ஒரு பாடல் ஹிட்டாகி விட்ட காரணத்தால் சேனல்களில் மூன்று
படத்துக்கு கொடுத்த புரோமோஷன் அலப்பறைகளை தமிழ்ச்சமுகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது..
கணவன் நடிக்க மனைவி இயக்கிய படம்...சொந்தக்காரபையன்
இசையமைக்க.. மாமனார் வீட்டில் தயாரிப்பை கவனிக்க, மூத்தாரிடம் அசிஸ்டென்ட்
டைரடக்கராக பணியாற்றிய ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய முதல் படம்...
முதல் பாதியில் ஒரு
தேர்ந்த இயக்குனராக ஐஸ் மிளிர்கின்றார் என்று நினைத்து, இடைவேளையில் லலிதா
ஜுவல்லரி விளம்பர பெண்கள் இம்சையில் இருந்து தப்பித்து, இடைவேளைக்கு பிறகு இருட்டில்
ஒரு இளம் பெண்ணின் காலை என்பத்தி ஆறு கிலோ வெயிட்டுடன் மிதித்து திட்டு வாங்கி,
சீட்டில் உட்கார்ந்தால் மயக்கம் என்ன பார்ட் டூ படத்துக்கு வந்து மாறி வந்து உட்கார்ந்து விட்டோமோ? என்று நினைக்க வைத்து
விட்டது...இந்த படம்..
================
3 படத்தின் ஒன்லைன்.
உயிராய் காதலிக்கும் தன் மனைவியிடம் தனக்கு ஏற்ப்பட்டு
இருக்கும் நோயை சொல்லாமல் மறைத்தால்
என்னவாகும்? என்பதே படத்தின் ஒன்லைன்..
========
3 படத்தின் கதை என்ன??
பணக்கார பிரபு பானுப்பிரியா தம்பதிகளின் மகன் தனுஷ் (ராம்) மாணவனாய்
இருக்கும் போது ரோகிணி தம்பதிகளின் மகள் ஸ்ருதி (ஜனனி) யை காதலிக்கின்றார்.. ஜனனி
நடுத்தரகுடும்பம்..முதலில் மறுக்கும் ஸ்ருதி பின்பு தனுஷ்யை காதலிக்கின்றார்..இருவீட்டார்
சம்மதத்துடன் திருமணமும் செய்து கொள்கின்றார்கள்... பிறகு அங்கதான் ஒரு டூவிஸ்ட்
இயக்குனர் வச்சி இருக்காங்க.. அது என்னன்னு
தியேட்டருக்கு போய் பாருங்க,..,
============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த காரணத்தால் முதல்
பாதியில் தேர்ந்த இயக்குனரை போல ஜொலிக்கின்றார்..ஆனால் இரண்டாம் பாதியில்
செல்வாவின் பேவரைட் சைக்கோ பாத்திரத்தையே இவரும் டிரை பண்ணி இருப்பது எரிச்சலை
வரவைக்கின்றது..
முதல் பாதி ஒரு
பொயட்டிக் லவ் ஸ்டோரி பார்த்த சந்தோஷத்தில் இருக்கும் போது. மயக்கம் என்ன படத்தை
இன்னும் மறக்காத நிலையில் அதே நடிகர் அதே பிரண்டு அதே கேரக்டரை இன்னோரு படத்திலும்
பார்த்தால் எப்படி இருக்கும்... சப்பு என்று இருக்கும் அல்லவா? அது போலத்தான்
இருக்கின்றது..
தனக்கு இருக்கும் நோயை காதல் மனைவியிடம் இருந்து மறைத்து நண்பன் ஒருவனுக்கு மட்டும் தெரியும் என்பதான திரைக்கதை பெரிய லாஜிக் சொதப்பல்...
இப்போதுதான் மயக்கம் என்ன படத்தில் தனுஷ் அதே தாடியுடன் கோப
பார்வை பார்த்து,ங்கோத்தா என்ற கோவத்துடன், பீர் பாட்டிலை ஒருவன் தலையில் போட்டு உடைப்பார்.. அதை பார்த்த
சூடு இன்னும் ஆறாத நிலையில் இதில் பாட்டிலுடன் ஒரு சேரையும் லோ ஆங்கிலில் போட்டு
நண்பன் தலையில் உடைக்கின்றார்..கொடுமைடா சாமி..கற்பனை வறட்சி...??
சரி தனுஷை பற்றி பார்ப்போம்... முதல் பாதியில் மாணவ பருவ
காட்சிகளில் தனுஷ் மிளிர்கின்றார்.. கூடவே சிவகார்த்திகேயன் செமை லூட்டி..
சிரிச்சி மாளலை.. காரணம் சிவாவின் கேஷுவல் டாக் ரொம்பவே ரசிக்க முடிகின்றது..
படத்தில் செல்வா
படத்தின் அக்மார்க் காட்சிகள் முதல் பாதி எங்கும் கிளிஷே காட்சிகளாக விரவி கிடந்தாலும்,
புதிய மொந்தையில் பழைய கள் என்று விட்டு
விடலாம்..
சிவகார்த்திகேயன் மேடம் எனக்கு எப்ப ஷாட் முடியும்?
எப்ப ஷாட் முடியும்? எனக்கு விஜய்டிவி அது இது எது புரோக்ரமுக்கு நேரம் ஆவுது என்று
ஐஸ்வர்யாவை தினமும் நச்சரித்து இருக்கவேண்டும்.. இடைவேளைக்கு மேல் படத்தில் ஒரு பிட்டு சீனில்
கூட சிவகார்த்தியேனை நடிக்க வைக்காமல் போ.. போயி.. அது இது எது புரோக்கிராம்ல கைய காலை ஆட்டிகிட்டு
கிட என்று துரத்தி இருப்பார் போல...
ஸ்ருதி ஸ்கூல் யூனிபார்மில் அசத்துகின்றார்.. கூர்ந்து
கவனித்தால் ரம்பா கண் போல சற்றே கணப்படுகின்றார்..முதல் பாதியில் ஸ்ருதி எக்ஸ்பிரஷன்ஸ்
எல்லாம் அசத்தல் ரகம்.தனுஷ் இல்லாத
வெறுமையை பார்த்து விட்டு எங்கே அவன் என்று கண்களால் தேடி.. பின்னால்
உட்கார்ந்து இருக்கும் தனுஷை பார்த்து விட்டு ஒரு புன்னகை பூக்கின்றாரே செமை...
முதல் பாதி காதல் எப்பிசோட்... கவிதை ரகம்...மாணவப்பருவத்துக்கு
சென்று திரும்பிய உணர்வை அந்த காட்சிகள் கொடுப்பது நிஜம் அதே போல ஷாட் பியூட்டியும் அதிகம் என்று
சொல்லலாம்..
படத்தில் நிறைய காட்சிகளில் சுருதி அழுகின்றார்.. சிலதில்
நடிப்பில் ஸ்கோர் செய்கின்றார்.. கணவன் மனைவி
அந்நியோன்ய காட்சிகளில் அசத்துகின்றார்.. முக்கியமாக பஸ்ட் நைட் சீனில்
பால் கொண்டு வரும் நளினமும், தனுஷ் மேல் ஏறி இயல்பாய் உட்கார்ந்து ரொமான்ஸ்
செய்வதும் பக்கா...ஆனால் அதே காட்சியில் மனைவி எதிரில் இருக்கும் காரணத்தால் தனுஷ்
கண்களில் ஒரு புன் முறுவல் இருந்து கொண்டே இருக்கும்..
பிரபுவோடு தனுஷ் காமினேஷன் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன..
பேசாத பெண் பேசும் போது கண்கள் கலங்க வைக்கின்றார்........
பப்புக்கு போய் சரக்கு அடிக்கும் பெண் கணவன் இறந்து போன இரண்டாத் நாளில் விபூதி வைத்து வரும் போது சிரிப்பாக இருக்கின்றது.
கொலை வெறிபாடல்
சொதப்பி படமாக்கி இருக்கின்றார்கள்...
வேல்ராஜ் கேமரா அசத்தல் .. பின்பாதியில் ஸ்ருதி வரும்
கிளைமாக்ஸ் காட்சிகளில் நிறைய போக்கஸ்
அவுட்..
கிளைமாக்சில் தனுஷ் நடிப்பு அற்புதம். என்ன?ஸ்ருதியோடு
நெருக்கமாக தனுஷ் இருக்கும் காட்சிகளில் நம்
அடிவயிறு எரிவதை தடுக்க முடியவில்லை..
========================
படத்தின் டிரைலர்..
===========
படக்குழுவினர் விபரம்.
Directed by Aishwarya R. Dhanush
Produced by Kasthuri Raja
Starring Dhanush
Shruti Haasan
Music by Anirudh Ravichander
Cinematography Velraj
Editing by Kola Bhaskar
Studio R. K. Productions
Wunderbar Films
Release date(s) 30 March 2012
Country India
Language Tamil
Budget 25 crores
Produced by Kasthuri Raja
Starring Dhanush
Shruti Haasan
Music by Anirudh Ravichander
Cinematography Velraj
Editing by Kola Bhaskar
Studio R. K. Productions
Wunderbar Films
Release date(s) 30 March 2012
Country India
Language Tamil
Budget 25 crores
==============
தியேட்ட்ர் டிஸ்கி...
வில்லிவாக்கம் ஏஜிஎஸ் ஸ்கிரின் திரியில் படத்தை பார்த்து
வைத்தேன்..
முதல் பாதி வசனம் கேட்காத அளவுக்கு ரசிகர்கள் சிரித்து
ரசிக்கின்றார்கள்..
திருப்பதி எதுக்கு வந்தே என்று ஸ்ருதி தனுசிடம் கேட்கும்
போது.. லட்டுவாங்க என்று சொல்லுவார்.. அதுக்கு தியேட்டரில் உன் லட்டை பார்க்க வந்து இருப்பான் என்று
கமென்ட் அடிக்க தியேட்டரில் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனாது..
மொக்கையான ஒலி அமைப்பு... ஏன்தான் சவுண்ட் நாலேட்ஜ் கூட இல்லாம தியேட்டரை
நடத்தாறானுங்கன்னு தெரியலை.. சென்டர் ஸ்பீக்கரில் என்ன எழவு பேசுகின்றார்கள் என்று
சுத்தமாக காதில் விழவே இல்லை.
இரண்டாம் பாதியில் தியேட்டடரில் ஒரே சல சலப்பு...விசிலும்
கமெண்டுகளுமாக படம் முடிந்தது..கடைசி காட்சியில் தனுஷ் கருத்தை அறுத்தக்கறதுக்கு டிக்கெட் வாங்கறப்பவே நம்மை கழுத்தை அறுத்து
இருக்கலாம் என்று- பொறிந்து தள்ளியபடி நடந்தார்கள்..
பத்தாவது அல்லது பண்ணிரண்டாவது படிக்கும் பெண் பிள்ளையை
வைத்து இருப்பவர்கள்..லீவ் விட்டாச்சு அதனால் கொலைவெறி பாடலுக்காக மூன்று படத்துக்கு அழைத்து செல்ல உங்கள் பெண் பிள்ளை
சொன்னால் கொஞ்சம் யோசித்து அழைத்து செல்லுதால் நலம்…அப்படி படம் பார்க்க வந்த ஒரு பெண்மணி தன்மகளை கடுகடு என்று திட்டிக்கொண்டு வந்தார்....
====================
பைனல் கிக்
அறிமுக இயக்குனர் ஐஸ்வர்யா முதல் பாதியில் இருந்த டெம்பை
விட்டு விடாமல், இரண்டாம் பாதியில் கொஞ்சமாவது யோசித்து இருந்தால் தப்பித்து
இருக்கலாம்........தங்கையின் ஆக்கர் ஸ்டுடியோவுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்று
கிராப்பிக்சில் பச்சைகலரில் மந்திரவாதியும் அந்த சின்ன பெண்ணும் கடுப்பு அடிக்கின்றார்கள்..
முதல்
பாதியில் காட்சி அமைப்பு மற்றும் ஷாட் கம்போசிஷன் எல்லாம் அசத்தல்....பிற்பாதியில்
ஜொலித்து இருக்கவேண்டும்.. நிச்சயம் அடுத்த படத்தில் ஜொலிக்க வாழ்த்துகின்றேன்.
இந்த படம் லாஜிக் சொதப்பலால் டைம்பாஸ் மூவி லிஸ்ட்டில் பரிந்துரைக்கின்றேன்..முதல் பாதி காதல் கவிதை காட்சிகளை பார்க்க கண்டிப்பாக படத்தை பார்க்கலாம்..
==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

அசத்தல் விமர்சனம்.
ReplyDeletehi anna review super
ReplyDeleteKindly rectify
நிச்சயம் அடுத்த படித்தில் ஜொலிக்க வாழ்த்துகின்றேன்.
>> கொலை வெறிபாடல் சொதப்பி படமாக்கி இருக்கின்றார்கள்...
ReplyDeleteவட போச்சா? :)
இந்த சுட்டி காமிக்ஸ் ரசிகர்களுக்கு மட்டும்!
சூப்பர் விமர்சனம் பாஸ். நன்றி.
ReplyDeleteசுட சுட விமர்சனமா அருமை
ReplyDeleteok
ReplyDeleteThanks
Senthil, Doha
சார் மொத்ததில இந்த படத்த பார்க்கலாமா! வேஸ்ட்டா !
ReplyDeleteசார் மொத்ததில இந்த படத்த பார்க்கலம ! வேண்டாமா இல்லை வேஸ்ட்டா !
ReplyDelete//ஸ்ருதியோடு நெருக்கமாக தனுஷ் இருக்கும் காட்சிகளில் நம் அடிவயிறு எரிவதை தடுக்க முடியவில்லை..//
ReplyDeleteஹா..ஹா... பெருமூச்சுதான் விட முடியும்..!!
thanks for the review
ReplyDeleteI think. this movie second off very nice, many more peoples are don't like second off (Which reason). Finally i thanks to this film director.
ReplyDeleteகிடச்சா இப்படி ஒரு பொண்டாட்டி கிடக்கணும்னு நினைச்சன் ஸ்ருதி பின்னிடாங்க
ReplyDeleteஐஸ்வர்யா கண்டிப்பா நல்ல படம் பண்ணுவாங்க,
//தங்கையின் ஆக்கர் ஸ்டுடியோவுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்று கிராப்பிக்சில் பச்சைகலரில் மந்திரவாதியும் அந்த சின்ன பெண்ணும் கடுப்பு அடிக்கின்றார்கள்..//
கட்பன உருவம் வந்தா இப்படியா தாங்கல்ல
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு என் நன்றிகள்.
ReplyDelete