தமிழா தமிழா (பாகம்/2)




தமிழ்நாட்டில் இருக்கும் எந்த தமிழனும்  எந்த பெரிய பிரச்சனைகளையும்  சந்தித்ததே இல்லை..


போங்க சார் நாங்க  சந்திக்காத பிரச்சனையா?

டெய்லி நாப்பதுகிலோ பிரச்சனையை தோளில் போட்டுக்கொண்டுதான் நடக்கின்றோம் என்று சொல்லுவீர்கள்..

பிரச்சனை இருந்தா மட்டும்தான் போராட்ட குணம் வரும்...குக்கர்ல பிரஷ்ர் இல்லாம ஒரு நாளும் குக்கர் விசில் அடிக்காது...

உதாரணத்துக்கு என்ன என்ன பெரிய பிரச்னை எல்லாம் நம் தமிழ் சமுகம் சந்திச்சி இருக்கோம்..

இரண்டாம் உலகப்போரில் நாம் கலந்து கொண்டதால் நம் நாடு புரட்டி போட்ட நிலையை அடைந்ததா? நம் உறவுகளை இழந்தோமா? யூத இனத்தை போல கொத்து கொத்தாக மடிந்தோமா??

ஈராக்கில் அமெரிக்கா உட்கார்ந்து கொண்டு பயங்கரவாதத்தை ஒழிக்கின்றேன் பேர்வழி என்று மூன்று லட்சத்துக்கு மேல் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தார்களா? அது போல நாம் அனுபவித்து இருக்கின்றோமா?

போஸ்னியா,செர்பியா, போல போர் வாசத்தை நாம் அனுபவித்து இருப்போமா?

கண்ணி வெடி என்றால் என்ன? என்று தெரியுமா? அல்லது அதை தான் பார்த்து இருக்கோமா-??

வசிக்கும் இடங்களில் குண்டு போடுவார்கள் என்று பயந்து, கிடைத்த பொருளை எடுத்து சுருட்டிக்கொண்டு பிள்ளை குட்டி மனைவியை அழைத்துக்கொண்டு சொத்துக்களை எல்லாம் விட்டு விட்டு அனாதை போல உயிர் பிழைக்க ஓடிய அனுபவம் இருக்கின்றதா?


போர் சூழலில் நம்  பெண்கள் மேல் கண் எதிரில் கை வந்து சித்தரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததை பார்து இருக்கின்றீர்களா?

அதையெல்லாம் விட்டு தள்ளுங்க உஙக பொண்ணையோ அல்லது உங்கள் அக்கா தங்கையை உங்கள் கண் எதிரில் உறவு கொண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்..??

போர் சித்தரவதை என்றால் என்ன என்று தமிழ்நாட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது... எந்த போரிலும் பங்கு பெறாது வாழ்வாதாரம் பாதிக்கபடாத,  ரொம்ப சேப்டியான வாழ்க்கை நம்முடையது... அதனால்தான் இன்னும் ஜாதி விட்டு ஜாதி காதலிச்சா கூட இரண்டு பேரையும் சாகடிக்க கத்திய தூக்கி கிட்டு ஓடிக்கிட்டு இருக்கோம்...


இலங்கையில் தொடர்ந்து உரிமைகள் மறுக்கபட்ட காரணத்தால் ஈழ தமிழர்கள் எதிர்த்தார்கள்.. சோ  பிரச்சனை இருந்தாதான் போராடும் குணம் வரும்...

18 நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட உணவு பஞ்சம்.. அதே போல 1950க்கு பின் ஏற்ப்பட்ட  பஞ்சத்தை சொல்லலாம்..சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பு என்று மற்ற ஐரோப்பிய நாடுகளை கம்பேர் செய்யும் போது நமக்கு பாதிப்பும் குறைவுதான்..கடல் பரப்பு இருப்பதால் அது ஒரு இயற்கை அரண்...எதிரிகளால் பெரிய தொல்லை இல்லை...
    
சார்..அப்படி ஒட்டுக்கா சொல்லிடாதிங்க.. எங்களுக்கு மட்டும் பிரச்சனை இல்லையா ? நாங்களும்தான் போராடுகின்றோம்??பால் விலை உயர்வு, பஸ் விலை உயர்வு மின்சர உயர்வு என்று போராடுகின்றோமே??
அப்படி போராடி இருந்தா இநந்நேரம் பால் விலை பேருந்து கட்டனம் குறைஞ்சி போயிருக்குமே?? ஏன் குறையல...??200 பேர் போராடினா போறாது? லட்சக்கனக்குல ரோட்டுல இறங்கி போராடினாதான் அதுக்கு பேர் எதிர்ப்பு.. அப்பதான் அரசு  கோரிக்கைக்கு செவி சாய்க்கும்..

இது எல்லாம்  பெரிய பிரச்சனையே இல்லை.. உயிருக்கு உத்தரவாதமில்லாத அடுத்த வேளை சோற்றுக்கும், இருப்பிடத்துக்கும் என்ன செய்யவது என்று குடும்பத்துடன் போர் சூழலில் வாழ்ந்த மக்கள் ஏராளம்... ஆனால் அந்த வாழ்க்கையை நாம் அனுபவித்தது இல்லை.. அதனால்தான் நாம் நிறைய விஷயத்தை நக்கல் விட்டுக்கொண்டு இருக்கின்றோம்.. பல போராட்டங்களை கேலி செய்கின்றோம்..அவதூறு கிளப்புகின்றோம்..

சார் நாங்களும்தான் கடுமையா உழைக்கின்றோம்...

ரைட் உழைக்கிறிங்க இல்லைன்னு சொல்லை...ஆனா புவியியல் தமிழ்நாட்டு மக்களுக்கு  ரொம்பவே சாதகமாத்தான் இருக்கு.. என்ன வற்றாத ஜீவ நதியா... ஆறுங்க மட்டும்தான் நம்ம கிட்ட இல்லை..... 

புரியலையே...

ரைட்... அப்படியா?? பூகோள ரீதியா ஒரு சின்ன லாஜிக் சொல்லறேன்... கேட்டுக்கோங்க...

ஊரில் இருந்து சென்னைக்கு வந்துட்டிங்க..கையில காசு இல்லை  100 ரூபாய் மட்டும்தான் இருக்கு...மார்கழி மாச குளிர் வேறு..வாழ்ந்தாகவேண்டிய கட்டாயம்..அரசு போடும் இலவசஅரிசியை ரேஷன் கடை வாசலில்  நின்று அரிசி வாங்கிய  ஒருத்தர்கிட்ட இருபது ரூபாய் கொடுத்து, பத்து கிலோ அரிசியை வாங்கிங்கறிங்க...ஒரே ஒரு சின்ன சட்டி வாங்கி, நாலு கல்லு வச்சி, அடுப்பை கொஞ்சம் சுள்ளி போட்டு எரிய விடுறிங்க...ஒரு டம்பளர் அரிசி போட்டு சமைச்சா பசி ஆறிக்கலாம். 

ஒரு சாக்கு தேத்தி சென்னையின் பிளாட்பாரத்தில் ஒரு ஓரத்தில் சுருண்டு படுத்து  உயிர் வாழ்ந்து விடலாம்..ஆனால் அமெரிக்கா,ரஷ்யா, ஜெர்மனி,ஜப்பான் என  மற்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நீங்கள் இது போல எளிதாக வாழவே முடியாது.. காரணம் டிமனஸ் டிகிரிக்கு கீழ இருக்கம். உறைய வைக்கும் பனி...

ஆறு மாசம் கோடை ஆறு மாசம்  உறையவைக்கும் பனி...வீட்டை விட்டு வெளியே வந்தா நடந்து போற, ரோட்டுல முட்டிக்கால் அளவுக்கு பனி இருந்தா-? என்ன  செய்விங்க???

சும்மா மார்கழி குளிருக்கே இங்க சென்னையில ஊட்டியில போட்டுக்கறா மாதிரி காதுல வளைந்த பட்டை போல ஒன்னை  வச்சி காதை அடைச்சிக்கிட்டு சென்னை வாசிங்க சீன் போட்டுகிட்டு இருக்காங்க..

ஆனா அங்க அப்படி இல்லை. குழந்தைக்கு  பால் இல்லை கடையிலி போய் ஒரு பாக்கெட் பால் வாங்கிட்டு வரனும்னு  நினைச்சா டிரஸ் மேல டிரஸ் போட்டுகிட்டுதான் கிளம்பனும்...சும்மா ஒரு கைலிய கட்டிகிட்டு ஒரு பனியனை போட்டுகிட்டு பால் வாங்கிட்டு வந்துட முடியாது...நிறைய மெனக்கெட்டுதான் அவுங்க வாழ்க்கையை நடத்துறாங்க...

ஆறுமாச பனியில் ஒரு தனிமனிதன் வாழனும்னா அவனுக்கு  கண்டிப்பா குளிருக்கு கதகதப்பா தங்க வீடு வேண்டும்...ஒரு கம்பளி ஸ்வெட்டடர் வேண்டும்... முட்டிக்கால் வரை போட்டுக்கொள்ளும் பூட்ஸ் வேண்டும்...நம்ம ஊரு மாதிரி சாதாரண பாத்ரூம் செப்பல் எல்லாம் போட்டுகிட்டு காலத்தை ஓட்ட முடியாது... பருப்பு இறைஞ்சிடும்.. அதனால் பூட்ஸ் கண்டிப்பா இருந்தாதான் வெளியவே போக முடியும்.. இந்த ரோட்டுல கஞ்சி காய்ச்சி குடிச்சிட்டு பிளாட்பாரத்துல ஒரு கித்தானா போட்டு  போத்திகிட்டு பிளாட்பாரத்துல படுத்துக்கற வேலையெல்லாம் அங்க நடக்கவே நடக்காது...

ஆறுமாச உறையவைக்கும் பனியில  என்னத்தா வெளையவைப்பிங்க...பனிகாலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில்காலத்துல உணவு பொருட்களை எல்லாம் சேமிச்சி வச்சிக்கினும்... அதுதான் அவன் தலை எழுத்து அப்ப ஒரு குடும்பத்துக்கு என்றால் அந்த குடும்ப தலைவன் எவ்வளவு உழைக்கவேண்டும்..??

அதனால்தான் நிறைய கண்டுபிடிப்புகள் ஜரோப்பிய அமெரிக்க தேசங்களில் கண்டுபிடித்தார்கள்...காரணம் அவர்கள் உறைய வைக்கும் பனிசூழலில் வாழ்ந்தாகவேண்டும்..  

அதே போல இலக்கியம் அதிகமா வளர்ந்ததுக்கும் காரணம் இந்த பனி வாழ்க்கைதான்..அறு மாச பனியில அவன் வீட்டை விட்டு வெளியே போக முடியாது... போர் அடிச்சிடும்.. படிச்சே ஆகனும், எதையாவது அவன் சிந்திச்சிசே ஆகனும்.. அதனால அவன் நாட்டுல இலக்கியம்  செழிச்சிது, நம்ம நாட்டுலயும் வளர்ந்துச்சி ஆனா  நம்ம மக்கள் தொகையை கம்பேர் பண்ணா அது வளர்ச்சி இல்லை வீழ்ச்சி.

மாலை ஆறுமணிக்கு மேல வீட்டுக்குள்ள போய் ஹீட்டருக்கு முன்ன அல்லது விறகு எரிச்சி கதகதப்ப உருவாக்கியே ஆவனும்...ஆனா இங்க ஆறு மணிக்கு மேல விடிய விடிய கூத்து கட்டலாம், நாடகம் நடத்தலாம்..அந்த மாதிரி வாழ்க்கை நம்முடையது... பனியால எல்லாருக்கும் கஷ்டம் அந்த கஷ்டத்தை மீறிதான் இன்னைக்கு அமெரிக்கா உலக வல்லரசா மாறி இருக்கு... பெரிசா அமெரிக்காவுக்கு பெரிய பின்புலம் எல்லாம் இல்லை..500வருஷத்துல  தோன்றிய தேசம்..இன்னமும் யார் யார் அவுங்க தேசம் உருவாக்க பாடுபட்டாங்கன்னு கொண்டாடிகொண்டு இருக்கின்றார்கள்..

நாம எல்லாம் பழைய ஆள் அதனால் எல்லாத்திலேயும் இயல்பிலேயே ஒரு அலட்சியம் நம்மகிட்ட ஒட்டிகிச்சி... என்ன செய்ய??

நம் ஊர்ல ரோட்டு ஓரத்துல ஆய் போற மாதிரி எந்த குழந்தையாவது அப்படி உட்கார்ந்து போற மாதிரி நான் இதுவரை எந்த அமரிக்க ஜரோப்பிய படங்களிலும் நான் பார்த்ததே இல்லை.. காரணம் அதே பனி தான்.. ஆய் இருக்க குழந்தையை ரோட்டுக்கு அனுப்பிச்சா குழந்தை  விரைச்சிகிட்டு செத்தேபோயிடும்..அதனால பனி அந்த டிசிப்ளினை குழந்தைக்கும் பெரியவர்களுக்கும் கத்து கொடுத்து இருக்கு...

நான் கூட யோசிச்சி இருக்கேன்..ஆய் போயிட்டு நாலு மக்கு தண்ணி போட்டு கழுவினாலும் நம்ம ஊர்ல திருப்தி இருக்க மாட்டேங்குது.. இவனுங்க எப்படி ஒரு பேப்பரை வச்சிகிட்டு மெயின்டேன் பண்றானுங்கன்னு...??? யோசிச்சி இருக்கேன்.. பாருங்க மைனஸ் ஒரு டிகிரிக்கு கிழ குளிர் இருக்கற ஊர்ல ஆய் போயிட்டு தண்ணி ஊத்தி கழுவறேன் தண்ணியை ஊத்தினா உத்தின எடம் மருத்து போற ஊசி போட்டது போல மருத்து போயிடும்...கழுவ வேண்டிய கையும் மருத்து போயிடும்.. ஒத்தா  எதை கழுவனோம் இல்லை கழுவிலயான்னு யோசிச்சிகிட்டு ஒரு குத்து மதிப்பாதான் பாத்ரூம் விட்டு வரனும்...

அதே போல அவுங்க உணவு வகைகள் ரொம்ப சிம்பிள்.. ரொட்டி, அம்லேட், அப்பாயில், பிட்சா, பார்கர்ன்னு இறைச்சி மட்டும்தான் ஹெவி புட்..அதனால் இரண்டு பேப்பர் ஒரு வெட் டிஷ்யூ போதுமானது..

 பட் நமக்கு அப்படி இல்லை.. தலைவாழ இலைய போட்டுஇரண்டு கூட்டு,வத்தக்கொழம்பு ,சாம்பார் ரசம்,தயிர், சிக்கன் கொழம்பு. மட்டன் கொழம்பு தலைக்கறி... இரண்டு தட்டு சோறு என்று இத்தனையும் தின்ன நாலு மக்கு தண்ணிக்கு மேல ஆகறது இயல்புதானே...

 இயற்க்கை அவனுக்கு ஆறுமாசத்துக்கு ஒரு வாட்டி பூகோள ரீதியா அப்பு வச்சிகிட்டே இருக்கு...அதையும் மீறி அவன் வாழ்க்கை நடத்தும் போது அவன் சுதந்திரம் பறிக்கப்படும் போது, ரோட்டுல கடுங்குளிரையும் பொருட்படுத்தாமா? போராடுகின்றான்.

ஆனா நம்ம தமிழ்நாட்டுல உறைய வைக்கும் குளிரும் இல்லை...கடுமையான வெயிலும் இல்லை. அதனால் எல்லாத்திலேயும் அலட்சியம்..


மக்கள் எழுச்சி என்பத தமிழகத்தை பொறுத்தவரை சாத்தியமே இல்லாமல் இருந்து கொண்டு இருந்தது..ஆனால் முதல் முறையாக கேரள  எல்லையில் முல்லை பெரியாறு பிரச்சனையில் திருமதி செல்வம் செத்தானா இல்லையா? நாதஸ்வரத்துல கோபி சித்தப்பா ஏன் இப்படி ஒரு மென்டலா இருக்கான் என்ற கவைலைகளை எல்லாம் தூக்கி தூர போட்டு விட்டு,வீட்டை விட்டு ஆண்களோடு பெண்களும் சேர்ந்து சாரை சாரையாக கேரளா எல்லையில் போராட லட்சக்கணக்கான மக்கள் திரண்டதை பார்க்கும் போது ரொம்ப சதோஷமாக இருக்கின்றது... 

வெற்றிவேல் வீரவேல் என்று வீட்டுக்கு ஒருவர் கிளமபியதை பார்த்து தமிழக அரசே மிரண்டு போய் இருக்கின்றது...

நான் முன்பே சொன்னது போல வாழ்வ்தார பிரச்சனை பாதிக்கப்ட்டால்தான் போராடும் குணமே வரும்.. பெரியாறு அணை இல்லையென்றால் ஐந்து மாவட்டங்களும் வறட்சியில் மரித்து போகும் என்று மக்களுக்கு தெரிந்து போனதால்தான் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் குதித்து இருக்கின்றார்கள்.. இடைவிடாமல் தொடர்ச்சியாக பதினைந்து நாட்களுக்கு மேல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் இருக்கின்றார்கள்..அது தமிழகம் முழுக்க முக்கியமாக வடதமிழ்நாட்டிலும் அந்த போராட்டம் தொடர்வது மகிழ்சியே...

இது இப்படியே தொடர வேண்டும் என்பது என் ஆசை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழர்களிள் ஆசையும் கூட...


 முற்றும்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

28 comments:

  1. ஒவ்வொரு விஷயத்தையும் அழகாக தொகுத்து வழங்கினீர்கள்... இரண்டாம் பாகத்தோடு முடிந்தது வருத்தமே...

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது உண்மை தான் ஊட்டியில் இந்த டிசம்பர் மாதத்தில் பச்சைத்தண்ணியை தொடவே முடியாது.

    மருத்து அல்ல மரத்துப் போவது. நல்லா எழுதறீங்க, கொஞ்சம் எழுதியதை மீண்டும் படிக்கவும். எழுத்துப் பிழைகளைக் குறைக்க முடியும்.


    இப்போராட்டம் தொடரவேண்டும், வெல்லவேண்டும்.

    ReplyDelete
  3. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மக்கள் முன்னெடுத்து இருக்கும் இந்த போராட்டம் தமிழகத்தில் இனி எல்லா விஷயங்களில் தொடரும் என்பது மட்டும் நிச்சயம்.. உங்களின் பதிவு அருமை...

    ReplyDelete
  4. நல்ல பதிவு ஜாக்கி அண்ணா.
    எனது இன்றைய பதிவு :

    முல்லைப் பெரியார் -ஒரே தொல்லைப் பெரியார்

    ReplyDelete
  5. Anna...
    we are tamilians living in cochin for past 12 years. my 2 kids are studied here and we have business here(only earning is this & my marriege is love marriage).

    for past 15 days i saw tamil and malayalam news

    our protection is correct.

    but here all the people is fearing(for dam damage)

    on very first day protection there is a problem in kumuli border.

    then next day onwards sun news told keralathil tamilarkal thakkapattathanal(they didin't told where? but all understand daily take an attack. porattam, kadayappu that is legal. sun news create hype.why they attack kerala shops & malayalis(why lawyers behave like this and peyare theriyatha parties). 10 days afters sun tv told trichuril thakkapattarkal(now real). Now in kochi they ask our tamil coolie peoples you are also go tamil nadu. we are also fear when it happend. what to do.

    why Central govt?
    What both CMs are doing(particularly JJ)


    -Kavitha Saran

    ReplyDelete
  6. Arumai, migavum thelivagavum solli ullergal. best wishes

    ReplyDelete
  7. அப்பனும் ஆத்தாளும் சண்ட போடல, அண்ணனும் தம்பியும் சண்ட போடல அது மாதிரிதான் இந்த முல்லைப்பெரியாரும். நாம என்னதான் சண்ட போட்டாலும் நாம அண்ணன் தம்பி. நாம தன்னிக்கி,கரண்டுக்குனு கம்ப தூக்கினா எதிரி எண்ணைய ஊத்த ரெடியா இருக்கான். பெப்சிக்கும், கோக்குக்கும் கொடுக்கிற தண்ணிய நமக்கு தந்தாலே நாம யார்கிட்டயும் தண்ணிக்கு பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனா நாம தண்ணி குடிக்காம கூட இருப்போம் கோக் குடிக்காம இருப்போமா? நம்ம பய புள்ளைய தான் பேசிகளி பிரம் லண்டன்ல ....

    ReplyDelete
  8. தெளிவான பார்வை .. சுயவிமர்சனம் மாயைகளை சுக்கு நூறாக உடைக்கிறது. ஏன் ஜாக்கி இடையில் நிறுத்தியது போல முடித்து விட்டீர்கள்?

    வாழ்வாதாரம் கேள்விக்குறியானால் தான் போராடும் குணம் வரும் என்பது நிஜம் தான். வாழ்வின் ஆதாரத்தை மிகவும் கீழ் நிலையில் வேறு (substandard) வைத்திருக்கிறோம். அதனாலேயே மற்றவனுக்கு ரோஷமும் கோபமும் வரும் விஷயங்கள் எமக்கு வெறும் கோஷம் போடும் விஷயம் என்ற அளவில் நின்றுவிடுகிறது.

    இதற்கு என்ன தான் வழி? ஆலோசிக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  9. உண்மைதான் அண்ணனே ! நல்ல பதிவு .அடுத்த பாகம் இல்லாதது ஏமாற்றமே .

    ReplyDelete
  10. மிகவும் அழகானதொரு தொகுப்பு.

    ReplyDelete
  11. உண்மைதான் அண்ணனே ! நல்ல பதிவு .அடுத்த பாகம் இல்லாதது ஏமாற்றமே .

    ReplyDelete
  12. அருமையான பதிவு..

    அடச்சே, அதுக்குள்ள முடிஞ்சி போச்சே...

    ReplyDelete
  13. அண்ணே!

    நீங்க நம்மள பத்தியே குறை சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. நாம அமெரிகாவுலையோ, ஐரோபாவுலையோ இருக்க வேண்டிய கட்டாயம் இருந்துச்சுனா.... அவனுங்கள விட அதிகமாவே செஞ்சிருப்போம்! அத நான் உறுதியா சொல்லுவேன்... மற்றபடி அலட்சியம் என்பது நீங்க எழுதி இருக்குறது தான் நடக்குது.

    ReplyDelete
  14. ரொம்ப டீடெயில் ஆன பதிவு...சான்சே இல்லை .எளிய சொற்களில் விளக்கியது அருமை ஜாக்கி

    ReplyDelete
  15. நல்ல அலசல்..நிறைய யோசித்து இருக்கிறீர்கள்..வழக்கம் போல உங்கள் முத்திரை இருக்கிறது (யதார்த்த நடை!)!

    இதோடு நமது தினசரி பிரச்சினைகளும் (சற்று சுய நலம் தான்..), நம்பிக்கை தராத அரசியல் வியாதிகளும், பயமுறுத்தும் போலீஸ்-ம் கூடுதல் காரணங்களாக இருக்கலாம் என்பது எனது அனுமானம்...
    Tissue Paper -ஐ முழுதாக ஏற்று கொள்ள முடியவில்லை! நினைத்திருந்தால் சற்று சூடான நீரை உபயோகபடுத்தி பழகி இருக்கலாம்..

    ReplyDelete
  16. Very logical explanation in a lucid style on our lifestyle with that of Westerners. Even within India, we, in the South, have not been exposed to any major upheavals or disasters in our living memory. As regards Mullaiperiar dam, politicians on both sides are raising the heat so that their existence can be justified. It is of utmost and urgent importance that the two government must talk to each other and cool down tempers. Both TN and Kerala should wait for experts' findings and the Supreme Court judgment. None of us, including politicians both in and outside the government don't know much about the strength of the dam. Patience and wisdom are the need of the hour. Let us not play with peoples' livelihood or even their lives.

    ReplyDelete
  17. //பட் நமக்கு அப்படி இல்லை.. தலைவாழ இலைய போட்டுஇரண்டு கூட்டு,வத்தக்கொழம்பு ,சாம்பார் ரசம்,தயிர், சிக்கன் கொழம்பு. மட்டன் கொழம்பு தலைக்கறி... இரண்டு தட்டு சோறு என்று இத்தனையும் தின்ன நாலு மக்கு தண்ணிக்கு மேல ஆகறது இயல்புதானே...//
    இன்னைக்கு சாப்பிட்ட மாதிரித்தான்.....

    ஐரோப்பியர்களின் வளர்ச்சியில் அவர்கள் தேசத்து காலநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.100% True.

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள் ஜாக்கி! தொடர்ந்து எழுதுங்கள்.



    http://kurukkaalapovaan.blogspot.com/2011/06/blog-post_9573.html

    ReplyDelete
  18. Thalavalium kaichalum thanakku vandhathaan theriumnu solluvanga.. adhu madhirithaan yella poratathoda vidhaum .. Nalla padhivu

    ReplyDelete
  19. Most of the things that you said are correct. I have visited many south american countries, which are like India. Still I do not see anybody using roads & streets as public toilets. They are considered 3rd world countries with very similar weather conditions. Nobody throws plastics and litters everywhere. My family hates taking vacations in India, just because of these things. I still love my mother country but feel sad that people are ignorant of many things. We do not have a good leader and our country is full of followers. Sadly-A proud Indian

    ReplyDelete
  20. நன்று. இதையே சுஜாதா இன்னும் சுருக்கமாக எழுதி இருப்பதாக நினைவு.

    ReplyDelete
  21. நல்ல அலசல்! மிக அருமையான விளக்கம்!
    உண்மையை உடைத்து அனைவரும்
    உணரும்படி எழுதியுள்ளீர் வாழ்த்துக்கள்!

    இறுதியில் இன்று மாலை சீரணி அரங்கில்
    திரளும் கூட்டத்திற்கு அழைப்பும் விடுத்திருக்கலாமே!
    நேற்று உங்கள் பதிவைப் பார்த்தே என் வலை
    யில் கவிதை ஒன்றில் நான் அழைப்பு விடுத்தேன்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner