பெட்ரோல் விலை நாளுக்கு நாள்... இப்படி உயர்ந்து போகும் என்று நான் வாகனம் வாங்கும் போது கனவிலும் நினைத்து கூட பார்த்தது இல்லை...
இருபத்திஐந்து ரூபாய்கு பெட்ரோல் போட்டு வாகனம் ஓட்டிய கடந்த கால நினைவுகள் எனக்கு அயர்சியை தருகின்றன....எப்படி ஊரில் சொந்த வீட்டில் இருந்தவன்.. சென்னையில் வாடகை வீட்டில் இருந்துக்கொண்டு மாதமாதம் வாடகை பணம் , ஆறாயிரம் ஏழாயிரம் என்று சொளையாக பணத்தை எண்ணிக்கொடுக்கும் போது எப்படி வயிறு எரியுமோ? அப்படித்தான் இப்போது எல்லாம் பெட்ரோல் போடும் போது அதன் விலையேற்றத்தை பார்த்து வயிறு எரிகின்றது..
ஒரு நண்பர் சொன்னார்.. இந்த டென்ஷனில் இருந்து விடுபட வேண்டும் என்றால் 300ரூபாய்,200ரூபாய் என்று பெட்ரோல் போட்டால் ஒரளவுக்கு இந்த டென்ஷன் குறையும் என்று சொன்னார்.. அது நல்ல பலனையும் கொடுக்கின்றது...
பெட்ரோல் எழுபத்தி மூன்று வரை ஏற்றி இப்போதுதான் முதல் முறையாக, பெட்ரோல் விலை ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று எண்ணெய் நிறுவனங்கள் குறைந்து வருகின்றன....
கண்டிப்பா இந்த மாற்றத்துக்கு நிச்சயம் பாரதீய ஜனதா கட்சிக்கு நன்றி சொல்ல வேண்டும்... அவர்கள்தான் நாங்கள் ஆட்சியில் இருந்தால் பெட்ரோல் விலையை முப்பத்தி ஐந்து ரூபாயக்கு கொடுப்போம் என்று தொலைகாட்சி பேட்டிகளில் சொல்ல,பயந்து போன எண்ணெய் நிறுவனங்கள்...கச்சா எண்ணெய் குறைப்பு காரணமாக பெட்ரோல் விலையை முழம் அளவுக்கு ஏற்றி விட்டு ஜான் ஆளவுக்கு குறைக்கின்றோம் என்று கூப்பாடு போடுகின்றன...
ஆனால் எழுபது ரூபாய் கொடுத்து பெட்ரோல் போடுகின்றோம்..அந்த பெட்ரோல் சரியான அளவில் இருக்கின்றதா?என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்....
கிண்டியில் இருந்து நங்கநல்லூர் நுழையும் இடத்தில் ரைட் சைடில் இருக்கும் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் போட போனால் பெட்ரோல் பைப்பை நமது பெட்ரோல் டேங்கில் வைத்துவிட்டு நமது கவனத்தை திசை திருப்ப பேச்சு கொடுப்பார்கள்.. ஏற்கனவே ஒரு லிட்டர் முன்னால் பெட்ரோல் போட்ட வாகன ஓட்டிக்கு போட்டதில் இருந்து, நமக்கு போடுவார்கள்.. மீட்டர் பாருங்க என்று எல்லாம் சொல்லமாட்டடார்கள்..
நாம் மூன்று லிட்டர் என்றால் இரண்டு லிட்டர் எண்ணெய்தான் கிடைக்கும்.. இதுவே ஒரு விட்டர் என்றால் பேச்சு கொடுக்காமல் ரீஸ்டார்ட் செய்து ஒரு லிட்டர் போடுவார்கள்.. இது போல ஒரு முறை நான் பல்பு வாங்கி இருக்கின்றேன்... அதன் பிறகு அந்த பெட்ரோல் பங்கு பக்கம் நான் திரும்பியதே இல்லை...
பல பெட்ரோல் பங்குகளில் மீட்டரில் சூடு.. பெட்ரோல் போடும் பையன்களின் தகிடுதத்தம் என்று சரியான அளவில் பெட்ரோல் எனக்கு கிடைத்ததே இல்லை...
ஆனால் கிண்டியில் மேம்பாலத்தில் இருந்து பட்ரோடு போகும் வழியில் லெப்ட் சைடில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு அளவை சரி பார்த்த போது அளவு மிகச்சரியாக இருந்தது...அது பாரத் பெட்ரோலியம் பங்கு...அவர்கள் விளம்பரத்தில் வைத்து இருப்பது போலவே பியூர் பார் ஷுர்....
அப்படியே அதே வழியில் ராமபுரம் டிஎல்எப்பை தாண்டி லேப்டில் ஒரு புது பங்கு முகலிவாக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு முன் புதிதாய் இப்போதுதான் பாரத் பெட்ரோலியம் பங்கு திறந்து இருக்கின்றார்கள்.. அங்கேயும் பெட்ரோல் போட்டு பார்த்தேன்.. அளவு சரியாக இருந்தது அதே வழியில் அப்படியே போனால் போருர் பூந்தமல்லி சாலையில் அய்யப்ன்தாங்கல் பஸ் டெப்போவை தாண்டினால் லெப்ட்டில் ஒரு பாரத் பெட்ரோலியம் பங்கு இருக்கின்றது.. அங்கேயும் அளவு சரியாக இருக்கின்றது..
அதனால் சென்னையில் நான் தற்போது இந்த மூன்று பெட்ரோல் பங்குகளில் மட்டும் பெட்ரோல் போடுகின்றேன்..
சென்னையில் நானும் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட்டு பார்த்து விட்டேன் இங்கு மட்டுமே எனக்கு தெரிந்து அளவு சரியாக இருந்தது... நீங்கள் வேண்டுமானால் செக் செய்து பாருங்கள்..மற்ற ஏரியாக்களிலும் மற்ற ஊர்களிலும் பெட்ரோல் அளவு இந்த பங்குகளில் எப்படி என்று தெரியவில்லை?? தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை பின்னுட்டத்தில் பகிருங்கள்.. மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்...
மயக்கம் என்ன படம் முடிந்து, முகலிவாக்கம் டிஎல்எப் பக்கத்தில் இருக்கும் பாரத் பெட்ரோலிய பங்கில் இரவு பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்த போது, அங்கு வேலை பார்க்கும் இரவு நேர ஊழியரிடம் சொன்னேன்.. உங்கள் பங்கில் மட்டும்தான் பெட்ரோல் அளவு சரியாக இருக்கின்றது என்று .....
சார்..அதுக்கு ஒரே காரணம்.. எங்க எல்லா பங்கிலும் வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் மாசம் 5000 சம்பளம் தினமும் பேட்டா 200ரூபாய் கொடுத்துடறாங்க...அதனால் வேலை செய்யறவங்க யாரும் திருட்டுதனம் பண்ணறதுஇல்லை... தொழிலாளிக்கு சம்பளம் அதிகம் கொடுக்கும் பெட்ரோல் பங்கு பாரத் பெட்ரோலியம் பங்குதான் என்று பெருமையாக சொன்னார்...
எழுபது ரூபாய் ஒரு லிட்டருக்கு செலவிடுகின்றோம்.. அளவு சரியாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதில் என்ன தவறு??
அளவு சரியில்லாமல் பெட்ரோல் போடும் பங்குகளை நான் புறக்கணிக்கின்றேன்..இந்த அவசர உலகில் அதுதானே ஒரு சாமனியனாக நம்மால் செய்ய முடியும்..?? என்ன நான் சொல்வது சரிதானே...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
//இந்த அவசர உலகில் அதுதானே ஒரு சாமனியனாக நம்மால் செய்ய முடியும்..?? என்ன நான் சொல்வது சரிதானே...
ReplyDeleteCorrectu...
சரிதான் சேகர்! இந்த மாதிரி சில பங்க்குகளின் ஏமாற்றைக் கண்டுபிடித்தபின் நானும் இப்போதெல்லாம் பாரத்தில் தான் பெட்ரோல் போட்டு வருகிறேன். ராஜ்பவன் தாண்டி வேளச்சேரி சந்திப்பு ரோடு வருமிடத்தில் ஒன்று இருக்கிறது. அங்கேயும் அளவு சரியாகவே இருக்கிறது. நல்ல விழிப்புணர்வுத் தகவல் பகிர்ந்திருக்கிறீர்கள்...
ReplyDeleteடி.எல்.எப் எதிரே இருக்கும் பங்கில் பார்த்து கவனமாக இருக்கவும். இரண்டு முறை நானே கண்ணெதிரில் ஜாக்கி சொன்னது போல 100ல் இருந்து 200க்கு போட்டு 200 ரூபாய் வாங்கி இருக்கிறார்கள். லாவகமாக திசை திருப்புவார்கள், ஏதேனும் சொல்லி.
ReplyDeleteஇருவர் கூட்டு சதியும் இருக்கும். ஒருவர் பெட்ரோல் போடுவார் மற்றொருவர் காசு கொடுங்க என பேச்சு கொடுப்பார்.
நந்தம்பாக்கத்தில் இருந்து மனப்பாக்கம் செல்லும் வழியில் இருக்கும் பங்கிலும் இதே நிலைமை. அவசரம் என்றால் 50 ரூபாய்க்கு போட்டு எஸ்கேப் ஆகுங்கள்.
wat u said is reaaly true.. as far as i am concerned bharat petroleum branches are good.. other pertrol bunks are looting from us.. i had a similar experience in egmore also...
ReplyDelete1. Try to Purchase the petrol in 1 or 2 liters pet bottle then pour it in petrol tank.It is useful to get 100% correct quantity of petrol.
ReplyDeleteBHARATH PETROLEUM OWNED PETROL BUNKS WERE ALWAYS PERFECT IN SERVICE AND MEASURE. THE NO ONE IN SALES BY BHRATH PETROLEUM OUTLET IS IN MUGAPPAIR NEAR D A V SCHOOL.
ReplyDeletepadhivu nandraga irundhdhadhu nandri
ReplyDeletevaazhththukkal
surendran
surendranath1973@gmail.com
இங்கு மதுரையிலும் பாரத் பெட்ரோலியம் சர்வீஸ் ஓகே...
ReplyDeleteபெங்களூரில் ஷெல் பெ ட்ரோல் பங்குகளில் பெட்ரோலின் அளவும் தரமும் சரியாக இருக்கின்றது. கூடுதல் மைலேஜூம் கிடைக்கிறது.
ReplyDeleteIn pondicherry ashram petrol bunk is the best
ReplyDeleteஇங்க பெங்களூர் லே ரொம்ப நாளாவே இப்பிடி நடக்குது.. ஒரு தடவை, 2 லிட்டர் பெட்ரோல் போடா சொன்ன... மீட்டர் அ மிடில் லே இருந்ந்து ஸ்டார்ட் பண்ணினான்.. இன்னொருத்தன் பேச்சு குடுத்து நம்மள divert பண்றான். நான் சும்மா இருந்து விட்டு.. கடைசியில்... அவன் கிட்ட சொன்னேன்.. நீ சரியாய் பெட்ரோல் போடலே.. வேணம்ன.. இப்போவே tank ஓபன் பண்ணி செக் பண்ணலாம் னு. பெரிய சண்டை ஆனது.. அளவு சரியாய் இல்லேன போலீஸ் லே கம்ப்ளைன்ட் பண்ணுவேன் னு சொன்னதும்... விட்டு போன அளவ குடுத்தான்... இந்த பாழா போன அரசியல் வியாதிங்க கிட்டே படுற பாடு போதாதுன்னு... இப்பிடி வேற புதுசு புதுசா ஏமாத்துறாங்க... ஜனங்களே.. ஜாக்கிரதை
ReplyDeleteநன்றி நண்பர்களே... தகவ்ல்களுக்கு... நான்தான் பல்பு வர்ங்கினேன் என்று பாத்தால் என்னை போல பல பேர் வாங்கி இருக்கின்றார்கள்...
ReplyDeleteO.R.B Raja - 1. T.Nagar - தியாகராயா ரோடு (தண்டபாணி சந்திப்பில்) இருக்கும் பங்கும் 1000-க்கு போட சொன்னால், 200-க்கு போடுவானுங்க, ஒருத்தன் நம்மகிட்ட பேச்சு குடுப்பான். அப்புறம் தெரியாதமாதிரி, 1000-க்கா கேட்டீங்கன்னுட்டு, 800-க்கு போடுறேன், சாரி சார்ன்னுட்டு, சீரோ ரீசெட் பண்ணாம 800க்கு போடுவான். ஆக, மொத்தமே 800-க்குதான் போடுவான்.
ReplyDelete2. தரமணி லிங்க் ரோட்டில் உள்ள ஐபிப்பி பங்கிலும் இதேதான் செய்வானுங்க.
ரெண்டு தடவையும் ஒரே மாதிரி ஏமாந்துட்டு, அப்புறம்தான் கண்டுபிடிச்சேன். ரெண்டு இடத்துக்கும் போறதில்ல.
Kesava Bashyam VN - // கிண்டியில் இருந்து நங்கநல்லூர் நுழையும் இடத்தில் ரைட் சைடில் இருக்கும் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் போட போனால் பெட்ரோல் பைப்பை நமது பெட்ரோல் டேங்கில் வைத்துவிட்டு நமது கவனத்தை திசை திருப்ப பேச்சு கொடுப்பார்கள்.. ஏற்கனவே ஒரு லிட்டர் முன்னால் பெட்ரோல் போட்ட வாகன ஓட்டிக்கு போட்டதில் இருந்து, நமக்கு போடுவார்கள்.. மீட்டர் பாருங்க என்று எல்லாம் சொல்லமாட்டடார்கள்..//
ReplyDeleteஅடையார் மலர் மருத்துவமனை arugil மற்றும் , GST ரோடில் (பழவந்தாங்கல் சுரங்கபதை திருப்பத்தில் ) இருக்கும் பங்கில் ஏமாந்தவன் நான் . எல்லாரும் ஒரே மாதிரி தான் இருக்காங்க
எங்கள் ஊரில் பாரத் பெட்ரோலியத்தில் மட்டும் அளவு சரியாக இருக்கும். பகிர்விற்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteஇது அடிக்கடி பெங்களுரில் நடக்கும் விஷயம்.தேவையேயில்லாமல் நம்மிடம் பேச்சு கொடுப்பார்கள்.காசா கார்டா என்று கேட்பார்கள்.ஆரம்பத்தில் நான் இரண்டு இடத்தில் எமாந்து போனேன்.அதற்கு அப்புறம் அவர்கள் என்ன கேட்டாலும் நான் செவிடு போல நின்று கொண்டு மீட்டரையே பார்ப்பேன்.
பெட்ரோல் போட்டு முடிந்தவுடன் தான் என் கண்கள் மீட்டரை விட்டு அகலும்.
பொதுவாக இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்குகளை தவிர்ப்பது நல்லது. பெடரோல் போடும் முன் இன்னொருத்தன் வந்து காசு கேட்பான் அப்போது 0 செட் செய்யாமலேயே முன்னாடி அடித்தவன் விட்டதிலிருந்து அடித்து அதற்கும் சேர்த்து காசு கறப்பானுக.
ReplyDeleteசென்னையிலிருந்தபோது அடையாறு LB ரோட்டிலிருந்த Indian oil பங்க்கில்தான் பெடரோல் போடுவேன், ஏன்னா அங்குதான் பெடரோல் சுத்தாமாயிருக்கும், ஆனால் நிறைய ஏமாத்துவானுக. அவனுக டெக்னிக் எல்லாம் எனக்கு அத்துபடி என்பதால் பிரச்சனையில்லை. ஒருநாள் கைனடிக் நோவா காலி டேங்க் நிறப்ப சொன்னேன். அவனுக வழக்கம் போல் வந்து பேச்சு கொடுத்தானுக,நானும் கண்டுக்காமல் டிஸ்ட்ரோக்ட் ஆனவன் போல நடித்தேன். பெடரோல் போட்ட பின் 8 லிட்டர் போட்டதாக காசு கேட்டான். நோவாவின் டேங்க் கொள்ளவு 6 லி மட்டுமே!
இன்னொரு போனஸ் தகவல்; மனைவி அல்லது காதலியுடன் பங்சர் போட போகாதீர்கள். உடனே டியூப்-மெட்டல் வால்வு ஸ்டம் இணைப்பு அறுந்துவிட்டது எனச் சொல்லி இன்னொரு டியூப் மாத்த வைத்துவிடுவார்கள். எனது அம்மணியுடன் எங்காவது போய் பங்சரானால் உடனே அம்மணியை ஒரு பஸ் ஸ்டாபில் விட்டுவிட்டு தனியாகவே பங்சர் கடைக்கு போவேன். சென்னை தமிழனின் நேர்மையை அடிச்சிக்க முடியாது
Jackie,
ReplyDeleteBP is the best as far as I know. I went to buy petrol for almost all of the brands (HP, Ind Oil, BP). BP is known to be good in service and better compared to others. Shell(in velachery) is little expensive but it's the only place where I have seen greeting in Tamil and the workers say need not to give money for Air.
informative post.
ReplyDeleteஏமாற்ற என்ன ஒரு வழி!
நல்ல விழிப்புணர்வு பதிவு.
ReplyDeleteஅடையாறு இந்திராநகர் Indianoil ல செம fraud நிறைய வாட்டி தெரியாம ஏமாந்துட்டேன். காசு வாங்கிறவன் இந்த பக்கமா வருவான். அதுக்குள்ளே பெட்ரோல் போடுறவன் fraud பண்ணிருவான். இந்த pump ல போன எல்லோரும் ஒரு வாட்டியாது ஏமாந்திருப்பான். அது மாதிரி srp tools ஜங்ஷன் பக்கத்தில omr ரோட்ல indianoil ல 2 lt பெட்ரோல் போட்டு reserve ல இருந்து கூட மாறல்ல. 1 km தூரம் போயி வீட்ல பெட்ரோல் drain பண்ணி பார்த்தா மொத்தமா 1 லட் கூட இல்ல.
Jackie, In Chennai SHELL petrol is the best, they will treat the customers very well, quality is very good, u will feel the mileage difference and smoothness in driving.....
ReplyDeleteWhy don't you mention SHELL in porur.. I had been filling petrol there from 2007 to 2010 till i was in chennai. Their quality is incomparable though it is 3rs extra. they have a high standards. try there and check how the ride quality is improved.In CBE it is not different but in south duts, it is far worse.
ReplyDeleteThe first common trick that the petrol attendants use is to engage you with a small talk while setting the meter to level zero in fact you might not notice if the fuel started from the zero level. For example, he might ask is you will pay on card or cash or ask you for some change and this is when you need to get all alert and make sure to see the meter ticking from zero level.
ReplyDeleteThe other trick is that the attendant might not reset the meter once the previous customer who has filled just 1 litre of fuel has left and you end up getting just one litre when you actually asked for two. Distraction is the commonly used weapon by the attendants and the only solution for this is pretty simple- you need to have the presence of mind whatever be the situation you might be in a hurry but remember you have let the attendant take full advantage and he continues to be what he is, happily cheating customers like you for the rest of his life.
Most of the times two guys try to cheat you- one guy has the fuel nozzle ready and the other guy comes from the opposite direction to keep you occupied in a talk for change, card, oil or whatsoever.
The other trick is the fuel may start flowing from zero but stops half way through to what you had actually asked for, you need to check for such stoppage too, as once the fuel gets flowing it should happen continuously until your requirement is fulfilled.
பல்ப் போடுபவர்கள் என்று இதுக்கே தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம் போல இருக்கே!! மிகவும் பயனுள்ள பதிவு!! என்னுடைய அனுபவத்தில், சென்னையில் உள்ளகரத்தில்(வானுவம்பேட்டை டு மடிப்பாக்கம் செல்லும்போது இடது பக்கம் உள்ள) பம்பில் சரியான அளவு!! கோவை என்றால், நஞ்சப்பா ரோடில் உள்ள மகாலிங்கம்- உக்கடம் ஏ பி டி, அப்புறம் டி பி ரோடில் அண்ணமார் ஏஜன்சி........
ReplyDeleteThe same incident happen to me also . ..
ReplyDelete