டிசம்பர் 25/12/2011 சென்னையில் முல்லைப்பெரியாறு அணை காக்க ஒன்று கூடுவோம்..





ஒரு சமுகம் தீவிரமான  வாழ்வாதார பிரச்சனைக்கு கூட எதிர்ப்பே தெரிவிக்காமல் கடந்து போகுமானல் அந்த சமுகத்தை சமுகம் என்று அழைப்பதை விட ஆட்டு மந்தைகள் என்று அழைக்கலாம்..


நியாயமான வாழ்வாதார பிரச்சனையில் கூட  நாம் எதிர்ப்பை  தெரிவிக்கவில்லை என்றால் நாம் ஆட்டுமந்தைகள் போல வாழ்ந்து விட்டு போகலாமே..?? நாம் ஆட்டுமந்தைகளா??

தொடர்ந்து முல்லை பெரியாறு விஷயத்தில் கேரளா பொய் பிரச்சாரம்  செய்து  வருகின்றது.. அதில் சிறிதளவும் உண்மை இல்லை.. கீழே உள்ள கட்டுரையை படித்து பாருங்கள் உங்களுக்கே உண்மை நிலை புரியும்...

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்

கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்

எவ்வளவு நாள் தாங்கும் ?

தங்கள் இடத்திலேயே -

தங்கள் செலவிலேயே -
புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக
கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக்
கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?
இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.

கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,
புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -

இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.

ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட,
படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான்

அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே
என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும்

சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்
எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக -

நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக
கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது

பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை
999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்
கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்

அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.

இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –
சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?


கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,

இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே

15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும்.
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.

கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி
நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -

பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?

மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,
நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !

அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.

பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி

உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -

புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -

எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்.

வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக -

பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -
மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -
நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்
வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்
(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,
நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து
தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -


1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.

1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல்

இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்
40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -

நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -
ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,
கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப்

பார்த்தால் நன்றாகப் புரியும்.

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,

சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை
என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்
என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?

மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,
கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி
விட்டார்கள்.

வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.


மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.

இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்
ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.

பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.






அணை பலப்பபடுத்தியதை காட்டும் படம்...

(மெயில் அனுப்பிய நண்பர்  யோகன்னா யாழினிக்கு நன்றி....)

படித்து விட்டீர்களா? இப்போது சொல்லுங்கள் நாம் போராடுவது நியாயம் தானே...அவாகள் குரல் பலமாக இருக்கின்றது ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதன் மூலிம் கேரள அரசாங்கம் உண்மையாக்க முயற்சிப்பதை நாம் அனுமதிக்க கூடாது அல்லவா??






கொத்து கொத்தாக நாம் இன மக்கள் ஈழத்தில்  நான்காம் கட்ட ஈழப்போரில் கிளஸ்டர் குண்டுகளுக்கு பலியான போது நாம் அமைதி காத்தோம்... ஈழ மக்கள் மடிவதை பற்றி  பெரிய எதிர்ப்பை நம் தமிழக பொது மக்கள் தெரிவிக்கவில்லை...காரணம் அடுத்த ஊரில் குடிசை பற்றி எரிந்தால் எனக்கென்ன என்று இருந்தோம்..ஆனால் இப்போது நம் குடிசையே பற்றி எரிகின்றது.. அதனால் நம் எதிர்ப்பை தெரிவித்தே ஆக வேண்டும்..

வற்றாத ஜீவநதிகள் தமிழகத்தில் இல்லை நாம்  பக்கத்து மாநிலங்களை நம்பித்தான் வாழ்க்கையை நாம் ஓட்ட வேண்டும்...ஆறு  என்பது அது எந்த ஒரு தனி மாநிலத்துக்கும் நாட்டுக்கும் சொந்தமானது அல்ல..அது மனிதஇனத்துக்கு சொந்தமானது..

காவிரி நடுவர் நீதி மன்றம் அறிவித்த நீரை இதுவரை கர்நாடகம் தரவில்லை.. உச்சநீதிமன்றம் முல்லை பெரியாறில் 142 ஆடி உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்தும் அதனை கேரளா செய்லபடுத்தவில்லை.. இவர்களா நாளைக்கு புதிய அணை கட்டி தண்ணீர் கொடுக்க போகின்றார்கள்..??? வாய்ப்பே இல்லை..

இது ஏதோ தென் மாவட்ட மக்கள் பிரச்சனை என்று மட்டும் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.. வடதமிழ்நாடு மக்கள்.. முல்லை பெரியாற்றின் காரணமாக பயண் பெறும் ஐந்து மாவட்டத்தில் விளையும் உணவு பொருட்களை நாம் பயண்படுத்துகின்றோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது...

தென்மாவட்டத்தில் நடந்த போராட்டங்கள் மெல்ல மெல்ல கடலூர் வரை வந்து விட்டது..ஆனால் சென்னையில் இன்னும் பெரிய அளவில் நம் எதிர்ப்பை கேரள,மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை...தலைநகரத்தில் நடக்கும் போராட்டம்தான் இந்திய அளவில் நம்  நாட்டு மக்கள் கவனத்தை கவரும் என்பதால், தயவு செய்து வரும் 25ம்தேதிஞாயிற்று கிழமை கிருஸ்மஸ்தினத்தன்று சென்னை மெரினாவில் மாலை மூன்று மணிக்கு கண்ணகி சிலை அருகே ஒன்று கூடுவோம்.. 17 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டம் செய்து இயல்பு வாழ்க்கை பற்றி கவலை படாமல், முல்லைபெரியாறு மீட்பு ஒன்றே லட்சியம் என்று போராட்டம் நடத்தும்  கேரள எல்லைப்பபுற நம் தமிழ் சொந்தங்களுக்காக நாம்  ஒன்று கூடுவோம்.. நம் எதிர்ப்பை அமைதி வழியில் தெரிவிப்போம்..

தமிழ்  சொந்தங்களே மறவாதீர்கள்.. வரும் 25ம்தேதி கிருஸ்மஸ் தினத்தன்று மாலை மூன்று மணிக்கு சென்னை மெரினா கண்ணகி சிலை அருகே.....குடும்பத்துடன் ஒன்று கூடுவோம்...

தலைநகரில் நம் எதிர்ப்பை பதிவு செய்ய ஒன்று கூடுவோம்...அனைவரும் வாரீர்

முடிந்தவரை இந்த செய்தியை  சமுகதளங்களில் பகிர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

16 comments:

  1. தமிழ் நாட்டிலிருந்து அடிமாடுகளை வாங்கி சாப்பிட்டுப் பழகின மலையாள சகோதரர்கள்,நம்மையும் அடிமாடுகளாக மாற்றப் பார்கிறார்கள்.
    கசையடி பட்டும்
    கண்ணீர் சிந்தோம்!
    உதைகள் பட்டும்
    உணர்வைக் கூட்டோம்!
    நம் காய்கனி தின்றவன்
    நம் தாயைப் பழிக்கிறான்!
    விடியட்டும் என்று
    இன்னும் தூக்கமோ?
    விடியல்கள் விடிந்திடும்
    நம் வாழ்க்கை விடியுமா?
    கரங்கள் உயர்த்திடு
    கால்கள் நகரட்டும்-ஆ
    தமிழன் கூட அசைகிறான் என்று
    அகிலம் உணரட்டும்.

    ReplyDelete
  2. Thanks for sharing the news. someone who has a good command over english should translate and publish this news in social network. and thats how even can get everyone's confidence

    Thanks
    Raja

    ReplyDelete
  3. annaiku tv la puthu patam potuvanka y u disturp tamil people ,any way u r doing good job valthukal anna.

    ReplyDelete
  4. சரியான நேரத்தில் உங்களின் அருமையான பதிவு..

    ReplyDelete
  5. நினைப்பது மட்டும் நாம் அல்ல... நிரூபிப்போம் சேகர். நிச்சயம் கிறிஸ்மஸ் தினததில் சந்தித்து குரல் எழுப்புவோம்.

    ReplyDelete
  6. முதலில் முல்லைபெரியார் இடிந்தால் 40000 பேர் உயிரிழப்பார்கள் என்றார்கள்... பின்னர் 100000 பின்னர் 400000 பிறகு 1000000 மீண்டும் 2000000 இப்போது உம்மன்சாண்டி கூறுகிறார் 3500000 என்று... இது வொய் திஸ் கொலைவெறி பாடலின் வியூஸ் போல அதிகரித்துக்கொண்டே செல்கிறது.... போகிற போக்கை பார்த்தல் முல்லை பெரியார் இடிந்தால் கேரளா என்ற மாநிலமே இந்திய வரைபடத்திலிருந்து காணாமல் பொய் விடும் என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது.....

    ReplyDelete
  7. பாசு... அப்புடியே இருக்கிற எரி, குளத்துக்குள்ள வீடு கட்டி எல்லா நீராதாரத்தையும் அழிக்கிறவங்களுக்கும் எதிர்ப்பை காட்டினால் நல்லா இருக்கும்... போரூர் ஏரிக்குள்ள வீடு கட்டி தண்ணி ஆதாரத்தை அழிச்சுட்டு, வீட்டுக்குள்ள தண்ணி வந்துருச்சு; அதனால அரசாங்கம் ஏதாவது நிவாரணம் கொடுக்கணும்னு சொல்லுறது எல்லாம் ரொம்ப டூ மச்... எல்லா ஊரிலேயும் ஏரி, கண்மாய் எல்லாம் குடியிருப்பு ஆயிடுச்சு... யாரும் அது பத்தியும் பேசுறது இல்ல... நாம அதை பத்தியும் நிறைய பேசுனா தான் அடுத்த இரண்டாவது தலைமுறை மக்களுக்கு கொஞ்சமாவது இயற்கை வளத்தை வச்சுட்டு போனோம்னு இருக்கும்...

    ReplyDelete
  8. சரியான நேரத்தில் உங்களின் அருமையான பதிவு..

    ReplyDelete
  9. I shared this in all my friends walls and keep sharing Facebook can change the things lets do it guys

    ReplyDelete
  10. //முல்லை பெரியாற்றின் காரணமாக பயண் பெறும் ஐந்து மாவட்டத்தில் விளையும் உணவு பொருட்களை நாம் பயண்படுத்துகின்றோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது...//


    குனியக்குனியக்குட்டுகிறார்கள் என்பது உறைக்கவேண்டும். மண்புழு கூட நசுக்கப்படும் பொழுது பாம்பினைப்போல் சீறும்.
    நமது மொத்த தமிழர்களின் வாழ்வாதாரப்பிரசினைக்கு போராடும் ஒவ்வொருவரின் உணர்வுக்கும் தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
  11. ஒன்று படனும் - உண்மை உலகுக்கு உணர்த்தணும்


    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

    ReplyDelete
  13. நண்பா ஜாக்கி, இதுவும் முல்லைப் பெரியாறை அடிப்படையாக வைத்து எழுதிய கதை. நேரமிருக்கும்போது படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

    http://lustyleo.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  14. தங்கள் பதிவின் நோக்கமும்...!

    கேள்வியும் மிகச் சரியே....!

    சரி...! ஊருக்கு ஊர்... ஊருக்கேத்த வேஷம்போடும்... யாரோ சொன்னார்களே "தகரம் கண்டுபிடிப்பதற்கு முன் உண்டியல் கண்டுபிடித்த" "பச்சோந்தி" கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அச்சுதானந்தன் செய்த அயோக்கியத்தனம்தான் இது....! புலி வாலை அவர் பிடித்தார்... இப்போது உம்மன்சாண்டியும் இதனை பிடித்துக்கொண்டு தொங்குகின்றார்...!

    அணை உடையாது...! என உறுதியாய் சொல்கிறோம் நாம்...! அவர்கள் சொல்கின்றபடி அணை உடைவதாய் வைத்துகொண்டாலும்... அவிங்க ஏன் புதிய அணை கட்டவேண்டும்...!



    நாங்களே இப்போது உள்ள அணைச் சுவற்றை ஒட்டியே... அணைப்போல புதிய அணை சுவர் கட்டிக்கிறோம்...! அதுவும்...! நிலநடுக்கத்தில் உடையாத நவீன தொழில்நுட்பத்தில், இப்போதிருக்கும் அணைச் சுவரை ஒட்டியே மற்றொரு சுவர் நாங்களே கட்டிக்கொள்கிறோம்...!

    கேரளத்தவர் ஒத்துக்கொள்வார்களா...?

    மாட்டார்கள்...! காரணம்...!

    அவிங்களுக்கு...! நமக்கு தண்ணீர் இல்லாமல் போகணும்...! விளைச்சல் ஏதுமில்லாமல் கஷ்டப்படனும்...! அவிங்க மட்டும் இந்த நீரை வைச்சு மின்சாரம் ஆண்டுமுழுதும்.... அதுவும் இரவும் பகலும் மின்சாரம் தயாரித்து... அதனை இந்தியாவுக்கே விக்கணும்...! அவிங்க சுகமா வாழனும்...! நாம பிச்ச எடுக்கணும்...! இப்ப... கேரள மாநிலத்தவன்ல 90 சதவீதம் மத்த மாநிலத்துல... மத்த நாட்ல பிழைக்கிராம் பார்...! அது மாதிரி தமிழ்நாட்ல இருக்கிறவன் தன்னோட ஊர்ல பிழைக்க வழி இல்லாம பிச்சை எடுக்கனும்ற கேட்ட புத்தி அவிங்களுக்கு....! இது ஒன்றே காரணம்...!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner