உளவாளி என்பவன் யார்...?தன் தாய் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பவன்...தேவைப்பட்டால் தன் குடும்பத்தையும் இழப்பவன்..எப்படி ஒருவன் குடும்பத்தை இழக்க முடியும்??
தாய்நாட்டுக்கு ஒரு சோதனை என்று வந்து விட்டால் குடும்பமாவது குட்டியாவது என்று யாராவது வீனா போன வெண்ணலிங்கம் வேண்டும் என்றால் சொல்லுவான்...சரி உன் குடும்பதை தாய்நாட்டுக்கு தரை வார்ப்பியா? என்றால்.... சார் அதுக்கு தான் அவனுங்களுக்கு சம்பளம் கொடுக்கின்றார்கள்...சரி அதுக்கா குடும்பத்தை கூடவா? இழக்க முடியும்? சரி நீ கூடத்தான் அரசாங்க பதிவியில் இருக்கின்றாய்.. உனக்கு கூடத்தான் அரசாங்கம் சம்பளம் கொடுக்கின்றது...நீ உன் குடும்பதை தாய்நாட்டுக்கு இழப்பாயா? என்றால் பதில் இருக்காது....
பல நேரங்களில் தாய்நாட்டை காப்பது.. உயிரை துச்சமென மதித்து வேலை செய்யும் உளவாளிகள்தான்..சிலநேரங்களில் உயிரே போய்விடும்.. எதிரியிடம் மாட்டிக்கொண்டு விட்டால் பருப்பு பரதநாட்டியம் ஆடிவிடும்.. தேர்ட் டிகிரி டீரிட்மென்ட் சித்தரவதையில் அணு அணுவாக சித்தரவதை செய்து உண்மையை வரவைத்து விடுவார்கள்.. உண்மை கிடைத்ததும் உடனே தலைக்கு ஒரு புல்லட் பரிசளிப்பு இதுதான் உளவாளியின் நிலைமை..சில நேரங்களில் குடும்பத்தையே கண் எதிரில் அழித்து விடுவார்கள்..
சில நேரஙகளில் எதிரி தேசத்தில் வசமாக மாட்டிக்கொண்டால் சொந்த தாய்நாடே யார் இவன் என்றே தெரியாது என்று சொல்லி விட்டு டிஷ்யூ பேப்பரில் வாய் ஓரத்தை துடைத்துக்கொள்ளும்..
உளவாளி என்பவன் ஒரு நிழல் மனிதன்...லட்சக்கனக்கான மக்களை காப்பாற்றினால் கூட அவன் முகம் வெளியுலகுக்கு தெரியாது.. 40 மரக்கன்றுகளை நட்டு விட்டு நாலாம் பக்கம் தினத்தந்தி பேப்பருக்கு, போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வேலை எல்லாம் உளவாளிக்கு கிடையாது...தாய் நாடு பாதுக்காப்பு மட்டும்தான் உளவாளி வாழ்வின் ஒரே நோக்கம்..
உளவாளி என்றாலே இங்கிலாந்து உளவாளி ஜேம்ஸ் என்று ஹாலிவுட் படங்களே ஜல்லியடித்துக்கொண்டு இருந்த போது.. ஹாலிவுட்காரர்கள் உருவாக்கிய பாத்திரம்தான் ஈதன் எனும் அமெரிக்க உளவாளி பாத்திரம்.
மார்பு காம்புகளை மட்டும் தவிர்த்து விட்டு சின்ன மற்றும் பெருத்த மார்பை காட்டு நாயகிகளோடு படுத்து புரண்ட படி உளவு பார்க்கும் ஜேம்ஸ்பான்ட் போல இல்லாமல், தாய்நாடு பாதுகாப்பு மட்டுமே தன் நெஞ்சில் சுமந்து செல்லும் கேரக்டராகவும் அமெரிக்க சொல்ஜர்கள் ஈதன் பாத்திரத்தை ரோல் மாடலாக வைத்துக்கொள்ளும் படியும் பார்த்துக்கொண்டார்கள் திரைக்கதையாளர்கள்....
ஆக்ஷன் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிர வைத்த முந்தைய மிஷின் இப்பாசிபிள் படத்தை போல இந்த படமும் மனதை கொள்ளை கொண்டதா என்பதை பார்ப்போம்...
==================
Mission: Impossible – Ghost Protocol-2011/மிஷின் இம்பாசிபிள் 4 படத்தின் ஒன்லைன்...
அமெரிக்கவுக்கு ஒரு அழிவை எதிரி ஏற்படுத்த போகின்றான்.. ஆனால் எந்த உதவியும் தாய்நாட்டிடம் இருந்து கிடைக்காது.. அந்த உளவாளி குழு எப்படி அதை முறியடிக்கின்றது என்பது திரி லைன்...
=====================
Mission: Impossible – Ghost Protocol-2011/மிஷின் இம்பாசிபிள் 4 படத்தின் கதை என்ன??
சிறையில் இருக்கும் ஈதனை அவனது குழு விடுவிக்கின்றது... விடுவித்து விட்டு நமது குழு ஆளை சாகடித்து விட்டு, ரஷ்ய அணு ஆயுத ரகசியங்களை ஒரு பெண் அடித்துக்கொண்டு போய் விட்டாள் என்று சொல்லுகின்றார்கள்..
அதை வில்லன் அமெரிக்காவுக்கு எதிராக செய்லபடுத்த நினைக்க, இருந்த நேரத்தில்... ஈதன் செய்லபடும் அமைப்பின் தலைவரே இறந்து போய் விடுவதால் எந்த உதவியும் இன்றி.. எப்படி இந்த மிஷனை உயரை பணயம் வைத்து முடித்தார்கள் என்பதுதான் மீதிக்கதை...
====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
எவ்வளவு நாள் ஆகிவிட்டது... இப்படி ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் படம் பார்த்து .... சான்சே இல்லை... மிகவும் ரசித்து பார்த்தேன்.. தமிழில் பார்த்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்..
புதபிஸ்ட் நகரத்தில் ஆரம்பிக்கும் படம்..இந்தியாவில் முடிவது போலான பரபரப்பான ஆக்ஷன் தமாக்கா இந்த படம் என்றால் மிகையில்லை..
ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் திரில்லர் படம் இந்தியா பக்கம் கவனத்தை திருப்பி இருப்பது வரவேற்க்கதக்கது... இந்தியா என்றாலே ஏழை நாடு, டிசிப்பிளின் இல்லாத மக்கள் என்ற இமேஜில்தான் இதுவரை உலகமும் ஹாலிவுட்டும் பார்த்துக்கொண்டு இருந்தது மெல்ல மெல்ல அந்த முகம் மாறி வருகின்றது...
இந்த படத்தில் நம் இந்திய நடிகர் அனில்கப்பூர் நடித்து இருக்கின்றார்.. கிளைமாக்ஸ் காட்சிகள் நமது சன்நெட்ஒர்க் ஆபிசில் எடுத்து இருக்கின்றார்கள்..
ஈதன் பாத்திரத்தில் டாம்குருஸ்... சான்சே இல்லை 48 வயசுன்னு வெயியே சொன்னால் வாய் வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும் அளவுக்கு பயத்தை மனிதர் ஏற்படுத்துகின்றார்... பாடியை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கின்றார்..
படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது ரசிக்க முடியாது என்பதால் அடக்கியே வாசிக்கின்றேன்..
துபாயில் மிக உயர கட்டிடம் அதில் நடக்கும் காட்சிகள் என மயிற்கூச்செறிய வைக்கின்றன....
நடிகை பவுலா பட்டன் நன்றாகவே நடித்து இருக்கின்றார்.. உளவாளிபடங்களுக்கு தேவைப்படும் கதாநாயகிக்கு தேவையான பெருத்த மார்பகத்தோடு இருக்கின்றார்..
எங்கே இந்த பெண்ணை பார்த்தோம் என்று யோசித்துக்கொண்டு இருந்தால் மிரர் என்ற திகில் படத்தில் இந்த பெண் நடித்து நினைவுக்கு வருகின்றது...
படத்தின் ஒளிப்பதிவு அற்புதம்.. பரபரப்பான காட்சிகள் அமைத்த இயக்குனர் Brad Bird அசத்தி இருக்கின்றார்..ஆக்ஷன் படம் இவர் இயக்கிய பெரிய படம் இது...
இதற்கு முன் இவர் நிறைய அனிமேஷன் படங்களை இயக்கியும் திரைக்கதை அமைத்தும் இருக்கின்றார்...இவர் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்.. ஆஸ்கார் விருதையும் பெற்றவர்...
=====================
தியேட்டர் டிஸ்கி..
படத்தை நான் சென்னை மெலோடி தமிழ்வெர்ஷனில் பார்த்தேன்..இணைய இரட்டையர்கள் லக்கி அதிஷா திடிர் என்று வந்து எனக்கு இன்ப அதிச்சி கொடுத்தார்கள்..
50ரூபாய்க்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில்
20ரூபாய்க்கு பாப்கான் கொடுத்து சென்னையில் ஏசி போட்டு கியூப்பில் படம் காட்டுவது என்னை பொறுத்தவரை பெரிய விஷயம்... அதனால் குறைந்த செலவில் நிறைந்து பயண் பெற மெலோடி தியேட்டருக்கு செல்லுங்கள்..
20ரூபாய்க்கு பாப்கான் கொடுத்து சென்னையில் ஏசி போட்டு கியூப்பில் படம் காட்டுவது என்னை பொறுத்தவரை பெரிய விஷயம்... அதனால் குறைந்த செலவில் நிறைந்து பயண் பெற மெலோடி தியேட்டருக்கு செல்லுங்கள்..
=========
படத்தின் டிரைலர்
===============
படக்குழுவினர் விபரம்
Directed by Brad Bird
Produced by Tom Cruise
J. J. Abrams
Bryan Burk
Written by André Nemec
Josh Appelbaum
Based on Mission: Impossible by
Bruce Geller
Starring Tom Cruise
Jeremy Renner
Simon Pegg
Paula Patton
Music by Michael Giacchino
Lalo Schifrin (themes)
Cinematography Robert Elswit
Editing by Paul Hirsch
Studio Paramount Pictures
Skydance Productions
Bad Robot Productions
TC Productions
Distributed by Paramount Pictures
Release date(s) December 7, 2011 (Dubai)
December 16, 2011 (United States(IMAX))
December 26, 2011 (United Kingdom)
Running time 133 minutes
Country United States
Language English
Budget $145 million
Box office $218,645,000
Produced by Tom Cruise
J. J. Abrams
Bryan Burk
Written by André Nemec
Josh Appelbaum
Based on Mission: Impossible by
Bruce Geller
Starring Tom Cruise
Jeremy Renner
Simon Pegg
Paula Patton
Music by Michael Giacchino
Lalo Schifrin (themes)
Cinematography Robert Elswit
Editing by Paul Hirsch
Studio Paramount Pictures
Skydance Productions
Bad Robot Productions
TC Productions
Distributed by Paramount Pictures
Release date(s) December 7, 2011 (Dubai)
December 16, 2011 (United States(IMAX))
December 26, 2011 (United Kingdom)
Running time 133 minutes
Country United States
Language English
Budget $145 million
Box office $218,645,000
==========
பைனல்கிக்..
இந்த படத்தை பார்த்தை தீர வேண்டிய படம்.. ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் படம்...முன்னால் காட்சி பரபரப்பு முடிவதற்குள் அடுத்த காட்சி என பரபரப்பான காட்சிகளால் நிமிர்ந்து உட்கார வைத்து இருக்கின்றது இந்த படம்.
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நல்ல சிறப்பான விமர்சனம்.
ReplyDeleteநன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
பார்த்தே தீர வேண்டிய படம்தான். இந்தியாவை உயர்தரமாக காட்டி இருக்கிறார்கள் ! அனில்கபூர் ஜோக்கர் மாதிரி வந்து செல்கிறார்.
ReplyDeleteANNAE ATHE MELODYLATHAN NAANUM PATHEN ATHU QUBE MATHIRI THERIYAA FILM ROLL POTTU OTINA MATHIRITHAN IRUNTHATHU... ATHANAALA ATHUTHANAAL SATHYAM LA POI PARTHEN..........
ReplyDeleteபடம் மிகவும் அருமை.
ReplyDeleteஇந்தியாவை எந்த விதத்திலும் பெருமை படுத்த வில்லை என்பது எனுடைய கருத்து.
இந்தியாவில் விளம்பரம் செய்ய அவர்களுக்கு கிடைத்த துருப்பு சீட்டு தான் அனில்கபூர்( ஜோக்கர் ).
இங்கு சிலர் ஜோக்கர் கீக்கர் என்று கூறுகின்றனர். இந்தியாவை அமெரிக்காகாரன் பெருமைபடுத்த வேண்டியதேயில்லை. அவன் என்ன பெரிய புடிங்கியா ? ஹாலிவூட் திரைப்படங்களின் கணிசமான வசூல் இந்தியாவில் இருந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது. எப்படி தமிழுணர்வு என்பதை வைத்து சமீபத்தில் சிலபடங்கள் " காசு மட்டும் " பார்த்ததோ அதுமாதிரி தான் இதுவும். அது தப்பு இல்லனா இதுவும் தப்பு இல்லை. இது தப்புன்னா அதுவும் தப்பு.
ReplyDelete