யாழினிஅப்பா.(மகளிர்தினவாழ்த்துகள் 2012)



 கடந்த ஆண்டு2011 மார்ச் மாதம் 15 ஆம் தேதி மதியம் மனைவி பிரசவ வலியில் துடித்துக்கொண்டு இருந்தாள். நான் லாபியில் செய்வதறியது.. பரதேசி கோலத்தில் நின்றுக்கொண்டு இருந்தேன்.

லேபர்  வார்டில் யாரும் இல்லாத காரணத்தால் என்னை என் மனைவி பக்கத்தில் இருக்க அனுமதித்தார்கள்... 

அவள் துடி துடித்து கொண்டு இருந்தாள்..  நான் கைபிசைந்து கொண்டு அருகில் நின்று கொண்டு இருந்தேன்..  அவளின் அம்மாவை பக்கத்தில் நிற்க்க  அனுமதிக்கவில்லை.. பிரசவக்காரி  அவளின் அம்மாவை பார்த்தால் குழந்தை பிறக்க நேரம் ஆகும் என்பதால் என்னை மட்டுமே லேபர் வாடில்  அனுமதித்து இருந்தார்கள்...  

 வலியில் துடிக்கும் மனைவிக்கு ஆறுதல் என்னால் சொல்ல முடியவில்லை... கூட சேர்ந்து என்னால் அழத்தான் முடிந்தது.. நான் எப்படி அப்படி  அழுதேன் என்று இன்று நினைத்து பார்த்தாலும் எனக்கு சிரிப்பு வருகின்றது.. பிரசவவலியை பாதியை வாங்கிக்கொள்ள எந்த அறிவியலும் இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை.


அவள் தொடர்ந்து துடித்துக்கொண்டு இருந்தாள்... நான் இறைவனை வேண்டுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.. மார்ச் 14 ஆம் தேதி குழந்தை பிறக்கவேண்டும்..ஆனால் ஒரு நாள் தள்ளியும் குழந்தை பிறக்கவில்லை.. 

முன்னமையே என் மனைவியை செக் செய்த சென்னை டாக்டர்... உயரம் குறைவாக இருப்பதால் சிசேரியன் மட்டுமே சாத்தியம் என்று கத்திரியை மனக்கண் முன் வரவைத்து பயமுறுத்தி இருந்தார்..  சிசேரியன்தான் என்று நினைத்து  நாங்கள் இருவரும் ரொம்பவும் பயந்து கொண்டு இருந்தேன்...

பெங்களுரில் ரிபப்ளிக் ஹாஸ்பிட்டல் டாக்டர்...இந்துமதி முடிந்தவரை நார்மலுக்கு டிரை  செய்வதாக சொல்ல...நார்மலுக்காக போராடிக்கொண்டு இருந்தார்...பனிக்குடம் உடைந்து  ஒன்றரைமணிநேரம்  போரட்டத்துக்கு பிறகு இனி வருடா வருடம் மகளிர் தின வாழ்த்து சொல்ல உங்களுக்கு பெண்குழந்தை பிறந்து இருப்பதாக தாதிகள் என்னிடத்தில் வந்து சேதி சொன்னார்கள்......


யாழினியை பூப்போல  தூக்கி வந்தார்கள்.. என் கையில் வாங்கினேன்.. குரோர்பதி  நிகழ்சியில் ஒரு கோடி ரூபாய் செக் கையில் வாங்கி இருந்தால் கூட ,எனக்கு அந்த பூரிப்பு இருந்து இருக்காது... எனக்கு அப்படியே ஆப்போசிட்டடாக மிருதுவாய் இருந்தாள்..

தாதி சொன்னாள்...உங்க குழந்தை ரொம்ப லக்கி என்றார்... 

ஏன் என்றேன்..?

யாழினியின் கீழ் உதட்டை இறக்கி காட்டினாள்...

இரண்டு பற்கள் இருந்தது...



=============

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.2012


 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

21 comments:

  1. kulantahaigal athilum pen kulantahaigal...valkaiai alagaga aakubavargal....

    ReplyDelete
  2. யாழினிக்கு மகளிர் தின வாழ்த்துகள் சொல்லாம யாருக்கு சொல்றது. நைஸ் ரைட்டப் ஜாக்கி.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஜாக்கி.. யாழினி க்யூட்டா இருக்கா. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. பிரசவ டென்ஷனை எதிர் கொள்வது சிரமம்!. நல்லபடியாக கடந்துவிட்டீர்கள்!

    ReplyDelete
  5. பிரசவ டென்ஷனை எதிர் கொள்வது சிரமம்!. நல்லபடியாக கடந்துவிட்டீர்கள்!

    ReplyDelete
  6. சுவாரஸ்யம் !

    ReplyDelete
  7. makalir thina vaalththukkal yalinikku... nam ethir paarppathu ethuvum sonna thethyil nadakkaathu... vaalththukkal

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  9. மகளிர் தினத்திற்கு பொருத்தமான பதிவு.பெயரில் உள்ள ழ போலவே குழந்தை கொள்ளை அழகு.
    மகளிருக்காக நானும் சிறப்பு பதிவு ஒன்றை சமர்ப்பித்திருக்கிறேன். நேரம் இருப்பின் எனது வலைப்பூவிற்கு வருகை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  10. Yazhini Paappukku Best wishes !!!!

    ReplyDelete
  11. jackie ji adikadi ponnu fotova upload pannathinga,olagam pooravum kannu vachuda poranga. kind request. mothala nalla suthi podunga!

    ReplyDelete
  12. this is a gift all people didn't get a chance to take care of their wife in labour ward like this

    ReplyDelete
  13. யாழினி மிகவும் கொடுத்து வைத்தவள் .....ஒரு நண்பனே தந்தையாக வாய்ததர்க்கு...... என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .... அலியார் பிலால் ....

    ReplyDelete
  14. யாழினியை பூப்போல தூக்கி வந்தார்கள்.. என் கையில் வாங்கினேன்.. குரோர்பதி நிகழ்சியில் ஒரு கோடி ரூபாய் செக் கையில் வாங்கி இருந்தால் கூட ,எனக்கு அந்த பூரிப்பு இருந்து இருக்காது... எனக்கு அப்படியே ஆப்போசிட்டடாக மிருதுவாய் இருந்தாள்..

    Super Jackie. Awesome lines. I just remember the time when my son born.

    Naangalaam appave appadi ippa kekava venum nu irukaravngalum tension agiduvaangaradhu unmai thaan pola :)

    ReplyDelete
  15. யாழினியை பூப்போல தூக்கி வந்தார்கள்.. என் கையில் வாங்கினேன்.. குரோர்பதி நிகழ்சியில் ஒரு கோடி ரூபாய் செக் கையில் வாங்கி இருந்தால் கூட ,எனக்கு அந்த பூரிப்பு இருந்து இருக்காது... எனக்கு அப்படியே ஆப்போசிட்டடாக மிருதுவாய் இருந்தாள்..

    Super Jackie. Awesome lines. I just remember the time when my son born.

    Naangalaam appave appadi ippa kekava venum nu irukaravngalum tension agiduvaangaradhu unmai thaan pola :)

    ReplyDelete
  16. Cute n Nice,,,,,,,YAZHINI. MY BEST WISHES

    ReplyDelete
  17. //பிரசவவலியை பாதியை வாங்கிக்கொள்ள எந்த அறிவியலும் இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை. //

    பின்னிட்டீங்க சார்! என்ன ஒரு வார்த்தை!!:))

    ReplyDelete
  18. very interestingly written! and your daughter looks very cute and pretty!!!

    ReplyDelete
  19. வருங்காலத்தில் நீங்க உங்க பொண்ணு பின்னாடி வரும் பசங்கள துரத்தி துரத்தியே சாக போறீங்க .. உங்களது வசனநடை தான் எக்கணமும் உங்கள் வலையை தேடி வர வைக்கின்றது

    நன்றி
    மு.கஸ்ஸாலி
    (http://gazzaly.info)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner