முல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….




டேம் 999 என்ற ஆங்கில திரைபடத்தை தமிழகத்தில் தடை செய்த உடனேயே நீரு பூத்த நெருப்பாக இருந்த வந்த முல்லை பெரியாறு அணை பிரச்சனை...
இன்று தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கின்றது..

இரண்டு பக்க எல்லையோரை மாநிலமக்களும் பதட்டத்தில் இருக்கின்றார்கள்...தமிழ்நாட்டை பொறுத்தவரை அணையால் பயண் பெரும் ஐந்து மாவட்ட மக்கள் மட்டும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.. மற்ற மாவட்ட மக்களை பொறுத்தவரை அது ஒரு செய்தியாகவே பார்க்கபடுகின்றது...

இன்னும் பலருக்கு அணையின் உண்மைதன்மையும் அதன் அரசியலும் தெரிந்த இருக்க நியாயம் இல்லை....

அணையின் பலத்தை பற்றி கேரளா மீடியாக்கள் அவதூறு செய்திகளை தொடர்ந்து பொய் பரப்புரை செய்து வருகின்றது...யூடியூப் வீடியோக்களில் அணை  உடைவது போலான கிராப்பிக்ஸ் காட்சிகளை எல்லாம் கிரியேட் செய்து தங்களின் பொய்யான வாதத்துக்கு பலம் சேர்ந்துக்கொண்டு இருக்கின்றன...

 உச்சநீதிமன்றம்  ஆய்ந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று சொல்லியும் கூட கேரள அரசாங்கம் அதுக்கு செவிசாய்கவில்லை...இப்போது அவர்கள் அணையையே இடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள்... புதிய அணை கட்டி அவர்கள் கட்டுப்பாட்டில் நீர் இருக்கும் பட்சத்தில்நாம் வௌக்கெண்ணையும் கையுமாகத்தான் அலைய நேரிட வேண்டும்... 

என்பதை நான் கீழே இணைத்து இருக்கும் வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்...

இடுக்கி அணையில் மின் உற்பத்திக்கு பெரும் இடைஞ்சலாக இந்த அணை இருப்பதாலேயே  பெரியார் அணை பற்றிய பொய் பரப்புரைகளை தொடர்ந்து கேரளாவும் அதன் அரசியல் கட்சிகளும் போங்கு அரசியல் செய்து வருகின்றன..அங்கு இருக்கும் மக்களையும் மூளை சலவை செய்து  வருகின்றார்கள்..

இன்னும் நம் தமிழகத்தில் இருக்கும் பலருக்கு 100ஆண்டுக்கு மேல் இருக்கும் அணை எப்பபடி பாதுகாப்பானதாக இருக்க முடியும்? என்ற கேள்விகளை  வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் இருந்தே பல கேள்விகள் முன் வைக்க படுகின்றன..

அவர்களுக்கு கீழே இருக்கும் இந்த வீடியோக்கள் பதில் சொல்லும்....மிக தெளிவான வாதத்தை முன் வைக்கும் இந்த வீடியோவை தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் பார்க்கவேண்டியது அவசியமாகின்றது...நீங்களும் நண்பர்களுக்கு பார்க்க  சொல்லி அறிவுறுத்துங்கள்.. இந்த வீடியோவை முடிந்தால் ரீஷேர் செய்யுங்கள்..





ஆங்கில  சப் டைட்டிலுடன்  முதல்பாகம்.....




ஆங்கில சப் ட்டிலுடன் இரண்டாம் பாகம்..




 இந்த வீடியோவை சரியான தரவுகளுடன் வரிசைபடுத்திய தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தினருக்கும் என் நன்றிகள்..






இன்னும் பெரியாறு அணை   பற்றி விரிவாய் சில பதிவுகள்.. விரைவில்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

12 comments:

  1. enna sonnalum avargal anai kattiye theeruvaargal adhil evvidha iyyappadum vendam kaaranam nmmudiya makkalum nammudiya arasiyavadhigalum indha nigazhvu ennai poruththavarai marakkakoodadhu aanaal nammavar marandhuviduvar adhudhan thazizhan
    nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள பதிவு, தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அண்ணே சரி்யான பதிவு.............நன்றி

    ReplyDelete
  4. TELECAST THESE VIDEO'S THRU' ALL TAMIL MEDIAS FREQUENTLY TO REACH ALL OVER TAMILNADU

    ReplyDelete
  5. nice post at the correct time jackie anna

    ReplyDelete
  6. ”நீங்க சொல்லுரதெல்லாம் சரிதான் ஆனால் அணைய இடிக்கணும். எங்க காசுலே புது அணை கட்டுறோம்” அப்படீன்னு சொல்லுரவன்கிட்ட என்ன பேசுறது.. இவனுங்க நிஜமா ஒண்ணும் தெரியாம தூங்குறவன் கிடையாது..ஒரு வீடியோவை காமிச்சதும் மனசுமாற..எல்லாம் தூங்குறமாதிரி நடிக்கிறாய்ங்க.. எல்லாம் அடிமனசு வன்மம்..100 % படிச்சு என்னத்தை கிழிச்சாய்ங்களோ?

    142 அடிக்கு தண்ணி தேக்கினால் இப்ப புதுசா பல பணமுதலாளிகள் கட்டிய கட்டிடத்துக்கு ஆபத்து.. அவர்கள்தான் எல்லாம் உசுப்பேத்துறாங்க...

    இவங்களுக்கெல்லாம் சப்பாணியா இருக்கிற தமிழன் கோபாலகிருஷ்ணனா மாறி நாளு அரை செவுட்டோட விட்டாதான் மூடிக்கிட்டு இருப்பானுங்க போல..

    ReplyDelete
  7. ”நீங்க சொல்லுரதெல்லாம் சரிதான் ஆனால் அணைய இடிக்கணும். எங்க காசுலே புது அணை கட்டுறோம்” அப்படீன்னு சொல்லுரவன்கிட்ட என்ன பேசுறது.. இவனுங்க நிஜமா ஒண்ணும் தெரியாம தூங்குறவன் கிடையாது..ஒரு வீடியோவை காமிச்சதும் மனசுமாற..எல்லாம் தூங்குறமாதிரி நடிக்கிறாய்ங்க.. எல்லாம் அடிமனசு வன்மம்..100 % படிச்சு என்னத்தை கிழிச்சாய்ங்களோ?

    தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுத்தா புண்ணியம்னு சொல்லிச்சொல்லி நம்மள வளத்தாங்க..இன்னைக்கு கடைசியில தண்ணிக்கு எல்லார்கிட்டையும் பிச்சை எடுக்கிறோம்..

    142 அடிக்கு தண்ணி தேக்கினால் இப்ப புதுசா பல பணமுதலாளிகள் கட்டிய கட்டிடத்துக்கு ஆபத்து.. அவர்கள்தான் எல்லாம் உசுப்பேத்துறாங்க...

    இன்றைக்கு கம்யூனிஸ்ட்டுகள் அறிக்கை ஒரு பெரிய காமெடி.. ஏதோ நம்ம மலையாளிகளை குடும்பத்தோடு தாக்குகிறோம் என்று அறிக்கைவிட்டிருக்கிறார்கள்..காங்கிரஸால் இந்தியாவுக்கு பிரயோஜனமில்லாட்டியும் அமெரிக்காவுக்காவது உண்டு..ஆனால் இவனுகளால எதுவுமே கிடையாது..

    இவங்களுக்கெல்லாம் சப்பாணியா இருக்கிற தமிழன் கோபாலகிருஷ்ணனா மாறி நாலு அரை செவுட்டோட விட்டாதான் மூடிக்கிட்டு இருப்பானுங்க போல...

    ReplyDelete
  8. Thank you very Much and appreciate your post on mullai periyar. awaiting your next post.

    ReplyDelete
  9. Anne nalla pathivu. India vallarasaavathai thadukka Indiane pothum. Yenna kodumai sir. I think Mayan calendar is true.

    ReplyDelete
  10. சுப்பர் மாம்மு

    ReplyDelete
  11. hey periyaru river tamilnadil than urpathiagirathu athu mullai attudan cherumpothuthan mullaiperiyaru riveragirathu nam athayea thaduthuvittal pl enggs&tamilnadu govt pl think that is matti yosi

    ReplyDelete
  12. அணையின் உறுதி ஒன்றுதான் குறிக்கோள் என்றால் அந்த அணையை இடித்துவிட்டு (அணையின் உறுதியில் நமக்கு சந்தேகம் கிடையாது) புதிய அணையை அதே இடத்தில் கட்டிக்கொள்ளவும் பழைய ஒப்பந்தம் தொடரவும் அனுமதிக்குமா கேரளா அரசு?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner