சென்னையில் முல்லைபெரியாறு அணை காக்க 25/12/2011அன்று எழுச்சி பேரணி...கிருஸ்மஸ் விடுமுறை தினமான நேற்று முல்லைபெரியாறு அணை காக்க திரண்ட நம் சொந்த பந்தங்களை நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது..


மாலை மூன்று மணிக்கே கடற்கரைக்கு சென்று விட்டேன்..கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கியது..

மே பதினேழு இயக்கத்தினர் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர் நண்பர் திருமுருகன் மற்றும் கும்க்கி என பலர் பம்பரமாக சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

பதிவர்களில் கும்மி,வால்பையன்,கேஆர்பிசெந்தில்,சிவக்குமார்,திருப்பூர் ஜோதிஜி, போன்றவர்கள சந்தித்தேன், நண்பர் வக்கில் சுந்தர்ராஜன் அன்பழகள் போன்றவர்களும் வந்து இருந்தார்கள்.. பலர் எனக்கு கை கொடுத்து  ஜாக்கி  பேரணி முடிந்ததும்  சந்திக்கலாம் என்று சொன்னார்கள்..

ஏற்கனவே கும்க்கி இந்த பேரணியை புகைப்படம் எடுத்து கொடுக்க சொல்லி  இருந்தார்..யாழினிக்கு தடுப்புசி போட போகின்றேன்.. அதனால் குழந்தைக்கு ஜுரம் வந்து விட்டால் என்னால் வரமுடியாது என்பதை அவருக்கு முன்பே தெரிவித்து  இருந்தேன்.. நல்லவேளையாக அவளுக்கு ஜுரம் எல்லாம் வரவில்லை ஆதலால்  சொன்ன நேரத்துக்கு மெரினா கண்ணகியின் காலடியில் போய் நின்றேன்...

இயக்குனர்கள்..சேரன்,கௌதமன்,தங்கர்பச்சான், விக்ரமன், வந்ததும் கொஞ்சம் பரபரப்பாக மாறி இருந்தது.. பாரதிராஜா வந்ததும் இன்னும் பரபரப்பு அதிகமாகியது.. கவிஞர்கள் அறிவுமதி தாமரை போன்றவர்களும் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்...


கற்றதுதமிழ்ராம் மற்றும் நண்பர் அருன்சொக்கன்  போன்றவர்களும் வந்து இருந்தார்கள்.. அவர்களுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டு இருந்தேன்...

கூட்டம் அதிகமாக கொண்டே போனது... எல்லோரும்  கடற்கரை மணலில் அமர கலை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஊர் பட்ட மீடியாக்கள் குவிந்தன...ஓபி வேன்கள் இரண்டு வந்து இருந்தன..

மக்கள் பிடித்து இருந்த பேனர்களில் எல்லாம் கோபம் தெரித்த வார்த்தைகளாக காட்சி அளித்தன... திடிர் என்று விசில் பறக்க என்னவென்று பார்த்தால் மதிமுக தலைவர் வைகோ ஆஜர்... 

எல்லோரும் தரையில் அமர்ந்து இருக்க எழுக எழுக தமிழகம் என்ற பாடல்  சின்ன ஒலி அமைப்பில் பட ஆரம்பித்தார்கள்.. கூட்டம் உணர்ச்சிவசப்பட்டு கை தட்டி ஆரவாரித்தது...

பாடலில் மன்மோகன் சிங், நாராயணசாமி,சுப்ரமணியசுவாமி,சோனியா,உம்மன் சாண்டி  போன்றவர்கள் கேலி செய்யப்பட்டார்கள்... அதற்கு கூட்டம் முன்னை விட வேகமாக கைதட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்..

மறந்தும் மாநில அரசையும் ஜெ அரசையும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை... உளவுதுறை மற்றும் காவல்துறை ஆட்கள் வீடியோவில் முழு நிகழ்ச்சியையும் பதிவு செய்து கொண்டு இருந்தார்கள்,

பிடித்து இருந்த பேனர்களில் டைம்ஸ்ஆப் இந்தியா பேப்பரை வாங்கு வாங்கு என்று வாங்கி இருந்தார்கள்...

பறை மேளம் வந்து இறங்க இன்னும் கூட்டம் ஊற்சாகமாகியது.. கேரளாவுக்கு எதிராகவும் இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி கோஷங்கள் விண்ணை பிளந்தன..

எனக்கு எழுக எழுக தமிழகம் பாடல் பிடித்து இருந்தது...

குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்தவர்கள் எல்லோரும் கூட்டத்திற்கு குடும்பத்துடன் வந்து உட்கார்ந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்..

பிள்ளைகளின் கையில் எதிர்ப்பு தட்டியை கொடுத்து இருந்தார்கள்..  பேரணி மெல்ல கண்ணகி  சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடந்து செல்ல ஆரம்பிக்க கோஷங்கள் அதிரதொடங்கின..

மிகப்பெரிய எழுச்சி பேரணி கலங்கரை விளக்கம் நோக்கி விண் அதிரும் கோஷத்துடன் நடக்கதொடங்கியது...

நிறைய இளம்பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்..

மேல்மருவத்தூர் பக்தர்கள் வந்த பேருந்து டாப்புக்கு போய் பேரணியை நான் போட்டோ எடுக்க தொடங்க.. அங்கேயும் மீடியாக்காரர்கள். குவிய தொடங்கினர்...

நடந்து சென்றவர்களில் சிலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னை தங்கள் மொபைலில் புகைபடம் எடுத்து கையசைத்து சென்றார்கள்...

சென்னையில்  முல்லைபெரியாறு அணைகாக்க பெரிய எதிர்ப்பை மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் தெரிவித்து விட்டு கூட்டம் கலைந்து சென்றது...ஒரு சின்ன திருப்தியுடன் வீடு வந்து சேர்ந்தேன்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

11 comments:

 1. நிகழ்வு நடந்த இடத்தின் பின்புறம் இருந்ததால் அதைக்காண இயலவில்லை. காணொளி தொகுப்பு கிடைத்தால் வெளியிடவும்.

  ReplyDelete
 2. நன்றி.

  இதுபோல தமிழக மக்கள் அனைவரும் முல்லைப் பெரியாறு அணை போராட்டத்தில் ஒன்றாக சேர்ந்து போராடவேண்டும்.

  ReplyDelete
 3. அண்ணன் பஸ் மேல நிக்குற கடைசி போட்டோவை எடுத்தது நானுங்கோ!!

  பேரணி பற்றிய எனது பதிவு இதோ!!

  http://www.yaavarumnalam.com/2011/12/blog-post_26.html

  ReplyDelete
 4. இந்த ஒன்றுகூடல் தமிழர்களின் குரலுக்கு இன்னும் வலு சேர்க்கிறது.பகிர்வுக்கு நன்றி ஜாக்கி!

  ReplyDelete
 5. Thank you very much for your coverage Jackie

  ReplyDelete
 6. //மே பதினேழு இயக்கத்தினர் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர் நண்பர் திருமுருகன் மற்றும் கும்க்கி என பலர் பம்பரமாக சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.//

  கும்க்கி அல்ல கும்மி என்ற உமர் மாற்றி விடவும், கிருஷ்ணகிரியில் இருந்து கும்க்கி சண்டைக்கு வந்துவிடப்போகிறார்!

  ReplyDelete
 7. merinavil thangalai santhitthathil makilchi....

  ReplyDelete
 8. தியாகு எழுதிய 'எழுக எழுக தமிழகம்' பாடல். சமர்ப்பா குமரன்... புரட்சிகர பாடல்களை பாடுவதில் வல்லவர்.
  இப்பாடல் முழுமையாக கிடைத்தால் உங்கள் ப்ளாக்கில் எழுதவும். முகநூல் மற்றும் அலைபேசி வழியாக இப்பாடலை பரப்புவோம். தமிழர்களை விளித்து எழச் செய்வோம்.

  ReplyDelete
 9. 1998 கோவை மாநாட்டிற்காக தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் தோழர் தியாகு எழுதிய 'எழுக எழுக தமிழகம்'பாடல், சமர்ப்பா குமரன் இசையமைத்து பாடியது.
  பெரியாறு அணை காக்கும் போராட்டத்தில் சென்னை கடற்கரையில் இக்குழுவினரால் பாடப்பட்டது.

  சமர்ப்பா குமரன் புரட்சிகர பாடல்களை பாடுவதில் வல்லவர்.
  இப்பாடல் முழுமையாக கிடைத்தால் உங்கள் ப்ளாக்கில் எழுதவும். முகநூல் மற்றும் அலைபேசி வழியாக இப்பாடலை பரப்புவோம். தமிழர்களை விழித்து எழச் செய்வோம்.


  எழுக எழுக தமிழகம் ! எழுக எழுக தமிழகம் !!
  இருப்பதைக் காத்திடவும், இழந்ததை மீட்டிடவும்
  எழுக எழுக தமிழகம் ! எழுக எழுக தமிழகம் !!

  தேவி குளம் இழந்தோம், பீர்மேடு இழந்தோம்
  இடுக்கி நிலம் இழந்தோம்
  நெய்யாற்றங்கரை இழந்தோம்

  செழித்த நிலம் எல்லாம் இழந்தோம்

  எழுக எழுக தமிழகம் ! எழுக எழுக தமிழகம் !!
  இருப்பதைக் காத்திடவும், இழந்ததை மீட்டிடவும்
  எழுக எழுக தமிழகம் எழுக எழுக தமிழகம்

  திருவேங்கடம் இழந்தோம்
  சித்தூரை இழந்தோம்
  மைசூரை இழந்தோம்
  கொள்ளேகால் இழந்தோம்
  கோலார் ஐ இழந்தோம்

  இந்தியாவின் சூழ்ச்சியால் அத்தனையும் இழந்தோம் !

  எழுக எழுக தமிழகம் ! எழுக எழுக தமிழகம் !! எழுக எழுக தமிழகம் !!!
  இருப்பதைக் காத்திடவும், இழந்ததை மீட்டிடவும்
  எழுக எழுக தமிழகம் ! எழுக எழுக தமிழகம் !! எழுக எழுக தமிழகம் !!!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner