LADDER 49--9/11 மற்றும்27/11 இரண்டு சம்பவங்களில் உயிர் நீத்த வீரர்களுக்கு இந்த படம் சமர்பனம் (பாகம்/11)நாம் இந்த உலகில் உயிர் வாழவும் நம்மை நம்பிய ஜீவன்களை காப்பாற்றவும் தினமும் வெவ்வேறு பிரச்சனைகளுடன் போராட வேண்டி இருக்கிறது. வெவ்வேறு வேலைகள் செய்து பொண்டாட்டி பிள்ளைகளை காப்பாற்ற வேண்டி இருக்கிறது.

அது பல ஆயிரம் ஆண்கள் பெண்கள் ரோட்டில் முக்கை பிடித்து நடக்க....


மேன் ஹோல் திறந்து அதில் மிதக்கும் கட்டியாக இருக்கும் மலங்களை தன் கையால் விலக்கி மலமும் வீட்டு கழிவுகள் கலந்த ஒரு விதமானசிமென்டகலரும் மஞ்சளும் கலந்த தண்ணியில் ஜட்டியுடன் ( அந்த ஜட்டியின் பின் புறத்தை கவனித்தால் அதில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கும்)

இறங்கி அடைப்பெடுககும் வேலையில் இருந்து், பாதுகாப்பு ஆலோசகர் என்ற போர்வையில் தண்ட சம்பளம் வாங்கும் நாரயணன் வரை வேலைகள் பலவிதம்.....


இதை போல் மேல் உள்ள பல வேலைகள் காலையில் போனால் மாலையில் வீடு வந்து மனைவியை முத்தம் இட்டு மழைக்கு இதமாக அடை சாப்பிட்டு கலைஞர் வீட்டு செய்திகளை சன் டிவி காமெடி திரை போல் ரசிக்கலாம்....

ஆனால் வேலைக்கு போனால் அன்று உயிருக்கு உத்ரவாதம் இல்லை என்ற நிலைதான் இராணுவம், கமெண்டோ, காவல் துறை, தீயனைப்பு துறை போன்றவைகள்....

மும்பையில் உயிர்நீத்த போலிஸ்காரர்களின், மனைவியும் பிள்ளைகளும் புதிய ஷாருக்கான் படம் பார்க்க ஆவலாய் இருந்து இருக்கலாம் அல்லது அடுத்த வாரம் பைக் பிள்ளைக்கு வாங்கி கொடுபபதாக சத்தியம் செய்து இருக்கலாம், 27/11 அன்று இரவு தன் மனைவியுடன் சல்லாபிக்க மதியம் ஜீப்பில் ஏதாவது ஒரு விசாரனைக்கு போகும் போது மாறாப்பு விலகிய ஏதாவது ஒரு பெண் காரணமாக இருந்து இருக்கலாம்....


இந்த எல்லாம் 27/11 அன்று இரவு தீவிராவதிகளுடன் ஏற்பட்ட நேருக்கு நேர் தாக்குதலில் உயிர்நீத்த,

சாரி வீரமரனம் அடைந்த அந்த முகம் தெரியாத போலிஸ்காரர்களின் கனவுகள் நொடியில் கலைந்து போயின.....

அதே போல் 9/11 அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ந்த போது உயிர் போகும் என்று தெரிந்தே வேலைக்கு போய் தீயனைப்பு வீரர்கள் என்னற்ற பேர் இறந்தனர்....


நாம் நிம்மதியா உறங்க,
அவர்கள் உறக்கம் மட்டும் இல்லை முடிந்தால் உயிரையும் துறக்கின்றனர்..
நம் பொது மக்கள் என்ன நினைக்கிறோம் தீ அனைந்த பிறகே பயர் சர்விஸ் வருவதாக சொல்கிறோம் ஆனால் அந்த பயர் சர்விஸ், வண்டியும் ஆம்புலன்ஸ்ம் செல்லும் போது எத்தனை போ் வழி விட்டு ஒதுங்கி இருக்கிறோம்...
உலகில் அம்புலன்ஸ்வுடனும் பயர் சர்வீஸ் வாகனத்துடன் போட்டி போட்டி போட்டு வாகனம் ஓட்டுபவர்கள் நம்மவர்களே வீட்டை சவுக்கார் பேட்டை ஏரியாவில் கட்டி விட்டு பத்து அடி ரோட்டு இருக்கும் வீட்டில் தீ பிடிக்க ..

3வது தெருவு வரை வண்டி வந்து அதற்க்கு மேல் வராது என்று தெரிந்து முடிவு எடுத்து பைப்பை இனைத்து எரியும் வீட்டுக்கு ஓஸ் நீமிர்த்தும் போது எல்லாம் பஸ்பமாகி இருக்கும்.. உடனே ஜனுன் சேட்... பான்பராக் வாயோடு என்னைக்குதான் சரியான நேரத்துக்கு பயர் சர்விஸ் வந்து இருக்கு? என்று கேள்வி எழுப்புவான்....நாம் கூட தினத்தந்தியில் படித்தும், பார்த்தும் இருக்கலாம்..

வேளச்சேரியில் வீட்டில் புகுந்த மலைபாம்பை பிடித்த தீயனைப்பு வீரர்கள்பாம்புடன் படத்தில்காணலாம்...

சரவனாஸ் ஸ்டோரில் ஏற்பட்ட தீயை பக்கத்து கடைக்கு பரவாமல் எட்டு மணி நேரம் போராடி அனைத்தனர் என்பது நம்மை பொறுத்த வரை காலையில் புரு காப்பி நாக்குக்கும் தொண்டைக்கும் உசலாடும் போது படிக்கும் செய்தி....
ஆனால் அது பொது மக்களையும் உயிர்களையும் காக்க எமனுடன் நெஞ்ச நிமிர்த்தி நடத்தும் போராட்டம் ...எமனுடன் “ங்கோத்தா ”நீயா நான பாத்துடலான்ட என்று மனைவி பிள்ளை உறவுகள் எதிர் வீட்டு சிறு மார்பு பெண் என்று எது பற்றியும் கவலை கொள்ளாது தீயுடன் போராடும் அந்த வெள்ளந்தி மனிதர்கள் பற்றிய கதைதான் லேடர்49 படம்...


லேடர் 49 படத்தின் கதை...

ஜாக் மாரிசன் ஒரு பயர் பைட்டர். அமெரிக்காவில் இப்படிதான் பயர்சர்விஸ் மேன்களை அழைப்பார்கள்... ஒரு பெரிய கட்டடத்தில் ஏற்ப்ட்ட தீ விபத்தில் இருப்பவர்களை மீட்க லேடர் 49 குழு செல்கிறது.

அந்த மீட்பு பணியில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு எகனை முகனையான இடத்தில் ஜாக் மாட்டி கொள்கிறான் சய நினைவையும் இழந்து தான் காப்பாற்ற படமாட்டோம் என்ற நிலையில் அவன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்ப்தே லேடர் 49 படத்தின் கதை...

ஜாக் மாரிசன் கேரக்ட்ரில்Joaquin Phoenix நடித்து இருக்கிறார் இதற்க்கு முன் இவரை நினைவு படுத்த கிளடியேட்டர் படத்தில் நாட்டின் அரியனைக்கு ஆசை பட்டு அப்பாவை அனைத்து கொலை செய்வாரே அவரேதான்.


இந்த லேடர் 49குழுவின் தலைவராக John Travolta நடித்து இருப்பார் எனக்கு ஹாலிவுட் நடிகர்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர் அவரின் முந்தைய படங்களான புரோக்கன் ஏரோ, பேஸ் ஆப் போன்ற படங்களில் அவர் பின்னி பேடல் எடுத்து இருப்பார். அதுவும் அவர் கடித்து பேசும் ஆங்கிலத்துக்கும் சிகரேட் பிடிக்கும் ஸ்டைலுக்கும் நான் காதலன்..


கதாநாயகன் ஜாக் பயர் சர்விஸ் வேலையில் சேர்ந்ததும் நடக்கும் ராகிங் மற்றும் அவனுக்கு ஏற்படும் காதல்,


வேலை பளு, அதன் ஆபத்துக்கள் என்று
பிளாஷ் பேக்கில் நினைத்து பார்பதாய் கதை நகரும்... அவன் இடி பாட்டில் மாட்டி இருக்கும் போது
அவனை காப்பாற்ற போராடும் வீரர்களிடம் அவன் என்ன சொன்னான் அவன் கப்பாற்றபட்டானா? என்பனபோன்றவற்றை சின்ன திரையோ அகன்ற திரையோ ஏதாவது ஓன்றில் சர்வ நிச்சயமாக பார்த்து தொலைக்கவும்....


படத்தை பற்றி சில சுவாரஸ்யங்கள்...

சில நேரத்தில் மன பாரமாக இருக்கும் போது சற்று உணர்ச்சிவசப்பட்டு அழ வேண்டும போல தோன்றினால் இந்த படத்தை பார்க்கவும்..

சற்று மாறு பட்டு எடுததால் கூட டாக்குமென்டரி பட சாயலில் வந்து இருக்க வேணடிய படம் , அதை தனது திரைக்கதை சுவாரஸ்யத்தால் பூசி மொழுகி இருப்பார் Jay Russell


இந்த படத்தின் படபிடிப்பு வேர் ஹவுஸ்ல் நடக்கும் போது நிஜமாக பற்றி எறிவதாக பொது மக்கள் எமெர்ஜன்சி நம்பர்களுக்க தொடந்து போன் செய்ய அப்புறம் படபிடிப்புகுழுவினர் லோக்கல் ரேடியோவில் இது படபிடிப்புக்காக ஏற்படுத்திய தீ என்று விளக்கம் அளித்த பின்னரே போன் அழைப்பு சற்ற குறைந்ததாம்.

இந்த படத்தில் மேயராக நடித்து இருப்பவர் உண்மையாலுமே மேயராம்.. அவர் அப்பா கருனாநிதியா? என்பது எனக்கு சத்தியமாக தெரியாது...இந்த படத்தின் ஹீரோJoaquin Phoenix பயர் அக்கடமியில் டிரைனிங் எடுத்தார் அதே போல் பயர் வாகனத்தில் வேகமாக ஏறி இறங்கும் பயிற்ச்சிகளையும் மேற்கொண்டார்.

அதே போல் படத்தின் ஆரம்பத்தில் 20 அடி உயரத்துக்கு தொடை நடுங்கி இருக்கிறார் அகடெமியில் டிரைனிங் முடித்ததும் 20அடி மாடியில் சிங்களி ரோப்பில் உயிர்பயம் அற்று தொங்கயி நிகழ்வும் நடந்து இருக்கிறது..

படத்தின் படபிடிப்புக்கு நிஜமான பயர் மேன்கள் சுமார் இராண்டாயிரம் பேர் பங்கேற்று நடித்தனர்
நுற்றுக்கனக்கான பயர் வாகனங்கள் படப்பிடிப்பில் இடுபடுத்தப்பட்டன.கதாநாயகன்Joaquin Phoenix ஒரு கட்டத்தின் மேற்புறத்தில் அதாவது மாடியில் இருக்கும் போது பில்டிங் இடிந்து விழுவது போன்ற காட்சியில் நிஐமா விழப்போக படபிடிப்பு குழு லேசான தீக்காயங்களுடன் காப்பாற்றியது...


மீட்பின் போது தன் முகத்தை தீயின் கோரத்துக்கு தின்ன கொடுதத ஒரு பயர் சர்விஸ் மேன் புலம்பும் புலம்பல் உங்களை வெகு நாட்களுக்கு நினைவில் இருக்க செய்யும்.


நன்றாக துங்கும் போது அலாரம் அடிக்க அவர்கள் கிளம்பும் அழகுக்கு நாமே பயர் சர்விஸில் சேராமல் போய்விட்டோமே என வருத்தம் கொள்ள செய்யும்...


மைக்கேல் மதன காமராஜன் தான் தமிழில் எனக்கு தெரிந்ந சற்ற விரிவான பின்புலம் அப்புறம் சமீபத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த டிஷ்யும் படம் சசி கூட லேடர் படத்தின் பாதிப்பு டிஷ்யும் படத்தில் இருக்கம்....

இந்த படம் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன் எடுத்தது...(2004)

இந்த படத்தின் இயக்குநர் Jay Russell இதற்க்கு முன் மை டாக் ஸ்கிப் படத்தை இயக்கியவர்.
இந்தலேடர் 49 படத்தை பார்த்து விட்டு நீங்கள் வீட்டில் பார்த்தாலும் எழுந்து நின்று கைதட்டுங்கள் அந்த கைதட்டல் ஒளி நிச்சயம் அந்த கலைஞனால் உணரப்படும்
MPAA:
Rated PG-13 for intense fire and rescue situations, and for language.
Runtime:
115 min
Country:
USA
Language:
English
Color:
Color
Aspect Ratio:
1.85 : 1 more
Sound Mix:
DTS | Dolby Digital | SDDS
Filming Locations:
Baltimore, Maryland, USA

அன்புடன் / ஜாக்கிசேகர்

7 comments:

 1. இந்த படம் அடிக்கடி ஸ்டார் மூவீஸ்ஸில் போடுவார்கள், இதே போல்
  world trade center என்றொரு படமும் உண்டு நிக்கோலஸ் கேஜ் நடித்தது.
  அதுவும் அருமையாக இருக்கும்

  ReplyDelete
 2. நன்றி வால் பையன் இன்னும் இந்த படத்தை பார்க்காத நஎன் நண்பர்கள் வட்டம் ஒன்று இருக்கிறது அது போல் பார்க்காதவர்களக்கும் நீங்கள் சொல்லும் படத்தையும் பார்த்து இருக்கிறேன்

  ReplyDelete
 3. //அக்கரையுடன் போன் செய்தும் பின்னுட்டம்//

  அக்கறையுடன் போன் செய்தும் பின்னூட்டம்

  ReplyDelete
 4. நன்றி தலைவரே தவறை சுட்டிக்காட்டியமைக்கு

  ReplyDelete
 5. எஸ்.ராமகிருஷ்ணன் விகடனில் சிறந்த 50 எழுத்தாளர்களின் கதைகளை ஒவ்வொன்றாக எடுத்து தன் போக்கில் ஒவ்வொரு வாரமாக எழுதி வந்தார். அப்படி ஒரு சாயல் உங்களின் இந்த தொடர்பதிவில் காண்கிறேன். படம் காட்டும் கதைதவிர உங்களி்ன் சொந்த கதையையும் சொருகித்தருவது மிகவும் இதமாகவே இருக்கிறது.

  உங்களின் trade mark நக்கல் வரிகளும் இந்த விமர்சனப்பார்வையில் வந்து விழுந்து மேலும் சுவாரஸ்யம் சேர்க்கிறது.

  ““““ அது பல ஆயிரம் ஆண்கள் பெண்கள் ரோட்டில் முக்கை பிடித்து நடக்க....
  மேன் ஹோல் திறந்து அதில் மிதக்கும் கட்டியாக இருக்கும் மலங்களை தன் கையால் விலக்கி மலமும் வீட்டு கழிவுகள் கலந்த ஒரு விதமானசிமென்டகலரும் மஞ்சளும் கலந்த தண்ணியில் ஜட்டியுடன் ( அந்த ஜட்டியின் பின் புறத்தை கவனித்தால் அதில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கும்)

  இறங்கி அடைப்பெடுககும் வேலையில் இருந்து், பாதுகாப்பு ஆலோசகர் என்ற போர்வையில் தண்ட சம்பளம் வாங்கும் நாரயணன் வரை வேலைகள் பலவிதம்.....”””

  இந்த வரிகள் அபாரம்

  keep it up

  அன்புடன் நித்யகுமாரன்

  ReplyDelete
 6. நன்றி நித்யா தங்கள் விரிவான பதிவுக்கு.
  நன்றி

  எஸ்.ராமகிருஷ்ணன் விகடனில் சிறந்த 50 எழுத்தாளர்களின் கதைகளை ஒவ்வொன்றாக எடுத்து தன் போக்கில் ஒவ்வொரு வாரமாக எழுதி வந்தார். அப்படி ஒரு சாயல் உங்களின் இந்த தொடர்பதிவில் காண்கிறேன். படம் காட்டும் கதைதவிர உங்களி்ன் சொந்த கதையையும் சொருகித்தருவது மிகவும் இதமாகவே இருக்கிறது.

  உங்களின் trade mark நக்கல் வரிகளும் இந்த விமர்சனப்பார்வையில் வந்து விழுந்து மேலும் சுவாரஸ்யம் சேர்க்கிறது.

  ReplyDelete
 7. அருமையான விமர்சனம். நித்யகுமாரன் சொன்னது போல உங்கள் ஸ்டைலில்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner