கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி எந்த குடி? சாட்சாத் தமிழ்இனம் என்று தமிழர்கள் அத்தனை பேரும் கோரசாக சொல்லுவார்கள்..
ஆனால் அதே தமிழ் இனம் இப்போது அந்த பெருமைக்கு ஏற்றது போல நடந்த கொண்டு இருக்கின்றதா?? என்றால் வேதனையுடன் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்..தமிழர்கள் பெருமைகள் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள காலத்தில் சிறப்பாகவே விளங்கியது.. வீரத்துக்கு கலாச்சாரத்துக்கும் நாகரிகத்துக்கும் குறைவில்லை...இன்றும் ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலும், கல்லனையும் அதன் சாட்சிகள் என்பேன்..மகாபலிபலிபுர கடற்கரை கோவில்கள், கங்கை கொண்ட சோழபுரம், கடராம் கொண்டான் என்று பெருமை பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகின்றன...
ஆனால் கிழக்கிந்திய கம்பெனியால் ஒருங்கினந்த இந்தியாவாக உருவாகிய பின் தமிழ்நாட்டுக்கு இறங்கு முகம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்..
ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு கட்டபொம்மன் இராணி மங்கம்மாள், என்று போராட்டகுணம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அத்தி பூத்தது போல இருந்ததையும் நாம் மறுக்கமுடியாது மறக்கவும் முடியாது..
1975க்கு பிறகு ஈழத்தில் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஈழத்தில் நால்வகை படைகளை வைத்துக்கொண்டு 13 வருட காலம் சிறப்பான ஆட்சி நடைபெற்றது...ஆனால் அதுவும் வஞ்சகத்தினாலும் ,பச்சை துரோகத்தினாலும் நான்காம் கட்ட ஈழப்போரில் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்தியா முழுவதும் நடந்த சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள் பங்கு மிகவும் குறைவுதான்...
சரிஇப்போது பழங்கதை பேசி இப்போது என்ன ஆகப்போகின்றது...?? சரி ஏன் தமிழக மக்களிடம் எந்த விஷயத்துக்கு பெரிய ரியாக்ஷன் இல்லாமல் ஜஸ்ட் லைக்தட்டாக கடந்து போக முடிகின்றது...
ஏன் எதை பற்றிய அக்கரையும் நம்மிடத்தில் இல்லை...??
சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் நம் உரிமைகளை பல இடங்களில் விட்டுக்கொடுத்துக்கொண்டேதான் வருகின்றோம்?? உண்மையில் பெருந்தன்மையா? அல்லது அலட்சிய மனோபாவமா? ஏன் இந்த அலட்சிய போக்கு நம் மக்களிடம்.??
ஈழத்தை பிரச்சனை பற்றி ஒரு சின்ன விஷயத்தை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்...
இந்திய குடிமகனா இந்திய பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு மத்திய அரசை மீறி யாராலும் எதையும் செய்ய முடியாது..அது கலைஞராக இருந்தாலும் ஜெயலலிதாவாக இருந்தாலும்,வைகோவாக இருந்தாலும் பழ நெடுமாறானாக இருந்தாலும், இதே நிலைமைதான்... ஆனால் ஒருவருக்கு ஒருவர் குறை மட்டும்குறிக்கொள்ளலாம்..உண்ணாவிரதம் இருக்கலாம்,மனிதசங்கிலி போராட்டம் நடத்தலாம்,அடையாள வேலைநிறுத்தம் செய்யலாம் அவ்வளவுதான்..மத்திய அரசை மீறி எதுவும் செய்ய முடியாது...
எந்த தமிழக முதல்வரும் சூப்பர் மேன் அல்ல...அவர்கள் இந்யி நாட்டின் மாநில முதல்வர் என்பதை முதலில் புரிந்துக்கொள்ளவேண்டும்..அதெல்லாம் விடுங்க.. நம்ம தமிழக மீனவர்களை இலங்கை ஆர்மி பொரட்டி போட்டு தினமும் சுளுக்கு எடுத்து அனுப்பிகிட்டுதான் இருக்காங்க..கலைஞராலோ அல்லது அவரை விட தைரியமானவர் என்று பெயர் பெற்ற ஜெயலலிதாவாலோ ஏதாவது செய்ய முடிஞ்சிதா??? கடிதம் மட்டும்தான் எழுத முடியும்..தமிழக எம்பிகள் மத்திய அரசை கொஞ்சம் நிர்பந்திக்கலாம்.. அது கூட காதில் போட்டுக்கொள்ளவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை..
காரணம் இரண்டு கட்டசிகளுக்குள் ஒற்றுமை இல்லை.. இரண்டு கட்சி எம்பிகளும் சேர்ந்து குரல் கொடுத்தால் ஒரளவுக்கு செவி சாய்க்கலாம்...ஆனால் சாரயக்கடைக்கு செல்லும் போது கவுரவம் கருதி தனி தனித்தனியாக முக்காடு போட்டுக்கொண்டு செல்வது போல தனி தனியா போய் பிரதமரை பார்த்து விட்டு விருகின்றார்கள்..
இதுதான் தமிழகத்தின் நிலை.. ஆனால் அப்படி கடுமையாக நிர்பந்திக்க மக்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை.. 3 லட்சம் தமிழர்கள்.. நான்காம் கட்ட ஈழப்போரில் இறந்த போது நாம் எதுவுமே நடக்காதது போல வழக்கமான வேலைகளைதான் செய்து கொண்டு இருந்தோம்..தமிழகத்தில் இருக்கும் குடும்பத்தில் இருந்து வீட்டுக்கு ஒருவர் வீதிக்கு வந்து இருக்க வேண்டும்.. அது மட்டும்தான் மத்திய அரசு நித்திரை கலைக்க எளிய வழி..
இதில் கவனிக்கபடவேண்டிய விஷயம்..உதாரணத்துக்கு நீங்கள் வசிக்கும் நகரை எடுத்துக்கொள்ளுவோம்.. அதில் வசிக்கும் அனைவரும் தமிழர்கள்தான் என்று வைத்துக்கொள்ளுவோம்......மூன்றாவது வீட்டில் வசிக்கும் உங்கள் ரத்த உறவுக்கு ஏதாவது ஆனால் பதறி அடித்து ஓடுவீர்கள்..அதையே உங்கள் அடுக்குமாடி குடியிறுப்பில் யாருக்காவது பிரச்சனை என்றாலும் அடித்து பிடித்து ஓடுவீர்கள்..
உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பிரச்சனை என்றால் ரத்தம் கொதிக்கும்..ஆனால் நான்கவது தெருவில் ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால் என்ன செய்வீர்கள்.. வருத்தபடுவீர்கள்..அல்லது ஒரு செய்தியாக பாதிக்கும்... அது போலதான் ஒட்டு மொத்த தாய் தமிழர்களும் ஈழத்தில் நடந்த நான்காம் கட்ட ஈழபோரில் 3 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது நடந்து கொண்டார்கள்....எந்த எதிர்ப்பும் மக்கள் எழுச்சியும் இல்லை..ஈழமக்களோடு தாய்தமிழர்கள் பெரிதான ஈடுபாடு இரண்டு பேருக்குமே இல்லை என்பதும் பொதுவான காரணம்.. நாலாவது தெருக்காரன் என்ற மனோபாவம்......
சரி அது எல்லாம் அடுத்த நாட்டு பிரச்சனை மத்திய அரசை மீறி எதையும் செய்ய முடியாது??
சரி விஷயத்துக்கு வருவோம்...
உதாரணத்துக்கு ஒரு வாரத்துக்கு மேல் தமிழக கேரள எல்லையில் பிரச்சனை காட்டு தீ போல பரவிக்கொண்டு இருக்கின்றது...ஆனால் மத்திய அரசு அது பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை காரணம் பிரச்சனை நடப்பது தென்இந்தியாவில்.. பொதுவாகவே வட இந்திய மக்களின் பார்வை தென் இந்தியர்கள் மேல் சற்று வெறுப்பாய்தான் இருப்பார்கள்..அதான் பிரச்சனை..பம்பாயில் பிரச்சனை என்றாலோ பஞ்சாப்பில் பிரச்சனை என்றாலோ இன்னேரம் தன் எம்பிக்களை அனுப்பி பதட்டத்தை தணிக்க சொல்லி இருப்பார்.. நடப்பது தமிழ்நாட்டில்....
போதும் போதும் என்ற அளவுக்கு தமிழர் பெருமைகளை பறை சாற்றியவர்கள்தான் நம்மவர்கள்..
நான்காம் கட்ட ஈழப்போருக்கு பின் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்டா என்று தமிழர்கள் நிந்திப்பது இப்போதெல்லாம் பேஷனாகிவிட்டது...காரணம் ஒற்றுமை இல்லாமை...
கலைஞர் சட்டசபைக்கு போனால் ஜெ போக மாட்டார்... ஜெ போனால் கலைஞர் போகமாட்டர்.தமிழகத்தில் இந்த இரண்டு கட்சிகள்தான் மாற்றி மாற்றி மக்களை ஆள்கின்றன..ஆனால் இது குறித்து எந்த தமிழனும் கவலை கொண்டதில்லை...நியாயமான விவாதம் மக்களுக்கான விவாதம் என்று சட்டசபை மற்றும் நாடளுமன்றத்தில் விவாதிப்பதே இல்லை..
சரி பொதுமக்களாவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நலனுக்காவது விட்டுக்கொடுக்காமல் குரல் உயர்த்தி இருப்பார்களா? என்றால் இல்லை....
முல்லைபெரியாறு பிரச்சனையை பற்றி வடதமிழ்நாட்டில் இருக்கும் யாருக்கும் அதன் அடிப்படை பிரச்சனை யாருக்கும் தெரியவில்லை...அதனால்
நமக்கும் கவலை இல்லை எதிர்ப்பும் இல்லை...
காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழகத்துக்கு 141 டிஎம்சி தண்ணீர் வழக்க கார்நாடகாவுக்கு ஆனை இடுகின்றது.. ஆனால் அதை நடைமுறைபடுத்தவில்லை... நமக்கு அது பற்றிய கவலையும் இல்லை எதிர்ப்பும் இல்லை...
முல்லைபெரியாறு அணை பலத்தை நிபுனர் குழு வைத்து ஆராய்ந்து அணைக்கு பாதிப்பில்லை நல்ல நிலையில் இருக்கின்றது 142அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கேரளா மறுக்கின்றது.. ஆனால் நமக்கு அது பற்றிய கவலையும் இல்லை எதிர்ப்பும் இல்லை...
தொடர்ந்து நமது மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கபடுகின்றார்கள்..ஆனால் நமக்கு அது பற்றிய கவலையும் இல்லை எதிர்ப்பும் இல்லை...
தொடர்ந்து தமிழகத்தில் இந்திய ரெயில்வே பணியிடங்களில் இருந்து ,ரயில் போக்குவரத்து வரை மாற்றதாய் மனப்பாண்மையுடன்தான் தொடர்ந்து மத்திய அரசு நடந்து வருகின்றது ஆனால்
நமக்கு அது பற்றிய கவலையும் இல்லை எதிர்ப்பும் இல்லை...
சாலை சரியில்லையா? சாலை வரி வசூலிக்கின்றீர்களே? ஏன் சாலை போடவில்லை...
நமக்கு அது பற்றிய கவலையும் இல்லை எதிர்ப்பும் இல்லை...
நெடுஞ்சாலைகளில் விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றது... ஆனால் நமக்கு அது பற்றிய கவலையும் இல்லை எதிர்ப்பும் இல்லை...
இந்தியா முழுவதும் லஞ்சத்தில் திளைத்து போய் கிடக்கின்றது ஆனால் நமக்கு அது பற்றிய கவலையும் இல்லை எதிர்ப்பும் இல்லை...
நாடளுமன்றம் பாதி நாட்கள் அமளியிலேயே ஒத்தி வைத்து வைத்து ஒத்து வைத்து, கூட்டத்தொடர் முடிந்து போய் வீடுகின்றது..மக்கள் பிரச்சனைகள் விவாதிக்கபடுவதேஇல்லை...ஆனால் நமக்கு அது பற்றிய கவலையும் இல்லை எதிர்ப்பும் இல்லை...
இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்....அப்படி சொல்லிக்கொண்டே சென்றால் பல பக்கங்களை எழுதிக்கொண்டே செல்ல வேண்டியதுதான்...
ஏன் தமிழர்கள் ரொம்ப சென்சிட்டிவ் பிரச்சனையுல் கூட யார் வீட்டு எழவோ பாய போட்டு அழுவோ என்பது போல இருக்கின்றோம்??
எந்த ஒரு தலைப்போகும் விஷயத்திலும், ஏருமை மாடு மேல் மழை பேய்தது போல எது பற்றியும் கவலை கொள்ளாமல் இருக்கின்றோம்...??
பதில் அடுத்த பதிவில்...
தொடரும்..........
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
//இந்தியா முழுவதும் நடந்த சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள் பங்கு மிகவும் குறைவுதான்//
ReplyDeleteஇல்லை ஜாக்கி. தமிழர்களின் பங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தொகுத்த விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். எண்ணற்ற தமிழர்கள் விடுதலை வேள்வியில் பங்கெடுத்திருக்கிறார்கள். தேவையானால் நீங்கள் ஈரோடு சங்கமத்துக்கு வரும் போது அந்தன்புத்தகம் உங்களுகுக் கிடைக்கச் செய்கிறேன்.
Ask. கேட்டால் கிடைக்கும்.
ReplyDelete//
ReplyDeleteமுல்லைபெரியாறு அணை பலத்தை நிபுனர் குழு வைத்து ஆராய்ந்து அணைக்கு பாதிப்பில்லை நல்ல நிலையில் இருக்கின்றது 146 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கேரளா மறுக்கின்றது..//
146 அடி இல்லை. 142 அடி
எனக்கும் இது விடை தெரியாத கேள்விதான். ஏன் தமிழர்கள் போராட்ட குணத்துடன் இல்லை. எனக்குத் தோன்றிய விஷயம்... ஒருங்கிணைக்க சரியான தலைவர்கள் இல்லை என்பதுதான். இன்றைய தலைவர்கள் அனைவருமே சுயலாபத்துக்காக ஒற்றுமை இன்றி இருக்கிறார்கள். உங்கள் தொடரும் பதிவுகளைப் பார்த்துவிட்டு முடிவுக்கு வரலாம்.
ReplyDeleteசமுக போராட்டங்களின் தமிழ் மாணவர்களின் பங்கு மிகவும் குறைந்தது விட்டது என்பது இன்னுமொரு வருத்தம். பெருமாள் முருகன் அவர்களின் இந்த கட்டுரை அதைப்பற்றி சிறிது விளக்குகிறது
ReplyDeletehttp://www.perumalmurugan.com/2011/08/blog-post_14.html
//கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே...//
ReplyDeleteஒரு சின்ன திருத்தம்... அது "கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே". அதாவது கல் உடைந்து மண் தோன்றும் முன் (அறிவியல் - Science). நாம இந்த விளக்கத்தை எல்லாம் ஏளனமாகவும் இளக்காரமாகவும் தான் இன்றும் பார்க்கிறோம்.
//ஆனால் கிழக்கிந்திய கம்பெனியால் ஒருங்கினந்த இந்தியாவாக உருவாகிய பின் தமிழ்நாட்டுக்கு இறங்கு முகம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்..
ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு கட்டபொம்மன் இராணி மங்கம்மாள், என்று போராட்டகுணம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அத்தி பூத்தது போல இருந்ததையும் நாம் மறுக்கமுடியாது மறக்கவும் முடியாது..//
சொல்லப்போனால், கிழக்கிந்திய கம்பெனியால் சிறப்பாக பராமரிக்கப்பட்ட பாகம் இந்தியாவின் தென் பாகம் தான்... ஏனென்றால் இந்தியாவின் மற்ற பாகங்களை விட இங்கிருந்து தான் அவர்களுக்கு தேவையான அனைத்தும் (தங்கத்தில் இருந்து தின்னும் உணவின் சுவை கூட்டும் மசாலா வரையில் [சுக்கு, மிளகு, திப்பிலி, பூண்டு, மஞ்சள், etc]) விளைந்தது. மேலும் இந்த மசாலா வகை எல்லாம் சிறந்த மருந்து என்பது வெள்ளைக்காரனுக்கு தெரியும்... அதனால் தான் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் போது எல்லாம் இரும்புக்கரம் கொண்டு அடக்கினான்... ஆனால் வட இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் என்கிற ஒரு புரட்சியை நன்றாக விளம்பரம் செய்ததின் மூலம் வட இந்தியாவில் மட்டும் தான் புரட்சி தீவிரமாக நடந்தது என்றும் இங்கெல்லாம் ஒன்றுமே நடக்க வில்லை என்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது...
மேலும், தமிழனின் ஒரு மிகப்பெரும் குறை, தான் செய்கின்ற ஒன்றை சரியாக விளம்பரம் செய்யத்தெரியாதது தான்... உண்மையில் வெள்ளையனுக்கு எதிராக நடந்த புரட்சியில் மிகப்பெரும் பங்கு தமிழகத்திற்கு தானே தவிர, ஜாலியன் வாலாபாகிற்கோ வங்காளத்திற்கோ கிடையாது...
அண்ணா விரைவில் பாகம் -2 எழுதவும். அப்புறம் அதையும் சேர்த்து என் நண்பர்களுக்கு மெயில் அனுப்ப இப்பவே அனுமதி கேட்டுகிறேன்
ReplyDeleteநாம் தமிழன் ....உப்பு போட்டு காரசாரமா சோத்தை தின்னுப்புபுட்டு வெறியோட நிக்கிறது மாதிரி ,போக்கு காமிச்சிட்டு அப்புறம் தண்ணி(வெள்ளம்) அடிச்சிட்டு மட்டை ஆயிடுவாங்கி-இது தான் இன்றைய தமிழன் நிலை-ஜாக்கி அண்ணன் இந்த பக்கம் அனைத்து ஈர நெஞ்சோடு இருக்கும் மக்களின் மனக்குமுரளாக பார்க்கிறேன் -நெத்தி அடி -கதிர் ,ஆக்ஸ்போர்ட் ,ஐக்கிய ராஜ்ஜியம்
ReplyDeleteANANLUM NAMA ROMBA NALLAVANGA SIR..ATHAN IPPIDI PADA PADUTHURANGA
ReplyDeleteசுயநலமான வாழ்கை முறை தான் இந்த அவல நிலைக்கு காரணம் நீங்கள் சொன்னது போல் நாலாவது தெரு நிலைதான்
ReplyDelete@ஜாக்கி,
ReplyDeleteஇந்த பதிவை படித்த பின் வெட்கமாக இருக்கிறது. உண்மையில் என்ன செய்வதென்பதே தெரியாமல் தான் இருக்கிறோமே தவிர, அறிந்தும் செய்யாமல் இல்லை.
@மற்றவர்களுக்கு,
ஒரு உண்மையை நாம் உணரவேண்டும், இதை போல் ஒரு பதிவை படிக்கும் போதோ? அல்லது இதை போன்ற கருத்துக்களை கேட்கும் போதோ?. ஆமாம் பா இந்த தமிழர்களே இப்படி தான் பா. என்பதோ
அல்லது வேறு ஏதாவது கருத்து சொல்வதை விட, கருத்து நம்மைப் பற்றியது என்பதை உணரவேண்டும்.
அப்படி உணர்ந்தால், வெட்கபடுவதை தவிர சொல்வதற்க்கு ஒன்றும் இருக்காது.
பதிவுகள் பதிவுகளாக மட்டுமில்லாமல் வரலாற்றில் பதிபவைகளாக இருந்தால் நலம்.
Saran R
anna itherkana theervai nam than edukka vendum...peyarai tamilil vaikka thayangupavarkalum.. thamizha tamilnu soltravugalum irukkura varai ithuthan nadakkum.
ReplyDeleteஇது கசப்பான உண்மை..தெலுங்கு, மலையாளி போல நம்மிடம் ஒற்றுமையில்லை...பொறாமை உள்ளது....நான் இங்கு அமெரிக்காவில் வாழ்கிறேன்...இங்கு எங்கு பார்த்தாலும் தெலுங்கு, மலையாளி மக்கள் சொந்த பந்தங்களை மேலே கொண்டுவருவதில் முன்னே நிற்கிறார்கள். ஒருவன் இங்கே படிக்க வந்தால் தன்னை சுற்றயுள்ளவர்களை கொண்டு வந்து விடுகிறார்கள். தமிழன் பக்கத்தில் இருந்தால் கூட பேசிக்கொள்ள தோன்றுவதில்லை. அடிப்படையில் சுயநலவாதி ஆகிவிட்டான். நாம் உறவுகளுக்கு பதில் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. இதுதான் இன்றைய சமூக சீர் கேடுக்கு காரணம்.
ReplyDeleteஇந்த அணைப் பிரச்சினையைத தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதே மத்திய அரசுதான். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்திருந்தால் நம்மை விட அதிபுத்திசாலிகள் யாருமில்லை. கூடங்குளம் செயல்பட அனுமதித்தால், முல்லைப் பெரியார் விவகாரம் சந்தடி இல்லாமல் பெட்டிக்குள் போய்விடும். எந்த ஒரு அரசும் மக்களின் பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டுவராமல் இழுத்தடிப்பதே, அவைகளை தமக்குத் தேவையான நேரங்களில் உபயோகித்து பலன் பெறத்தான். ஓட்டுப் போடும் "புன்னகை மன்னர்களுக்கு" இதெல்லாம் புரியவே புரியாது.
ReplyDeletevilipunarvai erpaduthum pathivu ithu jackie anna
ReplyDeletenice post anna.. but i put my comments but it got signed out.. not sure what is the problem.. your writings are like an eye opener.. Very good....
ReplyDeleteதமிழ் மக்களளுக்குள் ஒற்றுமை வேண்டும்....
ReplyDeleteஉண்மை சாரா
ReplyDeleteநானும் அமெரிக்காவில் 16 வருடமாக இருக்கின்றேன்.இங்கு
தமிழர்கள் தமிழை பேச கூச்சப்படுகிறார்கள்.ஏன் தமிழ் நாட்டு தொலைக்காட்சியில் பாருங்கள்.இங்கிலீஷ் காரன் சுலபமா புரிஞ்சுப்பான் ஏன்னென்றால் 75% ஆங்கிலத்தில் தானே உரையாடுகிறார்கள்.ஒரு டி வி பாட்டு போட்டி நிகழ்ச்சியில் எல் ஆர் ஈஸ்வரி நடுவராக இருந்தார் ஒரு பெண் (அந்த பெண் தமிழ் நாட்டு சாதரண நகரித்தில் இருந்து வந்திருந்தார்)உச்சரிப்பில் சொதைப்பினார் நடுவர் விமரிசித்தப்போது தமிழ் பாட்டை ஆங்கிலத்தில் எழதி வைத்து படித்தாக கூறினார்.நம் தமிழ் நாட்டவர்களுக்கு முதலில் தாய் மொழி பற்று வரவேண்டும்
//பொதுவாகவே வட இந்திய மக்களின் பார்வை தென் இந்தியர்கள் மேல் சற்று வெறுப்பாய்தான் இருப்பார்கள்..அதான் பிரச்சனை..பம்பாயில் பிரச்சனை என்றாலோ பஞ்சாப்பில் பிரச்சனை என்றாலோ இன்னேரம் தன் எம்பிக்களை அனுப்பி பதட்டத்தை தணிக்க சொல்லி இருப்பார்.. நடப்பது தமிழ்நாட்டில்....// நீங்கள் மீடியா எதை விவாதிக்கிறதோ அதையே பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இன்று news channel களில் முதலிடத்தில் இருப்பது வட இந்திய channel தான். அவைகள் வடஇந்திய செய்திகளையே அதிகம் பேசிவருகின்றன. அவைகளுக்கு வியாபார முகம் என்று ஒன்று உண்டு. வருவாய் வடஇந்தியாவிலிருந்துதான். ஏன் தமிழ்நாட்டில் இருந்து இல்லையா என்றால்...சன் டிவி நெட்வோர்க்கில் இருபதுக்கும் மேற்பட்ட சேனல்கள் உண்டு. இலங்கைதமிழர் போர் அவல வீடியோவை ஒளிபரப்ப ஒரு அரைமணிநேரம் கிடைக்கவில்லையா? யோசியுங்கள். வடஇந்திய சேனல்கள் விரட்டப்பட்டவை புத்திசாலித்தனமாக. இன்றைக்கு news channelல் பேசப்படுபவை தேசிய நீரோட்டத்தில் முக்கியமான பிரச்னை என்ற பொதுப்புத்தி வந்துவிட்டது. இப்போதுதான் புதியதலைமுறை என்ற ஒரு channel வந்திருக்கிறது. நாம் ரொம்ப லேட். வட இந்திய channel கள் இப்போது தமிழகத்திலும் அலைவரிசை துவங்க ஆரம்பித்திருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் பல news channel கள் தமிழில் வரப் போகுது. எல்லா மாநிலக்காரங்களும் சொல்வது 'எங்கள்மாநிலம் ஒதுக்கப்பட்டுவிட்டது என்பது'. நம் பிரச்னை அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விட்டு பின்னர் அதை முழுவதுமாக கைவிட்டுவிடுவது. இத்தனைக்கும் இது பகுத்தறிவு பற்றி அதிகம் பேசிய வெண்தாடி பெரியார் பிறந்த மண். அதுதான் வேதனை. இலங்கை தமிழர் வீடியோவை ஒளிபரப்பியது வடஇந்திய channel தான். லண்டனில் இருக்கிற channel4 தான். அம்பேத்கார் படத்தையே தமிழில் வெளியிடாமல் பத்து வருடங்களாக தடை போட்டு வைத்திருந்தவர்கள் நாம்.
ReplyDelete//இது கசப்பான உண்மை..தெலுங்கு, மலையாளி போல நம்மிடம் ஒற்றுமையில்லை..// எத்தனை ஆயிரம் தெலுங்கு, மலையாளிகளிடம் பேசி நீங்கள் பேசியுள்ளீர்கள்.? அவர்கள் பிரச்னைகள் அவர்களுக்கு. அங்கேயும் அடிதடி உண்டு. அவர்களும் இப்படித்தான் நம்மைப் போலவே!
ReplyDelete//கலைஞர் சட்டசபைக்கு போனால் ஜெ போக மாட்டார்... ஜெ போனால் கலைஞர் போகமாட்டர்.தமிழகத்தில் இந்த இரண்டு கட்சிகள்தான் மாற்றி மாற்றி மக்களை ஆள்கின்றன..ஆனால் இது குறித்து எந்த தமிழனும் கவலை கொண்டதில்லை.// இதுதான் உண்மையான பிரச்னை. இது பற்றி பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் விவாதம் செய்திருக்கவேண்டும்.
ReplyDelete//நம் தமிழ் நாட்டவர்களுக்கு முதலில் தாய் மொழி பற்று வரவேண்டும்// பற்று தேவையில்லை. இயல்பாய் இருந்தாலே போதும். தன் மொழியை வளர்ப்பதை விட்டு விட்டு அடுத்தவனை குறை சொல்கிற புத்தி போனால் போதும். இயல்பாய் இருப்பவன் தமிழில் அதிகம் கற்க முடியும். அப்போது வளர்ச்சி என்பதும் தானாகவே நடக்கும். தமிழன் என்பது அடையாளம். பெருமையுடம் அணிந்து கொள்ளவேண்டிய அடையாளம். ஆனால் தமிழன் என்பது தகுதி அல்ல. இங்கு அடையாளங்கள் தகுதி என்ற நினைப்பில் பேசப்பட்டு வருகின்றன.
ReplyDelete