மறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..



இந்திய வரலாற்றில் இரக்கமற்ற படுகொலைக்கு பெயர் போன ஜாலியன்வாலாபாக் படுகொலையை அறங்கேற்றிய ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயனை அனைவருக்கும் தெரியும்...
ஆனால் தன் சொத்துக்களை  விற்று ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் பென்னிகுக் பெயர்.. இந்தியாவில் யாருக்கும் தெரியாது...முக்கியமாக தமிழகத்தில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை...




இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் 1700 களில் வேலூரில் தோன்றிய முதல் புரட்சி வரலாற்று பக்கங்களில் மறைக்கபட்டது.. காரணம் அது தமிழ்நாட்டில் நடந்தது என்ற ஒரே காரணம்தான்..அதுவே பஞ்சாப்பில் நடந்து இருந்தால் அது இந்திய வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம் பிடித்து இருக்கும்..இன்று போல அன்று தொலைத்தொடர்பு இல்லை என்பதால், அந்த 17ம்நூற்றாண்டில் ஆங்கில அரசுக்கு எதிரான வேலூரில் நடந்த புரட்சி, நீருபூத்த நெருப்பாக இருந்து 1858ல் சிப்பாய்கலகமாக மாறியது என்பதே வரலாறு....


பென்னிகுக் யார் என்று  தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கேட்டு பாருங்கள்... யாருக்கும் தெரியாது...எனக்கே அவரை பற்றிய எந்த செய்தியும் தெரியாது....எஸ்ராமகிருஷ்ணனின் துணையெழுத்து படித்துக்கொண்டு இருந்த போது, இந்த பென்னிகுக் பெயரை பார்த்ததும் ,அவரை பற்றி முழு விபரமும் அறிந்ததும் அன்றுதான்...இதுதான் தமிழகத்தின் தலை எழுத்து...தமிழகத்தின் சாபம் என்று சுட சொல்லலாம்....


துணையெழுத்து புத்தகத்தில் நீரில் மிதக்கும் நினைவுகள் என்ற கட்டுரையை எப்போது வாசித்தாலும் என் கண்கள் ஈரமாகிவிடுகின்றது.. ஒரு நெகிழ்ச்சியான ,வீரமான,அதிகமான ஆட்டிடுயூட்  உள்ள மனிதர்களாகத்தான் லோகன்துரையையும் பென்னிகுக்கையும் நான் பார்க்கின்றேன்..

முல்லை பெரியாறு அணைக்காரனமாக பாசனவசதி பெரும் ஐந்து மாவட்டங்களான
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட்மக்கள் இன்றும் பென்னிகுக்கை கொண்டாடி வருகின்றார்கள்..வீட்டில் அப்பா அம்மா இறந்து போனால் அந்த படத்தை எப்படி வைத்து பூஜிப்போமே அது போல அப்பகுதிமக்கள் பென்னிகுக்கிற்கு மரியாதை செய்கின்றார்கள்..அவர் பயெரில் உணவு விடுதிகள் இருக்கின்றன..கடவுள் சிலைபோல அவரையும் வழிபடுகின்றார்கள்..இது இந்தியாவில் ஆட்சி புரிந்த எந்த வெள்ளைக்காரனுக்கும் கிடைக்காத பேரு....

அவர் மேல்  உள்ள அளப்பறியா அன்பு காரணமாக தங்கள் பிள்ளைகளுக்கு அவரின் பெயரையும் லோகன்துரை பெயரையும் வைத்து நன்றி விசுவாசத்தை இன்னமும் செலுத்திவருகின்றார்கள்..

ஆனால் மதுரைக்கு இந்த பக்கம் வடதமிழ்நாட்டில் அவரை பற்றி யாருக்காவது தெரியுமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்...இவ்வளவு ஏன்..தமிழ்நாட்டில்  எத்தனையோ என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன.. அங்கு படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு முல்லை பெரியாறு அணை எப்படி கட்டினார்கள்.. அதன் அகலம் நீளம் என்ன?? எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள்..இப்போது அந்த அணையை எப்படி பலப்படுத்தினார்கள்//அது என்ன மாதிரி கண்ஸ்ட்க்ஷ்ன் என்பதை எதாவது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவனை கேட்டு பாருங்கள்.. எவனுக்கும் தெரியாது என்பதுதான் நிதர்சன உண்மை.


தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் விளையும், அரிசியும், காய்கனிகளும் ஐந்து மாவட்ட மக்கள் மட்டுமா? உண்டு பசி தீர்க்கின்றார்கள்.. ?? சென்னை கோயம்பேடு மார்க்கெட் மண்டி வரை அந்த ஐந்து மாவட்டத்தில் விளைந்த விளைபொருட்களைதான் நாமும் உண்ணுகின்றோம்...இவ்வளவு ஏன் அணையை உடைப்போம் என்று சொல்லும் கேரள சேட்டன்களுக்கும் நாம் விளைவிக்கும் உணவு பொருட்களை பெறுகின்றாகள்..


பென்னிகுக் நினைத்து இருந்தால்  நாள் முழுவதும் குடித்து விட்டு  சீட்டாடி இருந்து இருக்கலாம்.. நல்ல அழகான தமிழ் பெண்களை அனுபவித்து இருக்கலாம். கோடை விடுமுறையில் ஊட்டியில் பொழுதை கழித்து இருக்கலாம். அவர் செய்யவிவ்லலை... அன்று 18ஆம் நுற்றாண்டில் படுத்தி எடுத்த பஞ்சமும் அதன் பால் பாதிக்கபட்ட மக்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தார்கள்..

1800 களில் இருந்தே பெரியாற்றின் குறுக்கே அணைகட்டி அதனை தமிழக பக்கம் திருப்பி விட பலர் முற்சித்து  தோல்வியில் போய் முடிந்தாலும்,அன்றைய தமிழ்நாட்டின் பஞ்சத்தை போக்க இது மட்டுமே சிறந்த வழி  நிரந்தர வழி என்று முடிவு எடுத்த பென்னிகுக், ஆங்கிலேய அரசிடம் அனுமதி வாங்குகின்றார்...

18ம் நூற்றாண்டின் இறுதியில் முல்லை ஆறு, பெரியாறு இரண்டும் சேரும் மலைக்காட்டுப்பகுதியில் ஒரு அணைகட்டுவது என்பது  சாதாரணகாரியமா??? சற்றே உங்கள் கற்பனை எண்ணிப்பாருங்கள்..இங்கிலாந்தில் இருந்து அப்போதைய நவீன இயந்திரங்களை இறக்கி அதனை மலைமேல் ஏற்றி 18 டன் சுண்ணாம்பு மற்றும் கற்களோடு இந்த அணை கட்டி முடிக்கபட்டாலும் பென்னிகுக் சந்தித்த பிரச்சனைகள் சொல்லி மாளாது...

அணைகட்டிக்கொண்டு இருக்கும் போதே காட்டாற்று வெள்ளம் அணையை அடித்துக்கொண்டு சென்று விட.. மேற்க்கொண்டு பணம் கொடுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு கைவிரிக்க, பென்னி இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையும் மனைவி  சொத்துக்களை எல்லாம் விற்று, ஒரு லட்சம்ரூபாய் பணம் கொண்டு வந்து ,காட்டு மிருகங்களின் தாக்குதல்,காலரா,வயற்றுப்போக்கு, விஷக்காய்சல், என அணைகட்டும் போது நடந்த விபத்துகள் என்று ,உயிர் விட்டவர்கள் ...ஒருவர் அல்ல இரண்டு பேர் அல்ல தமிழக மகாஜனங்களே 422  பேர் உயிரை கொடுத்து கட்டிய அணை அது...பலரது உடல்கள் மலையில் இருந்து கீழே எடுத்து வரமுடியாத காரணத்தால் மலையிலேயே புதைத்து விட்டார்கள்...அந்த சமாதிகள் இன்றும் வழக்கம் போல கவனிப்பாரற்று கிடைக்கின்றன...


தென் மாவட்டத்தின் பஞ்சம் போக்கிய வள்ளல் அவன்... அதனால்தான் அவன் மொழி இனம் கடந்து இன்றும் சிலைகளாகவும் பெயர்களாகவும், பேருந்தின் பின்புறம் பெரிய பெரிய உருவங்களாகவும் இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்..

ரஜினி,கமல்,விஜய்,சூர்யா போன்ற நடிகர்களை கொண்டாடும் அளவுக்கு கூட இங்கு பென்னிகுக்கை நாம் கொண்டாடுவது இல்லை..அவனுக்கு என்ன தலையெழுத்து அவன் சொத்தை விற்று இங்கு அணை கட்டவேண்டும் என்று கட்டாயம் என்ன?,

அன்றைய மதிப்பீட்டில் ஒரு லட்சரூபாய் இன்று அதே சொத்தின் மதிப்பு ஆயிரம் கோடி....அதை தமிழக மக்களுக்கு தாரைவார்த்த வள்ளல் அவன்..

வரலாற்று பக்கங்களில் டல்ஹௌசி பிரபு,டயர்,மவுன்பேட்டன், வாரன்ஹோஸ்ட்டிங் என்று பல பிரபுக்களை படித்து இருக்கின்றோம்..ஆனால் உண்மையான பிரபு பென்னிகுக் பற்றி இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த யாரும் வரலாற்றில் பதிக்கவேயில்லை...வளரும் தலைமுறை யாருக்கும் வடமாவட்டத்தில் இருக்கும் எந்த பிள்ளைகளுக்கும் அவரை பற்றி தெரியாது அவர் தியாகம் தெரியாது.. மதுரையிலும் தேனியிலும் சிலை வைத்து விட்டால் போதும் என்ற நினைத்து விட்டர்கள் போலும்..

இவ்வளவு ஏன் எ பிலிம் பை பாராதிராஜா என்று பேசும் பாராதிராஜா கூட அவரின் எந்த படத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக  கூட பென்னிகுக் பெயரை பதிவு செய்யவில்லை...அவர் நினைத்து இருந்தால் பென்னிகுக் பாத்திரத்தை இன்னும் சிறப்பாக தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்க முடியும்...நாடோடி தென்றல் படத்தில் பென்னிகுக் பற்றி சொல்லி இருக்கலாம்.. சொல்லாதது தப்பு இல்லை..ஆனால் பென்னிகுக் தியாகத்தினால் பலன் பெற்ற மாவட்டத்துக்காரர்.. அதனால் அந்த எதிர்பார்ப்பு......

வெகுநாட்களுக்கு பின்  நேற்று ஒரு சினிமா விளம்பரத்தில் வள்ளல் பென்னிகுக் ஆசியுடன் ஒண்டிப்புலி என்று ஒரு திரைப்படத்தின் தொடக்க விழா அறிவிப்பு என் கவனத்தை கவர்ந்தது..டெக்னிஷீயன்கள் பெயரை பார்த்தால் அதில் நண்பர் விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா மேனாக பணிபுரிகின்றார்.. அவருக்கு எனது வாழ்த்தை தெரிவித்தேன்...முதல் முறையாக தமிழ்சினிமா ஊடகத்தில் பென்னிகுக் பெயர் இடம் பெற்று இருக்கின்றது..அதுவே பெரிய சந்தோஷம்..பென்னிகுக்கால் பலன் பெற்ற தேனி மாவட்டத்துக்காரர் இயக்குனர் இமயம் பாரதிராஜா செய்யாத விஷயத்தை செய்த திரைப்படகுழுவுக்கு எனது  நன்றிகள்...


பென்னிகுக் பற்றி நிறைய தேடி தேடி படிக்கின்றேன்..அவரை பற்றி இன்னும் சிலாகித்து சொல்ல வேண்டும் என்றால் அவர் அணைக்கட்ட தேர்ந்து எடுத்த இடத்த்தை இன்றளவும் பொறியாளர்கள் புகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.... என்னால் அவரை பற்றி சினிமா எடுக்க முடியாவிட்டாலும், பென்னிகுக் பற்றிய ஒரு ஆவணப்படம் இயக்கி அது தமிழக மக்கள் அனைவருக்கும் அந்த தியாக செம்மலின் வரலாற்றை வளரும் இளைய சமுதாயத்திடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது..உடல் உழைப்பை தர நான்தயார்..பொருளுதவி கிடைத்தால் வெகுவிரைவில் இந்த ஆவணபட வேலைகளை ஆரம்பிக்க இருக்கின்றேன்...


பென்னிகுக் யார் என்று கேட்டால் அவரை பற்றி நெகிழ்ச்சியாக பேசவேண்டும்...அவரின் உழைப்பையும் தியாகத்தையும் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் போற்றவேண்டும்..அவரால் நேரடியாக பயண்பெரும் மாவட்டத்தினரும் மறைமுகமாக பயண்பெரும் மாவட்ட மக்களும் அவர் தியாகத்தை போற்ற வேண்டும்...

உபயம் கனகராஜ் என்று கோவில் டியூப்லைட்டில் வெளிச்சம்வராவண்ணம் பெயர் பொறித்துக்கொள்ளும் நம்மவர்கள் மத்தியில் தன் சொத்துகளை  விற்று தமிழகத்தின் பஞ்சம் போக்கிய ஒரு வெள்ளக்காரனை தமிழகத்தில் இருக்கும் அநேகம் பேருக்கு தெரியில்லை எனும் போது மனது வலிக்கின்றது...

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மக்க்ள் மட்டுமே பென்னிகுக்கை கொணடாடி வருகின்றனர்..ஆனால் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும்..அதுவே என் ஆசை..

இனியாவது வளரும் சமுதாயம் அவர் பற்றி தெரிந்துக்கொள்ள பாடபுத்தகங்களில் பென்னிகுக் வாழ்க்கையையும் அவர் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகளையும், உழைப்பையும் ,பொருள் உதவியையும் பாடபுத்தகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்.....


நான் நிறைய முறை சொன்னதுதான்... நல்லவனாக இருப்பது என்பது இந்தியாவைபொருத்தவரை முக்கியமாக தமிழகத்தை பொருத்தவரை தகுதிஇழப்பு... ஜெனரல் டயர் போல பென்னிகுக் இந்திய வரலாற்றில் இடம் பிடித்து இருக்கலாம்..ஆனால் பென்னி நல்லது செய்து விட்டார்... என்ன செய்வது...????இதுதான் உலகம்..

கேரளாவில் 40க்கு மேற்பட்ட ஆறுகள் வீணாக கடலில கலக்கின்றன...ஆனால் நாம் பயண்படுத்துவது ஒரே ஒரு ஆற்று நீரைதான்...அதுதான் சேட்டன்களின் கண்களை உறுத்துகின்றது..பாரத் மாதா கீ ஜெ...............

கண் எதிரில் அணையை உடைத்தே தீருவோம் என்று சூளுரைக்கும் சேட்டன்களை புத்தியை நினைத்து பார்த்து இருந்தால் இவ்வளவு உழைப்பையும் 422 பேர் உயிரையும் கொடுத்து, பென்னிகுக் அணையை அந்த இடத்தில் கட்டி இருக்கமாட்டார்....


உங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது காக்கா,நரி கதைகளோடு பென்னிகுக் போன்ற தியாக கதைகளையும் சேர்த்து சொல்லுங்கள்..

பயண் துக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது...

(பயணை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலினும் மிகப்பெரியதாகும்...)

தேனி, கம்பம், மக்கள்  கர்னல் பென்னிகுக் படத்தை வைத்து இருக்கின்றார்கள் அந்த படத்தின் கீழே இருக்கும் வாசகம் என்றும் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும்.... அந்த வாசகம் கீழே...

நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்.......

கார்னல் ஜான்பென்னிகுக்கின் தியாகம் கடலை விடமிகப்பெரியது..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

64 comments:

  1. மதுரைக்காரனான எனக்கு பென்னிகுக்கைப் பற்றித் தெரியும். நீங்கள் அவர் நல்லது செய்ததால்தான் வரலாறில் இடம் பெறவில்லை. ஜெனரல் டயர் மாதிரி நடந்திருந்தால் பெயர் பெற்றிருப்பார் என்று சொல்லியிருப்பது சுடுகிற நிஜம் சேகர்! இன்றைக்கு தமிழகத்தில் நிறையப் பேருக்கு அந்த அணையின் பின் இவ்வளவு பேரின் தியாகங்கள் இருப்பது தெரியாத விஷயம்தான். உங்களின் இந்தப் பகிர்வு அந்த விழிப்புணர்வு தீபத்தை ஏற்றட்டும். என் இதயபூர்வமான வாழ்த்துக்களும், நன்றிகளும்!

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை அன்பரே. நான் அடிக்கடி தங்கள் வலைப்பூவுக்கு வந்து செல்பவன் ஆனால் பின்னூட்டம் போட்டதில்லை. பள்ளியில் ஆசிரியர் அதனால் பிசியாகிவிடுவேன். நான் இராமநாதபுரம் மாவட்டத்துக் காரன், எனக்கே இவரைப் பற்றி இப்போதுதான் தெரிகிறது. இவரை பற்றி தேடும் போது உங்கள் வலைப்பூவும் கிடைத்தது. நல்ல தகவல் மட்டுமல்ல. எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல். அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம் என்பதை மலையாளிகள் உணரவே மாட்டார்களா?
    அவர்களுக்கு நன்றாக உணர்த்த வேண்டும் என்பதே எம் போன்றோரின் ஆசை

    ReplyDelete
  3. ஹலோ ஜாக்கி,
    பென்னிகுக் பற்றிய தகவல்கள் அருமை. ஆனால் அவரைபற்றிய அறியாமைக்கு தமிழக மக்களை மட்டும் குறை சொல்வது சரியாகபடவில்லை. காயிதே மில்லத், வீரமாமுனிவர் போன்றவர்களை நாம் பாடபுத்தகங்கள் வாயிலாகதான் தெரிந்து கொண்டோம். ஆக பென்னிகுக், போதிதர்மன் போன்ற வரலாற்ற நாயகர்களை நாம் பள்ளிகல்வியில் பாடமாக சேர்க்க வேண்டும். ஏழாம் அறிவு படத்தில் தனக்கு போதி தர்மனை தெரியும் அனால் மற்ற தமிழர்களக்கு தெரியாது என்பதை படத்தில் பேட்டி எடுத்து போடுவார் முருகதாஸ். இந்த கட்டுரையும் ஏனோ அந்த tone-இல் உள்ளது போல் தோன்றுகிறது. ஒரு விடயம் ஒத்துக்கொள்கிறேன். சாதாரண மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றாலும் பாரதி ராஜாவுக்கு தெரிந்திருக்கும். சினிமாவில் பதிந்திருக்கலாம்.
    நன்றி..

    ReplyDelete
  4. பென்னி குக் பற்றி பள்ளிகளில் பாடமாக வைக்கவேண்டும் என்பது மிகவும் அவசியம், அவசரமும் கூட.

    சேட்டன்களின் இந்த கடும் எதிர்ப்புக்கு பின்னால் ஏதோ பெரியதொரு சூழ்ச்சி இருப்பதாக தெரிகிறது.

    ReplyDelete
  5. ////ரஜினி,கமல்,விஜய்,சூர்யா போன்ற நடிகர்களை கொண்டாடும் அளவுக்கு கூட இங்கு பென்னிகுக்கை நாம் கொண்டாடுவது இல்லை..அவனுக்கு என்ன தலையெழுத்து அவன் சொத்தை விற்று இங்கு அணை கட்டவேண்டும் என்று கட்டாயம் என்ன?////

    சரியான கேள்வி...

    நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவரை நாம் நினைப்பதில்லை...

    இந்த பதிவு உங்கள் பதிவில் மிக முக்கியான கொண்டாடப்பட வேண்டிய பதிவு...

    ReplyDelete
  6. இனியாவது வளரும் சமுதாயம் அவர் பற்றி தெரிந்துக்கொள்ள பாடபுத்தகங்களில் பென்னிகுக் வாழ்க்கையையும் அவர் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகளையும், உழைப்பையும் ,பொருள் உதவியையும் பாடபுத்தகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்.....//

    தன்னலமில்லாத ஒரு தலைசிறந்த தியாகி அவர், கண்டிப்பாக பாடப்புத்தகத்தில் பென்னிகுக் வாழ்க்கை சரித்திரம் ஆகவேண்டும் என்பதே என்னுடைய ஆசையும், அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் ஜாக்கி நன்றிகள்...!!!

    ReplyDelete
  7. migavum arumayana avasiyamana pathivu jackie anna

    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  8. Will be very happy if this history is available in wikipedia. So that other people will come to know.

    http://en.wikipedia.org/wiki/John_Pennycuick_(British_engineer)

    ReplyDelete
  9. Dear jackie anna naanum raamanathapuram maavattathu kaaran aanaal enakku avarai patri ariya vaippu illaamal poivittathu ungal valaippathivin moolam therinthu konden.... mikka nandri.....

    ReplyDelete
  10. Dear jackie anna naanum raamanathapuram maavattathu kaaran aanaal enakku avarai patri ariya vaippu illaamal poivittathu ungal valaippathivin moolam therinthu konden.... mikka nandri.....

    ReplyDelete
  11. உண்மையான செய்தி..... ஒரு முறை ஒரு blog இல் படித்தேன்.. "விஜய், சூரியா போன்ற சொக்காளிகளுக்கு (entertainers) விருதும் கௌரவமும் வழங்கும் சமுதாயம், பௌதீகவியலின் (physics) மிகப் பெரிய தூணான 2nd law of thermodynamics ஐ உலகுக்கு வழங்கிய போல்ட்மன் (Boltzmann) போன்றவர்களை தூக்கிலிட்டு தற்கொலை செய்யவே தூண்டியது..."

    என்ன ஒரு அழகான உலகம்..

    ReplyDelete
  12. ஊர்ப்பணத்தில் கொள்ளை அடித்தது போக மிச்ச மீதியில் அணைகட்டி தான் மட்டுமே காரணம் என்று பெரியதாக க்ராணைட் கல்வெட்டு வைத்து பொதுக்கூட்டம் போட்டு திறப்பு விழா செய்து இருந்தால் மக்களுக்கு ரீச் ஆகி இருந்திருப்பார்.

    ReplyDelete
  13. பென்னி குக் பத்தி தெரிய, கிழக்கு பதிப்பகம் முல்லை பெரியார் என்று ஒரு புத்தகம் இருக்குது,அதை படித்தால் அவருடைய வரலாறு, முல்லை பெரியாரின் கட்டுமான பணிகள் தெரியும்.ஆன தகவல்கள் கொஞ்சம் கம்மியாதான் இருக்கும்

    ReplyDelete
  14. நன்றி தோழரே! ஒரு உண்மையை உணர வைத்ததற்கு,தங்கள் ஆவண படத்திற்கு என்னால் முடிந்த உடல் உழைப்பை தரத் தயார், ஏனெனில் நான் பணம் படைத்தவன் இல்லை...

    ReplyDelete
  15. ROMBA NANRI SIR VELOOREVASIANA ENNAKU IPPATHAN PENNICOOK PATRI THERIYAVNTHULATHU NAAN EN NANBARGALIDAM SOLLUVEN

    ReplyDelete
  16. அண்ணே நல்ல பதிவு. Tamilanai பொறுத்தவரையில் அவன் ஒரு சுயநலவாதி . உதாரணம் இலங்கை . வீட்டில் தன்னிவரவில்லை என்றால் எப்பாடுபட்டாவது சரிசெய்யும் சராசரி தமிழன் . theru paippu
    ரிப்பேர்ஆயிடிச்சுன்னா எதுவுமே தெரியாதமாதிரி இருப்பான் . இப்போ பாதிக்கப்பட்ட மாவட்டக்காரன் மாறட்டும் போராடவேண்டியதுதான். அந்த மாவட்டத்ளையும் யாரெல்லாம் பாதிக்கபடுரான்களோ அவங்க மட்டும் சாவட்டும்ம்னு மதவன்னெல்லாம் நேவ்ச்பெப்பரும் டீவீயும் பார்த்துட்டு கேரளகாரனையும் அரசியல்வாதியையும் திடுவான் . தமிழ்படஹெரோக்கள் போல யாரவது வந்து புடுங்கனும் .

    ReplyDelete
  17. அண்ணா,

    பென்னிகுக் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு சினிமா எடுப்பதற்கான கதைக்களத்தை ஐந்து வருடங்களுக்கு முன் எனது நானும் வேலுவும் நிறைய விவாதித்தோம். கண்டிப்பாய் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறோம், இன்னும் அதீத தகவல்களோடு.

    பிரபாகர்...

    ReplyDelete
  18. உங்களுடைய ஆதங்கம் அனைவரையும் சிந்திக்க வைக்கும். உங்கள் கேள்விகளுக்கு பதில் 'இல்லை'என்பதே கசப்பான உண்மை!


    இந்த வார 'புதிய தலைமுறை' இதழ் மூலம் முல்லை பெரியாறு குறித்து விரிவாக அறிந்துக் கொண்டேன். 'அதுவரை, எனக்கு ஒன்றும் புரியாமல்தான் இருந்தேன்' என்று வெட்கத்தை விட்டு இங்கு பதிவு செய்கிறேன், ஊடங்கங்கள் முதலில் வரலாற்றை மக்களுக்கு தெரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து அன்றைய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பழைய வரலாற்றை மறந்து விடுகின்றார்கள். அதனால், உண்மை புரியாமல் எளிதில் உணர்சி வசப்படுகிறோம். நமக்கே அணையின் வரலாறு தெரியாத போது, கேரள மக்களுக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது. 'பென்னி குக்'கின் தியாகம் அவர்களுக்கும் தெரிந்தால் ஓரளவுக்காவது சிந்திப்பார்கள் என்று நம்பலாம். சேட்டன்களும் சீரியல் பார்த்து அழும் மனிதர்கள் தானே?!


    இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ஐயப்பன் கோவிலுக்கு போவதை யாரும் நிறுத்தவில்லை. அங்கு, ஐயப்ப பக்தர்களுக்கு, போராட்டக் காரர்கள் செருப்பு மாலை அணிவித்ததாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இந்த வருடம் மட்டுமாவது இந்த (அ)சாமிகள் அங்கு செல்லாமல் இருக்கலாமே? அப்படி செய்தால் ,அது சேட்டன்களை சிந்திக்க வைக்குமே?

    ReplyDelete
  19. சாலை,வாகனங்கள் பற்றிய உங்கள் முந்தைய பதிவு ஒன்று நினைவுக்கு வருகிறது.

    இந்த பதிவும் என்றும் நினைவில் இருக்கும் ஜாக்கி.

    ReplyDelete
  20. மிக பெரிய மலையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எந்த வசதியும் இல்லாத காலத்தில் நம் தமிழ் மக்களுக்காக இங்கிலாந்தில் இருந்து சொத்தை விற்று பணம் சேர்த்து கட்டிய அணை-இந்த பதிவை எம்முடைய பாசமான நடையில் எங்கள் வீட்டுப்பிள்ளையாய் பதிவு உலகில் செய்தமைக்கு நன்றி அண்ணா.....கதிர் ..ஆக்ஸ்போர்ட்

    ReplyDelete
  21. Dear Mr.Jackie Sekar
    Thank you for writing such a wonderful posting about the great man Co.Benny Cook.All the people in Tamilnadu should know about him.

    ReplyDelete
  22. தேனி மாவட்ட மக்கள் சார்பில் நன்றி ஜாக்கி அண்ணா!!!

    ReplyDelete
  23. பென்னிகுய்க் பற்றி சொல்ல இன்னும் நிறைய உள்ளது:
    (1) அவர் ஒரு அருமையான என்ஞீனியர். பெரியாற்றைப் பற்றி முழு தகவலும், வரைபடங்களும் தனியொரு மனிதனாக ஏற்படுத்தி லன்டன் அரசுக்குக் கொடுத்து அனைகட்ட அரசிடமிருந்து அனுமதி வாங்கினார்.
    (2) பெரியாறு அணை கட்டுவதற்கு போர்சுக்கல் நாட்டுத் தச்சர்களையும் உபயொகப்படுத்தச் செய்தவர்.
    (3) அவ்ர் ஒரு அருமையான கிரிக்கெட் விளையாட்டு வீரர். இன்றைக்கு சென்னையில் பிரபலமாக உள்ள சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தை உருவாக்கியரும் அவர்தான்.
    (4) அவர் குடும்பத்தின் பாரம்பரியம் மிகப் பெருமை வாய்ந்தது. முல்லைப்பெரியாறு அணைக்காக அவர் தன் மனைவியின் நகைகளை விற்றுத்தான் அந்தப்பணத்தில் அணை கட்டினார். அணைக்கான செலவு வெறும் ஒரு லட்சமல்ல, அது 124 லட்சம். இதில் சுமார் 70% அவர் மனைவியின் நகை விற்ற பணமாகும்.
    (5) அவருக்கு 5 மகள் 1 மகன். அவர் மகனும் அவர் பேரனும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஜட்ஜாக இருதவர்கள். அவருடைய பேரன் சில வருடங்களுக்குமுன்பு மதுரை வந்த போது பாராட்டு விழா நடத்தப்பட்டது

    ReplyDelete
  24. அவரை பற்றி தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் ஒரு பதிவிட்டிருந்தேன்

    http://tamilfuser.blogspot.com/2011/01/blog-post_29.html

    ReplyDelete
  25. அன்பு ஜாக்கி,

    பென்னிகுக்கைப் பற்றித் தெரிந்து கொள்ள நல்லதோர் பதிப்பு.....
    ELIYAVAN கூறிய தகவல் மேலும் அருமையான பதிவு....
    மிகவும் அருமை....

    ReplyDelete
  26. கண்களில் நீரை வரவழைக்கும் தியாகம் பென்னிகுக்கினுடையது..........

    ReplyDelete
  27. கண்களில் நீரை வரவழைக்கும் தியாகம் ஐயா பென்னி குக்கினுடையது........வணங்குகிறேன் அவரை...

    ReplyDelete
  28. Dear Jackie,

    This is your No.1 Post... Posted on right time too. I had never heard about him. We know only British ppl constructed the dam. .that's all. nothing else..

    Wonderful posting. .Again telling ... this is your No.1 Post

    ReplyDelete
  29. //உபயம் கனகராஜ் என்று கோவில் டியூப்லைட்டில் வெளிச்சம்வராவண்ணம் பெயர் பொறித்துக்கொள்ளும் நம்மவர்கள் மத்தியில் தன் சொத்துகளை விற்று தமிழகத்தின் பஞ்சம் போக்கிய ஒரு வெள்ளக்காரனை தமிழகத்தில் இருக்கும் அநேகம் பேருக்கு தெரியில்லை எனும் போது மனது வலிக்கின்றது...//

    சும்மா நச்சுன்னு சொன்னிங்க சார்...

    ReplyDelete
  30. அருமை. நான் வனத்துறையில் பணியாற்றுவதால், என்னுடைய பயிற்சி காலத்தில் களப்பயிற்சிக்காக முல்லை பெரியாறு அணைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் முல்லை பெரியாறு அணையை அருளிய வள்ளல் பென்னி குக் பற்றி முதன் முறையாக கேள்விப்பட்டேன். மக்களை நேசித்த மாபெரும் மனித உணர்வாளர் அவர். இன்றைய முல்லை பெரியாறு பிரச்சினையின் மூலம் படித்தவர்களிடைய ஓரளவுக்கு அவர் பெயர் அறிமுகமாகியிருப்பது சோகத்திலும் ஒரு நன்மை என்றே சொல்லவேண்டும்.

    ReplyDelete
  31. http://www.hindu.com/lf/2003/11/06/stories/2003110600270200.htm his great grandson visit to india in 2003

    ReplyDelete
  32. very good post every tamils must read,thanks

    ReplyDelete
  33. இந்தக் கட்டுரையைப் படிக்கும் வரை எனக்கும் (சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்த) பென்னி குக் பற்றித் தெரியாது. இனிமேல் படிப்பேன். தன் மக்களின், தன் இனத்தோரின், நன்மைக்காக தியாகம் செய்தவர்களை விட, "அடிமைகள் " (அன்றைய பிரிட்டிஷ் அதிகாரிகளின் attitude ) வாழ அருள் செய்த அந்த "யார் பெத்த புள்ளையோ" வை என் மனத்தில் கொண்டு வந்து விட்டேன். முழுதாக அறிந்து, அவரைப் போற்றும் எந்த முயற்சியிலும் என்னால் ஆனதைச் செய்வேன். இந்தக் கட்டுரையை எழுதிய எழுத்தாளனின் நோக்கம் ஒரு இடத்தில் நிறைவேறியது. சேட்டன்களை விடுங்கள், பணத்திற்காக எதையும் செய்வார்கள் (நல்ல மலையாளிகள், மன்னிக்கவும்)............அவர்களுக்கு உணர்வு ஒன்றே ஒன்று தான்............என் கூட்டம், என் பாதுகாப்பு, .................மிருகங்களைப் போல...................பென்னி குக்கைத் தெரிந்து கொள்ளப் போகிறேன்..............

    ReplyDelete
  34. கேரளாவில் 40க்கு மேற்பட்ட ஆறுகள் வீணாக கடலில கலக்கின்றன...ஆனால் நாம் பயண்படுத்துவது ஒரே ஒரு ஆற்று நீரைதான்...அதுதான் சேட்டன்களின் கண்களை உறுத்துகின்றது..பாரத் மாதா கீ ஜெ...............

    ReplyDelete
  35. Jaki sir.
    ungaluku muthali en nandrigal kodi. thangal eduka ninaitha DOCUMENTARY FILM engali Andipatti Tholar oruvar 5 aandu kalamaga eduthu mudivadaum nilail ullathu. 2% velai mattume ullathu. en kudumbathirku mullai periyarudan parambari thodarbu unndu.

    ReplyDelete
  36. வணக்கம்.. சிறப்பான ஒரு பதிவை நீங்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்.. ஓரளவு பென்னிகுக்-ன் பெயரை தேனி, மதுரை மாவட்டங்களையும் தாண்டி உச்சரித்துக்கொண்டிருந்ததென்றால் அது வைகோ-ன் குரலாகத்தான் இருக்க முடியும்.. ஒவ்வொரு கூட்டத்திலும் முல்லைப்பெரியார் அணை பற்றி பேசுவார். அப்போதெல்லாம் பென்னிகுக் கட்டிய அணை பற்றியும், அவரின் குழந்தை அந்த அணையின் கட்டுமானத்தின் போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு கல் தலையில் விழுந்து இறந்துபோனதையும் வைகோ சொல்லித்தான் நான் அறிந்திருக்கிறேன்.. குறும்படம் எடுக்க என்னால பங்களிப்பை அளிக்க நான் தயாராக இருக்கிறேன்.. உங்களை தொடர்புகொள்கிறேன்..

    ReplyDelete
  37. நல்ல பதிவு.. நன்றி நண்பரே..
    அன்புடன் தேனி.தே.சுந்தர்..

    ReplyDelete
  38. வேலூர் கலகம் நடந்தது 1806ல் .சிப்பாய்களின் புரட்சி நடந்தது 1857ல். முதலில் அதை தெரிந்துகொள்ளுங்கள் ஜாக்கி!

    ReplyDelete
  39. really a good article to know everybody.., my wishes always be there..

    ReplyDelete
  40. Superbly written by Jackie..We have to take copy of this and hand out to all the school kids…
    I salute Major John Pennycuick, M.E., and my Dear friend Jackie for this article..…..

    ReplyDelete
  41. வணகம், நானும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன்தான், பாரதிராஜா, இளயராஜா,வைரமுத்து,கஸ்துரி ராஜா , பாலா, இவர்கள் அமைதியாக நமது ஊரை படம் பிடித்து, பணம் சம்பாதித்து நல்லாத்தான் வழ்றங்க, இதில் பாரதிராஜா நாம சதி சனத்துல பொண்ணு இல்லன்னு, கேரளாவுல பொண்ணு கட்டியிருக்கிறார். தலைவா குரும் படம் எடுக்க , நானும் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். எனக்கு 3D மற்றும் எடிட்டிங் ,எப்க்ஸ், lighting தெரியும், மேலும் என்னிடம் ஒரு DSLR 600D கேமரா இருக்கிறது.

    பென்னின் குக் வாழ்க...

    ReplyDelete
  42. பின்னுட்டம் இட்ட அத்தனை பேருக்கும் என் நன்றிகள்..

    முக்கியமாக மேலும் சுவாரஸ்ய தகவல்கள் கொடுத்த எளியவனுக்கு மிக்க நன்றி...

    மேலும் அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இருந்தால் நண்பர்கள் இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்..

    ஆவணபடத்துக்கான பண உதவி தொட்ர்ந்த கிடைத்த வண்ணம் உள்ளது... அதுப்பற்றிய அறிவிப்பு விரைவில்..


    அன்பின் சுரேஷ் எனது எண் 98402 29629 எண்ணுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்..உங்கள் உதவி எனக்கு தேவை..

    ReplyDelete
  43. அன்பு நண்பர் திரு சேகர்,
    பென்னிகுக் பற்றிய தங்கள் கட்டுரையும், அதன் சார்பான பின்னூட்டங்களும் அருமை. நீங்கள் எடுக்கவிருக்கும் ஆவணப் படத்துக்கு என் வாழ்த்துக்கள். தாங்கள் விருப்பப் பட்டால், அந்த படத்துக்கான பாடலை நான் எழுதி, என் நண்பரின் இசையில் தங்களுக்கு அளிக்க நான் தயார்.
    அன்பன்,
    இராஜேஸ்வரன். ஆ
    என் வலைப்பூ : (www.meyyezhuthu.blogspot.com)
    9677005196

    ReplyDelete
  44. "நல்லவனாக இருப்பது என்பது இந்தியாவைபொருத்தவரை முக்கியமாக தமிழகத்தை பொருத்தவரை தகுதிஇழப்பு.."

    Jackie.. you rock man..

    ReplyDelete
  45. Dear Sir,
    I am really impressed with the article. Today only i knew the history of mullai periar dam and thrilled to note the contributions made by Major John Pennycuick, M.E.,and hats off to Jackie for this article..…..
    Dinakaran

    ReplyDelete
  46. thanks for this history sir..we youngsters will carry this to the next generation. neer irukum varai neer irupeer..

    ReplyDelete
  47. You have given a lot of rare info thanks a lot.
    My mom conveyed her heartfel gratitude.

    Kalyane

    ReplyDelete
  48. please contact me for the help to make this historical film.. Let us tell the real, selfishless, dedicated history of good people to our future generation. Thanks for your good initiative even under present money-minded world. Looking for your reply

    My mail ID jcsm_bpl@yahoo.com

    ReplyDelete
  49. please contact me for the help to make this historical film.. Let us tell the real, selfishless, dedicated history of good people to our future generation. Thanks for your good initiative even under present money-minded world. Looking for your reply

    My mail ID jcsm_bpl@yahoo.com

    ReplyDelete
  50. Awesome post Jackie anna... really while reading the post, virtually all came in to my thought of how hard it took to built a dam... Really I will share the post to all my friends and to all my known persons...

    ReplyDelete
  51. கற்பி!ஒன்றுசேர்!இழந்த உரிமை பெறுவோம்..... உரிமை இழந்தால் வாழ்வு இழப்பாய் தமிழா.... உரிமைக்கு இன்று உழைக்க மறுத்தால் நாளை வாழ்வே இழக்க நேரும். ஓன்றுசேர்வோம்,ப போராடுவோம்..... உரிமை காப்போம்

    ReplyDelete
  52. நண்பர் ஜாக்கி அவர்களுக்கு...!

    நான் கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல், தேனீ, சுருளி வழியாக தேக்கடிக்குச் சென்றேன்...! சுற்றுலாவாக குடும்பத்துடன்...! ஆனால்... நான் அந்த ஊர்களில் சென்றபோது கைடை அழைத்து செல்லவில்லை..! ஆனால், அங்குள்ள "பாசக்கார" மக்களுடன் மக்களாய் தங்கி, அவர்கள் முன்னோர்கள் செவிவழியாய் சொன்னதை... எனக்குச் சொன்னார்கள்...! அப்போதுதான் "பென்னிக்குக்" எனும் தங்கள் கடவுளை சொன்னார்கள்...! கரம்பையாய் கிடந்த தேனீ மாவட்டத்தை சொர்க்கமாய் மாற்றியவன் பென்னிக்குக்..! அதனால் அவனை எங்கள் "குலச்சாமியாய் கும்முடுறோம் சாமி... " அந்த வீச்சருவா, வேல்க்கம்பு மக்கள் சொன்னபோது "கல்லுக்குள்ளும் ஈரமா?" என வியந்தேன்...! பின்னர் அவர்... அந்த மக்கள் வாய்வழியாய் சொல்லிவந்த நிகழ்வை சொன்னார்கள்...! வியந்து நின்றேன்...! அவர்கள் சொல்லி முடித்ததும் அப்போதுதான் எனக்கு "பென்னிக்குக்"கை அவர்கள் குலச்சாமியாய் வழிபடுதலின் அர்த்தம் புரிந்தது...!

    அத்துடன்...! நான் தேக்கடி சென்று...! படகில் முல்லைப் பெரியாறு அணையைக் கண்டதும்...! அங்குள்ள நண்பர்கள் அந்த அணையின் வரலாற்றை சொன்னதும்... அதனை நேரில் கண்டதும்...! எனக்குள் நான் சொன்னது "உண்மையில் இம்மக்கள் பென்னிக்குக்கை குலச்சாமியாய் வழிபடுவது தவறில்லை" என...! அறிவியல் முன்னேற்றம் முழுமையடையாதபோது... தன்னுடைய சொத்தை விற்று... அதுவும் ஓர் அடிமை நாட்டு மக்களுக்கு நன்மை செய்தது... எவ்வளவு பெரிய விஷயம்...! அந்த அணை சுற்றிபார்த்தபோது அறிந்தேன்...!
    அத்துடன்... அவன் தனது புத்திக்கூர்மையால் மலையைக் குடைந்தது... அதிலும் சுமார் 5௦௦௦ அடி மலையை குடைந்து தமிழகத்திற்கு தானே தண்ணீர் கிடைக்கச் செய்ததும்... அதோடு... நாளை கேரளத்துக்காரன் தண்ணீர் எடுத்துக்கொண்டு தமிழனை ஏமாற்றக்கூடாது என தந்திரமாய் மதகு ஏதும் வைக்காமல்..நமக்கு நீர் கிடைக்கச் செய்த "பென்னிக்குக் தென் தமிழக தமிழக மக்களுக்கு என்றும் அவன் குலச்சாமிதான்"...!

    தங்கள் பதிவு அருமை...! இதில் சொன்னெதெல்லாம் உண்மை..! அப்பட்டமான உண்மை...!

    ReplyDelete
  53. உங்கள் உடைமை விற்று,
    எங்களுக்கு நீரும் உணவும் உயிரும் கொடுத்தவரே அய்யா ஜான் பென்னிகுக்...

    ReplyDelete
  54. உங்கள் உடைமை விற்று,
    எங்களுக்கு நீரும் உணவும் உயிரும் கொடுத்தவரே அய்யா ஜான் பென்னிகுக்...

    ReplyDelete
  55. தங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிரேன்.தங்கள் பதிவு அருமை...!மேலும் வழுசேர்க்க இந்த குறுபடதினை பாருங்கள் http://youtu.be/TlxLU1MK5V8

    ReplyDelete
  56. மேலும் வழுசேர்க்க இந்த குறுபடதினை பாருங்கள் http://www.youtube.com/watch?v=TlxLU1MK5V8

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner