சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /திங்கள்/26/03/2012

ஆல்பம்..

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா…………. ச்சே   பட்ஜெட் டிவியில பார்த்துக்கிட்டு இருந்தேன்… அதான் இப்படி..
  நான் மட்டும் அல்ல தமிழ்நாடே முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட் வாசிச்சதை பார்த்துட்டு எல்லா மக்களும் மாண்புமிகு புரட்சித்தலைவி யாருன்னு எல்லாருக்கும் யாருன்னு இன்னைக்கு தெளிவா தெரிஞ்சி இருக்கும்…இந்த அளவுக்கு பட்ஜெட் வாசிக்கும் போது சொல்லி  சொல்லி ஜென்ம சாபல்யம் அடைஞ்சார்ன்னு சொல்லலாம்…,இன்னைக்கு   எப்படியும் ஜலதோஷம் நம்ம முதல்வருக்கு கண்டிப்பா பிடிக்கும் எதுக்கும் ஒரு டாப்லெட் எடுத்துக்கறது நல்லது..

===============
காவிரி பிரச்சனையை திரும்பவும் அரசியில் ஆதாயத்துக்கு கர்நாடகத்தில் குமாரசாமி போன்றவர்கள் திரும்பவும்  ஊதி விடுகின்றார்கள்..ஏன் நதி நீரை தேசியமயமாக்க மாட்டேன் என்று ஒத்தைக்காலில் நிற்ப்பது ஏன் என்று எனக்கு தெரியவில்லை..  உச்ச நீதிமன்றம் ஏன் இந்த விஷயத்தில் மவுனம் சாதிக்கின்றது என்றும் தெரியவில்லை.

==============
அனைந்து போய் இருந்த தெலுங்கானா பிரச்சனை நேற்று முன்தினம் எம்பிஏ மாணவர் தீக்குளிப்பின் காரணமாக புத்துயிர் பெற்று இருக்கின்றது…

=======================
பெட்ரோல் விலை லிட்டருக்கு எட்டு ருபாய் உயரப்போகின்றது… கசப்பு மருந்து கொடுத்தாலும் மக்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று பிரனாப் முகர்ஜி சொல்லி இருக்கின்றார்… இப்படியே போனால் இப்படியே பெட்ரோல் விலையை ஏற்றிக்கொண்டே சென்றால் மடிப்பாக்கம் அல்லது சோழிங்கநல்லூரில் உள்ளது போல கேமரா இல்லாத பேங்கை பார்க்க வேண்டியதுதான்… என்ன?? இந்த என்கவுண்டர்  சனியனை நினைத்தால்தான் எனக்கு பயமாக இருக்கிக்கின்றது…

===================
 மிக்சர்

கடந்த சனிக்கிழமை இரவு  அபி அப்பாவின் தம்பி கொக்கரக்கோ சௌமியன் அவர்களை சந்தித்தேன்.. மிக நீண்ட நாட்களாக சந்திக்கவேண்டும் என்று நினைத்து இருந்த நபர்.. மணிஜி போன் செய்தார்.. நான், மணிஜி,கேபிள்,அப்துல்லா,சௌமியன்  என ஐந்து பேர் சந்தித்தோம்... நல்ல இரவு... நிறைய மனிதர்களை புரிந்துக்கொள்ள அது ஒரு வாய்ப்பாக இருந்தது

======================

கடோத்கஜன் போல உருவத்தை வைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டு குக்கர் சவுண்டுக்கும்,தெருநாய் சண்டைக்கும், பயப்படுவது போல கொடுமையான விஷயம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.. என்னது இதுக்கே பயமா? ஆமாய்யா...பாதி தூக்கத்துல எழுந்து நச நசன்னு அழும் யாழினியை தூங்க வச்சி பாரு... அப்ப தெரியும் நான் ஏன் பயந்து நடுங்கறேன்னு?=======================பேன்ட் காதல்னா... உள்ள போட்டு இருக்கற ஜட்டி நட்பு போல...சம்டைம்ஸ் பேன்ட் எதிர்பாராத விதமா பரக்குன்னு கிழிஞ்சி போனாலும்....உள்ள போட்டு இருக்கும் ஜட்டி நம்ம மானத்தை காப்பாத்தும்.... நண்பேன்டா....

========================
உதயகுமாரன்: நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். எங்களை இந்த நாட்டின் குடிமக்களாக கருதினால்.. எங்களது அகிம்சைப் போராட்டத்துக்கு மதிப்பு அளித்தால்.. அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்

அம்மாவை பத்தி  நல்லா தெரிஞ்சும் இப்படி  ஒரு கோரிக்கையை நீங்கள் இன்னமும் முன் வைப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கின்றது… எத்தனை எத்தனை சாலை பணியாளர்கள் தற்க்கொலைசெய்துக்கொண்டார்கள்.. எந்த போராட்டத்துக்காவது அவர் செவிமெடுத்து இருக்கின்றார்--?? எத்தனையோ போராட்டங்களுக்கு துப்பாக்கியால் பதில் சொன்ன தேசம் இது..  உங்களுக்கு வேறு வழியில்லை… அதனால்தான் இப்படி ஒரு கோரிக்கையை வைத்து இருக்கின்றீர்கள்.தேர்தலுக்கு முன் அழைத்து பேசியது போல தலைமைசெயலகத்தில் திரும்பவும் முதல்வரை சந்திக்கலாம் என்று கனவில் கூட  நினைக்காதீர்கள்…

===============
படித்ததில் ரசித்தது…
மிக சிறந்த பட்ஜெட்டை மக்களுக்கு அளித்துள்ள நிதியமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன் - சரத்குமார் # அடடடா இந்த பையன் ஊதறதையும் அந்த பொண்ணு ஆடுறதையும் பாக்கும் போது தில்லானா மோகனாம்பாள்ல சிவாஜியயும் பத்மினியையும் பார்க்குற மாதிரியே இருக்கு !
பேஸ்புக்கில் வேல்முருகன் என்பவர் எழுதி இருக்கின்றார்.

================================

இந்த படத்துல எம்ஜிஆர் போடற அந்த பைட்டுக்கே பணம்  சரியா போச்சி… அந்த பாட்டுக்கே டிக்கெட் காசு சரியா போச்சின்னு பேசறதை கேள்விப்பட்டு இருக்கோம்.. இற்த பொண்ணுக்கு எப்படி ஒரு கோடி கொடுத்தாங்க என்று பலர் வினா எழுப்பினார்கள்.. நண்பர்கள் படத்தில்  நடித்த இலியானாவை பார்த்து…. எனக்கு தெலுங்கு போக்கிரியில் இலியானாவின் ரசிகர் ஆகிவிட்டேன்..சரி சங்கர் ஒரு கோடி கொடுத்து இருந்தா அதுக்கு ஏத்தது போல வேலை  கண்டிப்பா பெண்டு நிமித்தி இருப்பாங்களேன்னு நினைச்சேன்….ஒல்லி பெல்லி பாட்டு பார்த்ததும் தெரிஞ்சி போச்சி..பராகான் எப்படி ஆட்டி வச்சி இருக்குன்னு பாட்டை
பார்க்கும் போதே தெரிஞ்சிடுச்சி யப்பா ருப்பு உரலில் மாவு அட்டறது போல இந்த இடுப்பை இப்படியா ஆட்டறது…. லைட்டா ஷீலாக்கா ஜிவானி பாட்டு சாயல் இருப்பதை மறுக்கமுடியாது இருந்தாலும் இந்த பாட்டு பெல்லி டான்ஸ் ஸ்டைல்  என்பதால் பட்டையை கிளப்பி இருக்கின்றார்கள்..
ஒரு கோடி ரூபாய் இலியானிவின் இடுப்பு ஆட்டத்துக்கே சரியா போச்சி என்றுதான் சொல்ல வேண்டும்… இலியானவை விட அந்த பெரிய உடம்பை வைத்துக்கொண்டு பராகானின் நடனம் அமைத்ததை விடியோவில் பாருங்கள்.
==================
பிலாசபி பாண்டி..


உறவுகள் என்பது மோதிரம் போல அதை அணியும் போது நம் விரலை இறுக்கிப்பிடித்துக்கொள்ளும், ஆனா அதை கழட்டி வச்சிட்டா இது இல்லாத வெறுமையை நமக்கு உணரவச்சிக்கிட்டே இருக்கும்..


================
நான்வெஜ்18+


3 Ministers caught watching porn in Karnataka assembly were actually confused....


They heard, "get ready for Erections" instead of "Get ready for Elections"....


========================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

 1. //எத்தனையோ போராட்டங்களுக்கு துப்பாக்கியால் பதில் சொன்ன தேசம் இது..//

  good punch!

  ReplyDelete
 2. ஆகா சந்திச்சதுல மணிஜி தவிர எல்லாரும் ரெட்டை நாடி ஜாம்பவான்கள். ஆனா மிக்சர்ல அது மட்டும் சின்ன எழுத்திலே இருக்குதே:-))

  ReplyDelete
 3. vottu pottathodu nammai kazhatti vittudaraanga.appuram porattamaavathu, vengaayamaavathu.onnu kaasai koduththu adakkiraraanga. illa polie adakkumurai.British-karane paravaayillannu aakkittaanga.nammaala pulamba thaan mudiyum, athuvum nettila.

  ReplyDelete
 4. மடிப்பாக்கம் அல்லது சோழிங்கநல்லூரில் உள்ளது போல கேமரா இல்லாத பேங்கை பார்க்க வேண்டியதுதான்… என்ன?? இந்த என்கவுண்டர் சனியனை நினைத்தால்தான் எனக்கு பயமாக இருக்கிக்கின்றதது

  ReplyDelete
 5. இன்னைக்கு எப்படியும் ஜலதோஷம் நம்ம முதல்வருக்கு கண்டிப்பா பிடிக்கும் எதுக்கும் ஒரு டாப்லெட் எடுத்துக்கறது நல்லது. - SUPER

  But Budget பத்தி அண்ணா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர் பார்கிறேன் .
  ----
  இவன்
  உங்கள் அன்புத்தம்பி முத்துவேல்

  ReplyDelete
 6. @ssr sukumar , try http://www.google.com/transliterate

  வோட்டு போட்டதோடு நம்மை கழட்டி விட்டுடறாங்க .அப்புறம் போராட்டமாவது , வெங்காயமாவது .ஒன்னு காசை கொடுத்து adakkiraraanga. illa polie adakkumurai.British-karane paravaayillannu aakkittaanga.nammaala pulamba thaan mudiyum, athuvum nettila.

  ReplyDelete
 7. நன்றி நண்பர்களே முத்துவேல் அதை எழுதுனும்னா எழுதிகிட்டே இருக்கலாம் இப்போதைக்கு எனக்கு நேரம் இல்லை அதான்,.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner