Achilles and the Tortoise-2008/ உலகசினிமா/ஜப்பான்/அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஓவியன்...  
கலை இலக்கியம் சம்பந்தபட்ட மனிதர்களை  நீங்கள் சற்றே கவனித்து இருப்பீர்களானால் அவர்கள் எல்லா செயல்களிலும் அவர்கள் கொண்ட கலை மீதான காதல் நமக்கு தெரியும்..அவர்கள் உலகத்தை பார்க்கும் விதமே வித்யாசமாக இருக்கும்


பத்திரிக்கை நண்பர் கீதப்பிரியனோடு பேசும் போதும் சரி.. நான் ஒரு முறை மறைந்த எழுத்தாளர் வலம்புரிஜான் வீட்டில் அவர் இன்ட்ர்வியூ எடுக்க நான் கேமராமேனாக   சென்னை பெரியார் பாதையில் இருக்கும் அவர் வீட்டுக்கு போய் இருக்கின்றேன்... அவர் வீட்டில் நடக்கவே இடம் இல்லாத வகையில் புத்தகங்கள் வீடு முழுவதும் அலமாரி  வழிந்து எல்லா இடத்திலும் அடுக்கி வைத்து இருந்தார்..வாசிப்பின் காதலை அங்கே உணர்ந்தேன்..

இயக்குனர் மணிரத்னம் விடியலில் தனது படுக்கை அறையில் படுத்துக்கொண்டு இருக்கும் போது  அவர் மனைவி சுகாசினி, காபி எடுத்து கொண்டு செல்ல, சன் லைட் ஜன்னல் வழியாக வர, தனது மனைவியிடம் இருந்து காப்பியை  வாங்கி குடிக்காமல்... அந்த சன்லைட்டில் அவர் மேல் படுவது போல நிற்க வைத்து அந்த பிரேமை கற்பனையில் ரசித்து விட்டு, அதன் பிறகு அவர் கொடுத்த காபியை வாங்கி பருகி இருக்கின்றார்..ஒரு பேட்டியில் திருமதி சுகாசினி மணிரத்னம் சொன்னது....
 
எனது நண்பர் ஓவியர் நாராயணன் அவர் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் விசுவல் கம்யூனிகேஷன்  மாணவர்களுக்கு ஒவிய வகுப்பு எடுத்தவர்.. பின்னர் நான்  வேலை செய்த இந்துஸ்தான் கல்லூரியில் விஷுவல் கம்யூணிகேஷன் மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு எடுக்கும் போது கவினித்து இருக்கின்றேன்.. அவரின் செயல்பாடுகள்.. அவர் உலகை கவனிக்கும் விதம் ரொம்பவே வித்யாசமாக இருக்கும்..

உதாரணத்துக்கு அவர் ஒரு ஒர்க் செய்தார்.. பெரிய தீப்பெட்டியான ஹோம் மெட்ச் பாக்சை தன் மனைவியுடம் கொடுத்தார்...தினமும் அவர் மனைவி சமைக்கும் போது அடுப்பை கொளுத்த தீக்குச்சிகளை உரசி அது எரிந்து முடிக்கும் வரை பொறுத்து இருந்து விட்டு அதனை அப்படியே எடுத்து பத்திரபடுத்தி அது கொளுத்திய நேரம் எட்டு மணி என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அது எரிந்து முடிக்கும் நேரம் எட்டு மணி 17 செகன்ட் சிலது 20 சிலது25 சிலது பத்து செகன்ட் என்று எத்தனை  நொடிகள் ஒரு தீக்குச்சி எரிகின்றதோ  அதனை குறித்து வைத்துக்கொண்டு அதனை ஒரு ஒயிட் கேன்வாஷில் ஒட்டி ஒவ்வோரு தீக்குச்சிக்கும் தோற்றம் மறைவு எழுதி வந்தார்...

அதை ஒரு ஓவிய கண்காட்சியில் வைத்த போது அதை  லண்டன் நிறுவனம் ஒன்று அந்த வேலையை பாராட்டி 60 ஆயிரத்துக்கு வாங்கி கொண்டது...ஆனால் அதே ஒர்க் அவர் மிக பிரபலமானவராக இருந்து இருந்தால் அந்த நுனுக்கமான ஒர்க் 5லட்சம் வரை விலை போய் இருக்கும்...ஆனால் அவர் இப்போதுதான் வளர்ந்து வரும் கலைஞர்...அந்த ஒரு சில  நொடி தீக்குச்சி வாழ்க்கையை அந்த பெட்டியில் உள்ள அத்தனை குச்சிக்கும் தோற்றம் மறைவை எழுதினார்...அதற்கு தலைப்பாக லைப் ஸ்பேன் என்று அந்த ஒர்குக்கு தலைப்பு வைத்தார்..
தினமும் நாம் ஆடுப்பு எரிக்க மெழுகு வத்தி ஏற்ற, சிகரேட் புகைக்க என்று தினமும் மில்லியன் கணக்கில் தீக்குச்சிகளை பயண்படுத்துகின்றோம்...

ஆனால் ஒரு தீக்குச்சியின் செயலையும், அதன்  தோற்றம் மறைவு குறித்து நாம கவலை கொண்டதில்லை.. அதே போல மில்லியன் கணக்கான ஹோம் மேட்ச் பாக்சில் ஒரு ஹோம்மேட்ச் பார்க்சில் இருந்த தீக்குச்சிகளின் தோற்றம் மறைவை எனது நண்பர் பதிவு செய்து இருக்கின்றார்...

சில வருடங்களுக்கு முன்பு மயிலாப்பூரில் ஒரு கடையில் டீக்குடித்துக்கொண்டு இருந்தோம்.. இப்போ என்ன ஒர்க் பண்ணறிங்க நாரயணன் என்று கேட்டேன்..

இப்ப நாம டீ குடிக்கின்றோம்... ஆனால் எல்லா கப் டீயையும் ஒரே  மடக்கில் குடித்து விடுவதில்லை.. அதன் கால அளவை இப்போது பதிவு செய்து ஒரு ஒர்க்  செய்கின்றேன் என்று சொன்னார்... 


அவர் செய்த அந்த இரண்டு ஒர்க்கையும்தான் நீங்கள் மேலே இரண்டு படத்தில் பார்க்கின்றீர்கள்.. படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்....

ரத்தமும் சதையுமாக நாடி நரம்புகளில் எல்லாம் அந்த கலை வியாபித்து இருந்தால்தான் இப்படி உலகை ரசனையாகவும் அழகாவும்  பார்த்து பதிய வைக்க முடியும்.....
=============
Achilles and the Tortoise படத்தின் ஒன்லைன்...
 
ஈஷ்டப்பட்டு கஷ்ட்டபட்டு தனது ஓவியங்களை உருவாக்கும் ஒரு ஓவியன் தனது அங்கீகாரத்துக்கு வாழ்வின் கடைசி வரை போராடுவதே இந்த படத்தின் ஒரு வரி கதை...

=================  
Achilles and the Tortoise ஜப்பான் படத்தின் கதை என்ன,???
 

மச்சிசூ பணக்காரகுடும்பத்தின் செல்ல பிள்ளை சின்ன வயதில் இருந்தே வரைவது மட்டுமே அவன் வாழ்க்கை...அப்பாவுக்கு பிசினஸ் லாஸ் ஆகி தூக்கு கயிற்றுக்கு  தனது மனைவியோடு கழுத்தை கொடுத்து ஆக்சிஜனுக்கு ஏங்கி  கை கால் உதைத்து பரலோகத்துக்கு போய் விடுகின்றார்கள்.. 
 

அதனால் அனாதை ஆன மச்சிசூ சொந்தங்கள் கைவிட அனாதை ஆசிரமத்தில் தஞ்சம் அடைகின்றான்...பெரியவனாகி ஒரு சிறு பத்திரிக்கை ஆபிசியில் பணியில்  சேர்ந்து தனது மனஓட்டத்தை ஒத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பல  ஓவியங்கள் வரைந்து விற்பனைக்கு எடுத்து சென்றால் தொடர்ந்து புறக்கணிக்கபடுகின்றான்.. தொடர்ந்து ஓவியம் வரைவதை நிறுத்தவில்லை..மகள் விபச்சாரியாக மாறிவிடுகின்றாள்.. மனைவி பிரிந்து போகின்றாள்... ஆனாலும் அவன் வரைவதை நிறுத்தவில்லை.. முடிவு என்ன என்பதை வெண்திரையில் நெகிழ்ச்சியுடன் பாருங்கள்....

 
============================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு மிஷ்கின்  எனக்கு சினிமா கத்துக்கொடுத்தது அகிரா குரோசேவா மற்றும் டக்கிஷி கிட்டானோதான் என்று சொல்லுவாரே... அந்த டக்கிஷி கிட்டானோ இயக்கி நடித்த படம்தான் achille et la tortue....
 
ஓவியத்தின் மீது வெறித்தனமான காதல் கொண்ட ஒரு கலைஞனின்  வாழ்வை செல்லுலாய்டில் காப்ரமைஸ் செய்துக்கொள்ளாமல் பதிவு செய்து இருக்கின்றார்.. கிட்டானோ...

சின்னவயதில் வேகமாக வரும் ரயில் வண்டி எதிரே போய் நின்று கொண்டு வரையும் அந்த ஒரு காட்சியிலேயே கேரக்டரின் தீவிரத்தை சொல்லி விடுகின்றார்....

இரண்டு தற்கொலைகள் படமாக்கிய விதம் முக்கியமாக ஸ்டெப் மதரின் தற்கொலை காட்சி விஷுவல் அருமை...

கணவன் மனைவி இரண்டு பேரும் கடை ஷட்டரில் படம் வரைந்து விட்டு போலிஸ் கேஸ் ஆகி திரும்ப அதன் மேல்  வெள்ளை பெயின்ட் அடிப்பது கொடுமையான கவிதை...

ஆர்ட்ஸ் காலேஜில் படிக்கும் போது ஒரு  பிரேமும் அற்புதம்.. கலர்ஸ் யூஸ்  செய்து இருக்கும் விதம் அருமை...கேமராமேன் Katsumi Yanagishima கைகளுக்கு ஒரு முத்தத்தை பரிசாக கொடுக்கலாம்...

இங்க டேலன்ட்ன்னு எதுவும் இல்லை சூழ்நிலைதான் எல்லாத்தையும் முடிவு செய்கின்றது.. பிக்காசோ ஓவியத்தை அரிசி உருண்டையையும் ஆப்பிரிக்காவுக்கு எடுத்துகிட்டு போனா அரிசி உருண்டையதான் மக்கள் கொண்டாடுவாங்க.. என்று  சொல்லும் வசனங்கள் நச்...

உடம்பு முழவதும் நிர்வானமாக மஞ்சள் பெயிண்ட் அடித்துக்கொண்டு கேன்வாசில் உழுந்து  எழுந்து போகும் காட்சியை படமாக்கிய விதம் அருமை.. கிட்டானோ நல்ல நடிகர்..என்பதை நிறுபித்து இருக்கின்றார்.. 
அவர் படங்களில் ஒரு மனப்பிறழ்வு கேரக்டர் இருக்கும்.. இந்த படத்திலும் சிறுவன் ஊர் விட்டு செல்லும் காட்சியில் பேருந்து எதிரில் விழுந்து சாகும் காட்சி நெகிழ்ச்சி

தொடர்ந்து தனது ஓவியங்கள் புறக்கணிக்கபட்டாலும் தொடர்து ஓவியம் வரைந்து தள்ளுவதும், தனது பெண் விபச்சாரிஆன போதும் அவளிடம் பெயின்ட் வாங்க காசு கேட்கும் காட்சியும் பின்புலத்தில் இருக்கும் ஹோட்டல் பெயின்ட் பல கதைகள் சொல்லுகின்றது..

மகளிடம் இருந்து காசுவாங்கி கொண்டு பாத்ரும் போய் ஒன்னுக்கு இருக்கும் போது, அங்கே ஹோமோக்கள் இரண்டு பேரில் ஒருவன் அவசரமாக ஓடுவதும், வாய் போட்டவன் வாஸ் பேஷினில் வந்து துப்புவதும் விஷுவல் இல்லாமல் உணர்த்தும் காட்சிகள்... அங்கே பணத்தை பிடுங்கி கொல்வதும் கொடுமை.
 
மகள் இறந்து விட்டாள் அனால் அவளுக்கு லிப்ஸ்ட்டிக் போட்டு முகத்தில் கொஞ்சம் லிப்ஸ்டிக்கால் சிலது வரைந்து வெள்ளை கர்சிப்பில் ஒத்தி எடுக்கும் போது அவனின் அளவுகடந்த ஓவியக்காதலை புரியவைக்கு காட்சி....

படத்தின் ஒவ்வோரு பிரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும்.. அப்படி ஒரு ரசனையான காட்சிகள்.. ஒவ்வோரு ஒளிப்பதிவாளரும் ஓவியக்கல்லூரி மாணவர்கள்..விஷுவல் கம்யூணிகேஷன், மற்றும் எலக்ட்ரானிக் மீடியா மாணவர்கள் அவசியம் பார்த்தே தீர  வேண்டிய படம்.

 எந்த காட்சியும்  தேவையில்லாமல் பிரேமை நகர்த்தாமல் படம் பிடித்து இருக்கின்றார்கள்..அதுவே படத்துக்கு அழகு...

காரில் போய் பெயின்ட் கொட்டி தனது ரசனைக்கா உயிர் இழப்பவனையும் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது..
 
படத்தில் ஆங்காங்கே பிறப்பகுதியில் வெறுமை போக்க அவர்கள் பிரச்சனைகளில் காமெடியை கலந்து இருக்கின்றார் இயக்குனர் கிட்டானோ.....


படத்துக்கு சம்பந்தம்  இல்லாத இரண்டு படங்கள் இருக்கும் ஒரு ஆமை படம் மற்றும் ஒரு வரைபடம் அதுதான் படத்தின் அடி நாதம்..
=========================
படத்தின் டிரைலர்..


=============================
படக்குழுவினர் விபரம்..


Directed by     Takeshi Kitano
Produced by     Masayuki Mori
Written by     Takeshi Kitano
Starring     Beat Takeshi
Kanako Higuchi
Omori Nao
Aso Kumino
Ren Osugi
Music by     Yuki Kajiura
Cinematography     Katsumi Yanagishima
Editing by     Takeshi Kitano
Studio     Bandai Visual
Tokyo FM
TV Asahi
WOWOW
Distributed by     Tokyo Theatres
Office Kitano
Release date(s)     September 20, 2008
Country     Japan
Language     Japanese

=================
பைனல்கிக்.
 
இந்த படத்தை கலைஞர்கள் அத்தனை பேரும் பார்த்தே தீர வேண்டிய படம்..மயக்கம் என்ன படத்தின் சாயலோ என்று எனக்கு மனதில் தோன்றியது..இந்த படத்தை எனது நண்பர் ஓவியக்கலைஞரும் லலித்கலா அக்காடமியே பழியாக கிடைக்கும் நாரயணனுக்கு இந்த படத்தை சமர்பிக்கின்றேன்...உலகை வேறு விதமாக ரசனையோடு பார்க்க  எனக்கு கற்றுக்கொடுத்த மனிதர் அவர்...தற்போது கெஸ்ட் லேக்சரராக பல கல்லூரிகளில்  பணிபுரிகின்றார்.. நல்ல ஆசிரியர்...தற்போது சொந்தமாக ஸ்டுடியோவும் வைத்து இருக்கின்றார்...கலைநயமிக்க ஓவியங்கள் வாங்க.. மற்றும் அவரை அனுக 9840354715... இந்த படம் சென்னை மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது...


=======================

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

9 comments:

 1. அழகான அருமையான திரைப்படத்தின் மதிப்பைச் சொல்லும் சிறப்பான திரைவிமர்சனம்.

  "" கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு மிஷ்கின் எனக்கு சினிமா கத்துக்கொடுத்தது அகிரா குரோசேவா மற்றும் டக்கிஷி கிட்டானோதான் என்று சொல்லுவாரே... அந்த டக்கிஷி கிட்டானோ இயக்கி நடித்த படம்தான் achille et la tortue....""

  இவரை பற்றி சில நாட்களுக்கு முன்புதான் கேள்விபட்டேன்.அதற்குள் ஒரு நல்ல படத்தின் விமர்சனம் + அறிமுகம் வழங்கிவிட்டீர்கள்.
  நன்றி மற்றும் (வாழ்த்துவதற்கு வயதும் இல்லை அனுபவமும் இல்லை..)
  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அருமையான விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி.

  ReplyDelete
 3. சூப்பர் ஜாக்கி...விமர்சன நடையில் அழகு தெறிக்கிறது..கீப் இட் அப்..!!

  ReplyDelete
 4. இப்பதான் இன்னொரு இடத்தில் எழுதினேன் ஜாக்கி எழுத்துப்பிழைகளை குறைத்து வருகிறார் என. ஆனால் இந்தப் பதிவில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள். கொஞ்சம் கவனிக்கவும் நண்பரே....

  மேலும் மிக மிக முக்கியமாக ஆங்கில கலப்பை முடிந்தவரை குறைக்கவும்.

  (உம்.) பிஸினஸ் லாஸ் - இதை வியாபாரத்தில் நஸ்டம் என உங்களால் எழுத முடியும். இது சதாரணமாக புழங்கக் கூடிய வார்த்தைகள் தான்.

  புரிதலுக்கு நன்றி.

  ReplyDelete
 5. நானும் படித்திருக்கிறேன். மணிரத்னம் 'அப்படியே இரு அசையாதே' என்று வெயில் சுகாசினியின் முகத்தில் விழுவதை ரசிச்சதை பேட்டியில் சொல்லியிருப்பார்.

  ReplyDelete
 6. நன்றி நண்பர்களே..
  நன்றி மணிஜி..
  நன்றி குமரன், சில்டு பீர், ராசா..

  ReplyDelete
 7. நல்ல பதிவு,படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

  ReplyDelete
 8. nandri jacki anna padam partha niraivu ungal pathivai padithu mudithavudan

  ReplyDelete
 9. @Jackie sir :

  Sathiyama sollunran unga Review paathu mnthly naan 7GB to 8GB hard a fill up pannuran !! yow unga review awesome ya !!

  Regards
  M.Gazzaly
  (http://greenhathacker.blogspot.com)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner