எங்கள் வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றால் ஜானகிராமாம் பேப்பர் ஸ்டோர் எதிரில் இருக்கும் விஸ்டம் பேக்கரியில் இருந்து ஐந்து கூடைக்கேக்குகளை அப்பா முதல் நாள் இரவே வாங்கி வந்து வைத்து விடுவார்,
மறுநாள் எங்கள் அஞ்சு பேரில் யாருக்கு பார்த்டேவோ அவர்கள் தனக்கு ஒன்று எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் ஒரு ஒரு கேக் கொடுப்போம்... அதுக்கே பெருமை மயிறு எங்க எல்லார் முகத்துலேயும் பொத்துக்கிட்டு வழியும்...
மறுநாள் எங்கள் அஞ்சு பேரில் யாருக்கு பார்த்டேவோ அவர்கள் தனக்கு ஒன்று எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் ஒரு ஒரு கேக் கொடுப்போம்... அதுக்கே பெருமை மயிறு எங்க எல்லார் முகத்துலேயும் பொத்துக்கிட்டு வழியும்...
எனக்கு எட்டு வயது, எனது தங்கைக்கு ஆறு வயது...குடும்பத்தினரை கன்னியாக்குமாரிக்கு அப்பா சுற்றுலா அழைத்துச்சென்றார்..மரத்தினால் ஆனா சொப்பு சாமான்கள் நன்றாக கலர் அடித்து மிக அழகாக பனைஓலையில் செய்த டப்பாவில் போட்டு விற்றுக்கொண்டு இருந்தார்கள்.. அதை அப்பா வாங்கி கொடுக்க கேட்டோம்.. அது வேஸ்ட் அது எதுக்குடா உனக்கு? என்று அப்பா கேட்க.......
என் தங்கை தோளில் கைபோட்டுக்கொண்டு நீ வா கவிதா... அப்பாகிட்ட பணம் இல்லை அதனால இதையெல்லாம் வாங்கி கொடுக்கமாட்டார் என்று சொல்லி விட்டு என் தங்கையை அழைத்துக்கொண்டு நான் நடக்க.. என் அப்பாவின் ஈகோவை நான் சொன்ன அந்த வார்த்தைகள் உசுப்பி விட... எங்களை அழைத்து அந்த மரத்தினால்ஆனா சொப்பு சாமான் எங்கள் இருவருக்கும் வாங்கிக்கொடுத்தார்.. அதுதான் நாங்கள் வாங்கி விளையாடிய சொப்பு சமான்கள்.. அடுத்த பிறந்த தங்கைகளுக்கு மலிவான பிளாஸ்ட்டிக்கில் செய்யப்பட்ட பந்துகளும் சின்ன நாய் பொம்மைகள் மட்டுமே எங்கள் வீட்டு தாழ்வாரத்துக்கு வந்து இருக்கின்றன.........
ஆனால் யாழினிக்கு அப்படி இல்லை..மெக்னரென்ட் சென்று மூன்று கிலோவுக்கு கேக் ஆர்டர் செய்து.. நிறைய விளையாட்டு பொம்மைகள் வாங்கி வீட்டை நிரப்பினோம்.. அது மட்டும் இல்லாமல் குழந்தை பிறந்த உடன் நண்பர்கள் வாங்கி கொண்டு வந்து குவித்த விளையாட்டு பொருட்கள் இன்னும் அதிகம்.
சரி வீட்டில் சிம்பிளாக கொண்டாட முடிவு எடுத்தோம்... முத்துசாட்டுக்கு போய் எனது இரண்டு மோதிரங்களை எலக்ட்ரானிக் தராசில் வைக்க 500ரூபாய் காந்தி தாத்தா சிரித்தபடி என் பாக்கெட்டுக்கு வந்தார்.. காந்தி வந்த பிறகுதான் எனக்கு புதுத்தெம்பு உற்சாகம் எல்லாம் வர யார் யாரை அழைப்பது என்று லிஸ்ட் ரெடி செய்து, எல்லோருக்கும் போன் செய்தும் சிலரை நேரில் அழைத்து விட்டு வந்தோம்.
நான் அழைக்க நினைந்து அழைக்க முடியாமல் போனவர்கள்..கேமராமேன் விஜய் ஆம்ஸ்ட்ராங், உண்மைத்தமிழன், குட்டிடின்,எறும்புராஜகோபால், ரோமியோ, இவர்களுக்கு குரூப் மெயில் போட்டு என்ன பண்ணி தொலைச்சேன் தெரியலை... பெயிலியர் நோட்டிஸ்ன்னு வந்துச்சி.. சரி திரும்ப அழைக்கலாம் என்று நினைத்து மறந்து போய் விட்டேன்.. மன்னிக்க...அதே போல மைதிலிக்கு அழைப்பு விடுத்து இருந்தேன்.. எனக்கு எக்சாம் நடக்கின்றது என்று சொன்னாள் படிப்பு முக்கியம்... அதனால வேறு ஒரு நாள் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.
நைட்டு வருபவர்களுக்கு டிபன்..இரண்டு இட்லி பொட்டுக்கடலை சட்னி,பொதீனா சட்னி, சாம்பார், இரண்டு சப்பாத்தி.... தொட்டுக்கொள்ள சென்னா, பாதுஷா,பிரிஞ்சி ரைஸ் அதுக்கு தயிர் பச்சடி மெதுவடை என்று மெனு பேசி முடிவு எடுத்தோம்.. எல்லோரும் ஒரு இலை 110ரூபாய்,120,130 அதுக்கு கம்மியா எங்கேயும் வராது என்று வாயிலேயே வண்டிஓட்டிக்கொண்டு இருந்தார்கள்..
எனது மனைவியின் அலுவலகத்தில் ஒரு ஆபிஸ் கொலிக் மூலமாக ஊரப்பாக்கத்தில் இருக்கும் கேட்டர் நம்பர் கிடைத்தது...நான் மெனு சொன்னேன். என்பது ரூபாய்க்கு கம்மியாக செய்ய முடியாது என்றார்... வண்டி வாடகை 400 என்றார்..எழுப்பத்தி அஞ்சு பேருக்கு சொன்னேன். மொத்தம் ஆறாயிரத்து 400க்கு மாலை அஞ்சரை மணிக்கு சொன்ன நேரத்துக்கு உணவுப்பொருட்களை இறக்கி விட்டார்கள்.. என்ன நீங்கள் பாத்திரம் மட்டும் ரெடி செய்துக்கொள்ள வேண்டும்.. நம் வீட்டு பாத்திரத்துக்கு உணவு மாற்றி பணத்தை கொடுத்து அனுப்பினேன்.. உணவு சுவையாக இருந்ததாக சொன்னார்கள். நண்பர் பெங்களுர் அரவிந் சங்கீதாவுல சொல்லி இருந்தா கூட இந்த அளவுக்கு நல்லா இருந்து இருக்காது என்று சொன்னார். அன்னபூர்னா கேட்டர்ஸ் ஊரப்பாக்கம்... தொலைபேசி..9840446155
வீட்டிலேயே கேக் கட் பண்ணலாம் என்று முடிவு செய்து இருந்தேன்.. வெயில் காலம் புழுங்கி தள்ளும் என்பதால் மொட்டை மாடியில் வைத்துக்கொண்டோம்.. இரண்டு போக்கஸ் லைட் கட்டி இருபது நேர் ஆர்டர் செய்து.. பந்திபாய் ஒரு நாலு பாய் ஆர்டர் செய்தேன்...
மாலை மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து நண்பர் நட்ராஜ் குழந்தையை வாழ்த்தி விட்டு சென்றார்..
ஆனந்,ஸ்ரீதர்,லட்சுமணன்,பாலாஜி,பிரியா போன்றவர்கள் மொட்டை மாடிக்கு பெருட்கள் எடுத்து செல்ல உதவ.. விழா களைக்கட்டியது..பெங்களுர் அரவிந்த வாய் விட்டு கேட்டே விட்டார்.. உங்க மனைவி சைடுல உங்களுக்கு செமை சப்போர்ட் போல.. பசங்க கில்லியா வேலை செய்யறாங்க... என்றார்...
எல்லோரும் வழி சொல்லி சொல்லி வாய் வலித்து போனது..கிண்டியில் கத்திபாராவில் இருந்து என் வீடு எட்டு கிலோமீட்டர் இதையே தூரம் என்று நண்பர்கள் சொல்லுகின்றார்கள்...
எல்லா வேலைகளும் செய்து விட்டு நான் கிளம்ப கொஞ்சம் லேட்டாகி விட்டது..
யாழினி எழரை மணி வாக்கில் கேக் வெட்டினாள்..யாழினிக்கு அவள் பாட்டி எடுத்துக்கொடுத்த பட்டுப்பாவடைசட்டையை போட்டுக்கொண்டு கேக் வெட்டினாள்..அவளுக்கு ஒரே சந்தோஷம் போக்கஸ் லைட், நிறைய மனிதர்கள்..நிறைய கொஞ்சகள் என்று மேடம் ரொம் பிசி.. என் அப்பாட்மென்ட் வாசிகள் எல்லோரும் வந்து இருந்தார்கள். எனது பெண் நண்பிகள் அவ்வளவுதூரம் பயணித்து வந்து யாழினியை வாழ்த்தினார்கள்.
பதிவுலகில் முதலில் அரவிந் மற்றும் நாரயணன் வந்தார்கள்..பிறகு காவேரிகணேஷ் பலாப்பட்டறை சங்கர் மற்றும் கேஆர்பி செந்தில்,கேபிள் சங்கர்,ராஜப்பிரியன், போன்றவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்..ஷங்கர் பிறந்தநாள் விழாவில் நல்ல போட்டோக்கள் கிடைக்க உதவியாய் இருந்தார் ஷங்கருக்கு ஸ்பெஷல் நன்றி.....அதே போல வீடியோ எடுத்த பிரியாவுக்கும் ஸ்பெஷல் தேங்ஸ் பதிவுலக நண்பர்கள் கடைசி வரை பொறுமை காத்து சென்றனர்... அதே போல ஷாம் மற்றும் குறும்பழகன் இரண்டு பேரும் குடும்பத்துடன் வந்து நேரில் வாழ்த்தினார்கள்..
சமீபத்தில் மயக்கம் என்ன திரைப்படத்தில் வரும் பிறை தேடும் இரவிலே உயிரே பாடல் என்னை மிகவும் படுத்தி எடுக்கின்றது... அத் பாடலை விழா முடிந்து கேட்டுக்கொண்டு இருக்கும் போது என் கண்கள் கலங்கியது.. நானும் என் காதல் மனைவியும் கடந்த வந்த பாதைகளையும் என் அம்மாவையும் அந்த பாடல் அதிகம் நினைக்க வைக்கின்றது.. உனக்கென இங்கு வாழும் இதயம்மடி........ உயிருள்ள வரை வாழும் உன் அடிமையடி........ யப்பா என்ன வரி....
எத்தனை எத்தனை நண்பர்கள் வாழ்த்துக்களை போனிலும் மெயிலிலும் தெரிவித்தார்கள்...யாழினி மெயிலுக்கு இன்னும் மெயில்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.. 80 மெயில்களில் வாழ்த்து சொல்லி இருக்கின்றார்கள்.. அதில் முக்கால்வாசி பெண்கள்...யாழினிக்குதான் எத்தனை அத்தைகள்...எனக்கே பொறாமையாக இருக்கின்றது... அவளுக்கு விபரம் தெரியும் போது பதில் சொல்லுவாள்...உங்களுக்கு தோன்றியதை, மனதில் பட்டதை எப்போது வேண்டுமானாலும் அவளுக்கு சொல்ல yazhinijackiesekar@gmail.com மெயிலுக்கு எழுதுங்கள்..
அதே போல 17/03/2012 அன்று முதல் பிறந்தநாள் விழா காணும் நண்பர் பாஸ்டன் ஸ்ரீராம் குழந்தை ஸ்ரீஹிதாஸ்ரீராமுக்கு எங்கள் இதயபூர்வமான வாழ்த்துகள்..
============
அன்பின் ஸ்ரீஹிதா
பெரியப்பா ஜாக்கி எழுதிக்கொள்வது..டாம் அண்டு ஜெர்ரி கார்ட்டுன் கேரக்டர்கள்தான்.. நானும் உங்க அப்பனும்........ வாரி விட்டுக்கறதுல ரெண்டு பேரை அடிச்சக்கவே முடியாது...ஆனா ரெண்டு பேரும் விட்டுகொடுத்துக்கறதுலயும் அடிச்சிக்க முடியாது..உன்னை கொண்டாட உங்க அப்பா அம்மா இருக்காங்க...இங்க தமிழ்நாட்டுல உங்க பெரியப்பா பெரியம்மாவுமா நாங்க இருக்கோம்.. உன்னோட பிரண்டு யாழினியோடு நீயும் நிறைய விட்டுக்கொடுத்து வாழனும்..நிறைய உயரங்களை தொட உன் பெரியப்பா பெரியம்மாவின் அன்பும் ஆசியும் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
==========
என்னய்யா ரொம்ப சுயபுராணமா இருக்கு... வர வர உன் தளத்தை படிக்கவே பிடிக்கலை..அப்படியா சந்தோஷம் இந்த இணைய வெளியில் நிறைய இன்னும் இன்பர்மேட்டி தளங்கள் நிறைய இருக்கின்றன....நேரத்தை வேஸ்ட் செய்யாதிங்க... அப்படியே கிளம்புங்க.. ரெடிஜுட்... நான் அப்படித்தான்..........
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நான் அப்படித்தான்
ReplyDelete:) I love this statement
ஜாக்கி
ReplyDeleteமென் மேலும் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்.
Many more happy returns of the day 'SRIHITHA' and also a warm hello to Boston Sriram.
ReplyDeleteSridhar
Nice, first 2 years, their birthdays are for our enjoyment. From 3rd birthday, they will start to enjoy theirs. Hearty wishes to Yalini baby.
ReplyDeleteரெண்டு குழந்தைகளுக்கும் எங்கள் அன்பும் ஆசிகளும் கலந்த இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.
ReplyDeletenice! Belated wishes!
ReplyDeleteNice! Belated wishes to Yazhini!
ReplyDeleteWishes to both the kids.....
ReplyDeleteWishes to Yazini and Srihita...
ReplyDeleteyazhini kutty pappa koduthu vachava
ReplyDeleteVery Nice.....Belated Birthday Wishes...
ReplyDeletesweet and simple. ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு இது போதும் ஜாக்கி. மகிழ்ச்சியான ஒரு மாலை :)) யாழினிக்கு அன்பும் ஆசியும்.
ReplyDeleteVery nice sharing jackie anna
ReplyDeletejackie anna - i had visited kalaiy.blogspot.com
ReplyDeleteits has something different news about globalization of culture, god and its effects. if you have time visit it. if you think it is useful for all publish it.
happy birthday YAHLINI
ReplyDeleteHappy birthday to the baby. Thanks for the note in the last para. Naan inime appittu... It was nice reading your blog all these days.
ReplyDeleteHappy birthday to the baby. Thanks for the note in the last para. Inime naan appittu... It was nice reading your blog all these days... bye bye.. :-).
ReplyDeleteவாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.,.
ReplyDeleteஷங்கர் மச்சி.. நல்ல போட்டோ கிடைக்க நீதான் காரணம்.. நான் அதை மறக்கவே மாட்டேன்.... இந்த பக்கம் வரும் போது வீட்டுலயும் பசங்களையும் அழைச்சிகிட்டு வாடா...மகிழ்ச்சியான அந்த மாலையை மறக்கவே முடியாது... திரும்பவும் சொல்லறேன். நன்றி மச்சி... வீடு தூரம் அப்படின்னு எல்லாம் நினைக்காம வந்த பாரு...அதுக்கு ஸ்பெஷல் நன்றிகள்