2011 தமிழக அரசியல், சமுகம் ஒரு ரீவைன்ட்



இந்திய அளவில் ஸ்பெக்ட்ரம் பூதம் வருட ஆரம்பத்தில் இருந்து ஆட்டிபடைத்தது...தலைநகரில் அந்த விஷயம் சூடு குறையாமல் பார்த்துக்கொண்டது...ராசா மற்றும் கனிமொழி கைதால் வட இந்திய மீடியாக்களின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பியது...


அன்னா ஹாசரே இந்திய அளவில் ஊழலை ஒழிக்க நடத்திய போராட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு இருந்தாலும் போக போக மங்கியது என்று சொல்லலாம்...

ஆருடங்கள் பொய்து போய் கலைஞர் அரியனை இறங்க ஜெஅரியனை ஏறினார்...ஜெ மாறிவிட்டதாக ஒட்டு மொத்த தமிழகமும் நம்பிக்கொண்டு இருந்தது... அவர் கடைசி வரை மாறவே மாறாதவர் என்பதை இந்த முறையும் நிரூபித்தவர்..

தமிழகத்தின் உரிமைகளுக்கு அதிகம்  குரல் கொடுக்கும் வைகோவை நம்பவைத்து கழுத்து அறுத்தார் ஜெ... அதுதான் ஜெ.... தான் இன்னும் மாறவில்லை என்று பொது மக்களுக்கு கொடுத்த இன்ட்ரோ...


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் தமிழகத்தை ஒளிரசெய்வோம் என்று சொல்லி வைத்தார்..




வழக்கம் போல தமிழகம் இருளில்  மூழ்கியது. அதை பற்றி அவரும் கண்டுக்கொள்ளவில்லை...ஆட்சிக்கு வந்ததும் பள்ளி பிள்ளைகள் எந்த புத்தகத்தை படிப்பது என்று அலையவைத்தார்.. கடைசியில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க அடிபணிந்தார்..மூன்று மாதகாலங்கள். பெற்றோர் பட்டபாடு சொல்ல முடியாதது.. தலைமைசெயலகத்தை ஜஸ்ட் லைக் தட் மருத்துவமணையாக மாற்ற போகின்றேன் என்று அடுத்த அஸ்திரத்தை பாய்ச்சினார்...அடுத்ததாக அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று மாற்றிக்கொண்டே போனார்... கன்னியாக்குமாரி  பெரிய வள்ளுவர் சிலை கிலி பிடித்து நடுங்கி போய் நின்றுக்கொண்டு இருந்தார்...வழக்கம் போல ஒரே இரவில் பேருந்து கட்டணத்தை ஏற்றி சாமான்ய மக்களின் சாபத்தை வாங்கிக்கட்டிக்கொண்டார். பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கு நேரடியாக பதினாலு வருடத்துக்கு பிறகு ஆஜரானர்...கடந்த மாதத்தில் தனது தோழியை விளக்கி வைத்தகாரணத்தால் நீதி தேவதை ரேஞ்சுக்கு போற்றப்படுவது ஏற்புடையது அல்ல...தனக்கு தெரியாமல் நிழல் அரசாங்கம் நடத்தியவர் சசி என்று இவ்வளவுநாள் தெரியாமல் திடிர் என்று தெரிந்தது போல ஆக்ஷன் எடுப்பது  ஏமாற்று வேலையாக கூட இருக்கலாம்...ஆனால் அம்மா ஆட்சி பொறுப்பில் ஏறிய நாளில் இருந்து சோம்பிக்கிடந்த தமிழகம் எல்லா பிரச்சனைக்கும் போராட துவங்கி இருக்கினறது.. நல்ல மாற்றம் இது... போராட்டத்தை துவக்கி வைத்த அம்மாவுக்கு நன்றிகள்....



  2011 /கனிமொழி ... ஜெ...ஒரு ஒப்பிடு....
இரண்டு பேரின் மேலும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கின்றது..
இன்னும் நிருபிக்கபடவில்லை குற்றசாட்டு மட்டும்தான்....
ஒருவர் எம்பி
ஒருவர் சீஎம்
கனிமொழியை விசாரனைக்கு அழைத்தார்கள்..கைது  செய்தார்கள்..
ஜெவை விசாரனைக்கு அழைத்தால் கேள்வியை வீட்டுக்கு அனுப்புங்க பதில் சொல்லறேன் என்று சொல்லுகின்றார்...
ஜெ 108முறைக்கு மேல் வாய்தா வாங்கி சாதனை புரிகின்றார்..சொத்துகுவிப்பு வழக்கை14 வருடங்கள் வெற்றிகரமாக கடத்தியும் விடடார்......
கனிமொழி சிறையில் இருந்து விட்டு பெயிலில் வந்து இருக்கின்றார்.. இரண்டு பேருமே பொதுவாழ்வில் இருப்பவர்கள்...
இதில் ஜெ சொத்து குவிப்பு வழக்குக்காக பெங்களூர் கோர்ட்டுக்கு சென்ற  போது வரவேற்ப்பு பேனர் எல்லாம் வைத்து  பட்டாசு எல்லாம் வெடித்து அதிமுகவினர் வைத்து அசத்தினார்கள்.
கனிமொழி பெயில் வாங்கி சென்னை திரும்பிய போது வாழும் வரலாறு ரேஞ்சிக்கு பேனர் எல்லாம் வைத்து அசத்தினார்கள்..
========
காங்கிரஸ் திமுக கழுத்தில் கத்தி வைத்து திருவிளையாடல் தருமி ரேஞ்சிக்கு எனக்கு  வேணும் எனக்கு வேணும் என்று 60 க்கு மேற்பட்ட சீட்டுகளை வாங்கி தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட விட்டுவைக்கவில்லை..கலைஞரின் ராஜதந்திரம் புஸ் ஆகி எடுபடாமல் போக வைத்ததில், காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு...


தேமுதிக... சட்டென பெரிய அங்கீகாரம் பெற்ற கட்சியானது..... தமிழகத்தின் எதிர்கட்சித்தலைவரானர் விஜயகாந்...கட்சி ஆரம்பித்து பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி முதல் முறையாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார்...மற்றபடி அவரின் செயல்பாடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.. முல்லைபெரியாறுக்கு ஆதரவாக சட்டசபை  தீர்மானத்துக்கு எதிர்கட்சிதலைவரான அவர் லேட்டாக சபைக்கு வந்தது மக்களிடம் அதிர்சியை ஏற்படுத்தியது...
பாமக...இனி திரவிட கட்சிகளுடன் கூட்டனியே இல்லை என்று ராமதாஸ் அறிவித்த இருக்கின்றார்.. நல்ல முடிவு.. பிரசவ வைராக்கியம் போல இல்லாமல் இருந்தால் நல்லது..
பார்போம் 2012 எப்படி இருக்க போகின்றது என்று??

==========
2011 தமிழக சமுகம் ஒரு ரீவைண்ட்......

சம்ச்சீர் கல்விக்கு மக்கள் போரடினார்கள்..
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கபடுவதுக்கு போராடினார்கள்.
தொடர்ந்தது கூடங்குளம் அணுஉலை வேண்டாம் என்று தொடர் போராட்டம்
புதய தலைமைசெயலக மாற்றம் மற்றும் அண்ணா நூலக மாற்றம் குறித்தான போராட்டம்...
மக்கள்நலபணியாளர்கள் 13000 பேர் டிஸ்மிஸ் எதிர்த்து  போராட்டம்..
மூன்று பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டம்..
பஸ் கட்டண  உயர்வுக்கு போராட்டம்...
பால் விலைஉயர்வுக்கு போராட்டம்..
முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு போராட்டம்.. என்று தமிழகம் இதுவரை காணத பெரிய போராட்டங்களை  சந்தித்தது..

இதில் மக்களின் எழுச்சியான போராட்டங்கள் என்று பார்த்தால் மூன்று போராட்டங்களை குறிப்பிட்டு சொல்லாம்...

ராஜிவ் கொலை வழக்கில்மூன்று பேர் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டம்

கூடங்குளம் அணுமின்நிலையம் எதிர்ப்பு போராட்டம்

முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு போராட்டம் என்று பெரிய போராட்டமாக மூன்று போராட்டங்களை சொல்லலாம்... இதில் முல்லை பெரியாறு அணைக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழகமே அரசியல் சார்பற்று குதித்தது என்றுதான் சொல்லவேண்டும்...

கேரளத்தில் தமிழர்கள்... அடிபட்டு உதைபட்டு பெண்கள் மானபங்க படுத்த பட்டு வந்தாலும்.. கேரள அரசும் போலிசும் கைகட்டி வேடிக்கை பார்த்தன..

இங்கே தமிழகத்தில் எந்த  கேரள மக்கள் மீதும் தாக்குதல் நடத்தவில்லை..ஆனால் அவர்களின் உடமைகள் பாதிக்கப்பட்டன...

கேரள போராட்டகாரர்களை கேரள அரசும் போலிசும் கை கட்டி வேடிக்கை பார்த்தன.. ஆனால் தமிழகத்தில் போராட்டம் நடத்தியவர்களை போலிசார் அடி பின்னி விட்டார்கள்.. வழக்கம் போல இந்திய இறையாண்மையை காத்து  நின்றது தமிழக மக்களும் தமிழக அரசும்தான்..


தமிழர்கள் சோம்பல் தூக்கத்தில் இருந்து, முல்லைபெரியாறு விஷயத்தில் விழித்துக்கொண்டது 2011ல் பெருமைகொள்ளும் விஷயம்தான்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.






நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

9 comments:

  1. அடுத்த ஆண்டாவது முல்லைபெரியாறு பிரச்சனையில் நமக்கு வெற்றி கிடைக்குமா?

    ReplyDelete
  2. //பிரசவ வைராக்கியம் போல இல்லாமல் இருந்தால் நல்லது..//


    I like this man...... enge irunthuya pudikare?

    ReplyDelete
  3. சாது மிரண்டால் காடு கொள்ளாது - தமிழனும் எத்தனை நாளைக்குதான் அடி வாங்கீட்டே இருப்பான். இனிமே நல்ல காலந்தான்னு தோனுது.

    ReplyDelete
  4. nice rewind.happy new year jackie anna

    ReplyDelete
  5. நான் உங்களுடய பதிவு ஒன்று விடாமல் படிப்பேன் ஆனால் பினூட்டம் இட்டது கிடயாது.உங்களுடய  பதிவுகள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது

    ReplyDelete
  6. Aaanandha vikadan vaanga thevai illai ponga, athuthaan yellathai pathi yeluthi vitteekale , appadiye oru pathuaward yaarukkatchum koduthu , atharkku 2011 Jacky awardsinnu Peru vatcha oru kitties anandha vikadan , nice Jacky , whish u a happy new year.....

    ReplyDelete
  7. இந்த வருடத்தின் தமிழக Year Book-2011 என்றே வெளியிடலாம் அண்ணே. அவ்ளோ அருமையா இருக்கு.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner