டே இருந்தார்.
உண்மையில் இது நான் போட வேண்டிய பதிவு.
ReplyDeleteஎன் தந்தை தன் உறவினர் இறந்ததற்காக காரைக்கால் செல்ல வேண்டியிருந்தது. தொடர்ச்சியான பயணம் அவருக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே மாயவரத்தில் தங்கி செல்லலாம் என நினைத்தார்.
நான் உடனே அபிஅப்பாவிடம் கேட்டேன். அவர் அனுப்பி வையிங்க நான் பார்த்துக்கிறேன் என்றார்.
அங்கு தங்கி விட்டு வந்த என் தந்தை ஒரு வாரத்திற்கு அபிஅப்பாவையும் சௌமியனையும் சிலாகித்துக் கொண்டே யிருந்தார்.
நீ கூட என்னை அப்படி கவனிக்கவில்லை என்றும் சொன்னார்
என்னன்னு சொல்ல உங்கள மாதிரி நல்ல மனுசங்க இருக்குறே சமூகத்துலே நானும் இருக்குறத நினைச்சு சந்தோசப்படுறேன்
ReplyDeleteநன்றி லக்கி.
ReplyDeleteநன்றி லக்கி
ReplyDeleteஅருமை ஜாக்கி
ReplyDeletewell timely written article..
ReplyDeleteHats off to you Abi Appa
Regards
Aravindan
உண்மை அன்பும் நட்பும் எப்போதும் மாறாது என்பதை நிருபிக்கும் நிகழ்வு..
ReplyDeleteஉண்மை அன்பும் நட்பும் எப்போதும் மாறாது என்பதை நிருபிக்கும் நிகழ்வு..
ReplyDeleteஇந்த உலகம் கண்ணாடி மாதிரி நாம என்ன கொடுக்குறோமோ அதுவே திரும்ப கிடைக்கும்!
ReplyDeleteநெகிழ்வான பதிவு ஜாக்கி..
ReplyDeleteஅபி அப்பாவோடு பழகியவர்களுக்கு இதில் எந்த ஆச்சர்யமும் இருக்காது. அவர் வீட்டுக்கு சென்றது இல்லை என்றாலும் துபாயில் அவர் இருந்த சமயத்தில் சந்தித்த தருணங்களில் இருந்து இதை உணர்ந்தே இருக்கிறேன். அரசியல் சார்ந்து மிகக் கடுமையான விமர்சனங்களை செய்தாலும் தனிப்பட்ட முறையில் மிகுந்த நெருக்க உணர்வையும், இலகுவான மனநிலையும் தரக்கூடியவர்.பொதுவாக தனிப்பட்ட நட்பைப் பற்றி நான் வெளிப்படையாக பேசுவதில்லை. அனைவரும் அவரவர் நெகிழ்வுகளை பதிவு செய்யும் போது என்னையும் இணணத்துக்கொள்ள தோன்றியதன் விளைவே இப்பின்னூட்டம்.
உண்மை அன்பும் நட்பும் எப்போதும் மாறாது என்பதை நிருபிக்கும் நிகழ்வு..i agreed
ReplyDeleteஅபி அப்பாவும் நானும் கொள்கை ரீதியாக எதிர் எதிரானவர்கள் ஆனால் அன்பில் அவரின் செல்ல முத்தம் எனக்கென தனியே இருக்கும்.
ReplyDeleteநான் எப்போதும் அவர் விரும்பித் திட்டும் பிளாசுளாக்கிதான் அதில்தான் எனக்கு பெருமையும் சந்தோஷமும்..
அபி அப்பாவும், சவும்யனும் அன்பிலும் பாசத்திலும் உபசரிப்பிலும் என் மனதில் எப்போதும் மிக உயரத்தில் இருப்பவர்கள்..
கொள்கையைத் தாண்டி நான் விரும்பும் அபி அப்பாவுக்கு எனது முத்தங்கள்..
அண்ணன் ஜாக்கிக்கு எனது நன்றிகள்..
கண்கலங்க வைத்துவிட்டீர்கள் ஜாக்கி. உங்கள் எழுத்தில் சுத்தமாக பொய்யோ, செயற்கையோ இல்லை. நானும் உங்களைப் போலவே அதிக உணர்ச்சிவசப் படுபவன். நிறைய முறை அதை மாற்ற வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் உங்கள் பதிவுகளைப் படிக்கையில் அது தேவையே இல்லை. நீ நீயாகவே இரு என்று நெற்றியில் அடித்தார் போல உள்ளது.
ReplyDeleteலைக்கிய, உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.. கும்பகோணம் திருமணத்துக்கு போய் விட்டு வந்ததுமே எழுதிய கடிதம் இது... சோம்பேறிதனம் இப்போதுதான் போஸ்ட் செய்தேன்..எனக்கு தோன்றியதை எழுதினேன்...எழுதுவேன்..
ReplyDeleteஅண்ணே நீங்களாவது உங்க குடும்பம், நான் இன்னொரு தோழியின் குடும்பட்ம் நாலு பேர் நாங்க நாலு பேர் ஹோட்டல் புக் பண்ணி வண்டி ரெடி பண்ணி கிளம்பும அன்று மொத்த பேருக்கும் மதிய உணவுன்னு ...
ReplyDeleteஅபிடாடியும் கிருஷ்ணாக்காவும் அபியும் நட்டுவும்...மறக்கமுடியாத உறவுகள் தான்
என்ன ஒரு உணர்வுபூர்வமான கடிதம் ஜாக்கி.. கலங்க வைக்கிறது..
ReplyDeleteஅபி அப்பா, செளமியன், நெஞ்சார வாழ்த்துக்கிறேன்..
என்ன ஒரு உணர்வுபூர்வமான கடிதம் ஜாக்கி.. கலங்க வைக்கிறது..
ReplyDeleteஅபி அப்பா, செளமியன், நெஞ்சார வாழ்த்துக்கிறேன்..
நண்பேண்டா.. :) :)
ReplyDeleteமனதார வாழ்த்துகிறேன் அபிஅப்பா. இதை இந்த நேரத்தில் பகிர்ந்ததிற்காக நன்றி ஜாக்கி.
ReplyDeleteரொம்ப நல்லா பதிவு பண்ணியிருக்கிங்க உணர்வுகளை.நன்றி ஜாக்கி சார்.
ReplyDeleteஉணர்ச்சிகளை நல்லா பதிவு பண்ணியிருக்கீங்க ஜாக்கி. அபிஅப்பாவின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...
ReplyDeleteரொம்ப நல்ல பதிவு ஜாக்கி. இப்படிப்பட்ட மனிதர்களோடு வாழ்வது பெருமையா இருக்கு. அபி அப்பா ஏதோ மன வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. அந்த சூழ்நிலை சீக்கிரம் மாற வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDeleteஎத்தனை தடவை வாசித்தாலும் கடைசியில் கண்ணீருடன்தான் முடிக்க வேண்டியதிருக்கிறது.பதிவுலகம் எவ்வளவு அருமையானது.நன்றி ஜாக்கி சார்.
ReplyDeleteஅபிஅப்பாவோட டிரேட் மார்க்கே யாரா இருந்தாளும் பாத்ததும் கட்டிபுடிச்சி தன் அன்ப வெளிப்படுத்துரதுதான் :-)))
ReplyDeleteஇங்கிருக்கும் யாரிடமும் எனக்கு இந்த பதிவுலகில் உலவிய போது கவனித்ததை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. நான் ஒரு வாசகன் மட்டுமே. எனக்கு இங்கு ஜாக்கி அவர்களின் பதிவையும் அதற்க்கு பின்னூட்டம் எழுதிய நண்பர்களின் நட்பையும் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. நட்பின் ஆழம் தெரிந்த அபி அண்ணன் மாதிரியான ஆட்களின் நட்பு கிடைக்க ஜாக்கி போன்றவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ReplyDeleteகண்ணீருடன் நன்றிகள்.
ReplyDeleteநெகிழ்ச்சியான கடிதம் ஜாக்கி Sir
Touching!
ReplyDeleteஎன்னைப்போலவே நெகிழ்ச்சியாக தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்ட உங்கள் அத்தனை பேருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ReplyDeleteஅண்ணே... இந்தளவு நல்ல மனிதரா எம் விடயத்தில் இப்படி நடந்து கொண்டார்..... வால் பையன் சொன்னது போலவே நினைக்கத் தோன்றுகிறது..
ReplyDeletewell naratted incident. ..
ReplyDeleteஅபிஅப்பா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எங்களுக்கும் அவர்களின் உபசரிப்பினைப்பெறும் வாய்ப்பு பலமுறை கிடைத்ததை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
ReplyDeleteஅருமையான பதிவு என்பது போல் எது சொன்னாலும் அது சம்பிரதாயமாய் ஆகிவிடும்..அடுத்த முறை இந்தியா வருகையில் மாயவரம் போகவேண்டும். அதற்குள் அபி அப்பாவோடு நெருங்கி பழகவும் வேண்டும், இன்ஷா அல்லா..
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா.
ReplyDeleteவழக்கம் போல சொல்ல வேண்டியது இல்லை ஜாக்கி அண்ணே பதிவு அருமை.