1994 ஆம் ஆண்டு கடலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் செக்யூரிட்டி வேலைக்கு சரியாக 31 ஆம் தேதி பெரியார் பேருந்தில் சென்னை நோக்கி வரும் போது பிரபு ரசிகர் மன்றத்தினர் மெட்டாடர் வேன்களில் நடிகர் பிரபு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல சென்னை நோக்கி விரைந்தனர்… அவர்களோடு எதிர்கால கனவுகளோடு நானும் சென்னை நோக்கி……
குட் பை 2014
1994 ஆம் ஆண்டு கடலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் செக்யூரிட்டி வேலைக்கு சரியாக 31 ஆம் தேதி பெரியார் பேருந்தில் சென்னை நோக்கி வரும் போது பிரபு ரசிகர் மன்றத்தினர் மெட்டாடர் வேன்களில் நடிகர் பிரபு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல சென்னை நோக்கி விரைந்தனர்… அவர்களோடு எதிர்கால கனவுகளோடு நானும் சென்னை நோக்கி……
Labels:
அனுபவம்,
சினிமா சுவாரஸ்யங்கள்,
தமிழ்சினிமா
Kayal /2014/ கயல் சினிமா விமர்சனம்.
பரிட்சார்த்த முயற்சிகள் தன் திரைப்படங்களில் அதிகம் செய்து பார்த்த பிரபுசாலாமன் கடைசியில் காதலை
கையில் எடுக்க
தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றியோ வெற்றி.. அது மட்டுமல்ல... மைனா திரைப்படம் அதன் திரைக்கதை கட்டமைப்பு...
கேரக்டர் சேஷன் எல்லாம் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படவேண்டிய திரைப்படம் இது என்றால் மிகையில்லை...
Meaghamann-2014- மீகாமன் திரைவிமர்சனம்.
தடையறதாக்க மகிழ்திருமேனியின் இரண்டாவது திரைப்படம் முதல் படம் முன் தினம் பார்த்தேனே.. செவன்த் சேனலுக்காக செய்த படம்… பத்தோடு பதினொன்றாக போய் விட்டது..
மகிழ் செல்வராகவன், மற்றும் கவுதமிடம் அசிஸ்டென்டாக
இருந்தவர்… அதனால் தனது இரண்டாவது திரைப்படமான தடையற தாக்க திரைப்படத்தை ஆக்ஷன் மூலம் பூசி கொடுத்தார்… இதில் பெரிய விஷயம் என்னவென்றால் அருன்
விஜய் போன்ற பிரேக் இல்லாத நடிகரை வைத்து தன்னம்பிக்கையோடு ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை கொடுக்க செம தில் வேண்டும்… தடையறதாக்க மகிழ்
பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்…
Labels:
கிரைம்,
சினிமா விமர்சனம்,
தமிழ்சினிமா,
திரில்லர்,
பார்க்க வேண்டியபடங்கள்
PISAASU -2014- பிசாசு திரை விமர்சனம்.
பொதுவா தமிழ் திரைப்படங்களில் பேய் படம் பார்த்து பயப்படுவதற்கு பதில் சில நேரங்களில் சிரிப்பை வரவைத்து விடுவார்கள்...
அந்த அளவுக்கு பேயை
சிரிப்பு பொருளாக மாற்றும் வித்தை
தெரிந்தவர்கள்… மற்றும் புரிதல் அதிகம் உள்ளவர்கள் என்றும் சொல்லலாம்.
இன்னைக்கு வரைக்கும் பிளாக் அண்டு ஒயிட் திரைப்படங்களில் நான் பார்த்து பயந்த திரைப்படம்
நெஞ்சில் ஓர் ஆலயம்.
Labels:
கிரைம்,
தமிழ்சினிமா,
திகில்,
திரில்லர்,
பார்க்க வேண்டியபடங்கள்
ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் (இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்)
உலகில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் இரண்டு அப்பா இரண்டு அம்மாவோடு வாழ்வதும் வளர்வதும்தான்.. அவன்
பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்வான் என்று இவளும்… இவள் நம் பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்ளுவாள் என்று
அவனும் நினைத்து இருக்க… இரண்டு பேரும் இணைந்து பெற்ற பிள்ளையை பார்த்துக்கொள்ளாமல் நட்டாற்றில் விடப்படுபவர்கள்
கண்டிப்பாக விவாகரத்து செய்யப்பட்ட பெற்றோர்களின்
பிள்ளைகளே….
Good People-2014 /மாட்டிக்கொண்ட நல்லமனிதர்கள்
பணம் பிரதானம்தான் ,இருந்தாலும் சில நேரங்களில் அதீத பணத்தேவையின் போது தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை மனிதர்கள் செய்து தொலைத்து விடுகின்றார்கள்… சில நேரங்களில் நேரம் நன்றாக இருந்தால் செய்த தவற்றில் மாட்டிக்கொள்வதில்லை… நேரம் நன்றாக இல்லாமல் ஏழரை சனி புல் போக்கசில் தவறு செய்தவர்களை பார்த்துக்கொண்டு இருப்பாரேயானால் ஆப்பு தவறு செய்தவர்களுக்கு உருவாகி விட்டது என்று அர்த்தம்.
Labels:
கிரைம்,
சினிமா விமர்சனம்,
டைம்பாஸ் படங்கள்,
திரில்லர்,
ஹாலிவுட்
ரகுவரன் தமிழ் சினிமா மறக்க முடியாத பெயர்.
ரகுவரன்
1990 ஆம் ஆண்டு கடலூர் ரமேஷ் தியேட்டரில்
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான புரியாத
புதிர் திரைப்படம் ரகுவரன் என்ற நடிகரை எனக்கு
அறிமுகப்படுத்தியது… ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ…. ஒரு சைக்கோ
கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை கண்முன்
நிறுத்தினார் ரகுவரன்.. அதற்கு முன் தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் அவன் மேல் சிவப்பு கலர்
லைட் லோ ஆங்கிளில் இருந்து அடிக்க அவன்
கண்களை உருட்டி பார்ப்பான்..
Labels:
இன்று பிறந்தவர்கள்,
சினிமா சுவாரஸ்யங்கள்,
தமிழ்சினிமா,
ரகுவரன்
ஜூராசிக் பார்க் திரைப்படம் ஒரு பிளாஷ் பேக்.
அந்த திரைப்படம் 1993 ஆண்டு வந்தது... அந்த திரைப்படம் தமிழ் நாட்டில்
மட்டுமல்ல... உலக நாடுகள் அத்தனையிலும் அதிர்வலைகளை அது உண்டு பண்ணியது என்றே சொல்ல வேண்டும்...
பின்னே? பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் நாம் வாழும் பூமி பந்தில் வாழ்ந்த உயிரினம் கண் முன்னே நிற்பது என்பது சாத்தியாமா? அது எப்படி இருக்கும்
??? அது என்ன செய்யும்..??? போன்ற வினாக்களுக்கு
அந்த திரைப்படம் பதில் சொல்லியது… அது ஏதோ ஏப்பைக்கு சோப்பையாக வந்து சென்றால்
கூட பரவாயில்லை… அது மனித இனத்தை பந்தாடியது… அதனாலே அந்த திரைப்படம்
பார்த்து மிரண்டு போனதும் உண்டு.
முத்தப் போராட்டம்…..
மடியில் உட்கார்ந்துக்கொண்டு விளையாட்டின் ஊடே…ஐ லவ் யூப்பா என்று சொல்லியபடி யாழினி எனக்கு உதட்டில் முத்தமிட்டால்…
ஹே..???.-! யார் இப்படி முத்தா கொடுத்தா உனக்கு?? என்றேன்..
யாருமில்லைப்பா…
குட்.. இப்படி முத்தா கொடுக்க கூடாதுடா செல்லம்… வாய்ல இருக்கற ஜெம்ஸ் ஸ்பிரட் ஆவும் இல்லை அதனால இது வேணாம்டா….
சரிப்பா.
Labels:
அனுபவம்,
சமுகம்,
தமிழகம்,
தமிழ்சினிமா
எனது முதல் முயற்சி வீடியோ பிளாகிங். நண்பர்களின் ஆதரவு தேவை.
ஏன் ஜாக்கி சார் இந்த வேண்டாத வேலை உங்களுக்கு?
இதை விட எழுதிடுங்க... கொடுமையா இருக்கு...
நீ எழுதறதே படிக்கறதே எங்க விதின்னு நினைச்சிக்கிட்டு இருந்த
இதுல இது வேறயா?
ஏன்யா படுத்தி எடுக்கற..??
என்பது போன்ற விம்ர்சனங்கள் வரலாம்.... ஆனால் எனக்கு
தோன்றியைதை இன்றுவரை செய்து இருக்கின்றேன்...
நான் எடுத்து வைத்த
எந்த முதல் முயற்சிக்கும் முதலில் எதிர்ப்பையும்
அவ நம்பிக்கையான பேச்சுக்களைதான் அதிகம் சந்தித்து இருக்கின்றேன்... ஆனால் அவைகளை
தகர்த்து முன்னேறிய போதுதான் நிறைய சாதிக்க
முடிந்து இருக்கின்றது..
பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் ஒரு கதையை சொன்னால்
லஞ்சு பிரேக்கில் என்னை சுற்றி 20 பேர் இருப்பார்கள்..
Labels:
சினிமா விமர்சனம்,
வீடியோ பிளாகிங்
Subscribe to:
Posts (Atom)















%2BDVDRip%2BDual%2BAudio%2BHindi-Eng.jpg)


