எல்லோரும் ஈரோடு சங்கமம் பற்றி எழுதி விட்டார்கள்.. நான் என்ன எழுத போகின்றேன்.?
ஆனால் வருட இறுதிக்குள் பதிவிட்டுவிடவேண்டும்.. என்று எழுதுகின்றேன்..வீட்டில் நிறைய வேலைகள்..சென்னை உலகபடவிழா,ஈரோடு பதிவர் சந்திப்பு என்று டிசம்பர் மாதம் ரொம்ப பிசியாக போனது அதுமட்டும் இல்லாமல் இரண்டு ஓன் போட்டோ ஆர்டர் மற்றும் மணிஜியின் விளம்பரபடம் என்று பிசியாக இருந்த காரணத்தால் ஈரோடு சங்கமத்தை பதிவிட லேட்டாகிவிட்டது.. அது மட்டும் அல்ல நிறைய பேர் எழுதினார்கள்.. அதனால் எல்லோரும் எழுதி முடிக்கட்டும் பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்...
பொதுவாக உலகபடவிழா சென்னையில் நடக்கும் போது அந்த பத்து நாட்களும் சென்னை தியேட்டர்களில் பழியாக கிடப்பேன்...ஆனால் 18ம் தேதி ஈரோடு சங்கமம் என்று சொன்ன போது எனக்கு வருத்தமாக போய் விட்டது.. காரணம்.. இரண்டு நாட்கள் பத்து படம் மிஸ் ஆகிவிடும் என்பதால் போலாமா? வேண்டாமா? என்று டைலாமாவாக இருந்தேன்.. ஆனாலும் போனமுறை ஈரோடு மக்களை சந்தித்த உற்சாகம் இந்த முறையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது என்பேன்..
தாமோதர் சந்ரு,ஜாபர்,சங்கவி போன்றவர்கள் போன் செய்து எனது வருகையை கன்பார்ம் செய்ய போன் செய்தார்கள்.. சரி பத்து படம்தானே டிவிடியில் பார்த்துக்கொள்ளலாம்.. சென்னையில் பதிவர் சந்திப்பில் எல்லோரையும் பார்த்து விடலாம்.. ஆனால் தென்மாவட்டத்து மக்களை இது போல சந்திப்புக்களில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் ஈரோடு செல்ல முடிவெடுத்தேன்..
மணிஜியின் விளம்பர படம் மழைகாரணமாக திங்கட்கிழமை ஷட்டிங் வைத்து விட்டார், விளம்பர படத்துக்கு, போட்டோவுக்கு என்னை புக் செய்து இருந்தார்..மணிஜி காரில் போய் விட்டு வரலாம் என்று சொல்ல, அது கடைசிவரை இழுபறியாக இருந்து பைனலாக நானும் போவதாக முடிவானது...
17ம் தேதி சனிக்கிழமை காலையில் போருரில் 7 மணிக்கு மணிஜி நிற்க சொன்னார்.. அதன் பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து வந்தார்கள்.. மாதா என்ஜினியரிங் காலேஜ் பசங்க பரபரப்பா ஷேர் ஆட்டோ, பஸ் பிடிக்க ஓடிய பரபரப்பை ரசித்த படி நேரத்தை கடத்தினேன்...
ஒன்பது மணிக்கு மணிஜி, செல்வம்,அகநாழிகை வாசு,மயில்ராவணன் போன்றவர்களை மைக்ரா சுமந்து வந்தது நானும் அதில் எனது வெயிட்டோடு தினித்துக்கொண்டேன்.....வழி முழுவதும் தாபா, டாஸ்மார்க் என்று பயணம் களை கட்டியது.. நடுவில் மயில்ராவணன் ஜோதி தியேட்டர் எபெக்ட்டில் தொகை விரித்து ஆடியது.. அது ஆப்த ரெக்கார்ட்..மேட்டுர் வழியாக சென்று மேட்டுர் டேம் அருகில் மதகு வழியாக நீர் வெளியேறும் வழியில் போட்டோ எடுத்துக்கொள்ள ஆயுத்தமானோம்..
இரண்டு பாறைதாண்டியதும் தோப் என்று சத்தம் மணிஜி மேலும் ஜலத்தில் மூழ்கினார்.. அடுத்து இந்த பக்கம் தொப் என்று ஒரு சவுண்ட்.. மயில் தொப் என்று தோகை உடைந்து நீரில் விழுந்து வாரியது.. அதன் பிறகு மீன்வருவல் சாப்பிட்டுவிட்டு மணிஜியின் ஈரோடு காதலியின் பிளாஷ் பேக்கோடு அந்த இடத்தை காலி செய்தோம்..
ஈரோடு வந்ததும் கதிர் ஆபிசுக்கு கிளம்பலாம் என்று சொல்ல யாரும் அங்கு இல்லை மண்டபத்துக்கு வரச்சொல்லிவிட்டார்கள் என்று தம்பி சங்கவி வழிகாட்ட, மண்டபத்துக்கு போனோம் பதிவர்களை சந்தித்தோம்...இரவு உணவை முடித்து படுத்தோம்
காலை 18ம்தேதி விழா பத்து மணிக்கு ஆரம்பிக்கபட்டது.. சங்கமம் 2011ல் பாராட்டி மகிழ பதினைந்து பேர் மேடை ஏற்றினார்கள்..
அந்த பதினைந்து பேரில் நானும் ஒருவன்... என்னை பற்றிய விபரங்கள் நான் பதினைந்து வரிகளில் மட்டுமே கொடுத்தேன். என்னை பற்றி எனது சைட்டில் எல்லா விஷயத்தையும் படித்து வருகின்றார்கள். என்பதால் நான் என் பற்றிய தகவல்களை குறைத்தே கொடுத்தேன்.
மேடைக்கு அழைக்கும் போதே மிகப்பெரிய கைதட்டல் கிடைத்தது எனது புகைபடங்கள் பெரிய திரையில் காட்டினார்கள்..ஒரு மாதிரி நெகிழ்ச்சியாகஆகிவிட்டது...
நான் ஏற்புரையில் கொஞ்சம் பேசலாம் என்று இருந்தேன்.. ஆனால் 30 செகன்ட் மட்டுமே ஒதுக்கி இருந்தார்கள்.. அதனால குறைவாகவே நெகிழ்சியில் பேசினேன்... அதுக்கு காரணம்... முதல் வரிசையில் நண்பார் காவேரிகணேஷ் உட்கார்ந்து கொண்டு என்னையும் உதாவையும் பார்த்து கண்கலங்கி நெகிழ்ச்சியாக தம்ஸ் அப் போல கைகளை உயர்தினார்.. அதை பார்த்த என்னால் நெகிழ்ச்சியினால் என்னால் நிறைய பேசமுடியவில்லை...
போதும் போதும் என்று விழா தொகுப்பில் இருந்து பாராட்டு பெற்றவர்கள் பெயர்களை மற்றும் அவரை பற்றிய செய்திகளை எல்லோரும் படித்து இருப்பீர்கள்..
அதனால் அங்கு என்ன பேச நினைத்தேன் என்பதை இங்கே கீழே கொடுத்து இருக்கின்றேன்...230 பேர் இருக்கும் அவையில் நான் இப்படித்தான் பேச இருந்தேன்.. ஆனால் நேரம் குறைவாக கொடுத்தார்கள்.. மற்றது காவேரிகணேஷால் நெகிழ்ச்சியானதால் என்னால பேசமுடியவில்லை... பட் இங்கே விரிவாக அங்கு பேச நினைத்ததை இங்கே சொல்லுகின்றேன்...
அனைவருக்கும் என் காலை வணக்கம்..
பொதுவா சென்னையில் உலகபடவிழா நடக்கும் போது நான் எங்கும் செல்வதில்லை மீறி இங்கே வர காரணம் உங்கள் பாசமும் நேசமும்தான்.. என் மீது வைத்து இருக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் மிக்க நன்றி...
ஆயிரம் பதிவுகள் எழுதியாகிவிட்டது.. கொஞ்சம் சோம்பலாம் இருந்தேன்... இது தொடர்ந்து எழுத எனக்கு கொடுக்கப்பட்ட உற்சாக டானிக்.... எல்லாவற்றையும் விட பெரிய சந்தோஷம் நான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்த போது எனக்கு பதிவுலக சீனியர்கள்..பாலபாரதி,அண்ணன் உண்மைதமிழன்,லக்கி,அதிஷா,போன்றவர்களுடன் நானும் மேடை ஏறியது எனக்கு மிகப்பெருமையே...
என் பதிவுலகில் முன்பை விட எழுத்து பிழைகள் குறைந்து இருக்க காரணம் சேர்தளம் நண்பர் வெயிலான் சைலன்டாக செய்த சில விஷயங்கள் என்னை எழுத்து பிழைகளை குறைக்க உதவியது என்பேன்... எல்லோரும் என் எழுத்து பிழைகளை நக்கல் விட்டுக்கொண்டு இருந்த போது வெயிலான் சாட்டுக்கு வந்து இனி எந்த போஸ்ட் போட்டாலும் அதுக்கு முன் என் மெயிலுக்கு ஒரு காப்பி அனுப்பி விடுங்கள்...
எந்த வேலையாக இருந்தாலும் உடனே பிழை திருத்தி அனுப்புகின்றேன் என்று சொன்னார்.. அதே போல சில பதிவுகள் பிழை திருத்தி அனுப்பினார்.. அந்த செயல் என்னை ஆச்சர்யபடுத்தியது அது முதல் இன்னும் பத்து நிமிடம் எழுதிய பதிவுக்கு கொஞ்சம் மெனக்கெட்டு ஒருமுறை படித்து பார்த்து வாக்கிய அமைப்புகளை சரி செய்து, பிழைகளை திருத்தி தற்போது பதிவிட்டு வருகின்றேன்.. அவரோடு இதை மேடையில் நானும் அமர்ந்து இருப்பதை பெருமையாக கருதுகின்றேன்..அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
என் மீதான விமர்சனங்களை நான் ஒரு போதும் மதிப்பதில்லை...மனநிலை சரியில்லாத, அம்மா சரியில்லாதவர்களின் விமர்சனங்களை நான் மதிப்பதேயில்லை அது என் கால் தூசிக்கு சமம் இருந்தாலும் அதை முன்னை விடஅதிகம் புறக்கனிக்க கற்றுக்கொடுத்தத என் பதிவுல சீனியர் லக்கிக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கின்றேன்..
ஈரோடு வலைப்பதிவர் குழுமம் ஈரோடுகாரர்கள் மட்டும் மேடை ஏற்றி பாராட்டிக்கொள்ளலாம்.. இது போல ஒரு பெரிய அளவில் விழா நடத்த வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை...அதில் பேஸ்புக் மற்றும் டூவிட்டர் நண்பர்களையும் சேர்க்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை...ஈரோட்டுகாரர்களுடன் எங்களையும் மேடை ஏற்றி பாரட்டிய குழுவினருக்கும், தலைவர் தாமோதர் சந்ரு அவர்களுக்கு என் நன்றிகள்..
இதுதான் நான் பேச நினைத்தது.. இங்கே கொட்டி விட்டேன்...
மற்றபடி எல்லா பதிவர்களையும் சந்தித்த மிக்க மகிழ்ச்சி நடந்து மேடை ஏறிய போதும் அவையோருக்கு வணக்கம் என்று சொன்ன போதும் கைதட்டல்களால் எனக்கு சிறப்பு செய்தீர்கள்..மிக்க நன்றி நண்பர்களே... பாலபாரதி துணைவியார் சொன்னார்... ஜாக்கி நீங்க பெரிய ஆள் போல.. செமை கைதட்டல்.. அசத்தறிங்க போங்க என்று சொல்ல அந்த வெளிப்படையான பாராட்டும் கைதட்டலும் எதை பற்றியும் கவலைபடாமல் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டேன்..
தங்கைகள் ரோகிணி சிவா,விஜி போன்றவர்களை சந்தித்தேன்..மிக்க மகிழ்ச்சி.
போனமுறை போலவே இந்த முறையும் நண்பர் வால் தலைமையில் அதே பெருந்துறை செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மார்க் பாரில் உற்சாக சங்கமம் நடந்தது..போனமுறை வந்து இருந்த தம்பி பிரபா இந்த முறை மிஸ்சிங்...தருமி சாரை இந்த முறை சந்தித்தேன்..
பாரில் இருக்கும் போது போன் செய்து விட்டு
ஒரு தம்பி எங்கிருந்தோ வந்தான்.. என் பையை எடுத்து வைத்துக்கொண்டான்.. ஈரோட்டில் டிரேட் பிசினஸ் செய்கின்றானாம்...என் பதிவுகளை விரும்பி படிப்பேன்...நான் காரில் ஏறும் வரை எனனை விட்டு அவன் அகலவில்லை.. என் பையையும் என்னிடம் கொடுக்காமல் அவனே வைத்துகொண்டு என்னோடு நான் போகும் இடங்களுக்கு எல்லாம் வந்து கொண்டு இருந்தான்..ஓட்டலில் நான் வைத்து விட்ட வந்த பேக் எடுக்க சரியான நேரத்தில் உதவி செய்தான்... அந்த அன்புக்கு இன்னும் எழுதுவேன்...
தம்பியோடு.....
விழாவை சிறப்புற நடத்திய சங்கமம் குழுவினர்கள்.கதிர், ஆருரன், சங்கவி,பாலாசி, பாஸ்கார்த்தி, லவ்டேல் மேடி, ஜாபர் போன்ற நண்பர்களுக்கு மிக்க நன்றி... விழாவின் தலைவர் தமோதர் சந்ரு அவர்களுக்கு மிக்க நன்றி...
திரும்ப சென்னைக்கு மணிஜி காரில் திரும்பினோம்..வாசு காரை ஓட்டினார்..செல்வாவும் மணிஜியும் டயர்டில் படுத்து விட நான் மயில் மட்டும் விழத்துக்கொண்டு பேசிக்கொண்டும் வந்தோம்..
சென்னையில் காவேரிகணேஷிடம் கேட்டேன்...ஏன் அப்படி கண் கலங்கி என்னை நெகிழ்ச்சிபடுத்தினீர்கள் என்று.. சென்னையில் இப்படி ஒரு விழா நடந்து இருந்தா உனக்கு இந்த அங்கீகாரம் கிடைச்சி இருக்குமான்னு தெரியலை.. உனக்கும் உதாவுக்கும் ஈரோட்டில் கிடைத்ததே அதை பார்க்கும் போது நெகிழ்ந்து விட்டேன் என்று சொன்னார்...
நிகழ்வை நான் ரொம்பவே சுருக்கி எழுதியதால் பல நண்பர்களின் பெயர் விடுபட்டு போய் இருக்கும் அதனால் மன்னிக்கவும்..
சென்னை வந்து மார்கழி குளிரில் ஈரோட்டுகாரர்கள் கொடுத்த பரிசு போர்வையை போத்திக்கொண்டு தூங்கினேன். அவர்கள் நேசம் போல கதகதப்பாகவும், இதமாகவும் இருந்தது...
==========
குறிப்பு
ஜாக்கி குருப், கேபிள் குருப் என்று சில பேச்சுகள் கவனத்துக்கு வருகின்றன..அப்படி எதுவும் இல்லை... சென்னை பதிவர்களை பொறுத்தவரை எவ்வளவு கருத்து மோதலாக சண்டை போட்டுக்கொண்டாலும் நேரில் அதனை வெளிப்படுத்திக்கொண்டதே இல்லை.. கேபிளுக்கு எனக்கும் கருத்து மோதல் உண்டு ஆனால் அவர் என் நண்பர்..அவரோடுதான் ஒஸ்திபடம் பார்த்தேன்..இரண்டு நாளைக்கு முன் கூட இரவு சென்னை லஷ்மன் சுருதி எதிரில் தாகசாந்தி முடித்து விட்டு புகாரியில் நான் கேபிள் மற்றும் நண்பர்களோடு சாப்பிட்டோம்..இங்கே குருப் என்று எதுவும் இல்லை... அதை வைத்துக்கொண்டு ஒன்னரை ரூபாய் வாட்டர் பாக்கெட் கூட வாங்க முடியாது.....பொழுது போகாதவர்கள் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள்.. அதுதானே அவர்கள் வேலை....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நல்லா இருக்கு ..... முரட்டு உருவம் இருந்தாலே உள்ளே இளகிய மனம் நிச்சயம்...!
ReplyDeleteஅருமையான பகிர்வு, ஜாக்கி. வாழ்த்துகள்.
ReplyDelete//இங்கே குருப் என்று எதுவும் இல்லை... அதை வைத்துக்கொண்டு ஒன்னரை ரூபாய் வாட்டர் பாக்கெட் கூட வாங்க முடியாது.....பொழுது போகாதவர்கள் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள்.. அதுதானே அவர்கள் வேலை....//
ReplyDeleteநச்
அன்பின் ஜாக்கி,
ReplyDeleteநீங்கள் கவனித்தீர்களா இல்லையா என்று தெரியாது..”கடலூரில் பிறந்த” என்று தொகுப்பாளர் ஆரம்பித்தவுடன் ஜாக்கி ஜாக்கி என்று நாங்கள் ஆரவாரத்துடன் குரல் கொடுக்க ஆரம்பித்தோம்.அங்கதான் ஜாக்கி நீங்க நின்னிங்க...
வாழ்த்துக்கள்யா
ReplyDeleteகாவேரி கணேஷ் கண் கலங்கியதை ஒருவிநாடி நானும் கவனித்தேன். சிறிது நேரம் கழித்து அவரும் சொன்னார். கணேஷை நினைக்க மிகுந்த பெருமையாக இருந்தது.
ReplyDeleteஜாக்கி அண்ணா மற்றும் நண்பர்களுக்கு
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நொடியாய்ப் பிறந்து
மணித் துளியாய் மறைந்து
புது ஆண்டாய் மலர்ந்த
பொழுதே....
வறண்ட வாழ்வும்
தளர்ந்த கையும்
உன் வரவால்
நிமிர்ந்து எழுதே!
புது வருடம் பிறந்தால்
வாழ்வு மாறும்-என
ஏங்கித் தவிக்கும்
நெஞ்சம்..
உன் வரவே
நெஞ்சின் தஞ்சம்!
இறந்த காலக்
கவலை அதனை
மறந்து வாழ
பிறந்து வா வா
என் புதிய வாழ்வே
விரைந்து வா வா!
அழுதுவிட்டேன்
ஆண்டு முழுதும்
முயன்று பார்த்தேன்
விழுந்து விட்டேன்
அழுத நாளும் சேர்த்து
மகிழ்ந்து வாழ
எழுந்து நின்று
இமயம் வெல்ல
இனிய ஆண்டே
இன்றே வா வா
நன்றே வா வா!
அன்புடன் இனியவன்
thanks for the explanation jackie anna
ReplyDeleteதலைவாழை இலை மட்டும்தான் என் கண்ணில் தெரியுது ஜாக்கி:)
ReplyDeleteபதிவர் சந்திப்பு அப்படின்னு சொல்லிட்டு உங்களோட பயணத்தை கட்டுரையா தந்ததுக்கு நன்றி...அப்புறம் இனிமேல் கொங்கு நாட்டு பக்கம் வரும்போது ஒரு பதிவை போடுங்க...அப்போதான் உங்களை பார்க்கிற சந்தர்ப்பம் கிடைக்கும்
ReplyDeleteதாங்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...
ReplyDeleteநீங்கள் அடைந்த பெருமையை எனக்குக் கிடைத்தது போல் எண்ணி மிக மகிழ்கிறேன் சேகர்! உங்கள் நல்ல உள்ளத்திற்கு இன்னும் பல சிகரங்களைத் தொடுவீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைவிக்கும், யாழினிக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete'பளிச் ' என்று உண்மை பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி!
ReplyDeleteஅன்பின் ஜாக்கி,
ReplyDeleteதங்களின் எழுத்துக்கள் உங்களை ஈரோட்டு பதிவர்கள் அங்கீகரிக்கப்பதற்கான ஆவணமாக காட்சிதிரையிடலில், தொடர்ந்த உங்களின் நிழற்படங்களில் காட்சியாய் விரித்ததில் பல படங்களில் தங்களின் குடும்ப படமொன்று பார்த்தது, தங்களின் நேர்மையான பதிவுகளோடு நீங்கள் மேடையெறிய பொழுது, தாங்கள் கடலூரில் ஆட்டோ ஒட்டிய காட்சியும் என் மனதில் நிழலாடியது, அதற்கான ஓப்பிடே , கண்கலங்கியதற்கான காரணம்..வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்...
இது போல இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteஉண்மை தமிழன், மாற்றுதிறனை கொண்டிருந்தாலும், மற்றவர்கள் புறம் தள்ளினாலும்,உ,த பற்றி புறம் பேசினாலும் , புன்னகையை உதிர்த்துவிட்டு, தொடர்சியாக பதிவு எழுதுகிறார்..வாழ்த்துக்கள் உ.த...
ReplyDelete//சென்னை வந்து மார்கழி குளிரில் ஈரோட்டுகாரர்கள் கொடுத்த போர்வையை போத்திக்கொண்டு தூங்கினேன். அவர்கள் நேசம் போல கதகதப்பாகவும், இதமாகவும் இருந்தது...//
ReplyDeleteஅருமை
//அவரோடுதான் குஸ்திபடம் பார்த்தேன்//
ReplyDeleteசார்..குஸ்தியா? ஒஸ்தியா?
மிக்க நன்றி நண்பர்களே..
ReplyDeleteஉண்மைதான் கதிர்..
நன்றி காவேரி கணேஷ் மற்றும் சைதை கணேஷ்..
நன்றி வடகரைவேலன் சார்.. நன்றி அரவிந்,நன்றி கடல்புறா, நன்றி வாசு..
சிவக்குமார் சேன்ஜ் பண்ணிட்டேன்..
நன்றி என்றும் இனியன் , சங்கவி
ReplyDeleteHi
ReplyDeleteI noticed you not mention about chief guest Mr.GUNASEKARAN Ba,Bl.He is basically lawyer but very good person.He is head of "Makka sindhanai peravai" which running Erode Book festival 7years continuous success.He is in political also.Honest man..
by Erode Ganesh...
Note:Jacki sir try to translate my comment to tamil for all tamil peoples.
Thank you...
அண்ணே, உங்களோட பார்வைல நம்ம "ஈரோடு சங்கமம் 2011" எப்படின்னு தெரிஞ்சுக்கதான் நான் wait பண்ணிட்டு இருந்தேன். ரொம்ப நெகிழ்ச்சிய இருக்கு அண்ணா.
ReplyDeleteநான் செய்தது உதவி இல்ல அண்ணே, அது என்னோட கடமை. உங்க அன்புக்கு எப்போதும் நான் கடன்பட்டிருப்பேன்.
என்றும் அன்புடன்,
தம்பி, ஈரோடு.
வாழ்த்துக்கள் அண்ணே ......
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள் ஜாக்கி
ReplyDeleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2012! இந்த ஆண்டில் உங்கள் அனைவருக்கும் வளமும் நலமும் செழிக்க வாழ்த்துகிறேன்.
ReplyDelete