சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்

ஆல்பம்
ஹெலிகாப்டரில் வெள்ள  சேதங்களை பார்வையிட்டு விட்டு சென்னை சாலைகளை புதுப்பிக்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கின்றார் முதல்வர் ஜெ..
காண்டிராக்டர்கள்.. பத்து சதவீதம் சாப்பிட்டு மிச்சத்தில்  ரோடு போட்டால், அடுத்த மழையை தாங்கும்.. இல்லையென்றால் நடுவில்   பெய்யும் கோடைமழைக்கு கூட தாங்காது பார்போம்..
========
 புதிய தலைமைசெயலகத்தில் இருந்து பழைய தலைமைசெயலகத்துக்கு மாற்ற ஜெ சொன்ன காரணம்..இன்னும் பிதிய தலைமைசெயலகம் கட்டி முடிக்கபடவில்லை...அதனால் நாங்கள் பழைய தலைமைசெயலக்த்துக்கு மூட்டை முடிச்சிகளுடன் போகின்றோம் என்று சொன்னார்கள்.. 

அதுக்கும் தீவிர இணைய ரர நடுநிலையாளர்கள்.. அமாம் சாமி போட்டார்கள்.. ஆனால் கொடை  நாட்டில் இருந்து தமிழக அரசு பணிகளை கவனிக்கவும் அங்கேயே 50 அதிகாரிகள் தங்கி வேலை பார்க்கவும் வேலை நடக்கின்றதாம்.. இதுக்கு செலவிடப்பட்ட மக்கள் வரிப்பணம் 50 கோடியாம். ஆக முதல்வர் பணிகளை கவனிக்க ஒரு பெரிய பங்களா அளவு இடம் இருந்தால் போதும்..ஆனால் பல எக்கரில் கட்டப்பட்ட புதிய செயலகம் இடம் பற்றாக்குறையாம்...என்ன கொடுமை சரவணன் இது... ஆனால் திடிர் என்று கொட நாடு டிரிப்பை கேன்சல் செய்துவிட்டார்.. நமது முதல்வர்...
================
எப்ப பார்த்தாலும் மாசத்துக்கு ஒரு ஒரு வாட்டி சுப்ரீம் கோர்ட்டை கதவை தட்டி நறுக்கென்று கொட்டு வாங்கி கொண்டு திரும்புவது..தமிழக அரசுக்கு வாடிக்கைஆகிவிட்டது...

சுப்ரீம் கோர்ட் 13,000 சாலைபணியாளர்கள் இடை நீக்கம் செய்யபட்ட விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்து விட்டு , யோவ் தமிழ்நாட்டுல அங்க என்னதான்யா நடக்குது என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள்..இந்த கேள்வியை முதல்வர் ஜெ சற்றும் எதிர் பார்த்து இருக்கமாட்டார்..
==============
சென்னையில் காணாமல் போன ஒயிட் போர்டு பேருந்துகளை இப்போது நிறைய பார்க்க முடிகின்றது..பொதுமக்கள் எதிர்ப்புக்கு ஆக்ஷன் எடுத்த  போக்குவரத்து அதிகாரிகளுக்கு நன்றிகள்..
=================
முல்லைபெரியாறு அணை விவகாரம் நினைத்தபடி சூடு பிடித்து விட்டது.. டேம் 999 படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அடுத்த நொடியே.. அங்கு  எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி ஒன்று கூடினார்கள்...புதிய அணையை கட்டியே தீருவோம் என்று சூளுரைக்கின்றார்கள்.. அவர்கள் ஒற்றுமையை  வாழ்த்துகின்றேன்.. நல்லவேளை கலைஞர் ஆட்சியில் இல்லை, அவர் மட்டும் இருந்து இருந்தால் தமிழின துரோகி ஆகி இருப்பார்... பார்ப்போம் பொறுத்து இருந்து என்ன நடக்கின்றது என்று???தமிழர் நலம் காப்பவர்கள் என்ன செய்ய போகின்றார்கள் என்று??
=============
இதையும் சிரித்து ரசிக்கதான்..====================
மிக்சர்...
பிசியாக போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில்  சாலைக்கு நடுவில் எருமை மாடு நகராமல் உட்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும்?? அது போல மெட்ரோ ரயில் பிராஜக்ட்டுகள் சென்னை சாலைகளுக்கு நடுவில் இருந்து கொண்டு பெருத்த இம்சை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன..என்னைக்கு முடிச்சி, என்னைக்கு ரயில் போவுமோ? சாலை எப்போது பிரியா இருக்குமோ ? என்று கவலையாக இருக்கின்றது.
======
எதிரில் பைக்கில் போகின்றவர் திடிர் என்று காரணம் தெரியாமல் அலறினால் பின்னால் பயணிக்கும் உங்களுக்கு எப்படி இருக்கும்?? அவர் கட்டு பாட்டை இழந்து எதிரில் இருக்கும் ஆட்டோவில் போய் இடித்து விட்டார்... பின்னால் போன எனக்கு மட்டும்தான் காரணம் தெரியும்.... காரணம் அவரால் நானும் பாதிக்கபட்டேன்... அவரது வண்டியின் பெட்ரோல் டேங்  கவரில் எலி  ஒன்று இருந்து இருக்கின்றது.. வண்டி போக போக பயந்து போய் அவர் மேல் ஏற அவர் அலற அதனை தட்டி விட என் மேல் விழ  வர நான் சாதூர்யமாக வண்டியை திருப்பி அதன் திடிர் அன்பில் இருந்து தப்பித்தேன்..மாரல் வண்டியை எடுக்கும் போது டேங் கவரை மழை காலங்களில் செக்  செய்யுங்கள்.. மழை காலத்தில் மூன்று நாட்களுக்கு மேல் மவுன்ட் ரோடு, பாரிஸ், மாம்பலம், சத்தியம், போரூர் என்று பல இடங்களுக்கு ஒரு நத்தை என் பைக் முன்பக்க பம்பரில் உட்கார்ந்து நான் போகும் இடமெல்லாம் பயணித்துக்கொண்டு இருந்தது..எனக்கு பிரச்சனை இல்லை என்பதால் அதனை ஒன்றுமே செய்யவில்லை...பயணகளைப்பில் மழை ஓய்த ஒரு பொழுதில் சொல்லிக்கொள்ளாமல் இறங்கி போய் விட்டது...

 ==============
சைதை ராஜ் தியேட்டரில் படம் முடித்து இரண்டு நாளைக்கு முன் நைட்டு ஒரு மணிக்கு சைதாபேட்டை  பாலத்தை கிராஸ் செய்து, ராஜ்பவன்  வழியாக அந்த கார் அடையாற்றை நோக்கி பயணித்து   கொண்டு இருக்கும் போது ஊய் என்று பெருந்த  சத்தம் கேட்டது...நான்  திரும்பி பார்த்தேன்.. அந்த  கார் வெளிநாட்டில் பிறந்து இறக்குமதி செய்த கார் என்று மட்டும் பார்த்த உடன் தெரிந்து போனது...காரில் மேல் பக்க டாப் திறந்து அதன் வழியாக வெள்ளை பனியனை மட்டும் போட்டுக்கொண்டு தனது கவர்ச்சி பிரதேசங்களை வேகமான குளிர்காற்று தொட்டுக்கொள்ள அனுமதித்து இருந்தாள் அந்த இளம் பெண்..... பெரிய ஓவர்கோட்டை தலைக்கு மேல் சுற்றிக்கொண்டு இருந்தாள்...அனேகமாக அந்த  உற்சாகத்துக்கு சில மணிநேரத்துக்கு முன் ஜின் அல்லது பவுடர் உபயோகபடுத்தி இருக்க அனேக வாய்ப்புக்ள் இருக்கின்றன... கார் போன வேகத்துக்கு கவர்னர் பில்டிங் உள்ளே  உடைத்துக்கொண்டு தமிழக கவர்னரின் தூக்கத்தை கெடுத்து விடுமோ? என்று எனக்கு பயமாக இருந்தது..
=========
மை கிளிக்ஸ்

போரூர் குன்றத்தூர் சாலையில் பார்க்கிங் செய்ய போக்குவரத்து போலிசார் இடத்தை ஒதுக்கி இருக்கின்றார்கள்..அங்கே வித்யாசமாக பார்க் செய்து இருக்கும் அம்பாசிட்டரை பாருங்கள்
=========
இணையத்தில் ரசித்த கிளிக்ஸ்
===============
இந்தவாரகடிதம்.
dear friend vanakkam.,last command i forgett to note the web site of l.ramp here under!!! .you [mr.subash]may contact. sorry for the delay...
thanks to j.sekar... if you need more details please contact.me s.n.ganapathi..155.8th main road, sankarankvoil.627756.tirunelveli dt. 9994638863....i was submitted one innovation to this office and got money for pilot project.. so you can also... good luck..
L.RAMP....
For millions of people, life is a ceaseless struggle. All they have for support is their undying spirit. While most of us go about our lives unaware, a few struggle to make others’ lives easier! Through innovations that help to overcome problems people face.

The Lemelson Recognition and Mentoring Programme (L-RAMP), a joint initiative of IIT Madras & Rural Innovations Network, supported by The Lemelson Foundation, provides recognition and mentoring support to innovators.

How to Apply?
For first three categories:

Please provide the following details in English or in Tamil neatly typed in A4 size sheets:

1. Describe your product

2. How is your product new or innovative?

3. How will your product solve a problem in the society?

4. Personal Details (Name, Gender, Age, Education, Profession, Complete Postal Address & Phone Number)

For other categories:

Print out the downloadable application form from the website www.lramp.org

Last date for receiving Award Application:

Send your application to the following address:

The Coordinator
L-RAMP Innovation Awards 2007
2nd Floor, IC&SR Building,
IIT Madras, Chennai – 600 036
Phone: 044 – 2257 8389
Email: award2007@lramp.org
(Visit www.lramp.org for details on eligibility, selection criteria etc)

Note:

The materials provided along with the application will not be returned and L-RAMP will be committed to maintain the confidentially of the information.

Award Categories:
• L-RAMP Grassroots Innovator Award (for innovators who have no access to technology, funds and markets)

• L-RAMP Young Innovator Award (for innovators below 21 years of age)

• L-RAMP Woman Innovator Award (for women innovators)

• L-RAMP Enterprise Award (for innovation-based and commercially viable enterprises)

• L-RAMP Investor Award (for providing financial support in transforming an innovation to a viable enterprise)

• L-RAMP Journalist Award (for featuring the issues related to the innovation sector in print & electronic media)

• L-RAMP Lifetime Achievement Award (for lifetime contribution to innovation & entrepreneurship development)

Best Wishes From www.scholarshipsinindia.com

th120707
=======================
நன்றி ஹமரகானா.. என்கின்ற சிவனடியார் கணபதிசார்.. புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக உங்களை வெளிபடுத்துக்கொண்டதற்கு....

=============
பிலாசபி பாண்டி
 உழைத்துப்பார்.. அதிஷ்ட்டம் வரும்..
உறங்கிபார் கஷ்டம் வரும் ..
=================
நான்வெஜ் 18+


A doctor gets a visit from a patient who is not able to get an erection.

Doctor: Are you married?

Patient: No.

Doctor: Do you masturbate?

Patient: No.

Doctor: Do you visit prostitutes?

Patient: No.

Doctor: Do you have girlfriends?

Patient: No.

Doctor: ,அப்புறம் என்ன புடுங்கறதுக்கு, என்கிட்ட வந்தே??===============

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

15 comments:

 1. நத்தை.....பயணகளைப்பில் மழை ஓய்த ஒரு பொழுதில் சொல்லிக்கொள்ளாமல் இறங்கி போய் விட்டது...


  நல்ல ரசனை

  ReplyDelete
 2. அண்ணாச்சி அரசியலை ஆழமாகப் பார்த்தேன் இதற்குள் விழுந்து எழ முடியாமல் இருப்போரைப் பார்க்க சிரிப்பாக இருக்கிறது....

  நண் வெஜ் நல்ல வைத்தியரிடம் மாட்டுப்பட்டுள்ளார்... மழை இல்ல ஊரில் ரெயின் கோட் வைத்திருப்பது தப்பா..

  ReplyDelete
 3. I read yr website daily
  It is nice to read and sometime emotional
  hats of yr work.... & ever continue
  regards
  Kavitha Saran

  ReplyDelete
 4. I read yr website everyday
  It is so nice and sometimes emotional
  Ever continue yr writing...
  -Kavitha Saran

  ReplyDelete
 5. Now a days Jackie blog look like Murasoli ...
  No creative like before.. jackie what happend? why this Kolaveri ?

  ReplyDelete
 6. சுப்ரீம் கோர்ட் 13,000 சாலைபணியாளர்கள் இடை நீக்கம் செய்யபட்ட விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்து விட்டு.....sir athu makkal nala paniyalargal...otherwise superb...

  ReplyDelete
 7. nowadays, i could see lot of anti government or DMK supportive news in your site... it is good in some ways but goes overboard sometimes...

  ReplyDelete
 8. படித்தேன் ரசித்தேன் !!!

  ReplyDelete
 9. நன்றி நண்பர்களே...

  மதி, ரெயின் கோர்ட் வைத்து இருப்பது தப்பில்லை.. அதை நனைய விடாமல் வைத்து இருந்தால் பிரச்சனைதான்..

  போன ஆட்சியிலும் இப்படித்தான் எழுதிக்கொண்டு இருந்தேன்... அதை தொடர்ந்து படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு தெரியும்...

  ஹரி நல்லவேளை முரசொலின்னு சொன்னிங்க.. எங்க நீங்க நமது எம்ஜீயார்,துக்ளக்,தினமலர் போலன்னு சொல்லிடுவிங்களோன்னு பயந்துட்டேன்.

  I read yr website everyday
  It is so nice and sometimes emotional
  Ever continue yr writing...
  நன்றி கவிதா சரண்.

  நன்றி இளம்பரிதி தவறை சுட்டிக்காட்டியமைக்கு,... ஒரு புளோவுல எழுதிட்டேன்... அவுங்களும் இந்த அம்மாவால பாதிக்கபட்டவங்கதான் அந்த நினைப்புல எழுதிட்டேன்.. மன்னிக்க .......நன்றி..

  ReplyDelete
 10. //எப்ப பார்த்தாலும் மாசத்துக்கு ஒரு ஒரு வாட்டி சுப்ரீம் கோர்ட்டை கதவை தட்டி நறுக்கென்று கொட்டு வாங்கி கொண்டு திரும்புவது..தமிழக அரசுக்கு வாடிக்கைஆகிவிட்டது...// அடுத்தும் அவர் சும்மா இருக்கப் போவதில்லை...ஏதாவது செய்து வாங்கிக் கொள்வார். அடுத்து...நூலகம் தான்...

  ReplyDelete
 11. "பத்து சதவீதம் சாப்பிட்டு மிச்சத்தில் ரோடு போட்டால், அடுத்த மழையை தாங்கும்.. இல்லையென்றால் நடுவில் பெய்யும் கோடைமழைக்கு கூட தாங்காது" -- Superu Jacke.

  Check the below ,hope you like it
  Bicycle Father

  ReplyDelete
 12. முல்லை பெரியார் குறித்த உங்களது கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இதில் உங்களது அரசியல் கேலி நையாண்டி தேவையில்லாத்து. அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து போராட வேண்டிய விசயம் அது. வட தமிழகத்தை சார்ந்தவர் என்பதால் உங்களுக்கு அதன் பயன்பாடும் முக்கியத்துவமும் தெரியாமலிருக்க வாய்புண்டு. முல்லை பெரியார் பல மாவட்ட விவசாய மக்களின் வாழ்வாதாரம்,இன்றளவும் பென்னி குயிக் அவர்களுக்கு கடவுள் போன்றவர். முல்லை பெரியார் அணை பிரச்சணை போன மாதம் துவங்கயதல்ல, 70 களில் இருந்து உள்ளது. திமுக, அதிமுக இரு கட்சிகள் ஆண்ட போதும் நமது தரப்பு உரிமைக்காக பல போராட்டங்கள் நடந்துள்ளது. இது ஜெயலலலிதா, கருணாநிதி என்ற இரு நபர் போட்டிக்கு இடம் இல்லாத ஒன்று.பொதுவான ஒரு விடயத்தில் உங்களது கேலியை புகுத்தாதீர்கள். - அருண் சொக்கன்

  ReplyDelete
 13. பயணகளைப்பில் மழை ஓய்த ஒரு பொழுதில் சொல்லிக்கொள்ளாமல் இறங்கி போய் விட்டது...

  கிளாஸ்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner