சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/வெள்ளி/23/03/2012

 
ஆல்பம்.

நான் முன்பே சொன்னதுதான்... கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படுவது உறுதி.. இப்படி ஒரு அதிரடி நடக்கும்னு ஏறக்கனவே தெரிஞ்ச விஷயம்தான்..
இவ்வளவுநாள் வெயிட் பண்ணதுக்கு காரணம் எலெக்ஷனும் முடியட்டும்னு அந்த அம்மா வெயிட் பண்ணிகிட்டு இருந்திச்சி.. இடைப்பட்ட காலத்துல சும்மா பிரதமருக்கு  லட்டர் போடறது போல, குழு அமைப்பது போல பாவ்லா காட்டப்பட்டது...நான் கூடங்குளம் மக்கள் பக்கம் இருப்பேன்னு அறிக்கை எல்லாம் கொடுத்தார்...அதையும் நம்பி அம்மா உங்களையே மலை போல  நம்பி இருக்கோம்னு கூடங்குளம் மக்கள் கொடுத்த பேட்டிகளையெல்லாம் பார்த்த போது சிரிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை..எலெக்ஷ்ன் முடிந்தவுடன் அதிரடி ஆரம்பமாகிவிட்டது..தமிழ் நாட்டுக்கு அதிக மின்சாரம் மற்றும் கூடங்குளம்  பகுதி மக்களுக்கு உள்கட்டமைப்புக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ளபடவேண்டும் என்று போராட்டக்குழுவினர் ஒரு பிட்டை போட்டு இருக்கவேண்டும். எல்லாம் முடிந்து விட்டது..தினமலர் என்று கூடங்குளம் திறக்க வேண்டும் என்று செய்தி வெளியிட்டதோ அன்றே அது உறுதிசெய்யப்பட்டு விட்டது...
========================
ஜெயலலிதா எங்களை நம்ப வைத்து கழுந்து அறுத்து, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் பேட்டி...// அடப்பாவி உனக்கு இப்பதான் விஷயமே தெரியுமா? வைகோ கிட்ட கேளு இரண்டு நாள் ரூம் போட்டு, தெளிய  வச்சி  தெளிய வச்சி கதை கதையா சொல்லுவாரு...
=======================
எதிர்பார்த்தது போல சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக ஜெயித்து விட்டது.. மக்கள் மின்வெட்டு,விலைவாசி உயர்வு, போன்ற எந்த விஷயத்தையும் சங்கரன் கோவில் மக்களை இந்த இடைத்தேர்தல் பாதிக்கவில்லை என்பதையும் ஒரு வார சந்தோஷத்துக்கு பணம் கிடைத்தால் போதும் என்பதையும் பொதுவாக ஆளுங்கட்சியினர் நடத்தும் இடைத்தேர்தல்கள் நிரூபிக்கின்றன.
======================
ஒரு வழியாக இலங்கை மீது போர்க்குற்ற தீர்மானத்தை இந்தியா ஆதரித்து விட்டது.. கலைஞர் கபட வேடம் போட்டு விட்டார் என்று ஈழத்தாயும், என்னை தாக்குவது மட்டுமே ஜெயலலிதாவின் வாடிக்கை என்று கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாக மாறும் தலைவரும் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. இது எதிர்பார்த்த ஒன்றுதான்...தமிழகத்தின் சாபக்கேட்டில் இதுவும் அடங்கும்...
==============
சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தோற்ற திமுக, மதிமுக வேட்பாளர்கள் பற்றி பிரச்சனையே இல்லை.. தேமுதிக வேட்பாளரை நினைச்சாதான் ரொம்ப பாவமா இருக்கு.... இன்னைக்கு நைட்டு கேப்டன் சிவந்த கண்ணோட, நாக்கை மடிச்சி கடிச்சி புள்ளி விபரத்தை சொல்லி சொல்லியே உனக்கு செக்க மாத்து இருக்குடி.....
=================
மொட்டையை இந்தக்கோலத்துல யாரும் பார்த்து இருக்க முடியாது..



மிக்சர்
சென்னை சாலைகள் இப்போதுதான் செப்பனிட ஆரம்பித்து இருக்கின்றார்கள்.. இன்னும் இரண்டு மாதங்களில் எல்லா ரோட்டையும் போட்டு விட்டால் கொஞ்சம் நிம்மதியாக பயணம் செய்யலாம்..

==========
பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யா மொபைல் வாங்கி கொடுத்து விட்டு, வண்டிக்கு தேவை பம்பர்.... வாழ்க்கைக்கு தேவை டெம்பர் இனிமே இதுதான் உன் நம்பர் என்று சொல்லும் போது நய்னதாரா...பார்டன் என்று அந்த மச்சம் இருக்கும் உதடு சுழித்து சொல்லும் போதுதான் பார்டன் என்ற ஆங்கில வார்த்தைதான் எவ்வளவு அழகு நிரம்பியதாய் இருக்கின்றது...

====================
அந்த  பேருந்தின் கடைசி ஜன்னலில் இருந்து ஒரு மொபைல், மீன் குட்டி போல துள்ளி நடு ரோட்டில் பொளேர் என்று விழுந்து வைக்க... நான் எனது வாகனத்தை நிறுத்தி விட்டு அதை எடுக்க முயல, ஒரு இன்டிகா என்னை உரசி சென்றது.. செல்போன் எடுத்து திரும்பி பார்த்தால்  பேருந்து வேகமாக  விரைந்து கொண்டு இருந்தது.. 

அரை கிலோ மீட்டர் போய் பேருந்து நின்றது.. அதற்குள் இரண்டு பேருந்துகள் சாலையில் செல்ல என்ன நடந்தது என்று தெரியவில்லை.. அந்த பேருந்து திரும்ப கிளம்ப நான் எனது வாகனத்தைஓட்டிக்கொண்டு  அந்த பேருந்தை துரத்த ஆரம்பித்தேன்

 கடைசி ஜன்னல் அருகே போனை நீட்ட அந்த பொண்ணு பேருந்து விட்டு இறங்கி செல்போனை தேடிக்கிட்டு ஓடிகிட்டு இருக்கு என்றார்கள்.. அதே பேருந்துக்கு  பின்னால்  வந்த டிரைவர் என்னிடம் கொடுங்கள்  நான் கொடுத்து விடுகின்றேன் என்றார்.. உங்கள் உதவிக்கு நன்றி.. செல்லை தவற விட்டவர் பேருந்தை விட்டு இறங்கி விட்டார். அவரிடம் நானே சேர்பித்து விடுகின்றேன் என்று சொன்னேன்.
நான் தரையில் இருந்து எடுத்த போன் பின்பக்க பேனல் மட்டும் பிய்ந்து விழுந்து கிடந்தது.. அதை பொருத்தி போனை ஆன் செய்தேன்... ஒரு இளம் அம்மா தன் பெண் குழந்தையுடன்  ஸ்கிரின் சேவரில் மனது முழுதும் உற்சாக சிரிப்பினுடே என்னை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கும் போதே  கால் வந்தது... நான் அட்டேன்ட் செய்தேன்...

சார் என் போன் அது....எங்க சார் இருக்கிங்க...?

நீங்க எங்க போனை போட்டிங்களோ அதே இடத்தில் நின்றுக்கொண்டு இருக்கின்றேன். என்று சொன்னேன்..
.
 சார் பதட்டத்துல எடம் மறந்து போச்சி...

ஸ்பீட் பிரேக்கர் ஒன்னு இருக்கும் அங்க தான் நிக்கறேன் என்று சொன்னேன்...

 அந்த பெண் ஆட்டோவில் இருந்து இறங்கி அட்டோவை கட் பண்ணி விட்டு என்னிடம் பதட்டமாக சாலையை கடந்து வந்தார்..  போனைக்கொடுத்தேன்.. நன்றி சொன்னார்.. 

நான் கேட்காமலே ... அப்பதான் போனை பேக்ல இருந்து எடுத்தேன்...ஸ்பீட் பிரேக்கர்ல ஏற திடிர்னு போன் ஜன்னல் வழியா விழுந்துடிச்சி...இன்டர்வியூக்கு போயிகிட்டு இருக்கேன்.. ரொம்ப தேங்ஸ் சார் என்றார்... 

மிக அவரசம் என்றால் உங்களை பக்கந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி  விடுகின்றேன் என்று சொன்னேன்...5  நொடிகளுக்கு மிகாமல் அந்த பெண் யோசித்தாள்...

 நான் சிரித்துக்கொண்டே ,சட்டென்று உங்களை நம்ப வைக்க  என்னிடம் ஐஎஸ்ஓ 9001 சர்ட்டிபிகேட் என்னிடத்தில் இல்லை...நான் அவசரமாக அலுவல் வேலையாக போய்க்கொண்டு இருக்கின்றேன்... வரும் ஆட்டோ எதையாவது பிடித்து செல்லுங்கள்... என்று சொல்லி எனது பைக்கை ஸ்டார்ட் செய்தேன்... 

அந்த பெண் சட்டென ஐ எஸ் ஒ சார்ட்டிபிகேட் என்று  பேசியதால் அது என்ன என்று ? தனது சிறு மூளைக்கு தகவல் அளித்து, பேந்த பேந்த விழித்த அந்த வினாடியில்....... 

நான், உங்கள் மகள் கொள்ளை அழகு அவளுக்கு எனது அன்பை சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு முதல் கியர் போட்டு திராட்டலை திருகினேன்...இரவு கணவனிடம் ஜஎஸ்ஓ சர்ட்பிகேட் பற்றி சொல்லி சிரிப்பாளா இல்லையா என்ற யோசனையுடன் இரண்டாம் கியருக்கு தாவினேன்..,
======================
கிண்டியில் இருந்து போரூருக்கு அந்த மகேந்திர எக்ஸ்யூவீ கார் பளபளப்பான காட்டு எருமை கலரில் இருந்தது...  பார்பதற்க்கே அவ்வளவு அழகாக மிதந்து பறந்தபடியும், ஹாரனில் ரோட்டில்  போவோரை மிரளவைத்துக்கொண்டு இருந்தது..

 கடந்து போனதும் பின்பக்கம் பாத்தேன் பின்பக்க கண்ணாடி நொறுக்கிபோய் இருந்தது..அது வாகனம் இடித்து நொறுங்கிப்போய் இருக்கவில்லை..மாறாக இரும்பு தடியால் அடித்து நொறுக்கியதற்க்கான தடயத்துடன் விரைந்து கொண்டு இருந்தது..அந்த கருப்பு மகேந்தரா முன் இரவில் எந்த பார்ட்டியில் கலந்து கொண்டு கும்மாளம் அடித்து வெட்டி வம்புக்கு போனதோ? என்று தெரியவில்லை.. 
===============
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி//

மயக்கம் என்ன படத்தின் பாடல் வரி... யப்பா... கேட்க கேட்க என்னமோ செய்கின்றது..


நண்பர் பாஸ்டன் ஸ்ரீராம் ஒரு பதிவு எழுதி இருந்தார்...தினமணி தலையங்கத்தை கொஞ்சம் வாரி இருக்கார். விருப்பம் இருக்கறவங்க படிச்சிபாருங்க....

பிலாசபி பாண்டி..

 இணையத்தில் சுட்டது...


==========
 நான்வெஜ்18+

What do toys and tits have in common?

They're both originally made for kids, but dads end up playing with them.


 ===========
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

15 comments:

  1. /* கிட்ட கேளு இரண்டு நாள் ரூம் போட்டு, தெளிய வச்சி தெளிய வச்சி கதை கதையா சொல்லுவாரு...*/

    Chance illa intha line .
    மொட்டை super.

    ReplyDelete
  2. அந்த செல் போன் நிகழ்வு- நல்ல தேர்ந்த சிறுகதை போல் உள்ளது. கபடமில்லா எழுத்து ..

    ReplyDelete
  3. நிறைய விசங்களை அழகா பேசியிருக்கீங்க... pauslip கலகல...

    ReplyDelete
  4. andha pirai thedum song dhanush eludhunadhu...

    ReplyDelete
  5. Mottai Sooooooper...

    Andha Pirai Thedum song dhanush eludhunadhu...
    Sainthavi Paadunathu...

    ReplyDelete
  6. ///ஒரு வார சந்தோஷத்துக்கு பணம்/// /oru maathaththirku vendiya panam!!!DMK tharappilum ottukku 500 veetham kodukkappattathaam.athikamaaka koduththavangalukku viswaasam nyaayamaanathe! athu thavira mixie,fan,etc...neenga kuduppeengalaa?

    ReplyDelete
  7. இம்முறையும் பதிவு கலக்கல்.

    மயக்கம் என்னவில் உள்ள பாடல்கள் எல்லாவற்றையும் விட எனக்கு பிறை தேடும் இரவிலே பாடல் மிகவும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  8. ISO தரம் வாய்ந்த பதிவு...

    :-)

    அன்பு நித்யன்

    ReplyDelete
  9. Nice entry, Jackie.
    Love the fact that you tried to help another stranger.
    The movie song and its cinematography is impressive. I can see why you would like it.
    On a related topic, I am starting to think that a good actor such as Dhanush is getting stereo typed into similar roles. He needs to branch out acting in roles such as a young father, business man, and other roles that are not typical to Tamizh heros.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ரொம்ப நாளைக்கு அப்றம் (மதுரை) நீங்க நீங்களா இருந்து எழுதிய விஜயகாந்த் மேட்டர் ரொம்ப நல்லா இருந்துச்சு ஜாக்கி. மனசு விட்டு ரசிச்சேன்.

    ReplyDelete
  13. நல்லாருக்குண்ணே, அந்த ராஜா படத்தை ப்ளஸ்ல போட்டுக்கிறேன்......!

    ReplyDelete
  14. தீபாவளிக்கு முன்னால கூடங்குளம் பிரச்சனை தொடங்கிய போதே ஒரு நண்பர்கிட்ட சொன்னேன். நெய்வேலி, தூத்துக்குடி, எண்ணூர் உட்பட தமிழ் நாட்டுக்கு கொடுக்குற கரண்ட் எல்லாத்தையும் மெஷின் ரிப்பேருன்னு சொல்லி நிறுத்திடுவாங்க. 12 முதல் 18 மணி நேரம் கரண்ட் கட் தாங்க முடியாம, சீனாக்காரனை நீங்களே அழைச்சுட்டு வந்து அணு உலையில குண்டு போட்டாலும் பரவாயில்லை. இப்ப அணு உலையை திறந்து கரண்ட் கொடுங்கன்னு மக்களையே பைத்தியம் பிடிக்க வெச்சுடுவாங்கன்னு சொன்னேன்.

    அந்த நண்பர் கடந்த வாரம்தான் என்னைப் பார்த்தார். அவர் எங்கிட்ட கேட்ட முதல் கேள்வி,"உன் நாக்குல பெட்ரோல் ஊத்தி கொளுத்த....நீ வாயை வெச்ச மாதிரியே நடந்துடுச்சு. இப்ப திருப்தியா?" அப்படின்னார்.

    நல்ல விஷயம் நாம நினைச்ச மாதிரி நடக்காது. ஆனா ஒரு மனுஷனை குழிதோண்டி புதைக்கிற விஷயம் உடனே நடந்துடும்னு நான் சொன்னேன்.

    என்ன இருந்தாலும் தினமலர் எல்லாம், தினசரி பத்திரிகை கேட்டகிரியில தடையில்லா மின்சாரம் வாங்குறவங்க. இப்படி முழுக்க முழுக்க ஒருதலைப்பட்சமா எழுதுவாங்கன்னு நினைக்கலை.

    இன்னும் கொஞ்ச நாள்ல இந்த காத்துல இருக்குற ஆக்சிஜனை எல்லாம் நாங்க காண்ட் ராக்ட் எடுத்துருக்கோம். பணம் கட்டு. இல்ல செத்துப்போயிடுன்னு ஒரு வெளி நாட்டு கம்பெனி வந்து நிக்கிற வரை மிஸ்டர் பொது ஜனம் இலவச பொருட்களுக்காக நாக்கை தொங்கப்போட்டுகிட்டு நிக்கிறதை மாத்த முடியாது.

    ReplyDelete
  15. கருத்துக்களை சொன்ன நண்பர்களுக்கு என் நன்றிகள்..ரொம்ப ஜாலி மூட்டில் எழுதிய பதிவு இது... அதனால அப்படி இருக்கும்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner