என்னுடைய கேமரா பிளாஷ் மக்கார் பண்ண கேமரா ரிப்பேரர் ஜுலிசனிடம் எடுத்து போய் கொடுத்தேன்..
மாலை நாலு மணியில் இருந்து போராடி போராடி ஆறு மணிவரை அதனை சரிசெய்ய முடியவில்லை... அதனால் சாரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு சரியான நேரத்துக்கு என்னால் போக முடியவில்லை... விழா ஆரம்பித்த உடன்தான் விழாவுக்கு என்னால் போக முடிந்தது..காமராஜர் அரங்கத்தை அடைந்த போதே வாசலில் கேபிள் மற்றும் இணைய இரட்டையர்கள் லக்கி அதிஷா வாசலில் நின்றுக்கொண்டு இருந்தார்கள்..
உள்ளே நுழைந்த போது விழா நடந்து கொண்டு இருந்தது.. சாரு கோர்ட் ஷுட் அணிந்து கொண்டு இருந்தார்...போனமுறை தேகம் நாவலை இதே அரங்கில் வெளியிட்ட போது, நாவல் வெளியீட்டுக்கு சிறப்பு விருந்தினர்கள் மேடையை அலங்கரித்துக்கொண்டு இருந்தார்கள்...
நான்,நித்யா, மணிஜி,உண்மைதமிழன்,பட்டர்பிளை சூர்யா,கேபிள்,கேஆர்பி செந்தில்,ராஜப்பிரியன்,முத்து,சுரேகா என்று பதிவுலக நண்பர்கள் வட்டம் இரண்டு வரிசைகளை ஆக்கிரமித்துக்கொண்டோம்.
இந்த முறை மேடையில் மூன்று நாற்காலிகள் மட்டுமே இருந்தன...அதில் இந்திரா பார்த்தசாரதி மற்றும் வாலி இரண்டு பேர் மட்டுமே உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள்.. விழா நிகழ்ச்சிகளை சாருவே தொகுத்து வழங்கி கொண்டு இருந்தார்..
போன வருடம் போல இளமை கொண்டாட்டம் விழா மேடையில் இல்லை...
தனது வாசகர் வட்ட நண்பர்களை வைத்து, வாலி புத்தகத்தை வெளியிட வாசகவட்ட நண்பர்கள் பெற்றுக்கொண்டார்கள்..... வாசகவட்ட நண்பர்கள் சிலரை மேடையில் அறிமுகபடுத்தி அவர்களுக்கு புதிய புத்தகங்களை வழங்கினார்...வாசகவட்டத்தினர் தற்கொலைபடையினர் போல இருப்பதாக தனது நண்பர் ஒருவர் சொன்னதாக தெரிவித்தார்...
மேடையில் சிறப்பு விருந்தினராக வந்து இருந்த இந்திரா பார்த்தசாரதி மற்றும் வாலி இருவருக்கும் 80 வயதை தொட்டவர்கள்..
சாரு பேசும் போது வாலி எழுதிய இச்சு இச்சு பாடலை ஆயிரம் முறைக்கு மேல் கேட்டு இருப்பேன் என்று அந்த பாடலை பற்றி சிலாகித்தார்..
நடு நடுவில் வழக்கம் போல மணிஜி டைமிங்க காமெடி அடித்துக்கொண்டு இருந்தார்... உண்மைதமிழன் அண்ணன் ஒரு பக்கத்தை நாவலில் இருந்து காட்டினார்..... படித்ததும் எனக்கு மயக்கமே வந்தது... அந்த பக்கத்துக்கே 200ரூபாய் சரியா போயிடுச்சி என்று உண்மைதமிழன் அண்ணன் சொன்னார்...
மணிஜி ,உதா அண்ணணிடம் இந்த புத்தகத்தோடு போய் நாட கட்டிலில் கவுந்து படுத்து... வேண்டாம் அதுக்கு மேல அப்படியே சொன்னா எக்சைல் நாவலையும் மிஞ்சி விடும் என்பதால் இத்துடன் நிறுத்துக்கொள்கின்றேன்..
முதலில் வாலி பேச அழைக்கப்பட்டார்...
வாலியின் குரல் கணீர் என்று அரங்கை நிமிர்ந்து உட்கார வைத்தது என்று சொல்லலாம்... என்பது வயதில் அப்படி பேசமுடியுமா? என்று ஆச்சர்யமாக இருந்தது...
சாரு மீது நிறைய குற்றசாட்டுகள் இருக்கின்றன.. மண்புழு மேலும் மரவட்டை மேலும் விமர்சனத்தை யாரும் வைக்க போவதில்லை...யார் மீது அதிகம் விமர்சனம் வைக்கபடுகின்றதோ அவர்கள் அறிவாளி என்று அர்த்தம் என்று சொன்னார்....
மணிஜி என்னிடம் கை கொடுத்து விட்டு ஜாக்கி நீயும் அறிவாளியா ஆயிட்டே என்று நக்கல் விட்டார்... உத அண்ணன் இன்னும் பத்து வருசத்துல இது போல ஒரு பாராட்டு விழா உனக்கு இதே அரங்குத்துல உனக்கு நடக்கபோவுது பாரு என்று உத பங்குக்கு நக்கல் விட்டுக்கொண்டு செமை ஜாலியா விழா சென்று கொண்டு இருந்தது..மணிஜி போட்டோ எடுக்க சொன்னார் பிளாஷ் இல்லை என்று சொல்லாமல், பங்ஷனை மட்டும்தான் எடுப்பேன் என்று சொல்ல மனிதர் காண்டாகிவிட்டார்..
வாலி மேலும் பேசுகையில் செக்ஸ் பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே ரசிக்கும் சமுகம் இங்கு இருக்கின்றது.. சாருவின் எழுத்துக்களில் அது மட்டுமே முதன்மை படுத்தபடுகின்றது என்று சொன்னார்....
அடுத்ததாக பேச வந்த இந்திரா பார்த்தசாரதி நல்ல நகைச்சவையாக பேசினார்...என்பது வயதில் பேசும் போது சபையை தன் பக்கம் இழுக்கும் வித்தை அவருக்கு நன்றாக வருகின்றது.. வயது முதிர்வின் காரணமாக அவரது குரல் பலமற்று இருந்தது.....
எல்லோரும் பதினைந்து வருடத்துக்கு முன் வந்த ஜுரோ டிகிரி புத்தகத்தை கிழித்து காயவைத்துக்கொண்டு இருக்கும் போது, இந்திரா மட்டும் அந்த புத்தகம் நல்ல புத்தகம் என்று சொன்னவர் என்றும், விமர்சனங்களை பற்றி கவலை படாமல் மேலும் எழுத வேண்டும் என்று சொன்னார்...
உலகில் நல்ல இலக்கியம் கெட்ட இலக்கியம் என்று எதுவுமே இல்லை... அளவுகோலில் வைத்து மார்க் போட யாருக்கும் உரிமை இல்லை...பிடிக்கவில்லை என்றால் புறக்கணியுங்கள் அதை செய்துவிட்டு போங்கள்.. அதை விடுத்து எழுத்தை விம்ர்சிக்க யாருக்கும் இந்த உலகில் அதிகாரம் கொடுக்கபடவில்லை என்று இந்திரா பார்த்தசாரதி சொன்னார்...
அடுத்ததாக மதன் விழாவுக்கு வந்து இருந்தார்... அவரை பார்த்து விருப்பம் இருந்தால் பேசவும் என்று சாரு சொல்ல அவரும் பேச சம்மதித்து மேடை ஏறினார்..
எக்சைல் புத்தகம் ஒரு விறுப்பான புத்தகம் என்றும் வீட்டிற்கு வந்து உடைகூட மாற்றாமல் 150 பக்கம் வரை தொடர்ந்து படித்துக்கொண்டு இருந்தேன்... உலகில் பல புத்தகங்களை வாசித்தவன் என்ற முறையில் சொல்லுகின்றேன்... இந்த புத்தகம் உலகதரம் என்று சொனனார்...
அதே போல இது போலான எழுத்துக்களை தமிழ் இலக்கிய உலகம் பாராட்ட வேண்டும் என்று சொன்னார்.. இந்தியர்களாகிய நாம் செக்ஸ்க்கு எதிரி அல்ல.. பிரிட்டிஷ்காரர்களால்தான் நாம் நம் சுயத்தை இழந்து செக்ஸ் ஒரு தீண்டாமை ரேஞ்சுக்கு சித்தரித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று சொன்னார்..
மதன் மனதில் பட்ட விஷயத்தை அப்படியே பேசினார்..மதன் பேச்சில் வெல் போன்ற சின்ன ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து பேசுவார்.. ஆனால் இப்போது அப்படி பேசவில்லை... பேச்சில் மாற்றம் இருக்கின்றது.. மதன் பேசும் போதும் அரங்கத்தை தன் கட்டுக்குள் வைத்து இருந்தார்..பேச்சை முடிக்கும் போது சாரு இன்னும் நிறைய எழுவேண்டும்.. ஆனால் சினிமாவில் மட்டும் ஆர்மோனியம் வாசிக்க போகக்கூடாது என்று கடைசி பஞ்சு வைத்து தனது பேச்சை நிறைவு செய்தார்...மதன் சொன்னது போல போன வருடத்தை விட இந்த வருடம் இன்னும் கூட்டம் அதிகரித்து இருக்கின்றது...
அடுத்ததாக பேசிய சாரு வாசக வட்ட நண்பர்களின் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தார்..
ஜெயமோகனுக்கும் தனக்கும் நடப்பது சண்டை அல்ல.. அது தத்துவம் சார்ந்த விவாதம்தான்.. அதனை சண்டை என்று நினைத்தால் அது உங்கள் அறியாமை என்றார்....
அரசியல் கட்டுரை ஏன் எழுதவில்லை என்றால் நேரமின்மைதான்காரணம் ஆனால் தான் யாருக்கு பயப்படவில்லை என்று சொன்னார்... நான் எப்படி எல்லாம் தைரியமாக அரசியல் கட்டுரை எழுதியவன் என்று உங்களுக்கே தெரியும் என்று சொன்னார்...கலைஞரை திட்ட நேரமும் இருக்கும் தைரியமும் இருக்கும்......அம்மாவை திட்டினால் என்ன நடக்கும் என்பது அறியாதவரா? சாரு...???
ஏன் சினிமா விமர்சனங்கள் எழுதவில்லை?, என்ற கேள்விக்கு,
எழுதி எனக்கு என்ன பயன்?? பிரபல இயக்குனர் தமிழில் எல்லா எழுத்தாளரையும் புகழ்ந்து சொனனார் ஆனால் என் பெயரை சொல்லவே இல்லை.. அப்படி பட்டஇயக்குனர் படத்தை பற்றி நான் விமர்சனம் எழுதி இருக்கின்றேன்.. என்னை கொண்டாடி மரியாதை செய்ய வேண்டாமா? ஆனால் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை அப்புறம் எதுக்கு நான் எழுத வேண்டும்? என்று கோபப்பட்டார்..
அதன் பிறகு தமிழில் எழுதினால் மிதிப்பில்லை அதனால் ஆங்கிலத்தில் முதலில் வெளியிட்டு பின்பு தமிழில் அந்த நாவலை வெளியிடப்போவதாக சொன்னார்...
வழக்கம் போல தமிழ் இலக்கியத்திலும் சமுகத்திலும் எழுத்தாளர்களுக்கு மதிப்பு இல்லை என்று சாடிக்கொண்டு இருந்தார்..
கொடுமையான விஷயம் எனக்கு தெரிந்து சாருவை பின்னுட்டங்களில் விவாதங்களில் அசிங்க அசிங்கமாக திட்டியவர்கள் எல்லாம் விழாவுக்கு வந்து இருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய கைகளிலும் எக்ஸைல் நாவல் இருந்தது பெருத்த ஆச்சர்யம்...
சைக்கோ,மொக்கை,சுயுபுராணம்,காமெடிபீஸ் என்று இன்னும் எழுத முடியாத வார்த்தைகளிலும் வசவுகளிலும் சிக்கிய சாரு என்ற எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு காமராஜர் அரங்கம் முக்கால் வாசி அளவுக்கு நிரம்பி இருந்தது..போனவருடத்தை விட இந்த வருடம் கூட்டம் அதிகமாகிக்கொண்டேதான் செல்கின்றது..
ஆனால் மனிதர் எந்த விமர்சனங்களை பற்றியும் கவலைபடாமல் பேசிக்கொண்டும் எழுதிக்கொணடும்தான் இருக்கின்றார்..அதுதான் அவரின் பலம் போல....
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
// வருசத்துல இது போல ஒரு பாராட்டு விழா உனக்கு இதே அரங்குத்துல உனக்கு நடக்கபோவுது பாரு என்று உத பங்குக்கு //
ReplyDeleteதல கொஞ்சம் முன்கூட்டியே சொல்லிடுங்க டிக்கெட் முன்பதிவு செய்யனும்....
தங்கள் எழுத்துக்களில் அடிக்கடி சாரு நிவேதிதா
ReplyDeleteஎட்டி பார்கிறார். அவரது எழுத்துநடை தெரிந்தோ தெரியாமலோ உங்களிடமும் ஒட்டிக்கொண்டு விட்டது.தமிழை பொறுத்தவரையில் சாருவின் சினிமா விமர்சன கட்டுரைகள்தான் முதன்மையானது.
அதே போல் தமிழ் பதிவர்களை பொறுத்த வரையில் சினிமா விமர்சனம் எழுதுபவர்கள்தான் அதிகம் ஆனால் அவர்களில் தங்களது விமர்சனமே முதன்மையானது என்று கருதுகிறேன்.காரணம் ரசித்து பார்த்த திரைப்படத்தை பற்றி உங்கள் தளத்தில் வாசிக்கும்போது அத் திரைப்படத்தை இன்னும் ரசிக்கிறோம்.தற்போது தங்களது விமர்சனங்கள் துதியாக மாறி வருகின்றதோ என்று என்ன தோன்றுகின்றது. எதிர் மறையான விமர்சனங்களை தாங்கள் எழுதுவதில்லை.நேர்மையான விமர்சகனாக இருக்கும் பட்சத்தில் அந்த நண்பர் சொன்னது நடந்தேறலாம்.எதிர்காலத்தில் ஜாக்கியும் கொண்டாடபடுவார்.
http://anbudan-raja.blogspot.com
ReplyDeleteஒரு புதிய முயற்சி படித்து உங்கள் உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்
அண்ணே புத்தகம் ரேட் 200 ரூபாயா? இன்னைக்கு வாங்கிடுறேன்...
ReplyDeleteபதிவர் இலக்கணத்திற்கு வரு சேர்த்தீர்கள் போலும்!
ReplyDeleteஎன் கமென்ட்டில் "வரு" என்பதை "வலு" என்று திருத்திப் படிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.
ReplyDelete//அரசியல் கட்டுரை ஏன் எழுதவில்லை என்றால் நேரமின்மைதான்காரணம் ஆனால் தான் யாருக்கு பயப்படவில்லை என்று சொன்னார்... நான் எப்படி எல்லாம் தைரியமாக அரசியல் கட்டுரை எழுதியவன் என்று உங்களுக்கே தெரியும் என்று சொன்னார்...கலைஞரை திட்ட நேரமும் இருக்கும் தைரியமும் இருக்கும்......அம்மாவை திட்டினால் என்ன நடக்கும் என்பது அறியாதவரா? சாரு...???//
ReplyDeleteகிராமங்களில் இவர்களைக் காரியக் கிறுக்கர்கள் என்பார்கள். சாருவும் அந்த ரகமே! ஆனால் நானொரு குழந்தை எனப் பாடிக்கொண்டே இருப்பார்.