சென்னை பிலிம்பெஸ்ட்டிவல் இனிதே தொடங்கியது என்றுதான் இதுவரை அந்த தகவலை பகிர்ந்து இருக்கின்றேன்...
ஆனால் தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னையில் நடக்கும் ஒரு சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற தமிழ் படங்கள் அதுவும் இந்திய சென்சார் போர்டு அனுமதி அளித்து பல விருதுகளை பெற்ற படங்கள் புறக்கணிக்கபட்டு இருக்கின்றன..
ஆனால் தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னையில் நடக்கும் ஒரு சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற தமிழ் படங்கள் அதுவும் இந்திய சென்சார் போர்டு அனுமதி அளித்து பல விருதுகளை பெற்ற படங்கள் புறக்கணிக்கபட்டு இருக்கின்றன..
அவற்றுள் முக்கியமானது.. செங்கடல் மற்றும் தென்மேற்கு பருவகாற்று போன்ற படங்கள் திரையிட அனுமதி அளிக்காமல் புறக்கணிக்கபட்டது என்பதுதான் போராட்டத்துக்கான அடிப்படை..
நேற்று சென்னையில் தொடக்கவிழா நிகழ்சி நடந்து கொண்டு இருக்கும் போதே....திடிர் என்று கூட்டத்தில் பெரிய சலகலப்பு...எடிட்டர் லெனின்,லீனா மணிமேகலை போன்றவர்கள் தங்கள் குழுவினருடன் அரங்கத்தின் உள்னே வந்து போராட்டத்தை நடத்தினார்கள்...
அதில் சர்வதேச படவிழவில் தணிக்கையை அனுமதிக்காதே.. தமிழ்படத்தை தமிழ்நாட்டு திரைப்படவிழாவில் திரையிட முடியவில்லை என்றால் இலங்கையிலா திரையிட முடியும்? என்பதாக கோஷங்கள் மற்றும் எதிர்ப்பு அட்டைகள் தாங்கி பிடித்து போராட்டம் நடைபெற்றது..
இதனை விழாக்குழுவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை...போராட்டம் செய்தவர்களை என்ன செய்வது என்று கை பிசைந்து கொண்டு நின்றார்கள்.. காரணம் எடிட்டர் லெனின் போராட்டகாரர்களில் ஒருவர்...அதன் பின் நடிகர் சரத்குமார் தலையீட்டு உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது..
அடுத்து பேச வந்த விழாவின் நாயகன்....இயக்குனர் சேகர்கபூர்படம் எடுத்து அந்த படம் திரையிட முடியவில்லை என்றால் அதை விட் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது என்றும்.. தான் எடுத்து பாண்டிட்குயின் படம் இது போல ஒரு எதிர்ப்பை சந்தித்தது என்று சொன்னார்...
படம் ஆரம்பிச்ச 15 நிமிடத்துக்கு மேல யாரு வந்தாலும் உள்ள விடமாட்டேன் என்று அறிவிப்பை வைத்தார்கள்..இப்போது தியேட்டரின் சைடு கதவு வழியாக விடுவோம் என்று சொல்லி இருக்கின்றார்கள்..பர்மிஷன் எல்லாம் போட்டு விட்டு படம் பார்க்க வருபவர்கள் 20 நிமிடம் லேட்டாக வந்து விட்டார்கள் என்று காரணம் காட்டி உள்ளே அனுமதிக்காமல் இருப்பது கேவலம்...
போன முறை போல இந்த முறை வாலின்டியராக பெண்களை போடாமல் இந்த முறை தடி தடி ஆம்பளை பசங்களை போட்டு விட்டதால், படம் பார்க்க வந்த ரசிகர்களை.. பச்சை கலர் சட்டை போட்ட வாலிண்டியர் பசங்க..ஏதோ இந்திய பிரதமர் பதவியே தனக்கு கொடுத்து விட்டது போல முதல்நாள் எல்லோரிடமும் எகிற...பலர் சண்டைக்கு வரிந்து கட்டிக்கொண்டு சென்றதால் இப்போது அடங்கி இருக்கின்றார்கள்..
முன்பு போல செல்போன் ரிங்டோன் அதிகம் படம் பார்க்கும் போது டிஸ்டர்ப் செய்யவில்லை என்பது பெரிய ஆறுதல்.. அந்த விஷயத்தில் அந்த பச்சைகலர் டிசர்ட் போட்ட வாலின்டியர்களை பாராட்டியே ஆக வேண்டும்..
இந்த முறை 25 லட்சம் தமிழக அரசு சார்பாக இந்த விழாவுக்கு முதல்வர் ஜெ கொடுத்து இருக்கின்றார்கள்.
வழக்கம் போல சந்தானபாரதி,ரமேஷ்கண்ணா,பாத்திமாபாபு,சீஆர் சரஸ்வதி,போன்றவர்கள் ரசிகர்களுடன் ஆஜர்..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
come here from Malaysia =)
ReplyDeleteதிரைப்பட விழாவில் நீங்கள் பார்க்கும் எல்லா படங்களின் விமர்சனங்கள் விரைவில் பதிவு செய்வீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteExpecting more reviews!!!!!!!!
ReplyDeletethanks
senthil,doha
Expecting more reviews
ReplyDeletesenthil,doha
திரைப்பட விழாவில் நம்மவர் படங்கள் ஓரங்கட்டப்படுவது வேதனையே.
ReplyDeleteதிரைப்பட விழா என்றாலே வில்லங்கம் இருக்கத்தானே செய்யும் .
ReplyDelete- என்றும் இனியவன்.
நமது தமிழ் திரைப் படங்கள் எப்போது வருமோ!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில் :
"நீங்க மரமாக போறீங்க..."
உரிமை இழந்தால் வாழ்வு இழப்பாய் தமிழா.... உரிமைக்கு இன்று உழைக்க மறுத்தால் நாளை வாழ்வே இழக்க நேரும். ஓன்றுசேர்வோம்,ப போராடுவோம்..... உரிமை காப்போம்
ReplyDeleteதமிழுக்கு எங்க போனாலும் மதிப்பே இல்லையோ..கொடுமையால்ல இருக்கு:(
ReplyDelete