உப்புக்காத்து=10


பக்கிரியை பற்றி நீங்கள் எப்படி உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்றேன்... அப்படி உருவகபடுத்திக்கொள்ளும் போதுதான் பக்கிரியை பற்றி நீங்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.


தங்கவேலு படத்தில் ஒரு காமெடி வருமே.. அதான் எனக்கு தெரியுமே... அதான் எனக்கு தெரியும்... அதுக்கு அப்புறம் என்ன செய்யனும் என்று கேட்கும் போது அதுதாங்க எனக்கு தெரியாது என்று சொல்லுவது போல எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகவே இருப்பார்...

அவருக்கே தெரியும் தான் ஒரு காமெடி பீஸ் என்று...... இருந்தாலும் தன்னை அப்படி ஒரு போதும் வெளிப்படுத்திக்கொள்ளவே மாட்டார்.. ஒரு சோடா புட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு இருப்பார்..
தான் ரொம்ப ஆக்ட்டிவ் என  மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்க்காக அடிக்கடி கண்ணாடியை ஆட்டிப்பார்த்து எதிராளியிடம் பேசும் மேனாரிசம் அவரிடத்தில் அதிகம் உண்டு...


மொக்கை ஜோக்காக இருக்கும்... அதுக்கே கைதட்டி கெக்கே பிக்கே என்று  சிரித்து வைப்பார்..சின்ன பசங்களை அதிகமாக மிரட்டி வைப்பார்..

யாராவது பேசிக்கொண்டு இருக்கும் போது, தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல பேச முயற்சிப்பார்...பத்து பேர் இருக்கும் கூட்டத்தில் மிகப்பெரிதாக சத்தத்தோடோ அல்லது பெரிய சிரிப்பும் கேட்டால் அது கண்டிப்பாக நம்ம சாட்சாத் பக்கிரிதான்...

மணி எங்கள் ஊரில் பெரிய ரவுடி... ஆங்கில நடிகர் அர்னால்டு போல உடல்வாகு... அவ்வப்போது போர் போடும் வேலை செய்பவன்.. அதில் வரும் பணத்தை வைத்து வேலி முட்டி சாரயத்தை குடித்து விட்டு பெரிதாக அலம்பல் செய்பவன்..

மணி குடித்து விட்டால் பருத்தி வீரன் கார்த்தி ,சரவணன் போல அவனின் அலம்பல்கள் தாங்க முடியாது.. மணி சரக்கு அடித்து விட்டால் அவன் கண்ணில் மாட்டாமல் தப்பிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுவார்கள்..


ஒரு முறை கல்யாணத்துக்கு கிளம்பி டீக்கடையில் டீக்குடித்துக்கொண்டு இருந்த எங்க ஊர் பையனிடம்... மணி போட்ட சண்டை ரொம்ப பிரசித்தம்... எவ்வளவோ கலர் சட்டை இருக்கும் போது  கல்யாணத்துக்கு என்ன மயிறுக்கு வெள்ளையும் சொல்லையுமா போற? உங்க அப்பன் செத்துப்போனதுக்கு உங்கோத்தா வெள்ளை புடவை கட்டனும் இல்லை? அவளை மட்டும் வெள்ளைப்புடவை கட்டிக்க விடாம நீ மட்டும்  கல்யாணத்துக்கு  வெள்ளையும் சொல்லையுமா போவியாடா? பொறம் போக்கு என்று சாரய வாசத்தோடு அவனிடம் மணி வம்பு இழுக்க, அவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தே விட்டான்..


அன்று வழக்கத்துக்கு மாறாக கண்கள் சிவக்க மணி தள்ளாடிகொண்டு இருந்தான்...மணியின் வீடு மெயின் ரோட்டில் இருந்து சின்ன சந்து உள்ளே நடந்து  போனால் மணியின் குடிசை வீடு வரும்..மணி மெயின் ரோட்டுக்கு வந்தான்... ரோட்டில் இருக்கும் அத்தனை பேரும் தேவிடியா பசங்க என்றான்.... எவனும் ஆம்பளை இல்லை.. எல்லாரும் பொட்டை பசங்க... தில்லு இருந்தா ங்கோத்தா என்கிட்ட வாங்கடா?  மெயின்ரோட்டுல நேத்து ஒரு போறம் போக்கு சொன்னானாம்.. நான் குடிகாரன்னு... நான் என்ன காந்தின்னா சொன்னேன்-..? நான் குடிகாரன்தான்..


மணி  மெயின் ரோட்டில் இருக்கும் அத்தனை பேர் பிறப்பையும் சந்தேகப்பட்டு பொது இடத்தில் அந்த சந்தேகத்தை எழுப்ப.. மெயின் ரோட்டில் எல்லா ஆண்களும் வேலைக்கு போய் இருநதார்கள்...அந்த நேரம் வீட்டில் இருந்த ஒரே ஆண்மகன் பக்கிரி மட்டும்தான்...
நாங்கள் எல்லாம் எழாம் வகுப்பு படிக்கும் ஆண்கள் என்பதால் மணிக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து போய் கிடந்தோம்.. ஏதாவது  கேட்கலாம் என்றால்? மணி போர் வேலை செய்து ஏற்றி வைத்து இருக்கும்  பழனி படிக்கட்டு போன்ற முன்பக்க செஸ்ட்டை பார்த்தாலே எங்களுக்கு  நாக்கு ஓட்டிக்கொண்டு விட்டது...


நல்ல  மதிய நேரத்தில்  போதை தலைக்கு ஏற ஏற மணி இன்னும் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தான்.. பக்கிரி ஏதெச்சையாக மதியம் சாப்பிட்டு விட்டு என்ன சத்தம் என்று அவ் வீட்டை விட்டு வெளியே வர.. அங்கே மணி கத்திக்கொண்டு இருந்தான்...


 ஆம்பாளையா இருந்தா வாங்கடா? தேவிடியா பசங்களா என்று கண்ணா பின்னா என்று கத்திய போதும்,  எல்லா பெண்கள் கூட நின்று அவன் கத்துவதை பக்கிரியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். இது பெண்களுக்கு பெரிய கோபத்தை கொடுக்க....
ரோட்டுல இருக்கறவன் எல்லாம் ஆம்பளையான்னு நேத்து பொறந்த பய தண்ணி அடிச்சிட்டு கேள்வி கேட்கறான்... நீ இன்னும் பார்த்து கிட்டு கண்ணாடியை ஆட்டிகிட்டு நின்னுகிட்டு இருக்கே என்று ஒட்டு மொத்த  பெண்களும் திட்ட.... அப்போதும் பக்கிரியுடம் எந்த ரியாக்கஷனும் இல்லை... யாரையோ சொல்லுகின்றார்கள் என்று நின்றுக்கொண்டு இருந்தார்..

 பெண்கள் பக்கிரி  என்று பேர் சொல்லி அழைத்தும்...  பெண்கள் பக்ககம் திரும்பால் இருந்தார்.. ஒரு உறவுக்கார பெண்மணி.. அவனுக்கு எதுக்கு மீசை, கண்ணாடி?  அவன் பொண்டாட்டி பொடவையை கட்டிக்கிட்டு வீட்டு உள்ளே இருக்காலம் என்று பக்கிரியை நேருக்கு நேர் சொல்லியும் பக்கிரியிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை...


தன் மனைவியை அழைத்துக்கொண்டு திடிர் என்று வீட்டுக்கு உள்ளே போய் விட்டார்.. மணியும் தொண்டை தண்ணி வத்த கத்தி விட்டு,  சந்தில் இருக்கும் அவன் வீடு நோக்கி அவன் தள்ளாடிக்கொண்டு  செல்ல...

மணி வீட்டுக்கு போன இருபதாவது நிமிடம்... கண்ணாடியை ஏற்றி ஒரு மாதிரி ஸ்டைலாக பார்த்த படி அனைத்து பெண்களையும் பார்த்த படி கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு  மணி குடி இருக்கும் சந்தின் உள்ளே நுழைத்தார்....


பெரிதாய் மணி வெகுண்டு கத்தும் சத்தமும் பக்கிரி ரோட்டுல இருக்கறவன் எல்லாம் ஆம்பளையான்னு எப்படி கேட்கலாம் என்று பெருங்குரலில் பக்கிரி கத்தும் சத்தமும் எங்களுக்கு தெளிவாக கேட்டது...அதன் பிறகு இருவருக்கும் சண்டை நடக்கும்  சத்தம் கேட்டது.. பக்கிரி போன நாற்பதாவது நொடியில் பக்கிரி மனைவியும் குழந்தைகளும் லபோ திபோ என்று கத்திக்கொண்டு  பக்கிரி மனைவி தலைவிரிக்கோலமாக மணி வீட்டு சத்தை நோக்கி ஓடுவது தெரிந்தது....


பக்கிரி கிழந்த நாராக  பனியன் கைலி எல்லாம்கிழிந்து இடது பக்க வாய் புறம் பெரிதாய் வீக்கிய நிலையிலும், வலது பக்கம் வாய்புறம் ரத்தம் வழியவிட்டபடியும்..கண்ணாடியின் ஒரு பக்க கிளாசை மணி வீட்டு வாசலில் நொறுக்கி விட்டப்படி பக்கிரியை அவரின் மனைவி பிள்ளைகள் கைத்தாக்லாக அழைத்து வந்து கொண்டு இருந்தார்கள்..

ரோட்டில் இருந்த பெண்கள்.. ரோட்டில் இருந்த ஆண்கள் பிறப்பு சந்தேகத்தை  பக்கரி மூலம் கொஞ்சமேனும் தீர்த்து வைத்த சந்தோஷத்தில் எது பற்றிய கவலை இல்லாமல் கலைந்து சென்றார்கள்..

ஒரு வாரம் கழித்து மெயின் ரோட்டில் இருக்கும் டீக்கடையில் உதை வாங்கினாலும் ரோட்டில் இருக்கும் பெண்கள் மத்தியில் ஆண் என்று நிரூபித்த தன்னம்பிக்கையோடும், புதுக்கண்ணாடியோடும்....  

 பக்கிரி  கெக்கே பிக்கே என்று சத்தமாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்..



 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

6 comments:

  1. Enna thala...matter prabha winshop sarakku mathiri chappunu iruke...

    ReplyDelete
  2. பக்கிரி! பேரப் பாத்தா பெரிய போக்கிரி மாதிரி இருக்கு.பாவம்பக்கிரி

    ReplyDelete
  3. yarr enna comment addichalum naan indha yatharthamana uppukatha virumbi padikren thale. Sundar Raj, E-city, Bangalore

    ReplyDelete
  4. இதுதான உண்மை, எப்பவுமே சண்ட பிடிக்கிறவன் கூட
    சாதாரண மனிதன் சண்ட போட போனதே, பெரிய விஷயம்

    ReplyDelete
  5. கருத்தை பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி...

    மொக்கையாக இருந்தாலும் அற்புதமாக இருந்தாலும் என் மனதில் என்ன தொன்றுகின்றதோ? அதைதான் எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.. சிலருக்கு மொக்கையாக தோன்றும் விஷயங்கள்.. சிலருக்கு ரசிப்பவையாக இருக்கும்... அதனால் எனக்கு கவலை இல்லை.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner