ரேஷன் கடைக்கு முதல் வாரத்தில் போனால்தான் எல்லா பொருட்களும் கிடைக்கும்..
ஆனால் சர்க்கரை அரிசி தாரளமாக கிடைப்பது போல் இன்று வரை பருப்பு வகைகள் சரியா கிடைத்து இல்லை..நேற்று தேதி ஆறு என்பதால் அடித்து பிடித்து எங்கள் கொளப்பாக்கம் ரேஷன் கடைக்கு சென்றேன்.. ரோட்டில் போகும் போது மூன்று நான்கு பேர் மட்டும் நின்று கொண்டு இருந்த காரணத்தால் எனக்கு ஒரே சந்தோஷம்...சீக்கிரம் பொருட்கள் வாங்கி கொண்டு சென்று விடலாம் என்று கனவு கண்டேன்.. ஒன்றரைமணி நேரம் ஆகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..
முன்பு போல் காலைவேளைகளில் அதிகமான பெண்களை ரேஷன் கடைகளில் இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை..மாலை மூன்று மணிக்கு மேல்தான் பெண்கள் கூட்டம் அதிகம் வருகின்றது.. சிம்பிள் காரணம்தான்... சன்டிவி நெடுந்தொடர்கள் மிஸ் பண்ணக்கூடாது என்பதுதான்
ஆனால் என் நினைப்பில் மண்.. எனது வாகனம் உள்ளே நுழையும் போதே வேறு ஒரு சைரன் வாகனம் வந்ததை நான் சரியாக கவனிக்கவில்லை.. நான் நேராக போய் வரிசையில் நின்றேன்...இரண்டு அல்லக்கைகள் ஒடி வந்தார்கள். வழி ஏற்படுத்தி கொடுத்தார்கள்.. கூட்டமே இல்லை ஆனாலும் ஒரு பில்டப்பை கொடுத்தார்கள்... ஆனால் அமைச்சர் 6666 என்ற காரில் இருந்து ஆர்பாட்டம் இல்லாமல் இறங்கி நடந்து வந்தார்.. அவர் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ ...
அமைச்சரை பார்த்த உடன் எங்கள் ஊர் கொளப்பாக்கம் ரேஷன் கடைகாரர் கஜேந்திரன் பதட்டமானார்..அமைச்சர் ரேஷன் பொருட்களை செக் செய்ய வந்து இருக்கின்றார் என்றால் யாருக்குதான் பதட்டம் இருக்காது?? காலையில் யார் முகத்தில் முழித்தோம் என்று கண்டிப்பாக ரேஷன் கடைகாரர் நினைத்து இருப்பார்..
ஒரு அதிகாரிகள் கூட்டம்...ரேஷன் அரிசி மூட்டைகளையும், பிரித்த மூட்டையில் இருக்கும் எடை, அரிசி பில் போட்ட எடை போன்றவற்றை வைத்து கணக்கு எடுத்துக்கொண்டு இருந்தார்கள்..
பாமாயில் பாக்கெட் 970 என்று ஸ்டாக் போர்டில் எழுதி இருந்தார்... கடைக்காரர்... அதை ஒரு அதிகாரி கும்பல் எண்ணிக்கொண்டு இருந்தது...
அமைச்சர் அங்கு இருந்த பெண்மணிகளிடம்... அம்மா உங்களுக்கு கொடுக்கும் இலவச அரிசி தரமா இருக்கனும்னு எங்க கிட்ட சொல்லி அனுப்பி இருக்கின்றார்... அதனால் அரிசியில் எதாவது பிரச்சனை இருந்தா சொல்லுங்க? என்று கேள்விகளை பில் போட்டு நின்று கொண்டு இருந்த சில பெண்மணிகளிடம் வீசினார்.. அவர்கள் தரமாக இருக்கின்றன.. ஆனால் சில நேரங்களில் கருப்பு அரிசி வருகின்றது என்று சொல்ல...
கடைக்காரரிடம் அப்படி அரிசி வந்தால் பொமக்களுக்கு வினியோகிக்க வேண்டாம் என்றும், அப்படி மீறி வந்தால் எனக்கு தகவல் கொடுக்கவும் என்று சொன்னது மட்டும் அல்லாமல் தனது செல்நம்பரையும் கடைக்காரரிடம் கொடுத்தார்...
வேறு எதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள் என்றார் அமைச்சர்..நான் முன்பு இருந்த கடைக்காரரை விட இவர் சரியான நேரத்தில் கடை திறக்கின்றார் என்றும், சப்போஸ் கடை வேலை விஷயமாக வெளியே போனாலும், போர்டில் எழுதி போட்டு விட்டு செல்கின்றார் என்று சொன்னேன்..
எனக்கு பக்கத்தில் ஒரு பையன் நின்று கொண்டு இருக்க.. தம்பி கடைகாரர் கேட்கும் பொருட்களை கொடுக்கின்றாரா? என்று கேள்வி கேட்க...
அந்த பையன்..
ஐயா சரியா பொருட்கள் கொடுக்கறார்...
சரியான நேரத்துக்கு கடை திறக்கின்றார்... என்று சொல்லிக்கொண்டே கையை கட்டிக்கொண்டான்..
உடனே அமைச்சர் அவன் கை கட்டி இருப்பதை தனது கையால் பிரித்து விட்டு, நேராக நின்று பதில் சொல்லுங்க அது போதும் என்றார்..
உங்க பேர் என்ன தம்பி-?
ஜான்சன்..
எத்தனாவது படிக்கறிங்க??
பத்தாவது ஐயா...
என் இன்னைக்கு பள்ளிக்கு போகலையா??
உடம்பு சரியில்லை அதனால் போகலை...
உங்க வீட்டுல எத்தனை பேர்??
அப்பா அம்மா தம்பி..மட்டும்தாங்க...
சரி நல்லா படிக்கனும் என்று அமைச்சர் ஜான்சனுக்கு கை கொடுத்தார்...
பாமாயில் பாக்கெட்டுகள் சரியாக இருக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்க
செக் லிஸ்ட் படிவத்தில்... ஸ்டாக் கரெக்டாக இருக்கின்றது என்று எழுதி தனது கையெழுத்தை போட்டார்...
திரும்ப உள்ளே சென்று ஒரு அரிசி மூட்டையில் அரிசியை செக் செய்ய...கட்சிக்காரர்கள் நாங்கதான் இங்க தலைவர் சிலை எல்லாம் வைத்து கட்சியை கட்டு கோப்பாக நடத்திக்கொண்டு இருப்பதாக சொல்ல அமைச்சர் பேசிக்கொண்டே படி இறங்கினார்...
காரில் ஏறப்போகும் முன் கையில் இருக்கும் கைப்பிடி அரிசியை தூக்கி ஏரியாமல், திரும்ப கடைக்கு உள்ளே சென்று அந்த பிடி அரிசியை, பிரித்த மூட்டையில் போட்டு கிளம்பி சென்றது அமைச்சரின் அந்த செய்கை பிடித்து இருந்தது..போகும் முன் எல்லோருக்கும் வணக்கம் போட்டு விட்டு அடுத்த கடைக்கு செக்கிக் செய்ய கிளம்பினார்..
அமைச்சர் செக்கிங் செய்ய வந்த காரணம் பக்கத்தில் இருக்கும் கெருகம்பாக்கம் ரேஷன் கடையில் கடைகாரர் பொதுமக்களுக்கு சரியான பதில் சொல்லாமல் அலட்சியமாக மக்களை நடத்துகின்றார் என்று எதோ ஒரு ஆங்கில பத்திரிக்கையில் வந்த செய்திதான், அமைச்சர் செக்கிங் செய்ய வந்த அடிப்படை காரணம் என்று அங்கு இருந்த சிலர் பேசிக்கொண்டார்கள்..
அமைச்சரின் இந்த திடிர் விசிட்டிக்கும் அலட்டல் இல்லாத இயல்பாய் இருந்தமைக்கும்.. உடனே தனது செல்போன் நம்பரை கடைக்காரருக்கு கொடுத்ததும் எனக்கு ஆச்சர்யமே...ஒரு பிடி அரிசியை தூக்கி எறியாமல், திரும்ப பிரித்த மூட்டையில் போட்டதும் எனக்கு வியப்பை கொடுத்தது...உத்தரவிட்ட முதல்வர் ஜெவுக்கும், அமைச்சருக்கும் எனது நன்றிகள்...
அமைச்சர் போனதும் கடைகாரர் பெரிய பாட்டிலில் இருந்த தண்ணீரை மடக் மடக் கென்று குடித்து தாகத்தையும் அதன் கூடவே இருந்த பதட்டத்தையும் குறைத்துக்கொண்டார்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்று அண்ணா சொன்னதை தவறாமல் கடைப் பிடிக்கும் தம்பி(udan pirappu)
ReplyDeleteநன்று. அமைச்சர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து வேலை செய்தால் மக்களுக்கு நிம்மதி. இந்த வகையிலாவது பொதுஜனத்திற்கு ஆறுதல் கிடைக்கட்டும்!
ReplyDeleteசெல்லூர் ராஜூ, மதுரை செல்லூரை சேர்ந்தவர், ரொம்பவே இயல்பானவர், பலமுறை தேர்தலில் நின்று, தோற்று, முதல்வர் இவருக்கு இந்த முறை சீட் கொடுக்க, ஜெயித்து, அமைச்சர் ஆகிவிட்டார்..
ReplyDeleteஎளிமையான குணமும், பழகும் குணமும் தான் அவருடைய முன்னேற்றதிற்கு காரணம்..
nalla pathivu jackie anna natla nadakkirathai post pannatharku nandri
ReplyDeleteரேஷன் கடை....பழைய ரஜினி, கேப்டன் படம் பார்த்த எபக்ட். செய்திக்கு நன்றி.
ReplyDeleteபாத்து எழுதுங்க !! நீங்க நடுநிலை தவறிட்டீங்க அப்படின்னு சொல்ல போறாங்க !!!
ReplyDeleteஇவர் போல் பல அமைச்சர்கள் வர வேண்டும்.
ReplyDeleteHi Jackie,
ReplyDeleteSo far I thought You are DMK guy who blindly supports DMK inspite of all Spectrum Scams. Now I have changed my mind.
நன்றி அமைச்சரே செல்லூர் ராஜூ,வாழ்த்துக்கள்,
ReplyDeleteanna avaroda numberai pathivil podalaiye...
ReplyDeleteanna avaroda numberai pathivil podalaiye...
ReplyDeleteகடந்தவாரம் காலை மணி எட்டுக்கு எங்கள் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக எம்.எல்.ஏ யை சந்திக்க செல்லூர் ராஜு போன் செய்தோம் பத்து வினாடிகளில் போன் ஐ எடுத்து செல்லூர் ராஜு பேசுறேன் என்றார் எனக்கு ஒரே ஆச்சர்யம் யாராவது பி எ எடுப்பர் என்று நினைத்தேன் அவரே பேசினார்
ReplyDelete