மனிதன் கூடி வாழும் சமுக விலங்கு...எப்போது வேண்டுமாகனாலும் மிருக குணம் எட்டிபார்க்கும் அது எப்போதும் யார்க்கு வேண்டுமானாலும் நிகழும்...
உங்களுக்கு எனக்கு என்று யாரும் இதுக்கு விதிவிலக்கில்லை.. காரணம் நாம் கூடி வாழும் விலங்குகள்..சிலருக்கு 10 பர்சென்ட் சிலருக்கு50 பர்சென்ட் என மிருக குணம் வெளிபடுத்துவதில் வித்யாசம் இருக்கின்றது..மிருக குணம் வெளிப்படுத்த அடிப்படை காரணம் மண்ணாசை, பெண்ணாசை,போட்டி, பொறாமைகள் தான் காரணம்...
சென்னை 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம்.. மக்களின் தேவைகள் அதிகம் இருக்கும் நகரம்.. அதை எப்படி நிவர்த்தி செய்து காசு பார்க்கலாம் என்பதை தன்னம்பிக்கையுட்ன் இந்த படம் சொல்லுகின்றது. ஒரு தர்பூசனி பழத்தை 50ரூபாய்க்கு வாங்கி அதை துண்டாக போட்டு 100 ரூபாய்க்கு சென்னையின் ஜன நெரிசலில் விற்று பிழைக்கலாம்.. சென்னை நம்பிக்கையோடு வருபவனை ஒரு போதும் கை விடுவதில்லை...
கண் மூடித்தனமாக உழைக்கும் உழைப்புக்கு இன்று இல்லாவிட்டாலும் வேறு ஒரு சந்தர்பத்தில் அந்த பலன் கணக்கு தீர்க்கப்படும்..
==========
போராளி படத்தின் ஒன்லைன் என்ன?,
மனிதன் கூட வாழும் சமுக விலங்கு.. இதில் கொடுர விலங்குகளும் அடக்கம் அந்த கொடுர விலங்கு எண்ணங்களோடு இருக்கும் மனிதர்களோடு போராடும் ஒவ்வோரு மனிதனும் போராளியே என்பதே படத்தின் டூ லைன்...
============
போராளி படத்தின் கதை என்ன?
சசிகுமார் (இளக்குமரன்) மற்றும் அல்லரி நரேஷ் (நல்லவன்) இரண்டு பேரும் ஒரு இடத்தில் இருந்து தப்பித்து, சென்னையில் இருக்கும் நண்பன் புலிகுட்டி (கஞ்சாகருப்பு) வீட்டுக்கு வருகின்றார்கள்.. அது ஒரு ஒன்டுக்குடித்தன வீடுகள் இருக்கும் இடம்..அடுத்த வேளைக்கு சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும்...மூவரும் சொந்தமாக தொழில் செய்து வெற்றி அடையும் போது இளங்குமரன் மற்றும் நல்லவன் ரெண்டு பேரும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தம்பித்து வந்தவர்கள் என்ற உண்மை தெரிய...அவர்கள் பைத்தியமா? இல்லையா? என்பதை வெண்திரையில் பாருங்கள்..
=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
சமுத்ரக்கனி மற்றும் சசிக்குமார் கூட்டனியின் இரண்டாவது படைப்பு...
முதல் பாதியில் சென்னை ஒன்டுக்குடித்தன வாழ்க்கை பிரச்சனைகளை மனதில் நிற்கும் கேரக்டர்கள் மூலம் கலகலப்பாக சொல்லுகின்றார்கள்..
5 வது படித்த சசிக்குமார் கேரக்டர் எப்படி இவ்வளவு ஞானமாக பேசுகின்றது என்பதறக்கு நிறைய படிப்பது போலவும் வடை தின்று போடும் பேப்பரில் இருப்பதை கூட படிப்பதாக சித்தரித்து அந்த கேரக்டருக்கு லாஜிக் சேர்க்கின்றார்கள்..
தன் வீட்டு பொம்பளைங்களை நம்பாதவன்தான் பேச்சலர்களுக்கு வீடு கொடுக்கமாட்டான் என்பது போன்ற நறுக்கு தெரித்த வசனங்கள் படம் முழுக்க....
மனநல மருத்துவர் ஜெயபிராகாஷ் // உடம்புல எந்த வியாதி வந்தாலும் சகிச்சிக்கிட்டு போற நாம...மனசுல ஒரு சின்ன அழுத்தமோ டிப்பரஷோனோ வந்தா? நாம தள்ளி வச்சிதான் பார்க்கறோம்// என்பதான வசனங்கள் அருமை...
சாந்தி, காந்தி சண்டைக்கோழி தம்பதிகள், அவர்களுடைய மகள்.,ஹவுஸ்ஓனர்,குடிகாரகேரக்டர்...சினிமா டான்சர் சுவாதி, அவருடைய தங்கை மற்றும் பாட்டி என்று ஒன்டுக்குடித்தனத்தில் வாழும் கேரக்டர்கள் எல்லாம் மனதில் நிற்கின்றன..
கால் உடைந்த சுவாதி காரில் உட்கார்ந்து கொண்டு என்னை அண்டாவா நினைச்சி தூக்காம பாரதியா நினைச்சி தூக்குங்க... என்று சொல்வதும் அதற்கு சசி எனக்கு ரெண்டும் ஒன்றுதான் என்று சொல்வதும் அழகு..
முதல் பாதி கலகலப்பாக செல்லுகின்றது... இரண்டாம் பாதி கலகலப்பும் விறு விறுப்பாக சென்றாலும்... கொஞ்சம் லேக்காக இருப்பதை மறுக்க முடியாது.. பட் அப்படித்தான் கதையை சொல்ல முடியும் எனும் போது வேறு வழியில்லை.. பட்20 ஆட்கள் அடிக்க வருவதையும் சசி புரட்டி போடுவதையும் தவிர்த்து இருக்கலாம் அல்லது காட்சிகளின் லென்த்தை குறைத்து இருக்கலாம்..
இந்த படம் பார்த்திதில் இருந்து சுவாதி மேல் ஒரு பெரிய ஈர்ப்பு வந்து விடுவதை தவிர்க்க முடியவில்லை..
இரண்டாம் பாதியில் வரும் வசுந்தரா பாத்திர படைப்பு அற்புதம்.. அந்த கெத்தை ரசிக்கத்தான் வேண்டிஇருக்கின்றது...
அல்ட்ரா மார்டனான அந்த பெண்ணை தென்மேற்குபருவகாற்றுபடத்தில் இருந்து ,இது போல வேடங்களாக கொடுத்து படுத்தி எடுக்கின்றார்கள் போல...ஏம்பா கொஞ்சம் மார்டன் டிரஸ் கேரக்டர் கொடுங்கப்பா....
இரண்டாம் பாதி கிராமத்து கதையில் அந்த சண்டைகாட்சியை கம்போஸ் செய்த விதம் அற்புதம்.. பைட் மாஸ்டருக்கு நல்ல ரசனை..
ஒரு பாடல் மாண்டேஜ் காட்சியில் கேமராமேன் கதிர் நடித்து இருக்கின்றார்... மனைவிகுதுந்தையோடு பைக்கில் வரும் போது பைக் ரிப்பேர் ஆகி விட சசி ஹெல்ப் செய்வது போலான காட்சியில் நடித்து இருக்கின்றார்...
அல்லரி நரேஷ் தெலுங்கு பிசினனஸ்க்கு பயண்படுத்தி இருக்கின்றார்கள்.. நன்றாகவும் நடித்து இருக்கின்றார்..
முனைவர் ஞானசம்பந்தம் வரும் காட்சிகள் ரசிப்பு முக்கியமாக முடிவு நான்தான் எடுப்பேன் என்று சொல்லும் காட்சி ரசனை..அதே போல சசிக்குமார் நண்பர் பாத்திரம் நாங்க அப்பவே அப்புடி?? இப்ப எப்படி இருப்போம்??? என்று சொல்வது ரசிக்க வைக்கின்றது..
==================
படத்தின் டிரைலர்..
============
படக்குழுவினர் விபரம்.
Directed by Samuthirakani
Produced by M. Sasikumar
Written by Samuthirakani
Starring M. Sasikumar
Allari Naresh
Swati
Vasundhara
Music by Sundar C Babu
Cinematography S. R. Kathiir
Studio Company Productions
Release date(s) December 1, 2011[1]
Country India
Language Tamil
தியேட்டர் டிஸ்கி..
இந்த படத்தை சென்னை தேவிகருமாரி தியேட்டரில் படத்தை பார்த்தேன்.. எனக்கு பக்க்ததில் உட்கார்நது இருப்பவர் எல்லா காட்சியையும் நக்கல் விட்டுக்கொண்டே பார்த்தார்.. மொக்கை படம் என்று கமென்ட் அடித்தார்... அவர் நிறைய உலகபடம் பார்த்த உதவி இயக்குனர் போல தன்னை காட்டிக்கொண்டார்.... ஆனால் தியேட்டரில் ஆடியன்ஸ் நிறைய காட்சிகளுக்கு ரசித்து நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்து படத்தை பார்த்தார்கள்...
ஒரு நாலு இன்டலெக்சுவலுக்கு எல்லாம் தமிழ் படத்தை எடுக்க முடியாது அல்லவா? தியேட்டா ஓகே.. பட்..பிலிமில் படத்தை ஓட்டினார்கள்..இரண்டாம் பாதி பிளாஷ் பேக் காட்சிகள் பலது அவுட்டில் தெரிந்தன....கியூப்பில் படங்களை பார்த்து விட்டு, பிலிமில் படம் பார்க்கவே பிடிக்கவில்லை...
==========
பைனல்கிக்..
இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்.. சமுத்திரகனி சசிக்குமார் கூட்டனிக்கு ஹேட்ஸ்ஆப்...பெரிய மாஸ் ஹீரோக்கள் ஆக்ஷன் பிலிம் என்ற போர்வையில் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருக்கும் போது இது போலான சமுக விழிப்புஉணர்வு படங்களை கொஞ்சம் சொதப்பலோடு இருந்தாலும், அதனை பெரிது படுத்தாமல் வரவேற்க்கலாம் என்பது என் எண்ணம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
விமர்சனம் ரொம்ப அருமை சார்..ஆனால் படம்தான் இன்னும் பார்க்கவில்லை.விரைவில் பார்க்க வேண்டும்.
ReplyDeleteஒரு படத்தில் கமர்சியல் காப்ரமைசுகளோடு சமுகத்தின் பிரச்சனைகளான, மனஅழுத்தம், தன்னம்பிக்கை, போன்றவற்றை போகின்ற போகிக்கில் அழுத்தமாக பதிவு செய்த இந்த படத்தை பாராட்டியே ஆக வேண்டும்..
ReplyDeletesorry to add request in this sir... i am eagerly wsiting for review of dirty oicture from yours point of view .. will u consider this
ReplyDelete// பட்20 ஆட்கள் அடிக்க வருவதையும் சசி புரட்டி போடுவதையும் தவிர்த்து இருக்கலாம் அல்லது காட்சிகளின் லென்த்தை குறைத்து இருக்கலாம்..//
ReplyDelete//ஒரு படத்தில் கமர்சியல் காப்ரமைசுகளோடு சமுகத்தின் பிரச்சனைகளான, மனஅழுத்தம், தன்னம்பிக்கை, போன்றவற்றை போகின்ற போகிக்கில் அழுத்தமாக பதிவு செய்த இந்த படத்தை பாராட்டியே ஆக வேண்டும்..//
ஜாக்கி அருமையான விமர்சனம், படத்தை ரசித்துப் பார்த்தேன்.நீங்கள் சுட்டிக் காட்டிய விடயங்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு விடயம், படம் பார்க்கும் போது என் மனத்திலும் பட்டது.
அடுத்து ஊரில் ஒரு பழமொழி கூறுவார்கள் "கண்டது கற்றவன் பண்டிதனாவான்"-எல்லாவற்றையும் வாசிப்போர்
எதையாவது பெறுவர், அவர்களில் திறமை இருக்கும்- அந்தக் காட்சியமைப்பை நான் ரசித்தேன்.
இவர்கள் கூட்டணியில் வந்த படத்தின் இசைத் தாக்கத்தைத் தவிர்த்திருக்கலாமென எனக்குப் படுகிறது.
இது போன்ற படங்கள் வரவேற்க்கப்படவேண்டும்.
சிலோன் பரட்டா - இப்படி இருக்கா என என் மனைவி கேட்டார். இலங்கையில் அந்த வசனம் வெட்டலாம்.
ஆனால் அழகான காட்சி
மொத்தத்தில் படத்தை மிக ரசித்தேன்.
All The Best For Future Film In Message. I Like This Film Totaly.
ReplyDelete