இரண்டு பிரட்டுக்கு நடுவில் ஜாம் வைத்து பல்லுக்கு வலிக்காமல் பிரேக்பாஸ்ட் சாப்பிடுவது போல வாழ்க்கையின் மிக சிக்கலான விஷயங்களை மிக லைட்டாக எடுத்துக்கொள்வது ஜரோப்பிய மற்றும் அமெரிக்க நாகரிகம்...
அப்படியும் இல்லையென்றால் அப்பாயில் போட்டு அதில் இருக்கும் மஞ்சள் கருவில் பிரட்டால் கலக்கி தின்று விட்டு கைதுடைத்துவிட்டு ஆபிசுக்கு போய்விடுவார்கள்..ஆனால் இங்கே காலை டிபனுக்கு இட்லிக்கு கார சட்னி மற்றும் பொட்டுக்கடலை சட்னி தேவைப்பட்டால் மிளகாய் பொடி என்று ஒரு கட்டு கட்டுவது என்பது நமது இயல்பு...
காலை டிபனுக்கே இவ்வளவு அலட்டல் செய்யும் நமக்கும் வாழ்க்கை மற்றும் இன்னபிற விஷயங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போம்...
நீங்கள் ஒரு மருத்துவர்.. அறுவை சிகிச்சை நிபுனர்...உங்களை போல ஒரு டேடிகேட்டேட் மருத்துவரை பார்ப்பது அரிது.. உங்கள் மனைவி வேறு ஒருவனுடன் ஓடிப்போய் விபத்தில் சிக்கி கார் தீப்பற்றி எரிந்து கரிக்கட்டையாக மாறிப்போனவளை கண் எதிரில் பார்த்தவர் நீங்கள்...
சரி அது தான் கழிச்சடை ஒழிச்சி போச்சு என்று நிம்மதியாக இருக்கும் வேலையில் உங்கள் கண் எதிரில் உங்கள் மகள் கற்பழிக்கப்பட்டு இறந்து போனாள் நீங்கள் என்ன செய்ய முடியும்??
======================
THE SKIN I LIVE IN(La piel que habito)2011 படத்தின் ஒன்லைன்.
தன்மகளை கெடுத்தவனை பழிவாங்கும் ஒரு டாக்டர் அப்பனின் கதை..
===============
THE SKIN I LIVE IN(La piel que habito)2011 படத்தின் கதை என்ன??
ராபர்ட் (Antonio Banderas) டாக்டர் மற்றும் ஆராய்சியாளர்..உங்கள் மனைவி வேறு ஒருவனுடன் ஓடிப்போய் கார் விபத்தில் சிக்கி இறந்து போய் விட்டாள்.. அதுக்காக ஓடுகாலி முண்டை என்றெல்லாம் திட்டாமல் அவள் எரிந்து போன குற்றுயிராய் கிடக்கும் உடம்பை எடுத்து வந்து புதிய தோலை உருவாக்குகின்றீர்கள்.
அதாவது நெருப்பு பட்டாலும் கருகாத புதிய தோல்...ஆனால் ஒரு நாள் அவள் கண்ணாடி பார்த்து விட்டு தனது விகாரமான முகத்துடன் வாழ விரும்பாமல் தற்கொலை செய்துகொள்ளுகின்றாள்.இப்படியாக போகும் வாழ்க்கையில்...... ஒரு பார்ட்டியில் உங்கள் மகள் கெடுக்கப்பட்டு இறந்து போகின்றாள்..
உங்களுக்கு நன்றாக தெரியும்.. உங்கள் மகளை கெடுத்தவன் யார் என்று.. அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள். அதிக பட்சம்...?? அவனோடு உறவு வைத்துக்கொள்ள விரும்புவீர்களா? நீங்கள் கே வும் அல்ல.... அடச்சே அது எப்படி சாத்தியம்... ?தன் மகளை கெடுத்த பையனிடம் உறவு வைத்துக்கொள்ள முடியுமா?
படத்தோட டூவிஸ்ட்.. அதுக்கான சாத்தியங்களை லாஜிக் மிஸ் ஆகாமல் அறிந்து கொள்ள படத்தை வெண்திரையில் பாருங்கள்..
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
உலக சினிமா பார்க்கும் ரசிக கோடிப்பெருமக்களுக்கு Pedro Almodóvar என்ற இந்த இயக்குனரின் பெயர் நன்கு பரிட்சயமாக பெயர்தான்..
சென்னை உலக திரைப்படவிழாவில் இவர் இயக்கிய ஓல்வர் திரையிடப்பட்டு பெருத்த வரவேற்ப்பை பெற்ற படம்.. எந்த ஆண்டு என்று நினைவில் இல்லை... பிலிம்பெஸ்ட்டிவல் ஓப்பனிங் படம் என்று எண்ணுகின்றேன்.
(நடுவில் இயக்குனர் Pedro Almodóvar )
.உறவுகளின் மெல்லிய சிக்கலான மன உணர்வுகள்தான் இவர் திரைப்படங்களின் அடிநாதம்.. இதை செய்யலாமா? வேண்டாமா? இது பாவம் இல்லையா? இதை சமுகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? என்று உங்கள் மிடில் கிளாஸ் மனசாட்சி எதையெல்லாம் பார்த்து பயந்து பேக் அடிக்கின்றதோ அதையெல்லாம் தூக்கி காலில் மிதித்து போட்டு விட்டு அதன் மீதே ஸ்டைலாக நடந்து போகும் கேரக்ட்ர்கள்தான் இவர் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள்.
இவர் இயக்கிய படமான டாக் டூ ஹர் படத்தை பற்றி ஏற்கனேவே இதே தளத்தில் எழுதி இருக்கின்றேன். அந்த படத்தை வாசிக்காதவர்கள் வாசிக்க இங்கேகிளிக்கவும்..
இந்த படம் Thierry Jonquet என்பவர் எழுதிய நாவல்Tarantula என்ற பெயிரில் முதலில் பிரேஞ்சிலும் பிறகு ஆங்கிலத்திலும் வெளி வந்தது.. இவர் 55 வயதில் இறந்து போய் விட்டார்.
ஸ்பேனிஷ் இயக்குனர் Pedro Almodóvar ரைட்டர் Thierry Jonquet எழுதிய நாவலை அப்படியே படமாக எடுக்காமல் தனது பாணியில் திரைக்கதையில் சில திருத்தங்களுடன் படமாக்கினார்.. காரணம் நாவலில் பேய், திகில் போன்ற விஷயங்களை உள்ளடக்கி அந்த நாவல் புனையப்பட்டு இருந்தது..
அற்புதமான திரைக்கதை.. எதிர்பாராத டுவிஸ்ட்டுகள் என்று இந்த படம் ஒரு அசத்தலான அனுபவத்தை இந்த படம் கொடுக்கும்... அப்ப இவன் யாரு..? இவள் யாரு? அவனுக்கு இவனுக்கு என்ன உறவு? அவதான் செத்து போயிட்டாலே? என்று படம் பார்க்கும் போது மண்டையை போட்டு குழப்பிக்கொள்வீர்கள்.
நீ எனது மகளை கெடுத்தாய்...இல்லை எனக்கு நினைவில்லை.. நான் மாத்திரை மற்றும் போதைபவுடர் கொஞ்சம் எடுத்து இருந்தேன் அதனால் உங்கள் மகளை கெடுத்தேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது..அனால் என் மகள் எந்த போதை மாத்திரையோ மருந்தையோ அவள் எடுத்துக்கொண்டதில்லை.. என்று ஆன்ட்ரோ கோபமாக சொல்லும் இடங்களில் ஜொலிக்கின்றார்..
வேறா என்ற பாத்திரத்தில் நடித்த Elena Anaya நடிப்பில் ஜொலிக்கின்றார்.. இந்த படத்தில் நடித்தமைக்காக பெஸ்ட் ஆக்டர் அவார்டு வாங்கி இருக்கின்றார்...இவர் ரூம் இன் ரோம் படத்தில் நடித்து புகழ்பெற்ற நாயகி..
இந்த படம் கேன்ஸ் விழாவில் போன வருடம் கல்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது..
==========
படத்தின் டிரைலர்.
============
படக்குழுவினர் விபரம்.
irected by Pedro Almodóvar
Produced by Agustín Almodóvar
Pedro Almodóvar
Screenplay by Pedro Almodóvar
Based on Tarantula by
Thierry Jonquet
Starring Antonio Banderas
Elena Anaya
Marisa Paredes
Jan Cornet
Roberto Álamo
Music by Alberto Iglesias
Cinematography José Luis Alcaine
Editing by José Salcedo
Studio El Deseo
Distributed by Warners España (Spain)
Sony Pictures Classics (US)
Release date(s) 19 May 2011 (Cannes Film Festival)
2 September 2011 (Spain)
Running time 117 minutes
Country Spain
Language Spanish
Budget €10 million[1]
Box office US$30,808,165
Produced by Agustín Almodóvar
Pedro Almodóvar
Screenplay by Pedro Almodóvar
Based on Tarantula by
Thierry Jonquet
Starring Antonio Banderas
Elena Anaya
Marisa Paredes
Jan Cornet
Roberto Álamo
Music by Alberto Iglesias
Cinematography José Luis Alcaine
Editing by José Salcedo
Studio El Deseo
Distributed by Warners España (Spain)
Sony Pictures Classics (US)
Release date(s) 19 May 2011 (Cannes Film Festival)
2 September 2011 (Spain)
Running time 117 minutes
Country Spain
Language Spanish
Budget €10 million[1]
Box office US$30,808,165
===============
பைனல் கிக்..
ரொம்ப நாளாக திரில்லர் படம் நிறைய சஸ்பென்ஸ்களுடன் பார்க்க இந்த படம் சிறந்த படம் என்பேன்.. படத்தில் இருக்கும் எல்லாத்துக்கும் சின்ன சின்ன லாஜிக் சமாச்சாரங்களோடு கதை சொல்லி இருப்பார்கள்.. இந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம்.
படத்தில் படுக்கையறை காட்சிகள் இருக்கும் காரணத்தால் பேச்சிலர்கள் ஒரு டின் பியருடன் படம் பார்ப்பது நலம்.. சார் கைலி கட்டிகிட்டு பார்க்கலாமா? அது உங்க சவுகர்யம்..
இந்த படம் சென்னை பாரிசில் உள்ள மூவிஸ்நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது..9003184500....மேலும் இயக்குனரின் மற்ற படைப்புகளான டாக்டூஹர் மற்றும் ஓல்வர் படங்களின் டிவிடிக்களும் இங்கே கிடைக்கின்றது..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஒரு சின்ன திருத்தம்....படத்தில் அவர் மகள் தன்னை கெடுத்தது தன் அப்பா என்று நினைத்து தற்கொலை செய்து கொள்கிறாள்...மற்றப்படி உங்கள் விமர்சனம் அருமை
ReplyDeleteடவுன்லோட் லிஸ்டில் ரொம்ப நாளாக் கிடக்கிறது. பார்த்துவிட்டு எழுதுவோம் என்றால் நீங்கள் முந்திவிட்டீர்கள். விமர்சனத்திற்கு நன்றி பாஸ் ...
ReplyDeleteஜாக்கி சார்..ரொம்ப நாட்கள் தங்களது வலை பக்கம் வர இயலவில்லை..மன்னிக்கவும்/
ReplyDeleteவழக்கம் போல அருமையான எழுத்துக்களோடு அழகான விமர்சனம்..பார்க்க வேண்டும் போல உள்ளது..எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது பெட்ரோ அல்மெடேவோர் என்ற இயக்குனரை அறிந்துக்கொண்டதே தங்களது டோக் டூ ஹேர் பதிவின் மூலம்தான்.மிக்க நன்றி.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
review makes keen to watch the movie.
ReplyDeletejackie anna en mailku neenga rely pannalai paravaillai
ReplyDeleteen blog pathi oru vari arimugam panna ungalukku virupamillainu thonuthu its ok
Why you revealed that her daughter was raped that was the main twist.. Add spoiler warning before revealing plot
ReplyDelete