காதலர் தினம்...2010..பெங்களுர்...

போன காதலர்தினம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக சொல்லலாம்... ஏன் என்றால்? போன வருடத்தில் என்னோடு பேருந்தில் வரும் எனது கல்லூரி மாணவிகள்... என் வீட்டுக்கு வந்து ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்து அரட்டை அடித்து விட்டு சென்றார்கள்...நானும் என் மனைவிவயும் ரொம்ப சந்தோஷமாக இருந்த நாளாக அதை சொல்லாம்...
என் பத்து வருட காதலில் காதலர்தினத்துக்கு பெரிய அளவு முக்கியத்துவம் கொடுத்து இல்லை... அன்று பார்த்தால்தான் காதலா? இல்லை எனறால் அது காதல் இல்லையா? என்று விதண்டாவாதம், என் மனைவியிடம் நிறைய செய்து இருக்கின்றேன்...

பெங்களுர்... முன் எப்போதையும் விட மிக அழகாக இருக்கின்றது.... பெரிய பெரிய பாலங்கள் அமைத்து கொண்டு, வானத்தில் இருந்து பார்க்கும் போது, பெரிய மலைபாம்பு பூமியில் புதைந்து புதைந்து மேலே எழுந்து செல்வது போல இருந்து இருக்கு....
பிளைட்டில் எல்லாம் பறக்கவில்லை எல்லாம் ஒரு கற்பனைதான்...
மடிவாலாவில் ரோடு அகலபடுத்தும் போது, ஒரு பெரிய ஆலமரத்தை அபேஸ் செய்ததையும்... சாலை விரிவாக்கத்தில், பல வருடத்திய மரங்களுக்கு மரண தண்டனை விதித்ததையும் என்னவென்று சொல்வது.... இருப்பினும்.... முன்பை விட பெங்களுர்... இப்போது குளிர்பதம் குறைவாகவே இருக்கின்றது...

எழு கிலோ மீட்டருக்கு பறக்கும் பாலத்தை அமைத்து இருக்கின்றார்கள்... ஒருசிங்கிள் பீமில் மேலே போய் விரிந்து இரட்டை வழிச்சாலையாக மாற்றி இருக்கின்றார்கள்....

மடிவாலாவில் இருந்து எழு கிலோ மீட்டர் பறக்கும் சாலை நேராக எலக்ட்ரானிக் சிட்டிக்கு போகின்றது என்று நினைக்கின்றேன் ... சென்னை சாலைகளை ஒப்பிடும் போது பல சாலைகள் பிரமாதமாக இருக்கின்றது.... சிட்டியில் ரிச் மண்ட சர்கிள் பாலத்துக்கு கீழே ரோட்டில் ஒரு பள்ளம் இருந்தது... அதே போல்,லால்பார்க் போகும் ஓன்வேயில் சாலைகள் சரியாக இல்லை.... அவ்வளவே.... ஆனால் சென்னையில் எந்த சாலைகளும் இந்தளவுக்கு சிறப்பாக இல்லை... திடிர் பள்ளங்கள் அதிகம் உள்ள மெட்ரோ சிட்டி சென்னைதான் போலிருக்கின்றது... பெங்களுர் உள்கட்டமைப்பு நன்றாக செய்து கொண்டு வருகின்றார்கள்...
காதலர் தினத்துக்கு முதல்நாளும்... காதலர்தினத்து அன்றும் போரம் போனோம்...புனே குண்டு வெடிப்பி்ன் பாதிப்பு நன்றாகவே தெரிந்தது... பெரிய அளவு கூட்டம் காணபடவில்லை....
ராம் சேனாவின் தாலி ஸ்டன்டுக்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது...
காதலர்கள் குறைவாகவே இருந்தார்கள்...
மும்பை ,டெல்லி போல பெண்கள் உடை புரட்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள்...

நாம் போடும் சுடர்மணி பனியனை மட்டும் போட்டுக்கொண்டு அலட்சியமாக எக்சலேட்டர்களில் பயணிக்கின்றனர்...

நம்ம ஊரின் பெரிய பிரச்சனை ஆட்டோக்கள்தான்... அதுதான் பெங்களுரின் பெரிய பிரச்சனையும்.....


காதலர்தினமான ஞாயிறு அன்று காதலர்களை முக்கியமாக பெண் பிள்ளைகளை அதிக அளவில் பார்க்க முடியவில்லை.... இருப்பினும்.... வந்த பெண்கள்... எனக்கு தாழ்வு மனப்பான்மையை அதிகம் உண்டாக்கி விட்டு சென்று கொண்டு இருந்தார்கள்..(மாடல் பிகரு கிட்ட நிக்க முடியுதோ இல்லையோ... இப்படி நின்று வரலாறு பதிவு செஞ்சிக்க வேண்டியதுதான்..)

இந்த வண்ணமிகு பெண்களுக்காகவே பெங்களுருக்கு ஜாகையை மாற்றிவிடலாமோ? என்று தோன்றும் அளவுக்கு இருந்தார்கள்...

இரண்டு ரெட் ரோஸ் கொடுத்து இளைஞனின் கையை இருக்கி தனது மார்பில் பதிய வைத்துக்கொண்டு காதல் போதை சொக்க ஒரு பெண் நடந்து போவதை எல்லோரும் ஒரு கணம் பார்த்து விட்டு நகர்ந்தனர்...

போரமில் ஒரு ரயில் ஸ்டேஷன் போல இருக்கும் ஒட்டலில் டின்னருக்கு போனோம் எல்லோரும் என் மச்சானின் நண்பர்கள்...பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தமிழ் தம்பதிகள் சமீபத்தில் திருமணம் முடிந்ததவர்கள் என்று நினைக்கின்றேன்.. பில் பண்ம் 3500 என்று சொன்னதும் அந்த பெண் வாய் பிளந்தால்... எங்கப்பாவுக்கு தெரிஞ்சுதுன்னா... அவ்வளவுதான் மயக்கம் போட்டு விழுந்துடுவார் என்று சொல்லி ஆச்சர்யபட்டாள்....

பெங்களுருவில் நம் ஊர் போலவே சுவற்றில் சித்திரம் வரைந்து வைத்து இருக்கின்றார்கள்... சென்னையில் மவுன்ட் ரோடு மட்டும் என்றால்...இங்கு எல்லா இடத்திலும் வரைந்து வைத்து இருக்கின்றார்கள்...
சென்னை சுவற்று ஓவியங்கள் மழைக்கு பிறகு பல் இளிக்க ஆரம்பித்து விட்டன...என்பது வேறு விஷயம்ட....

சிவப்பு கலர் ஏசி பஸ்கள் போல இப்போது வெளிர் நீலத்தில் நிறைய புது குளிர் பேருந்துகள் வாங்கி விட்டு இருக்கின்றார்கள்...கரெண்டு பில்லை ஏடிஎம் கார்டு போல் ஒரு மெஷினில் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்... 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் கட்டி விட்டு செல்லலாம்...

எல்லா லேடிஸ் ஹாஸ்ட்டல் பால்கனியிலும் எல்லா புளோரிலும் ஒரு பெண் செல்போனில் மணிக்கணக்கில் நின்று பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்....

கேம் சோனில் கார் விளையாட போனேன்... 30 ரூபாய்க்கு டோக்கன் எடுத்து விளையாடினேன்... என் விடியோ கேம் காரை எவ்வளவு டேலன்டாக ஓட்டியும் கார் அநியாயத்துக்கு ஆக்சிடென்ட் ஆகி கொண்டு இருந்தது....இதையெல்லாம் காண சகிக்காமல் ஒரு இரண்டாம் வகுப்பு படிக்கும் சின்ன பையன் தன் அப்பாவிடம்... காசு வாங்கி டோக்கன் எடுத்து என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து ரூருருருருரும் என்று ஆக்சிலேட்டர் கொடுத்து... என்னை ஒரு கண்ணால் பார்த்தபடி காரை ஓட்ட... கார் டிரான்ஸ்போர்டர் கார் போல் பறந்து கொண்டு இருந்தது....அவனின் பார்வை இப்படித்தான் ஓட்ட வேண்டும் என்பது போல் இருந்தது.... அசிங்கபட்டான் ஆட்டோக்காரன் போல அசிங்கப்ட்டான் இந்த ஜாக்கி....இப்ப இருக்கற பசங்க எல்லாம் எமனை ...த்ததாக இருப்பதை நினைத்து இந்த ஜாக்கி வெட்கபட்டேன்... வேதனைபட்டேன்...


கல்லூரியில் வேலை செய்யும் போதே... எனக்கு நங்கநல்லூர் ஆஞ்சிநேயர் கோவிலில் ஒரு செம்பு வளையத்தை என் கையில் மாட்டி விட என் மனைவி முயற்ச்சிக்க.... நான் காலேஜ் போறவன்... இப்படி எல்லாம் போட்டுகிட்டு போனா... மேனேஜ்மென்ட் என்னை பொறுக்கி என்று சொல்லும் அதனால் வேண்டாம் என்று சொன்னேன்.... அப்போது ஒத்துக்கொண்டாள்....இரண்டு வாரத்துக்கு முன் அதே ஆஞ்சநேயர் என்னை நக்கலாக பார்த்து சிரித்து வைக்க... இப்போது எந்த காரணமும் சொல்லும் முன்...என் கையில் செம்பு வளையத்தை மாட்டிவிட்டுவிட்டாள்... பெங்களுர் போரமில், சென்னையில், இந்த வளையத்தை மாட்டிக்கொண்டு நடக்க எல்லா பெண்களும் பொறுக்கி வரான் என்று சொல்லி விட்டு மிரண்டு ஒடுவது போல் எனக்கு உள்ளுக்குள் ஒரு பிரமை.....




எல்லா இடத்திலும் தமிழ்குரல்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றன... அடுத்த மாநிலத்தில் இருக்கின்றோம் என்ற உணர்வே இல்லை....


அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

14 comments:

  1. நான் பெங்களூரில் சிறிது காலம் இருந்தேன், அந்த நினைவுகள் வந்து விட்டது தல.

    ReplyDelete
  2. There are lot of activities are going in Blore, no doubt on that. But when we compare with Chennai, Blore is very small town, so I do not get grace or glamour with Blore.

    ReplyDelete
  3. நானும் இப்பதான் பெங்களூர் பற்றி எழுத ஆரம்பித்து இருக்கிறேன். நம்ம இம்ப்ரஷன அப்படியே குடுத்திருக்கீங்க!

    ReplyDelete
  4. பெண்களூர் போயிருந்தீங்களா!?
    நல்லா இருந்தது பதிவு.

    ReplyDelete
  5. "பெங்களுர் உள்கட்டமைப்பு நன்றாக செய்து கொண்டு வருகின்றார்கள்."
    "எல்லா இடத்திலும் தமிழ்குரல்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றன.
    அடுத்த மாநிலத்தில் இருக்கின்றோம் என்ற உணர்வே இல்லை.".
    ----- கரெக்ட் ஜாக்கி
    "பெங்களுருக்கு ஜாகையை மாற்றிவிடலாமோ"---- இல்லை ஜாக்கி
    பொழுது போக்கவேன ஒத்து வரும் . மற்றபடி போர் .

    ReplyDelete
  6. கடைசி போட்டோ.... இந்த பூனையும்
    பீர் குடிக்குமா என்ற ரேஞ்சில் இருக்கு...!! :)

    ReplyDelete
  7. படங்களும் பதிவும் அருமை.

    ReplyDelete
  8. வணக்கம் ஜாக்கி சார். நன்றாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள். நல்ல பகிர்தல். ஆனால் இந்த கட்டுமானங்கள் குறித்த கருத்துக்கு நான் மாறுபடுகிறேன்!!! ஏனென்றால் ஒரு ஏழு வருடங்கள் இங்கே கழித்ததாலும், சென்னை பற்றியும் தெரியும் என்பதாலும், சொல்கிறேன்.

    //"மடிவாலாவில் இருந்து எழு கிலோ மீட்டர் பறக்கும் சாலை நேராக எலக்ட்ரானிக் சிட்டிக்கு போகின்றது என்று நினைக்கின்றேன் ... சென்னை சாலைகளை ஒப்பிடும் போது பல சாலைகள் பிரமாதமாக இருக்கின்றது.... சிட்டியில் ரிச் மண்ட சர்கிள் பாலத்துக்கு கீழே ரோட்டில் ஒரு பள்ளம் இருந்தது... அதே போல்,லால்பார்க் போகும் ஓன்வேயில் சாலைகள் சரியாக இல்லை.... "//

    நீங்கள் இங்கே இருக்கின்ற பிரதான சாலைகள் சிலவற்றை பார்த்து விட்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள். பெங்களூரை விட சென்னை சாலைகளிலும், மற்ற இணைப்பு சாலைகளிலும் கொஞ்சம் மிஞ்சியே நிற்கிறது.

    இங்கே எதிர்பாராத மக்கள் கூட்டம் கடந்த ஆறு ஆண்டுகளில். சரிவர திட்டங்கள் போக்குவரத்துக்கு வகுக்க படவில்லை. இந்த பறக்கும் சாலை கூட நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சரி விடுங்க சார், இக்கரைக்கு அக்கறை பச்சைன்னு வைத்து கொள்ளுங்கள். ஆனால் எனக்கு சென்னை சற்று கரும்பச்சையாகவே தெரிகிறது. இப்பொழுதுதான் பெங்களூரை சரி செய்ய திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். விரைவில் நன்றாக அனைத்தையும் செய்வார்கள் என்று நினைக்கிறேன். மரங்களை வெட்டி, தட்பவெப்பத்தை வெகுவாக மாற்றி விட்டார்கள்:-(

    மற்றபடி வெளியூர் சென்றது உணர்வே உங்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.!!! நீங்கள் உணவருந்தியது சாயீப் சிந்த் சுல்தான் என்ற உணவகம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து காதலர்கள் தினத்தை கொண்டாடியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  9. வணக்கம் ஜாக்கி சார். நன்றாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள். நல்ல பகிர்தல். ஆனால் இந்த கட்டுமானங்கள் குறித்த கருத்துக்கு நான் மாறுபடுகிறேன்!!! ஏனென்றால் ஒரு ஏழு வருடங்கள் இங்கே கழித்ததாலும், சென்னை பற்றியும் தெரியும் என்பதாலும், சொல்கிறேன்.

    //"மடிவாலாவில் இருந்து எழு கிலோ மீட்டர் பறக்கும் சாலை நேராக எலக்ட்ரானிக் சிட்டிக்கு போகின்றது என்று நினைக்கின்றேன் ... சென்னை சாலைகளை ஒப்பிடும் போது பல சாலைகள் பிரமாதமாக இருக்கின்றது.... சிட்டியில் ரிச் மண்ட சர்கிள் பாலத்துக்கு கீழே ரோட்டில் ஒரு பள்ளம் இருந்தது... அதே போல்,லால்பார்க் போகும் ஓன்வேயில் சாலைகள் சரியாக இல்லை.... "//

    நீங்கள் இங்கே இருக்கின்ற பிரதான சாலைகள் சிலவற்றை பார்த்து விட்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள். பெங்களூரை விட சென்னை சாலைகளிலும், மற்ற இணைப்பு சாலைகளிலும் கொஞ்சம் மிஞ்சியே நிற்கிறது.

    இங்கே எதிர்பாராத மக்கள் கூட்டம் கடந்த ஆறு ஆண்டுகளில். சரிவர திட்டங்கள் போக்குவரத்துக்கு வகுக்க படவில்லை. இந்த பறக்கும் சாலை கூட நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சரி விடுங்க சார், இக்கரைக்கு அக்கறை பச்சைன்னு வைத்து கொள்ளுங்கள். ஆனால் எனக்கு சென்னை சற்று கரும்பச்சையாகவே தெரிகிறது. இப்பொழுதுதான் பெங்களூரை சரி செய்ய திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். விரைவில் நன்றாக அனைத்தையும் செய்வார்கள் என்று நினைக்கிறேன். மரங்களை வெட்டி, தட்பவெப்பத்தை வெகுவாக மாற்றி விட்டார்கள்:-(

    மற்றபடி வெளியூர் சென்றது உணர்வே உங்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.!!! நீங்கள் உணவருந்தியது சாயீப் சிந்த் சுல்தான் என்ற உணவகம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து காதலர்கள் தினத்தை கொண்டாடியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. சும்மா என்ஜாய் பண்றீங்க தல.. ;)

    ReplyDelete
  11. Sir, Last week i too at banglore .Roads r wide and clean and central and karuda Mall also too big like forum.

    ReplyDelete
  12. //சென்னை சாலைகளை ஒப்பிடும் போது பல சாலைகள் பிரமாதமாக இருக்கின்றது.... சிட்டியில் ரிச் மண்ட சர்கிள் பாலத்துக்கு கீழே ரோட்டில் ஒரு பள்ளம் இருந்தது... அதே போல்,லால்பார்க் போகும் ஓன்வேயில் சாலைகள் சரியாக இல்லை.... அவ்வளவே.... ஆனால் சென்னையில் எந்த சாலைகளும் இந்தளவுக்கு சிறப்பாக இல்லை... திடிர் பள்ளங்கள் அதிகம் உள்ள மெட்ரோ சிட்டி சென்னைதான் போலிருக்கின்றது... பெங்களுர் உள்கட்டமைப்பு நன்றாக செய்து கொண்டு வருகின்றார்கள்...//

    no way..
    chennai roads r best compared with blore.
    metro train - construction work nadandhutu irukradhala traffic la maatradhu unavoidable one nowadays..

    romba dirty-a road ellam paakave kevalama iruku ipollam..

    chennai evlo thevalam.. not that much bad

    ReplyDelete
  13. அரும தல நல்லா எழுதி இருக்கறிங்க .......
    //என்னை ஒரு கண்ணால் பார்த்தபடி காரை ஓட்ட... கார் டிரான்ஸ்போர்டர் கார் போல் பறந்து கொண்டு இருந்தது....அவனின் பார்வை இப்படித்தான் ஓட்ட வேண்டும் என்பது போல் இருந்தது.... அசிங்கபட்டான் ஆட்டோக்காரன் போல அசிங்கப்ட்டான் இந்த ஜாக்கி....இப்ப இருக்கற பசங்க எல்லாம் எமனை ...த்ததாக இருப்பதை நினைத்து இந்த ஜாக்கி வெட்கபட்டேன்... வேதனைபட்டேன்...//
    சாமி வயிறு வலிக்குது ......

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner