குருவி தோல்விக்கு பிறகு இயக்குனர் தரணி தன்னை நிருபித்துக்கொள்ள ரீமேக்கை நம்பி இருக்கின்றார்..
ஒரு குதிரை ஜெயிக்குமா? ஜெயிக்காதா? என்று யோசனையில் குழம்பி சாகுவதை விட ஜெயித்த குதிரையின் மேல் பணம் கட்டினால் கொஞ்சம் தெம்பாக இருக்கலாம் அல்லவா? அதனால் இந்தியில் சக்கை போடு போட்ட தபாங் திரைப்படத்தை நம்பி களம் இறங்கி இருக்கின்றார்....இந்தியில் தபாங் திரைபடத்தை பார்த்தவர்களுக்கு இந்த படம் என்ன வகை என்று நிச்சயம் தெரிந்து இருக்கும்.. ஆனால் அந்த படத்தை பார்க்காத தென்மாவட்டத்து ரசிகன் ஒஸ்தி, படத்தை பார்க்கும் போது அக்மார்க் தெலுங்கு படத்தின் ரீமேக் என்றே சொல்லுவார்கள்.. படத்தை பார்த்தால் அப்படித்தான் இருக்கின்றது..
=========
ஒஸ்தி படத்தின் ஒன்லைன்
அண்ணன் தம்பி குடும்ப பிரச்சனையில் வில்லன் புகுந்தால்....???
==============
ஒஸ்தி படத்தின் கதை என்ன??
தளபதி படத்தில் ஸ்ரீவித்யாவுக்கு ரஜினி எப்படி?? அது போலத்தான் ஒஸ்தி ரேவதிக்கு சிம்பு...ஆனா ரேவதி புருசன் ஒரு விபத்தில் இறந்து விடுகின்றார்..சிம்பு சின்னவயதில் ரஜினி போல அனாதையாகாமல் அம்மா ரேவதிவுடனே வளர்கின்றார்.. எப்படி ஸ்ரீவித்யாவுக்கு ஜெய்சங்கர் கிடைச்சாரோ?... அது போல ரேவதிக்கு நாசர் கிடைக்கின்றார்... எப்படி அரவிந்சாமி பிறந்து ரஜினிக்கு தம்பியாகின்றாரோ? அது போல நாசர் ரேவதிக்கு பிறந்த ஜித்தன் ரமேஷ் சிம்புக்கு தம்பியாகிவிடுகின்றார்...அப்புறம் என்ன பங்காளி சண்டை கொஞ்சமா இருக்கு... அதுல வில்லன் கொஞ்சம் எண்ணெயை ஊத்தறான்.. பத்திகிட்டு எறியுது.. எப்படி அடங்குதுன்னு வெண்திரையில் காமெடியாக பாருங்கள்..
================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
சிம்புவின் எந்த படத்தையும் முதல்நாள் போய் பார்த்த வழக்கம் இல்லை... ஆனால் விண்ணைதாண்டி வருவாயாவுக்கு பிறகு சிம்புவை ரசிக்க முடிந்தது... இந்த படத்திலும் அவரின் வால்தனங்களை ரசிக்க முடிகின்றது..சுட்டே புடுவேன், கண்ணாடி போல என்று வேர் செய்யும் மெனரிசங்களை ரசிக்க முடிகின்றது..
சிம்புவின் வழக்கமான படம் போலான கதை...இந்த ரீமேக் திரைப்படம்....விரலை மட்டும் காண்பிக்கவில்லை.. ஆனால் சிம்புவுக்கு அந்த போலிஸ் வேடம் நன்றாக செட் ஆகின்றது....
போலிஸ் உடையில் சிம்பு நல்ல பிரிஸ்க்.....எப்படி தெலுங்கு படத்தில் குறைவான லாஜிக்கை மட்டும் வைத்துக்கொண்டு ஷுட்டிங் கிளம்புவார்களோ? அது போல இந்த படமும் இருக்கின்றது...
படத்தை முழு நீள காமெடி படம் போல எடுத்து கொஞ்சம் கொஞ்சம் இடங்களில் சீரியஸ் செண்டிமென்ட்களை தெளித்து இருக்கின்றார்கள்..
ரிச்சா நல்ல உடற்கட்டு , நல்ல வளைவானஇடை... சில நேரங்களில் வாய் உம்மென்று வைக்கும் போது நன்றாக இல்லை-... காண்டிராஸ்ட் காஸ்ட்டியூம்களில் கலக்குகின்றார்..
அந்த காலத்து தமிழ் திரைப்படங்களில் கிளப் சாங்குகிளில் ஜெயமாலனி,அனுராதா,டிஸ்கோசாந்தி போன்றவர்கள் வயிற்றில் ஜிலு ஜிலு என்று ஒரு அரைஞான் கயிறு போல கட்டிக்கொண்டு ஆடுவார்கள்.. அது போல சிம்பு ரிச்சா திருமணத்துக்கு முன் ஆப்சாரியில் இருக்கும் போது எல்லாம், தங்க கொலுசு போல ஒரு சமாச்சாரத்தை மண்பாண்டம் விற்கும் ரிச்சா அணிந்து இருக்கின்றார்...இடுப்பு வனப்பை காட்டுவதாலேயே ஒரு பானை 250ரூபாய்க்கு விற்பது எல்லாம் ஓவரோ ஓவர்..
சந்தானம் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றார்...எனக்கு என்னவோ கவுண்டமணி ஸ்டைலை கொஞ்சம் யூத்துக்களுக்கு ஏற்றது போல மாற்றி பேசுகின்றார் பட் அடிப்படை இரண்டு பேருடையதும் ஒன்றுதான்... சில இடங்களில் நெளிய வைக்கின்றார்...என்ன வேணும் என்ற கேள்விக்கு? அரைட்ஜன் அனக்கோண்டா முட்டை வேண்டும் என்று சில இடங்களில் படுத்தி எடுகின்றார்...
மௌனராகம் ரேவதியா அது என்று ஒரு கனம் என் கண்ணில் கண்ணீர்...ச்சே காலம்தான் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றி விடுகின்றது.. ஆனால் நடிப்பில் அசத்துக்கின்றார்..
ஜித்தன் ரமேஷ் தோற்றத்தில் ஒரு சில இடங்களில் ஸ்மார்ட்டாக தோன்றுகின்றார்... சில இடங்களில் லூசு போல இருக்கின்றார்.... ரமேஷ் தயவு செய்து தாடியை ஷேவ் செய்து விடுங்கள்..
வழக்கமான தெலுங்கு வில்லன்....
படத்தின் லொக்கேஷன்கள். எல்லாம் மைசூர் பக்கம் பார்த்து போல இருக்கின்றது...
ஒளிப்பதிவு நன்றாகவே இருக்கின்றது...நிறையவே சிம்பு பறக்கின்றார்...
ஏம்பா அது என்ன பொண்டாட்டி பாட்டு??உரைநடைக்கு டியூன் போட்டது போல இருக்கு.... பட் கலசல கலசல சாங் சான்சே இல்லை...இன்பேக்ட் அந்த பாட்டை பார்க்கவே இந்த படத்துக்கு போனேன்..மல்லிகாஷராவத் என்ன ஆட்டம்?? என்ன ஆட்டம் ? உடம்பு சிலித்துடுச்சிப்பா...
நாசர், சிம்பு ஹாஸ்பிட்டல் சீன் நல்ல எமோஷனல் சீன்..
தமன் இசையயில் கலசலா பாடலில் பட்டையை கிளப்புகின்றது..
===========
படத்தின் டிரைலர்..
=============
படக்குழுவினர் விபரம்..
Directed by S. Dharani
Produced by Mohan Apparao
T. Ramesh
Screenplay by Dileep Shukla
S. Dharani
Story by Dileep Shukla
Abhinav Kashyap
Starring Silambarasan
Githan Ramesh
Richa Gangopadhyay
Sonu Sood
Music by S. Thaman
Cinematography Gopinath
Editing by V. T. Vijayan
Studio Balaji Real Media
Distributed by Reliance Entertainment
Country India
Language Tamil
Budget INR30 crore (US$6.08 million
Produced by Mohan Apparao
T. Ramesh
Screenplay by Dileep Shukla
S. Dharani
Story by Dileep Shukla
Abhinav Kashyap
Starring Silambarasan
Githan Ramesh
Richa Gangopadhyay
Sonu Sood
Music by S. Thaman
Cinematography Gopinath
Editing by V. T. Vijayan
Studio Balaji Real Media
Distributed by Reliance Entertainment
Country India
Language Tamil
Budget INR30 crore (US$6.08 million
==============
தியேட்டர் டிஸ்கி...
இந்த படத்தை நேற்று இரவு சைதை ராஜ் தியேட்டரில் இந்த படத்தை பார்க்க போனேன்..ஆன்லைனில் டிக்கெட் இருந்தது.. ச்சே எதுக்கு புக் பண்ணிகிட்டு எல்லாம்..ராஜ் தியேட்டருக்கு எல்லாம் என்ன கூட்டம் வந்து விட போகின்றது என்று அலட்சியமாக போனதன் விளைவு.. எக்ஸ்ட்ரா டிக்கெட் வைத்திருக்கும் முகங்களை புலன்விசாரனை செய்ய வேண்டி இருந்தது.. விசாரனையில் தோற்று போய் வீட்டுக்கு கிளம்ப எத்தனிக்கும் போது நண்பர் கேபிளை பார்த்தேன்..
டிக்கெட் இருக்கா என்றேன்.. வா படத்துக்கு போலாம் என்கிட்ட எக்ஸ்ட்ரா இருக்கு என்று சொன்னார்..ஆனால் வேறு ஒருவருக்கும் கொடுக்கின்றேன் என்று சொல்லி இருக்கின்றார்.. பட் அவர் கண்ணில் தென்படவில்லை என்பதால் என்னை அழைத்து போய் விட்டார்..
தியேட்டரில் நல்ல ஓப்பனிங்.. பிளாக்கில் 150 லிருந்து 200க்கு விற்றுக்கொண்டு இருந்தார்கள்..200ரூபாய் கொடுத்து படம் பார்க்க நாம ஒஸ்தியாக இருக்கவேண்டும் அல்லவா??
========
மல்லிகாவின் ஒரு ரீமிக்ஸ் சாங்....
=========
பைனல்கிக்..
எந்த லாஜிக்கும் பார்க்காமல் தெலுங்கு படஸ்டைலில் ஒரு காமெடி ஆக்ஷன் கமர்சியல் படம் பார்க்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த படத்தை பார்க்கலாம்...இந்த படம் டைம்பாஸ் திரைப்படம்.. படம் போரடிக்காமல் கலகலப்பாக செல்கின்றது..இனி ஆறுமாத காலத்துக்கு கலசலா கலசலா தமிழ் மியூசிக் சேனல்களின் தேசியகீதமாக மாறப் போகின்றது. என்பதை மறுப்பதற்கு இல்லை...படத்தின் கடைசியில் தரணி சிம்புவுக்கு சிக்கன் ஊட்டி விடுவது போல ஒரு ஷாட் வைத்து இருக்கின்றார்கள்.. முழுப்படத்தையும் எடுக்க எப்படி எல்லாம் சிம்புவை தாஜா செய்து இருக்கின்றார்கள் என்பதற்கு அந்த ஒரு ஷாட் நல்ல எடுத்துக்காட்டு..
======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நல்ல விமர்சனம். ரசித்த விஷயங்களை மட்டுமின்றி உறுத்திய விஷயங்களையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன். (சைதாப்பேட்டை பக்கம் வந்தா ஒரு ரிங் அடிக்கக் கூடாதா சேகர்? ஓடி வந்து பார்த்திருப்பேனே...)
ReplyDeleteடைம் பாஸ் படம் என்று சொல்லி இருக்கீங்க... பார்த்துடுவோம் :)
ReplyDeletePadam oooosthi only for STR fans!
ReplyDeleteபடத்தின் நிறைய அம்சங்களை அழகா சொல்லிருக்கிங்க சார்.ரொம்ப அருமையான விமர்சனம்.நன்றி.
ReplyDeleteஇதுவரை படித்த விமர்சனத்தில் ஒஸ்தி உங்களுது தான்
ReplyDeleteவிமர்சனம் சூப்பர்.... டைம் பாஸ் படம்தான் என்றாலும் மொக்கை இல்லாம இருந்தா ஓகே..
ReplyDeleteஒஸ்தி யை விமர்சனம் செய்த "ஒஸ்தி பிளாக்கர்" ஜாக்கி அண்ணனை நம்பி செல்கிறேன் ஒஸ்திக்கு... சதீஷ் முருகன்
ReplyDeleteleg piece ooti vidara vishayathila mattum than neengalum cableum ore mathiri think panni irukkenga
ReplyDeletemallika sucks..!! hooooooo..!! ugly..!!
ReplyDeleteபதிவுலகின் முக்கிய பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்
ReplyDeleteநானும் படம் பார்த்தேன். மசாலா படம். நல்லா பொழுது போச்சு. உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.
ஆனால் தனுஷ் & ரஜினி ரசிகர்களான அட்ரா சக்க சிபி, அதிஷா, என்வழி வினோ அவர்களது கொலை வெறியை பதிவாக போட்டுள்ளனர்.
பார்க்கலாம். கேபிள் சங்கரோட வசூல் ரிப்போர்ட் என்ன சொல்லுது என்று
///சந்தானம் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றார்...////
ReplyDeleteசந்தானம் ரசிகரா இருக்கறதுல நாங்க எல்லாம் பெருமை படுறோம்.... தேங்க்ஸ் பாஸ்.... படம் வெற்றி....
Bharathi raja direction la "Pasumpon " appadinnu oru padam vandhade !!! antha kathai mathiri ye irukke ?
ReplyDeleteRemake Film Aanaal Konjam matri Eerukalam.Last scence simbu shirt killearathu konjam over.Revathi madam nalla panni eerukanaga. over action, paadam parpavarkaluku Sallipai earpaduthum
ReplyDeleteRemake Film Aanaal Konjam matri Eerukalam.Last scence simbu shirt killearathu konjam over.Revathi madam nalla panni eerukanaga. over action, paadam parpavarkaluku Sallipai earpaduthum
ReplyDelete