சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /ஞாயிறு/18/03/2012

ஆல்பம்..
இலங்கை போர்குற்ற வீடியோக்களை பார்க்கும் போது  வயிறும் மனதும் எரிகின்றது... கண் எதிரில் ஒரு இனம் வேர் அறுக்கப்பட்டதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்..சேனல் போர் வெளியிடும் வீடியோக்களை பார்க்க மனதில் திரணியில்லை..
இந்திய அரசியல் ரொம்ப சிக்கலானது.. இப்போது பேசி பயனில்லை...தன் தந்தையை இழந்தவர்கள், தன் கணவனை உடல்சிதறி பறிகொடுத்தவர்கள் டெல்லியில் அதிகாரபீடத்தில் இருந்த காரணத்தால் பழிக்கு பழியாக இந்த நான்காம்கட்ட ஈழப்போரை அவர்கள் பயண்படுத்திக்கொண்டார்கள்...இந்தியா இருக்கும் அந்த தைரியத்தில்தான் இலங்கையும் வெறியாட்டம் போட்டது..வேறு என்ன சொல்ல... இந்த நேரத்தில் ஐநா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று எவ்வளவு கூக்குரல் இட்டும் இன்னும் சால் ஜாப்பு  வார்த்தை ஜோடனைகளை டெல்லி பேசிக்கொண்டு இருக்கின்றது..முதல் முறையாக பாரளுமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த குரல் ஒலித்து இருக்கின்றது.... இவ்வளவு நாள் கழிச்சாவது இப்பவாவது புத்தி வந்துச்சே....

================


 இன்று மாலை சென்னை மெரினாவில் மே பதினேழு இயக்கத்தினர் பொதுவாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று ஐநாவை வலியுறுத்த போராட்டம் மெற்கொள்ளுகின்ன்றார்கள்..ஜாதி ,மதம், கட்சி பாகுபாடின்றி ஓர் அணியில் இணைவோம்..

=================
ஏன்டா தமிழ்நாடு இப்போதான் நிம்மதியா இருக்கு... இதுவரை பூகம்பம்  எதையும் சந்திச்சது இல்லை. நம்ம தமிழ்நாடு எம்பிக்கள் எல்லாம் சேர்ந்து, இலங்கை போரில்  நடந்த மனித உரிமை மீறல்களுக்கு ஒன்னா குரல் எழுப்பி தொலைச்சி இருக்காங்க.. பூகம்பமோ அல்லது புயலோ வந்துடப்போவுது---காங்கிரஸ்காரங்களை தவிர நம்ம எல்லா எம்பியும் ஒத்துமையா ஓரணியில் நின்று அமளியில் ஈடுபட்டு இருக்காங்க.. இதே ஒத்துமையோட காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனைன்னு எல்லாத்துக்கு ஒத்துமையா இருங்க சாமியோவ்....முக்கியமா ரெயில்வே துறையில் நம்ம மாநிலம் மற்ற மாநிலத்தை விட பின்தங்கி இருக்கு.. அதுக்கும் நீங்க எல்லாம் ஒத்துமையா நின்னா இன்னும்  ரொம்ப நல்லா இருக்கும்.
========================
என்னதான் கலைஞரை சில விஷயங்களில் ஆதரித்து பேசினாலும் சில செயல்களை பார்க்கும் போது கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கின்றது.. அண்ணா நூலகத்தை இடம்மாற்றினால் தீ குளிப்பேன் என்று உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வாக்கியம் என்றாலும், கலைஞர் டிவியில் தினமும் இரவு எழு மணக்கு தமிழர்களே தமிழர்களே என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக இருப்பேன்.. என்று சொல்லுவதை நிறைய நேரங்களில் ஜிரனிக்க முடிவதில்லை...
=============
மிக்சர்.
மெட்ரோரயில் பணிகள் காரணமாக சென்னை அசோக்பில்லரில் இருந்து கோயம்பேடு செல்வதற்குள் போதும் போது என்றாகிவிடுகின்றது...என்னைக்குத்தான் இந்த மெட்ரோரயில்பணிகள் முடியும் என்று ஏக்கமாகவும் கடுப்பாகவும்  இருக்கின்றது.
============
கரெண்ட் இரண்டு மணிநேரம்  போகுது... என் வண்டி சரியா 12 மணிக்கு முகலிவாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் பேங்கு கிட்ட பஞ்சர் ஆயிடுச்சி.. எங்க போனாலும் கரெண்ட் ரெண்டு மணிக்குதான் வரும்.. இப்ப பஞ்சர் ஒட்ட முடியாதுன்னு சொல்லறானுங்க.. ஏன்டா காத்து ஏத்தி வச்சிக்க வேண்டியதுதானே என்றால்...? ஏத்தி வச்சோம் ரெண்டு பஞ்சருக்குதான் தாங்குது.. பிரஷர் பத்தலை... நீங்க வேற கடையை பாருங்கன்னு அலட்சியமா சொல்லறானுங்க.. 12 லிருந்து இரண்டு மணி வரை கரெண்ட் கட் இரண்டு மணிக்குதான் வரும் அதுவரை வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டானுங்க.. ஓத்தா ஒரு பஞ்சர்  போடறதுக்கு இரண்டு மணிநேரம் வெயிட் செஞ்சி தெவுடுகாத்துகிட்டு இருந்தா வௌங்கிடும்னு பூத்தப்பேடு வழியா பஞ்சர்  வண்டியை  தள்ளிகிட்டு வளசரவாக்கமே வந்துட்டேன்... அங்க ஒரு புண்ணியவான் பஞ்சர் போட்டுகொடுத்து விட்டு அறுபது ரூபாய் கேட்டான்.. ஏன்டடாப்பா  என்றேன்... கரண்ட் இல்லை ..அதனாலதான்... பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா என்றான்.. ஏதோ இரண்டு கிலோமீட்டர் நட்ட நடு வெயிலில் தள்ளிக்கொண்டு வந்ததுக்கு பஞ்சர்வது போட்டுக்கொடுத்தியே என்று வாயையும் சூத்தையும் சேர்த்து மூடிக்கொண்டு வந்தேன்.. நாம வாங்கி வந்த வரம்  அப்படி... சென்னையிலேயே இந்த கொடுமைன்னா அறிவிக்கப்படாத எட்டு மணி நேரம் மின்வெட்டை சந்திக்கும் தென்மாவட்டத்து மக்களை நினைச்ச பாவமா இருக்கு....
=================
17 வயசு பையனுடன் ஓடிப்போன 37 வயசு டீச்சரை டெல்லியில் அமுக்கி இருக்கின்றார்கள்..சில நேரங்களில் காதல் இப்படி வெறித்தனமாக பூத்து விடுகின்றது.. யோவ் ஜாக்கி இதுக்கு போரு காதல் இல்லை முறைதவறிய காமம் என்று சிலர் கூப்பாடு போடுவார்கள்..வெள்ளைக்காரன் காதலையும் காமத்தையும் பிரித்து பார்த்து குழப்பிக்கொள்வதில்லை.. அதான் நமக்கும் அவனுக்கும் இருக்கும் வித்யாசம்.. டீச்சர்  போலிசில் மாட்டிக்கொண்டதும் என் மகன் போல அவனை நேசித்தேன் என்ற ஜல்லியடித்ததாக பத்திரிக்கைகள் சொல்லி இருக்கின்றன... அப்படியே சின்ன பிளாஷ் பேக்....
நான் ராமகிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் படித்தவன்..எனக்கு டீச்சராக வந்தவர்கள் எல்லாம் 40 வயதை கடந்தவர்கள்.. அவர்களை எல்லோரும் அக்கா என்றே அழைக்க வேண்டும்.. இதுதான் பள்ளியின் எழுதப்பாடாத உத்தரவு...சாந்தாபாய் என்று ஒரு டீச்சர் இருந்தார் அவர் 55வயதை கடந்தவர்.. அவரையும் அக்கா என்று அழைத்ததுதான் பெரும் சோகம்...அதுக்கெல்லாம் மச்சம் வேண்டும் நாராயணா என்று உள்ளே இருக்கும் கலகக்குரல் ஒங்கி ஒலிக்கின்றது.
====================
இந்தவார கடிதம்..

அன்புள்ள ஜாக்கி சேகர்,
கடந்த சில மாதங்களாக உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன்.சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் உங்கள் பதிவுகளெல்லாம் Tension-Breakers.படிக்கையில் ஒரு சுவாரசியமும்,தகவல்களும்,நிறைய புன்சிரிப்புகளும்  இலவசமாக  கிடைகிறது. வாழ்த்துக்கள்!
உங்கள் பதிவுகளை படித்துவருவதன் காரணமாக உங்களுக்கும் எனக்கும் சிற்சில ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.
உங்களை போல் நானும் கடலூரில் பிறந்து வளர்ந்தவன் தான்.....மஞ்சகுப்பம்,கூத்தப்பாக்கம், பாடலி தியேட்டர், வேல்முருகன்  தியேட்டர்,சில்வர் பீச்,தந்தை பெரியார்,ஊர் பாஷை  என்று உங்கள் பதிவுகளில் படிக்கையில்,ஊரை விட்டு வந்து பல வருடங்கள் ஆகி இருக்கும் எனக்கு ரொம்பவும்  குதூகலமாக இருக்கும்.
நீங்கள் சில வருடம் வடபழனியில் வசித்து வந்ததை படித்ததாக நினைவு,நானும் அங்கே சில வருடங்கள் இருந்திருக்கிறேன்.
தற்சமயம் நான் பெங்களூர்-மடிவாளா-பிடிஎம்ல் தான் வசித்துவருகிறேன் அதை பற்றியும் நீங்கள் நிறைய எழுதி இருக்கின்றீர்கள்.
இல்லையா?அங்கேயும் நாம் லேசாக ஒத்துபோவது தெரிகின்றது.
இந்த கடிதத்தை நான் எழுத முக்கியகாரணம் ஒன்றே ஒன்று தான்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தானே புயலால் பாதிக்க பட்டவர்களுக்கு நிதி திரட்டி உதவி செய்தீர்கள்.அதை படித்த போது எனக்கும் தனிப்பட்ட முறையில் எதாவது செய்திருக்கலாம்/செய்யலாம் என்று தோன்றியது.இனி குழந்தைகள் படிப்பு செலவோ,மருத்துவ உதவியோ உங்கள் ப்ளாக்ல் பதிவிட்டீர்களேயானால் நானே உங்களை தொடர்பு கொள்கிறேன்.அல்லது எந்த ஒரு அவசர உதவிக்கும் எனக்கு ஒரு மெயிலை தட்டி விட்டால் போதும் நிச்சயம் என்னால் முடிந்ததை செய்கிறேன்.ஏனென்றால் உங்கள் ப்ளாக்ஐ விட மெயிலை என்னால் தினம் பார்க்க முடியும்.
மேலும் நாங்கள்(கல்லூரி நண்பர்கள்) கொஞ்சம் பேர் சேர்ந்து snows  டிரஸ்ட் என்ற சேவை மையத்தை நிறுவி சில உதவிகளும் செய்து வருகிறோம்.அதை பற்றிய எனது பதிவு, http://www.rojavinkadhalan.blogspot.com/2012/03/blog-post.html
 அன்புடன்
இப்ராஹீம்
பெங்களுர்


================
கடலூர்காரன் இப்ராஹீம்முக்கு என் நன்றிகள். உங்கள் கடிதத்துக்கு மிக்க நன்றி.. ஏதாவது உதவி தேவைப்படின் நிச்சயம் கேட்கின்றேன்.தானே புயலில் நான் எதையும் செய்யவில்லை... அது சிங்கை நண்பர்களின் உழைப்பில் கொடுத்த பணத்தை நான்  மேற்பார்வையாளனாக உரியவரிடத்தில் சேர்பிக்க உதவினேன் அவ்வளவே....உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை... என்னை முடிந்தால் தொடர்பு கொள்ளவும் கடலூர்காரரிடம் பேசி  மகிழ்வோம்.
=========

பிலாசபி  பாண்டி..

 பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. கடல் பழையது; மழை புதியது
===============
நான்வெஜ்18+ 
பேஸ்புக்கில் 20வயது மதிக்கத்தக்க பெண் ஐ காட் மை பீரியட் என்று ஸ்டேட்டஸ் போட்டாள்..30 பேர் லைக் போட்டார்கள்..நான்கு பேர் தேங்காட் என்றார்கள்.



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

5 comments:

  1. தென் மாவட்டங்கல் வரை ஏன் போரீங்க, சென்னைக்கு பக்கத்துல வண்டலூர் அருகில், மண்ணிவாக்கம் பகுதியில்Power cut Schedule, 9-12,15.00-18.00,18.45-19.30,21-21.45,23.15-00.00,01.45-02.30,4.00-4.30hrs.வண்டலூர் தாண்டி எல்லா இடத்துலயும் இப்படித்தான், இது தவிர அவ்வப்போது கரண்ட் சில நிமிடங்கள் போகும். சென்னைக்கு 2 மனி நேரம் கட் என்பது ஜுஜுபி மேட்டர்.

    ReplyDelete
  2. //கலைஞர் டிவியில் தினமும் இரவு எழு மணக்கு தமிழர்களே தமிழர்களே என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக இருப்பேன்.//இப்போது ஆறரை மணிக்கு இக்குரல் ..

    ReplyDelete
  3. இங்கே கிட்டதட்ட 11 மணி நேரம் கரண்ட் கிடையாது... ஏதோ குற்றாலம் அருகில் இருப்பதால் இரவு நேரங்களில் அவ்வளவாக வெப்பம் இல்லை.... மதுரை, பாளையங்கோட்டை மக்கள் பாடு திண்டாட்டம் தான் ! ! இரவு முழுக்க உங்களுக்கு கரண்ட் இருக்கிறதே.. கொடுத்து வைத்தவர்கள்தான் சென்னைவாசிகள் ! ! !

    ReplyDelete
  4. மிக்க நன்றி கே கே, மற்றும் பொன்சந்தர்.. சென்னையில் இரண்டு மணிநேரத்துக்கே சலிச்சிக்கறாங்க...

    ReplyDelete
  5. In velachery theres a street side shop in 100ft. road (opp. to Indian Oil Petrol Bunk) road , they have a machine which runs with gasoline . So in case if someone gets stuck in velachery they can go to this shop any time , charge is 70 rs. for normal , 100 for big puncture .

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner