சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/12/2011


ஆல்பம்.

இப்போது தான் புத்தாண்டு கொண்டாடியது போல இருக்கு.. அதுக்குள் 2012 இரண்டு நாளில் ஆரம்பிக்க போகின்றது.. காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது..??
==========

தானே புயல் தமிழகத்தில் பல கோடி ரூபாய்  சேதத்தை வருட கடைசியில் ஏற்படுத்தி விட்டு சென்று இருக்கின்றது..மீனவர்கள்தான் பொதுவாக பாதிக்கபடுவதாக தொடர்ந்து மீடியாக்கள் சொல்லி வருகின்றன..ஆனால் விவசாயிகள் பல லட்சக்கனக்கான சேதத்தை சந்தித்து இருக்கின்றார்கள்..45 வருடத்துக்கு முன் இதே போல மார்கழி மாதத்தில் இதே தேதியில்  ஒரு புயல் உருவாகி பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது  என்று வானிலை மையம் சொல்லுகின்றது....அதே  போல  இந்த தானே  அப்பு 45 வருடம் கழித்து திரும்பி இருக்கின்றது.......15 பேரை பலி வாங்கி இருக்கின்றது...

 ================
 எங்கள் ஊரில் மார்கழி மாசத்துக்கு வாசலை சாணி தெளித்து சரிபடுத்தி வைத்த வாசலை, தானே பயுல்  நாஸ்த்தி பண்ணி விட்டதாக எங்கள் பக்கத்து வீட்டு சித்ரா அக்கா ரொம்பவும் வருத்தபடுகின்றார்...

================
தானே புயல் எங்கள் ஊர் கடலூர் அருகே கரையை கடந்து விட்டது...  பாண்டியும், கடலூரும் தொலைதொடர்புகள் மற்றும் சாலை போக்குவரத்துகள் துண்டிக்கபட்டு இருக்கின்றன...11 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது..

====================
எப்போது புயல் வந்தாலும் எங்கள் ஊர் கடலூர்தான் அதிகம் பாதிக்கப்படும்.. காரணம்.. நிறைய ஆறுகள் கலக்கும் இடம்.. மற்றும்  கடலில் கழிமுகத்துவாரங்கள் அதிகம் உள்ள இடம் என்பதால்  கழிமுகத்துவாரங்கள் காற்றை உள் வாங்கி கொள்ளும் அதனால் பதிப்பு  எங்கள் ஊருக்குதான்..என் வீட்டு என்ன ஆனது என்று தெரியவில்லை.. போன் தொடர்பு துண்டிக்கபட்டு இருக்கின்றது..எர்டெல் டூ எர்டெல் பத்து பைசா என்பதால் எல்லோரும் ஏர்டெல் வாங்கினோம்.. ஆனால் அந்த நெட்வெர்க்  செயல் இழந்த காரணத்தால் ஏர்செல் அல்லது வோடோபோன், டொக்கோமோ என்று வேறு ஒரு நெட்ஒர்க் வீட்டில் யாராவது ஒருவரிடமாவது இருக்க வேண்டும் என்பது இந்த புயலில் நான் கற்றுக்கொண்ட புத்திக்கொள்முதல்.
================
கடலூரில் இருக்கும் எனது நண்பர் சுபாஷ்க்கு போன் செய்தேன்.. மச்சி கடலூர் எப்படி இருக்கின்றது என்று கேட்டேன்.??
 கடலூரை பெரிய மிக்சியில போட்டு ஆட்டுனது போல இருக்கு... எல்லா மரமும் முறிஞ்சி கிடக்கு.. நிறைய  கூறை வீட்டுக்கு கூறை  எல்லாம் பறந்து விட்டதாக  சொன்னான்... எல்லாம் சரியாக ஒரு மாதத்துக்கு மேல் அகும், பெரிய சேதம் என்று சொன்னான்...இறைவா எங்கள் ஊர் மீண்டு வர சக்தி கொடு...
==============
மாயன் காலண்டர் பற்றி படித்து இருக்கின்றேன்... அவர்கள் சொல்லுவது போல 2012 பற்றி ஒரு பீதியை கிளப்பித்தான் வைத்து இருக்கின்றார்கள்..



 இவர் கூட ஒர்க்  செய்யவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை... இவர் காக்க காக்க படத்துக்கும் சச்சின் படத்துக்கும் எடுத்த போட்டோக்கள் சான்சே இல்லாத ரகம்...முக்கியமா விஜய்  மிலிட்ரி பைக்கில்  கால் தூங்கி பறப்பது போல எடுத்த போட்டோக்கள் அருமையோ அருமை.. பட் இவர் கூட ஒரு வருடமாவது வேலை செய்தால் பிறவி பயனை அடைந்ததுக்கு சமம்...

2012க்கு நம் அழகு பதுமைகளை எடுத்த காலண்டர் போட்டோக்களை பாருங்கள்.. முக்கியமாக சமந்தா பாவடை சட்டையில் சால்னா கடை சரோஜா ரேஞ்சுக்கு உட்கார்ந்து இருக்கும் அந்த கேஷுவல் போட்டோவும்  அதன் பேக்ரவுண்டும் எனக்கு  ரொம்பவே பிடித்து இருக்கின்றது...


மிக்சர்..

சென்னையில்  மெரினாவில் எட்டு மீட்டருக்கு அலைகள் அடித்து, மூன்று கிலோ மீட்டர் கடற்கரை மணலை சுனாமிக்கு பிறகு அலைகள் கற்பழித்து கபளீகரம் செய்து இருக்கின்றன... பொதுமக்களை கடற்கரைக்கு செல்ல காவல் துறை அனுமதி மறுத்து இருக்கின்றது.. சுனாமிக்கு பிறகு கடற்கரை அமைப்பை இது மாற்றுமோ??


கொஞ்சம் நாளைக்கு முன்னே பெய்த மழைக்கே இன்னும் சாலைகள் சரியாகாத நிலையில் திரும்ப தானே புயல் வந்து சென்னை சாலைகளையும், வாகன ஓட்டிகளையும்  படுத்தி எடுக்கின்றது.. இரு சக்கர வாகனத்தை காலையில் ஓட்ட முடியவில்லை... காற்று அப்படியே வேறு திசைக்கு தள்ளியது...சற்றென அப்படியே காற்று இல்லாத அமைதி... மழை மட்டும் தொடர்ந்து 24 மணிநேரமாக பேய்ந்து வருகின்றது..
=============
 காலையில் மழையில் இருந்து தப்பிக்க மனைவியை டிராப் செய்ய அவசரமாக மழையில் நனைந்து இருசக்கரவாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்தோம்.. வழக்கமாக திரும்பும்சாலை திருப்பத்தில் வேகம் குறைந்து திரும்பினேன்..  ஒரு மரம் நடு ரோட்டில் விழுந்து கிடந்தது.. நல்லவேளை வேகம் குறைக்கவில்லை என்றால் விழுந்த மரத்தில் மோதி விழுந்து பெரிய சில்லரைகளை வாங்கி இருப்போம்... நன்றி கடவுளே....
==================
கடந்த வருடம் ஐரோப்பிய தேசத்தில் எனக்கு என் மனைவிக்கும் வேலை தேடிக்கொண்டு இருந்தேன்..இப்போதும்  தேடிக்கொண்டு இருக்கின்றேன்.. கொஞ்சம் கடன் இருக்கின்றது.. அதனை அடைக்கவேண்டும் என்றால் வெளிநாட்டில் வேலை செய்தால்தான் வெகு சீக்கரத்தில் அடைக்க முடியும்...அதனால் நல்ல  வேலை வாய்பு பைனன்ஸ் துறையில் கிடைக்க என் மனவி தீவிரமாக முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்..இந்த புது ஆண்டில் அந்த முயற்சி வெற்றிபெருகின்றாதா? என்று பார்ப்போம்.


===========
பிலாசபி பாண்டி

எவன் ஒருத்தன்,  நான் யோக்கியன் யோக்கியன் முச்சுக்கு முன்னூறு தடவை சொல்லறானோ? அவன்கிட்ட உஷாரய்யா உஷாரு....


==================
நான்வெஜ் 18+

குர்க்குரே விளம்பரத்துல ஏன்  நடிகைகள் மட்டுமே நடிக்கறாங்க??நான் தெரியாமத்தான் கேட்கின்றேன்.. எந்த நடிகனாவது விளம்பரத்துக்கு முடிவுல வரும் வசனத்தை சிரிச்சிகிட்டு டிவியில சொல்லுவானா??
கோனலா இருந்தாலும் என்னோடதாக்கும் என்று எவன் சொல்லுவான்.. சொல்லுங்க....
=================
குறிப்பு...

இந்த வருடத்தின் கடைசி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் பதிவு நேரமின்மை காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை.. போஸ்ட் போட்டதும் நிறைய பேர் படிக்கும் பதிவு இது என்பது எனக்கு நன்றாக தெரியும்.....வரும் வருடத்தில் தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன.சாண்ட்வெஜ் பதிவுகளுக்கு ஆதரவு கொடுத்த புதிவுலக நண்பர்களுக்கும்,அத்தனை வாசக நண்பர்களுக்கு 2012 அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
 

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

12 comments:

  1. Wishing you a very happy and prosperous new year bro.. I wish all your desires to come true..

    ReplyDelete
  2. ஜாக்கி சார் வருட இறுதியில் கண்ணீரில் ஆனபதிவு .கடவுள் கடலூரை சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்

    ReplyDelete
  3. கோனலா இருந்தாலும் என்னோடதாக்கும் என்று எவன் சொல்லுவான்..//

    செம ஹாட்டு மச்சி

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துகள் ஜாக்கி சார்.யாழினிக்கும் சொல்லிருங்க.ஏதொ ஒன்னு பதுவுல மிஸ்ஸிங் கண்டுபிடிங்க .

    ReplyDelete
  5. பாதிப்புகள் எல்லாமே தைரியத்தை குடுப்பதற்கே. மீண்டு வந்துவிடும் கடலூர்

    ReplyDelete
  6. Jackie,
    Wishing you and your family a happy, healthy and prosperous 2012.
    Best wishes to your wife with her job search.

    ReplyDelete
  7. Dear Jackie,

    I wish you a very Happy New Year to your and your family... Keep rock in 2012 tooo.... :)

    ReplyDelete
  8. HAPPY NEW YEAR JAKIE SEKAR,,,,, TO U N UR FAMILY
    FROM R.V.PRABHU MADIPAKKAM

    ReplyDelete
  9. நீங்கள் நினைத்த காரியம் கைகூட 2012 எல்லாம் தரும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. புத்தாண்டு வாழ்த்துக்கள்......

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner