Deiva Magan-1969/உலகசினிமா/இந்தியா/தெய்வமகன்/சிவாஜி எனும் மகா கலைஞன்.




நிறைய விமர்சனங்கள்  எழுதி இருக்கின்றேன்..
ஆனால் இந்த விமர்சனத்தை எழுத  எனக்கு தகுதி இருக்கின்றதா என்று  தெரியவில்லை.  இந்த படத்தில் பணியாற்றிய ஜாம்பவான்கள் எல்லோரும்  மன்னிப்பார்களாக....

அது போன்ற ஒரு காட்சியை நான் ரசித்து பார்த்ததே இல்லை... அப்படி ஒரு காட்சி அதுவும் தமிழ்சினிமா....

கருப்பு   வெள்ளை திரைப்படம் அது....

பொதுவாய் கருப்பு  வெள்ளை  திரைப்படங்களை நான் அதிகம் பார்க்க விரும்புவதில்லை... ஆனால் சில படங்கள் எப்போது போட்டாலும்  சில படங்களை வச்ச கண் வாங்காமல் படம் பார்த்தது உண்டு.

அந்த வகையில் இந்த படமும்... குறிப்பாக இந்த  காட்சியையும் சொல்லலாம்.... நம்ம கிட்டயும்  சரக்கு இருக்குன்னு  நான் நம்பிய படம்.....

அந்த படத்தில் வரும் அந்த சீனும் காம்போசிஷனும்.. சான்சே இல்லாத ரகம்.. அந்த காலத்திலேயே  இப்படி  அசத்தி இருக்கானுங்களே என்று பொறாமை கொண்டு பார்க்கும் காட்சி அது...

சிவாஜி  நடிப்புக்கு நிறைய படங்களை உதாரணம் சொல்லுவார்கள்.. முக்கியமாக வயலுக்கு வந்தாயா-? நாற்று நட்டாயா? என்பதை பெரியதாய் சொல்லுவார்கள்...ஆனால் என்னை பொறுத்தவரை இந்த படத்தையும் இந்த படத்தில் குறிப்பாக இந்த  காட்சியையும் சொல்லுவேன்...


இந்த காட்சியில் சிவாஜி மட்டும் அல்ல மேஜர் சந்தர்ராஜனும் சேர்ந்தே கலக்கி இருப்பார்.. இரண்டு பேரும் போட்டி போட்டு  நடித்து இருப்பார்கள்...


காட்சி இதுதான் தான்  அவலட்சனமாக இருந்து சொந்து போகும்  பெரும் பணம் படைத்த்த பணக்கார சிவாஜி அவலட்சனமாக பிறந்த தன் பிஞ்சு மகனை இரக்கமில்லாமல்  தன் டாக்டர் நண்பரிடம் கொல்ல சொல்கின்றார்...  டாக்டர் நண்பரும் கொன்று விட்டேன் என்று சொல்லி விட்டு அந்த  அவலட்சனமான பையனை வளர்கின்றார்...  இதனால் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை....

வளர்ந்த பையன் தன் தாய் தந்தை யார் என்று தெரிந்து கொண்டு .... தாயை பார்க்க செல்கின்றான்.. யாரோ ஒருவன் தன்னை பார்க்கும் போது தனக்கு ஏன் அவன் மீது அளப்பறியா பாசம் ஏற்ப்படுகின்றது என்று தன் கணவனிடம் கதறுகின்றாள்.. ஒருவேளை தன் டாக்டர் நண்பன் கொல்லாமல் தன் பிள்ளையை வளர்ந்து இருந்தால்? என்று பணக்கார சிவாஜியின் குறுக்கு புத்தி வெகு வேகமாய் கணக்கு போடுகின்றது..

.ஆனால் 25 வருடமாக டாக்டர் நண்பர் மேஜர் சுந்தர்ராஜனுக்கும் பணக்கார சிவாஜிக்கும் இடையில் பேச்சு வார்த்தை சுத்தமாக இல்லை... ஆனால்  அந்த குழந்தை பற்றி முழுதும் தெரிய வேண்டும் என்றால் டாக்டரிடம் பேசி ஆக வேண்டும்... 25 வருடம் கழித்து தன் டாக்டர் நண்பனை பார்க்க வரும் அந்த காட்சி இருக்கின்றதே....


ஓத்தா நான் அடிச்சி  சொல்லுவேன்....

 இனிமே அப்படி  ஒரு காட்சியை எடுக்கவும் முடியாது..  அப்படி ஒரு ஷாட் கம்பொசிஷனை வைக்கவும் முடியாது.. அது போல உணர்பூர்வமா நடிக்கவும் முடியாது...அப்படி ஒரு மீயூசிக்க போடவும் முடியாது......அதுவும் அந்த காலத்துலேயே..... என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....?


முத ஷாட்... டிரலியில கேமரா  மெல்ல நகர.....வீட்டோட பர்ஸ்ட் புலோர்ல நின்னுகிட்டு மேஜர் பைப் பத்தவைப்பார்... கதவு தட்டற சத்தம்  கேக்கும்.. உடனே மேஜர் கமின்ன்னு சொல்லுவார்....


இப்ப டாப்  ஆங்கிள்ள கேமரா இருக்கும்....கதவு திறக்கும்  சிவாஜி அந்த வீட்டுக்கு 25 வரஷம் கழிச்சி வரார்...(கடுகடு கோபத்தோட உள்ளே வருவார்.... காரணம் அவர்தான் புள்ளைய அப்பவே கொல்ல சொன்னாரு இல்லை.... இப்ப ஒரு புது பிரச்சனை அதுக்கு காரணம் தன்  சொல் பேச்சு கேட்காத டாக்டர்...)


உள்ளே வந்து கிழ இறங்கி இரண்டு ஸ்டெப் எடுத்து வைப்பார்.. அப்ப அவர் மொகத்துக்கு  லைட் இருக்காது டக்குன்னு ஒரு ஸ்டெப்  பின்னாடி நகர்ந்து முகத்துக்கு லைட்டை அழகாக வாங்கி கிட்டு  மேல பார்ப்பார்... (இது எல்லா ஒளிப்பதிவாளர்களுக்கும் , டெக்னிஷியன்களுக்கும் நன்றாக தெரியும்.)


மிட் ஷாட்டுல இவர்  மேல பார்ப்பார்...  மேஜர் கீழ பார்ப்பார்... இரண்டு பேருக்கும் இன்டர்கட் ஷாட்டுல சிவாஜி திருட்டு பையன் போல மேல மேஜரை  பார்த்துகிட்டு இருப்பார்.. அதுல கோபம் வெறுப்பு இயலாமை எல்லாம் இருக்கும்.... மேஜர் இறங்கி வரார் என்பதை கண்ணில் காட்டுவார்.. விழிகள் டிராவல் ஆகும் அதாவது அவர் மாடி படி விட்டு இறங்கி வருகின்றார் என்பதை கண்களில் குளோசப்பில் உணர்த்துவார்..


இறங்கி வந்ததும்.... உட்கார சொல்லி விட்டு  எதிர் இருக்கையில் மேஜர் அமருவார்... இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளமாட்டார்கள்.. இரண்டு பேரிடமும் டென்ஷன் ஓடிக்கொண்டு இருக்கும்.. பதட்டத்துக்கு மேஜர் பைப்பை நன்றாக புகைப்பார்..

.
சிவாஜிதான் முதலில் ஆரம்பிப்பார்...

டாக்டர் என்னை உங்களுக்கு தெரியுதா? நான்தான் சங்கர்.... உங்க ஓல்டு பிரண்டு என்று சொன்னதும்..  எதுவும் பேசாமல் மேஜர் தலையசைத்து அதை ஆமோதிப்பார்.. (இரண்டு பேருக்கும் தனி தனி மிட் ஷாட்டுல கேமரா இருக்கும்.....)


நாம சந்திச்சி ரொம்ப நான் ஆச்சி இல்லை என்று சிவாஜி சொல்லும் போது ரொம்ப வருஷம் ஆச்சி என்று மேஜர் சொல்லுவரர்..( அப்ப ஒய்டுல டூ ஷாட்டுல கேமரா இருக்கும்- சட்டுன்னுஉடனே மேஜர் பாயிண்ட் ஆப் யூ ல டூ ஷாட்ல டைட் பிரேம்ல ஒய்டுல இரண்டு பேரும் இருப்பாங்க...)


எஸ் யூ ஆர் கரெக்ட்...25 வருஷம் கழிச்சி வந்து  இருக்கேன்..


ஆமாம்.. அப்போ பிறந்த குழந்தையை பார்க்க வந்திங்க...


(சட்டென சிவாஜி ஆர்வமாக) இப்ப அந்த குழந்தையை  பத்தி தெரிஞ்சிக்க வந்த இருக்கேன்.....
ஏன் டாக்டர் அதை என்ன செஞ்சிங்க ..(அந்த அவலட்சனமான பிள்ளையை சிவாஜி..... குழந்தை என்று கூட அழக்க மாட்டார்.. அதை என்ன செஞ்சிங்க என்று விளிப்பார்...)


நீங்க என்ன செய்ய சொன்னிங்க..? என்று மேஜர் கேட்க....?( சிவாஜி அதுக்கு குற்றஉணர்ச்சியில் எதுவும் பேசாமல் ஒரு ரியாக்ஷனை மட்டும் கொடுப்பார் அதன் பிறகு....)

கொன்னுடசொன்னேன்....

அதை நான் செய்துட்டேன்...

பொய்..... (என்று சிவாஜிகோபமாக சொல்லுவார்)அந்த குழந்தை சாகவும் இல்லை.. உங்க வீட்டுலயும் வளர்க்கலை.. அதை எங்கேயோ கொண்டு போய் விட்டுடிங்க என்று சொல்ல..

 அதுக்கு மேஜர்,

இல்லை அந்த குழந்தை செத்து 25 வருஷம் ஆயிடுச்சி என்பார்...

கோபமாக சிவாஜி எழுந்து...

இல்லை.. அவனுக்கு 25 வயசு ஆகுது... அவனை பத்திய முழு விபரமும் கண்டிப்பாக தெரிஞ்சாகனும்.. come on tell me the truth come on என்று சிவாஜி கத்த... அதுக்கு மேஜர் எழுந்து அவரும் கோபத்துடன் don’t be dare shout at me  என்று  மேஜர் கர்ஜிப்பார்... பெத்த புள்ளை கொல்ல சொன்ன உனக்கு என் எதிரில் நின்று பேச உனக்கு என்ன தைரியம் என்று ஆங்கிலத்தில் பொரிவார்...



பைத்தியக்கரத்தனமான உன் பேச்சுக்களை எல்லாம் கேட்டு சகிச்சிகிட்டு இருந்த பழைய நண்பன் ராஜு இல்ல.. உங்க முன்  நிக்கறது...just doctor raju to you….  என்று சொல்லுவார்... இந்த இடத்துல தன் இயலாமையால எதையும் பேச முடியாம சிவாஜி கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கே... சான்சே இல்லை..

அதாவது உன் கிட்ட புள்ளை கொல்ல சொன்னா.. அதை   விட்டு விட்டு அவனை அனாதை போல  வளர்ந்து திருடனா ஆக்கி இருக்கே என்ற  அடிப்படை கோபம்.. பாசக்கோபம்.. இவ்வளவு பணம் இருந்தும் தன் வித்து  பிச்சைக்காரன் போல திருடுதே என்ற ஆதங்கம்.. அது எல்லாம் அந்த உடல் மொழியில் கண்களில் காண்பிப்பார்.. அதுக்கு மேஜரும் சளைக்காம ரியாக்ஷன் கொடுத்து இருப்பார்..


டாக்டர் நீங்க ரொம்ப நல்லவர்.. ஆனா பொய் நிறைய சொல்லறிங்க.. உண்மை என்னன்னு எனக்கு தெரியும்.. நான் சொன்ன படி அவனை அன்னைக்கே கொன்னு இருந்தா..  இன்னைக்கு அவன் பிச்சைக்காரனா, திருடனா நடுத்தெருவுல அலஞ்சிகிட்டு இருக்க மாட்டான்...
நோ... அப்படி இருக்கவே முடியாது... இதை நான்  நம்பமாட்டேன்.. என்று மேஜர்  சொல்லுவார்.


நான் சொல்லறேன்... என் வீட்டுக்குள்ளேய திருட வந்தான்.. துப்பாக்கியால சுட்டேன் டாக்டர் சுட்டேன்...


மகன் தெரிஞ்சுமா மனசு வந்து சுட்டிங்க...?


ப்ச்சு... முதல்ல திருடன்னுதான் நினைச்சேன்... அப்புறம்தான் அவன் என் பிள்ளையா இருப்பானோன்னு யோசிச்சேன்... என்று சிவாஜி சொல்ல.
.
உடனே  புள்ளை பாசம் உண்டாகி என் கிட்ட ஓடி வந்துட்டிங்க இல்லை என்று மேஜர்  சரியான நக்கல் விடுவார்..

அதுக்கு சிவாஜி.. என்னை கேலி செய்ய உரிமை  உண்டு ராஜு.. ஐ மீன்  டாக்டர் ராஜூ என்று  சிவாஜி அவர் பங்குக்கு சொல்லுவார்.


மிஸ்டர் ஷங்கர்... கொஞ்சம் சிந்திச்சி பாருங்க...  ஒன்பது மாதங்களா தாயின் வயிற்றில் சிறையில் இருந்து... பத்தாவது  மாசம் வெளிய வந்த உடனே கொலை செய்ய சொன்ன அந்த ஈவு இரக்கம் இல்லாத தகப்பன் எப்படி இருப்பான்? என்று பார்க்கும்  ஆசையிலோ அல்லது  வெறியிலேயோ உங்க பிள்ளை திருடனா வராம... திருடன்  மாதிரி வந்து இருக்கலாம் இல்லையா? அதாவது நான் சொல்லறபடி சாகமா.. நீங்க சொல்லறபடி ஒருவேளை உயிரோடு இருந்து இருந்தா? என்று  மேஜர் சொல்ல....


 சிவாஜி.. மேஜர் கிட்ட வந்து.. அழகான கற்பனை  என்று சொல்லி விட்டு ஒருமைக்கு தாவி...ராஜூ நீ டாக்டருக்கு படிக்காம வக்கிலுக்கு  படிச்சி இருந்தா நல்ல பேர் கிடைச்சி இருக்கும்டா என்று சொல்ல.,.. அதுவரை விரைப்பாய் இருந்த மேஜர் தன் நண்பன் தன்னை டா போட்டு பேசியதும் மகிழ்ச்சியில் இருவரும் மார்பில் செல்லமாக குத்திக்கொண்டு கட்டிப்பிடித்து கொள்ளும் காட்சி ஒன்று போதும்...  சான்சே இல்லை.


அயம் சாரி.. சங்கர்.. என்று மேஜர் சொல்ல....


ராஜூ... 


சொல்லு சங்கர்.... என்று சொல்லியதில் இருந்து  தன் மகனுக்காக பிளான்க் செக் கிழித்து கொடுக்கும் வரை நடக்கும் காட்சிகிள் உணர்ச்சி குவியல்கள்...


 கிளம்பும் நேரத்தில்... சித்தார் இசை கேட்க... கொல்ல சொன்ன பிள்ளையை இப்போதாவது  எப்படி இருக்கின்றார் என்று நேரில் பார்க்க மனது துடிக்க.... ராஜூ  , ராஜூ, ராஜூ,  என்று பேசாமல் வீட்டை சுற்றி  நடக்கும் அந்த  காட்சியில்  தகப்பன் பாசத்தை கண் முன்னால் நிறுத்தி இருப்பார் நடிகர் திலகம்.....


 உன் மகனை பார்க்கனுமா என்று மேஜர் கேட்கும் போது என்னால்   எப்படி அவனை பார்க்கமுடியும்..? அதுக்கான அருகதை எனக்கு இருக்கா? என்பது போல்  ரியாக்ஷன் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புவார்...


இந்த இடத்தில் அவர் வெளியே போகாமல்  கேமரா பிரேம் அவுட் ஆகிவிட்டோம் என்று நினைத்து  சிவாஜி அவுட் பிரேமில் நிற்பார்.. ஆனால்  அவர் ஷேடோ சுவற்றில் தெரியும்.. அதை அப்படியே கட் பண்ணி இருக்கலாம்...பட் மேஜர் அந்த பிளாக் செக்கை  கையில் வைத்து ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்.... அதனால் அந்த ஷாட்டை ஷார்ப்பாக கட் பண்ணி இருக்கமாட்டார்கள்..

கீழே முழு தெய்வமகன் படமும் இருக்கின்றது.. நான் மேலே விவரித்த அந்த காட்சி...1.41.47 நிமிடத்தில் ஆரம்பித்து 1.48.39 நிமிடத்தில் முடியும்.... அதில் முடியும் நேரத்தில் சிவாஜி வீட்டை வெளியே போகாத ஷேடோவையும் பார்க்கலாம்....



 அதுக்கு பிறகு பிள்ளை சிவாஜி பிளான்க் செக்கை எடுத்து போய் தன் தகப்பனை சந்திக்கும் அந்த காட்சியும் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத உணர்ச்சி குவியல் அது...அது கிழே உங்களுக்காக பார்த்து ரசியுங்கள்........


ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட  வரிசைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரைப்படம் இது..
 இயக்குனர் ஏசி திருலோக சந்தர்..வசனம் ஆருர்தாஸ்,  இசை விஸ்வநாதன் கேமரா தம்பு என்று தன் பங்குக்கு அத்தனை பேரும் மிரட்டி இருக்கின்றார்கள்...


மற்றபடி  இந்த ஒரு சீன் போதும் இந்த படத்துக்கு... மற்றது எல்லாம் பெரிய விஷயம் இல்லை...
  சிவாஜி என்ற அந்த மகா கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்...இது வைர விழா ஆண்டு... 1952 இல் பாரசக்தி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து 300க்கு மேற்ப்பட்ட படங்களில் நடித்து கலையை  உயிர் மூச்சாக கொண்ட  அந்த கலைஞனுக்கு இந்த பதிவும் அவருடைய மலர் பாதங்களுக்கு காணிக்கை... என் அம்மா ஒரு சிவாஜி வெறியை...

படக்குழுவினர் விபரம்.

Directed by A. C. Tirulokchandar
Written by Harur Daas
Starring
Sivaji Ganesan
Jayalalitha
Music by M. S. Viswanathan
Cinematography Thambu
Release date(s)
September 5, 1969
Country India
Language Tamil


========================================================
.
முதல் மரியாதை படத்தை நான் விமர்சித்து எழுதிய பதிவை நேரம் இருப்பின் அதையும் படியுங்கள். அது கீழே....ஒரிஜினல் பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்........  இந்த பதிவை  உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள்... புது புது அர்த்தங்கள் படத்தில் ஒரு பாடல் வரி வரும்... அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே என்று... வாழ்க்கையில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று.... சக மனிதர்கள் கொடுக்க முடியாத வரத்தை இறைவன் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றான். அதில் இருக்கும் பல சிக்கல்களுக்கு இறைவன் கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றான்...

சரி இங்கே அழகான மனைவி என்று குறிப்பிடபட்டு இருக்கின்றது... அதாவது அழகான மனைவி அமைந்தால் அது இன்னும் பேரின்பம் என்று சொல்லலாம்...குறைந்த பட்சம் ஒரு 500க்கு மேல் திருமணம் நிச்சயதார்த்தம் வீடியோ போட்டோ எடுத்து இருக்கின்றேன்....அதில் இரண்டு சதவீத தம்பதிகள்தான் மேட்பார்ஈச்அதராக இருப்பார்கள்.... பல திருமணங்களில் பல ஜோடிகளை எல்லாம் பார்க்கவே முடியாது என்று சொல்லுவார்கள்..... சில ஜோடிகளை பார்க்கவே சகிக்காது என்று சொல்லுவார்கள்...ஆனாலும் அந்த தம்பதிகள் அவர்கள் மனது ஒத்து இன்னும் சுபிட்சமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்....இன்றும் மெரினா பீச்சுக்கு வரும் காதலர்களில் மேட்பார்ஈச்அதர் கப்பிள்களை தேடித்தான் பிடிக்க வேண்டும்.....

அதே போல் மேட்பார்ஈச் அதர் ஜோடிகளில் திருமணம் ஆன மூன்றாம் நாளே முறுக்கி கொண்டு நிற்க்கும் அளவுக்குஈகோ அதிகம் வளர்ந்து டைவர்ஸ் வரை போன தம்பதிகளை நான் அறிவேன்..... மேட் பார் ஈச் அதர் என்பது ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு , விட்டு கொடுத்து வாழ்வது என்பது பல பேருக்கு புரிவது இல்லை..ஈச் அதர் என்பது... அழகு சம்பந்தபட்ட விஷயமாக மட்டுமே இங்கு புரிந்து கொள்ளபடுகின்றது...

தமிழ் நாட்டில் அந்த காதல் திருமணம் நடந்த போது மூலைக்கு மூலை அந்த திருமணத்தை பற்றிய பேச்சாகவே இருந்தது.. எப்படி நடந்தது? எப்படி அவனை அந்த பெண் மனம் ஒத்து எப்படி திருமணம் செய்து கொண்டாள்..?சிலர் அந்த பையனுக்கு லக் என்று சொன்னார்கள்... அந்த தம்பதி வேறு யாரும் அல்ல நடிகை தேவயானி, ராஜகுமாரன்...ஏனோ தமிழ் சமுகத்து ஆண்கள் பலர் தேவயானி தேர்ந்து எடுத்த வாழ்க்கைக்கு வருத்தபட்டனர்...அடிப்படையில் பொறாமைதான் அதற்க்கு காரணம்.... இராமன் மெச்சியதே ரம்பா என்பது போல் அந்த பெண்ணுக்கு பிடித்தவனே அவளது கணவன்....


எனை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்...
என் கல்லூரிக்கு திருமணம் முடிந்து என் மனைவியை அழைத்து போனேன்... எப்படி இந்த பொண்ணு உன்னை போய் லவ் பண்ணிச்சி என்று என் காதுபடவே கேட்டார்கள்... அது அவகிட்ட கேட்க வேண்டிய விஷயம் என்று சொன்னேன்...

சில பெண்களை சட்டென பிடித்து போகும்.... அது தங்கையாக, நண்பியாக. நண்பியின் தோழியாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்...

என் உறவுக்கார பெண்.. சமுக விஷயங்களில் அதீத ஈடுபாடு.. படித்த பெண்ணாக இருந்தாலும் நியாயமாக பேசுவாள்...சத்தியபாமாவில்தான் படிக்கின்றாள்.. அவள் மீது ரொம்பவும் எனக்கு மரியாதை... ஒரு நாள் வீட்டுக்கு போய் இருந்தேன்.. பேசிக்கொண்டு இருந்தேன்...

மாம்ஸ் அப்பா வாணியம்பாடி போயிட்டு சீக்கரம் வந்துட்டார்...
வரும் பொது வாணியம்பாடி பிரியாணி வாங்கி வந்தார்...நாங்க சாப்பிட்டுவிட்டோம்... கொஞ்சம் இருக்கு...

அக்கா உனக்கு எங்க நான் வெஜ் செஞ்சு போட போறா? அதை சூடு பண்ணி எடுத்து வாரேன் சாப்பிடுங்க... என்று என் அனுமதி இல்லாமல் எழுந்து போய் எனக்கு சூடு பண்ணி தட்டு நிறைய பிரியாணியை வைத்த போது...நல்ல பசி அப்போது பார்த்து, அந்த சூடான பிரியாணி வந்த போது...என் கண்கள் கலங்கின... அந்த பெண் மீது மரியாதை போய் அதீத பாசம் வந்து ஒட்டிக்கொண்டது....

எனது நன்பரின் மனைவி...அவரின் குழந்தை அந்த பெண்ணை போட்டு பாடாய் படுத்தும்.... இருந்தாலும் அவள் என் தலை பார்த்ததும்.... அண்ணா காப்பி,டீ எது வேனும்???நண்டு கொழம்பு வச்சி இருக்கேன்... அது ஒருவாய் சாப்பிடுங்க....என்று பரபரபக்கும் போது அந்த பெண்ணின் மீது இயல்பாய் பாசம் வந்து விடுகின்றது... பழகும் எந்த பெண்களாக இருந்தாலும் ஒரு ஆண் அந்த பெண்ணிடம் மிகுந்த நேசமும் பாசமும் வைத்து இருப்பது என்பது அந்த பெண் அந்த ஆணை பார்த்துக்கொள்வதில்தான் இருக்கின்றது....

அம்மா என்பவள் மட்டும்தான் அவள் ஆணுக்கு எத்தனை வயதானாலும், பிறந்த போது எப்படி பார்த்துக்கொண்டாலோ, அதே போல் பார்த்துக்கொள்ளுபவள்.. ஆனால் அப்படி பார்த்துக்கொண்ட அம்மா இறந்து போய்விட்டாள்.... அந்த இடத்தை தாரம் என்பவள் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் அப்படி நிரப்பாத போது... அந்த ஆறுதலையும் அந்த நேசத்தையும் ஒரு 5வயது குழந்தை கொடுத்தால் கூட அவள் மீது காதல் பெருகும்....அப்படி ஒருவனுக்கு காதல் மறுக்கபட்டு,வீட்டில் நிம்மதியும் இல்லாமல் இருந்தால்???? எல்லோருக்கும் தாய் மடிக்கு பிறகு தாரத்தின் மடி கிடைக்க வேண்டும் அந்த அன்பும் அறவனைப்பும் இல்லாத போது....

பாராட்ட
மடியில் வச்சி தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் உள்ள ஒருவனின் வாழ்க்கை வலியையும்
ஊரே மரியாதையாய் பார்க்கும் ஒருவனின் உள்ளக்குமுறலை மிக அழகாய் செல்லூலாய்டில் பதியபட்ட படம்தான் முதல் மரியாதை...

முதல்மரியாதை படத்தின் கதை இதுதான்...

மலைச்சாமி( சிவாஜிகணேசன்) தேவர் ஊரின் பெரிய கை... ஆனால் வீட்டில் மனைவி பொன்னாத்தா (வடிவுக்கரசி) ரொம்பவும் மோசமானவள்... எப்போதும் லொட லொட வென பேசிக்கொண்டு இருப்பவள்... எப்போதும் டாம்பீகம் பேசி திரிபவள்.. கணவனை எப்போதும் மதித்ததி்ல்லை.. அதே போல் கணவனும் மனைவியிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை.... மலைச்சாமி தேவரின் தங்கை மகன் செல்லகண்ணு அவரோடே வாழ்கின்றான்... பொன்னாத்தா அவனையும் தேவரையும் எப்போதும் மதித்ததே இல்லை.... பொன்னாத்தாவுக்கு ஒரு பெண் மட்டுமே...அவள் கணவன் குடிகாரன்....செல்லகண்ணு அதே ஊரில் செருப்பு தைக்கும் செங்கோடன் மகள் செவலியை காதலிக்கின்றான்... ஊருக்கு பஞ்சம் பொழைக்க வரும் குயில்(ராதா) குடும்பம்... வேலை ஏதும் கிடைக்காத காரணத்தால் அந்த ஊரின் ஆற்றில் பரிசல் ஓட்டி வயிற்று பிழைப்பை நடத்துகின்றாள்..வெள்ளைசாமி தேவருக்கும் பரிசல் ஓட்டி பிழைக்கும் குயிலின் துடிக்கான பேச்சு பிடித்து போகின்றது... குயிலுக்கும் பெரிசுவின் நடவடிக்கை நல்ல குணம் பிடித்து போக... இருவரும் நட்பாகின்றனர்...தனது தங்கை மகன் காதலை எதிர்க்கும் மலைச்சாமியை காதலுக்கு ஜாதி ஒரு தடையில்லை என்று சொல்லி செல்லகண்ணு செவலி திருமணத்தை நடத்தி வைக்கின்றாள்... ஒரு சில நாட்களில் செவலி கொலையாகின்றாள்... அந்த கொலையை செய்தது யார்? மலைச்சாமி குயில் நட்பை தப்பாக ஊருக்குள் தப்பாக பேசுகின்றார்கள்... அந்த பேச்சு குயிலுக்கு பிடித்து இருக்கின்றது... மலைச்சாமிக்கு அது பிடிடிக்கவில்லை.. இருப்பினும் குயிலின் காதல் ஜெயித்ததா? பெரிய திருப்பமாய்... குயில் ஒரு கொலை செய்து விட அது ஏன் செய்தாள், எதற்க்கு செய்தாள்? என்பதை வெண்திரையில் காண்க...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

கிராமத்தையும் அதன் வீட்டையும் சென்னை ஸ்டுடியோ செட்களில் காட்டிய தமிழ் சினிமாவை உண்மையான கிராமத்துக்கே போய் படம் எடுத்து அவுட்டோர் ஷுட்டிங்கை பிரபலபடுத்திய இயக்குனர் பாரதிராஜா....

இந்த படத்தின் திரைக்கதை மிகவும் அற்புதம் என்று சொல்லுவேன்... முதலில் இறக்கும் தருவாயில் இருக்கும் சிவாஜிஅவர்களை காண்பித்து விட்டு அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பிளாஷ் பேக்கில் கதையை சொல்லி இருப்பது அருமை...படத்தின் பிற்பகுதி வரை அவருக்கும் அவர் மனைவிக்கும் என்ன பிரச்சனை என்று ஊரார் வாயாலும், காட்சிகளாலும் சொல்லி இருப்பது நல்ல திரைக்கதைக்கு சான்று...

அதே போல் சிவாஜி வடிவுக்கரசி இருவர் இடையே உள்ள பினக்கை அறிமுகமான ஒரு சில காட்சிகளில் பார்வையாளனுக்கு புரிய வைத்தது அழகு என்பேன் ....

அதிகமான கட் ஷாட்டுகளில் உணர்வுகளை சொல்வதில் பாரதிராஜா கை தேர்ந்தவர்...வீட்டில் மூக்கு சளி சிந்தி அதே கையால் சோறு போடும் மனைவியையும். அவள் போடும் சோற்றையும் ஒதுக்கிவிட்டு,கொள்ளிக்கி கிளம்பி போகும் போது... தண்ணியை மேலே தெரியாமல் ஊற்றினாலும்... கொஞ்சமும் பதறாமல் வடிவுக்கரசி இருக்க, நாய் வலை எப்ப நிமித்த முடியும்?என்று சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்ததும்....



சிவாஜி முகத்தில் ஒரு மகிழ்ச்சியும், நீல வானமும், கரன்ட் கம்பியில் உட்கார்ந்து இருக்கும் பறவைகள்,அசையும் மரம் என்று பார்த்து விட்டு உற்ச்சாகமாகி நடக்கும் நடை அழகு... அதுவரை வீட்டில் சோக இசை இசைக்க வீட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த உற்சசாகதை இளையராஜா இசையில் நிரப்பி வைக்க அந்த உற்சாகம் பார்வையாளனுக்கும் வந்து ஒட்டிக்கொள்வதுதான்.... ஆச்சர்யம்..



சிவாஜி நடிப்பின் சிகரம் என்றாலும் மிகை படுத்த பட்ட நடிப்பை இந்த படத்தில் எந்த இடத்திலும் அவர் வெளிபடுத்தி இருக்கமாட்டார்...சில எக்ஸ்பிரஷன் அதிகமாக கொடுத்த போது கூட அவ்வளவு வேண்டாம் என்று பாராதிராஜா ஒன்மோர் போக வைத்ததாக சொல்லுவார்கள்...
சிவாஜியின் நடிப்புக்கு ராதா வீட்டில் மீன் குழம்பு சாப்பிடும் அந்த ஒரு காட்சி போதும்... பசியும் மீன் குழம்பு சுவைக்கு மயங்கி போய் இருக்கும் கேரக்டர். ஓகோ சாப்பிட்டுகிட்டு இருக்கியா? என்று கேட்டு பேச்சை ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் ராதா சாப்பாடு போட போகும் போது.. அந்த சாப்பாடுக்கு ஏங்கும் படி தட்டை கரண்டிக்கு அருகில் வைத்து பரபரப்பை காட்டும் அந்த காட்சியும்....

புள்ளை உண்மையிலேயே சொல்லறேன்.. உன் கை பக்குவத்தை சாப்பிடும் போது என் ஆத்தா ஞாபகம் வருது என்று சொல்லி கண் கலங்கும் இடம் அற்புதம்... அந்த ஒரு காட்சி போதும்.., அதே போல் வடிவுக்கரிசி மகளிடம் பேசம் போது நீ என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும் ஏழு ஜென்மத்துக்கு நீதான் என் மகள்... என்று சொல்வதும்... ஒரு பெரிய கல்லை தூக்கி விட்டு அதை ராதா பார்த்ததும் கூச்சபட்டு ஓடும் அந்த காட்சி நடிகர் திலகம்தான்...

ராதா படத்தில் ஜாக்கெட் போடாமல் நடித்ததை பற்றியும்கேழ்வரகு தின்னும் போது,அக்குள் சொறியும் அந்த காட்சியை பற்றி என் அம்மா சிலாகித்து என் சித்தியிடம் பேசியதும் அந்த தைரியத்தை பேசி பேசி ஆத்து ஆத்து போனது இன்னும் என் ஞாபக அடுக்குகளில்...

துடைப்பத்தால் அடிவாங்குவது போல் நடித்ததும்...சிவாஜியை ரொம்ப மரியாதையுடன் பார்வைகளில் பார்க்கும் அந்த காட்சிகள் எல்லாம் ராதா நடிப்பு ஏ ஒன் ரகம்.. பரிசலில் இருக்கம் காதல் ஜோடியை சிவாஜி கயிற்றில் பிடித்தபடி இருக்க...

பஞ்சம் பொழைக்க வந்தவளுக்கு பரம்பரை கவுரவத்தை பத்தி என்ன தெரியும் என்று சிவாஜி கேட்க???
ஒன் பரம்பரை கவுரவம் நீ புடிச்சிகிட்டு இருக்கற கவுத்தலதான் இருக்குதுன்னா... அதை விட்டுட்டு உன் கவுரவத்தை பார்த்துக்கோயா? என்று சொல்லும் அந்த காட்சி ராதா நடிப்புக்கு ஒரு சான்று..... அதே போல் சிவாஜி யாரை கிழவன்னு சொல்லறே.. குடிசையெல்லாம் காலி பண்ணிடுவேன் ஆமாம் என்று சொல்லும் போது முழித்து விட்டு சிரிய்யா அந்த கல்லை துக்கிட்டா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லும் அந்த காட்சி ராதா நடிப்புக்கு வாவ்...

வடிவுக்கரசி....அந்த லொட லொட பேச்சின் ஊடே துருபிடிச்ச சொரட்டுக்கும் பத்து வெள்ளாடோடு வந்தாக என்று சிவாஜியை குத்திகாட்டி பேசுவதிலாகட்டும்... மூக்கை சிந்தி சோறு போடும் போதும், துடப்பகட்டையால் ராதாவை நடு ரோட்டில் விளாசும் போதும், வாழ்ந்து முடிந்து போன,ஏதோ ஒரு அப்பாத்தாவின் வாழ்க்கையை பார்ப்பதாக இருக்கின்றது.....

கதை வசனம் செல்வராஜ்... படத்தின் பெரிய பலம்...

அட என் மருமவனே... அக்யும் இருப்பான் இங்கயும் இருப்பான் திங்கற சோத்துல பங்கும் கேட்பானாம் என்பது போன்ற வசனங்கள் ஊடே ஆரம்பிக்கும் உரையாடல் அந்த மண்ணில் வாழ்வது போல் இருக்கின்றது...

“ஆசையுள்ள கிழுவனுக்கு அததுவானம் கையிலன்னு சொல்லுவாங்க.....”

“உனக்குதான் கூடு இல்லை கூடி வாழ போற இந்த கூட்டை கலைக்கனுமா??”

“எல்லாரும் கேட்டுக்குங்க... ஆமா அவளை வச்சிருக்கேன்...”

“நீ என் தங்கச்சி மகன் மட்டும் இல்லை என் குலம் காக்க வந்த சாமின்னு என் காலை புடிச்சிகிட்டு கதறனான்... என் மாமன் காலை தொட்டுட்டான்னுட்டு 20 வருசமா நான் செருப்பு கூட போடலை...”

ஐயா சாமி எனக்கு ஒரு உண்மைதெரிஞ்சாகனும்க.... போன்ற டயலாக்குகள் அற்புதம்..

இசையி்ல் ராஜா துள்ளலையும் சோகத்தை சரிபாதியாக கலந்து தந்திருப்பார்...
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ராசாவின் பின்னனி இசை... இந்த படத்தில் ராஜா போட்ட எல்லா இசையும் டிரைலர் வீடியோவில் இருக்கின்றது கேட்டு மகிழுங்கள்...
சிவாஜி ராதா சொன்ன கல்லை துக்கும் போது கொடுக்கும் பின்னனி இசை எனக்கு ரொம்ப பி்டித்த ஒன்று....

வைரமுத்து....வரிகள்... இப்போதும் என் அப்பா... படுக்கையில் பெருங்குரலெடுத்து..

என்ன செய்வேன் என் உள்ளம் தாங்கலை...
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை.. என்று பாடுவார்...

பாடல் வரிகளில் அவர்களுடைய வாழ்க்கையையும் வலியையும் சொல்லி இருப்பார்..

பூவுக்கும் வாசம் உண்டு்
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கும் வாசம் வந்தது ஓ மானே..என்பதாகட்டும்

கையகட்டி சொல்லி நிக்க சொன்ன காட்டு வெள்ளம் நிக்காது...
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்க சுத்தாது...

புத்திகெட்ட தேசம் பொடி வச்சி பேசும்
சாதிமத பேதமெல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்....

இரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக பட்டணம் போய் வக்கில் வைக்கவா?

வரிகளில் கவிஞர் பூந்து விளையாடி இருப்பார்... இருப்பி்னும் இந்த கூட்டனி முறிந்தது.. நமெக்கால்லாம் பெரிய இழப்புதான்...

வெளிப்புறபடபிடிப்புக்கு என் கேமராமேன் கண்ணன் கண்களை மட்டும் கொண்டு செல்வேன் என்பது போல கண்ணன் அற்புதமாக ஒளிப்திவு செய்து இருப்பார்...

அறிமுகம் தீபன், ரஞ்சனி... நடிகை ரஞ்சனி ஒரு சில படங்களில் தலை காட்டினார்...நடிகரை வேறு எந்த படத்திலும் நான் பார்க்கவில்லை..

கடைசிகாட்சிகளில் வந்தாலும் சத்யராஜ் அவர் கேரக்டரை பேச வைத்து இருப்பார்...


கடைசி வரை சிவாஜிக்கு ராதாமேல் வருவது பாசம் ,மரியாதை மட்டுமே.. ஆனால் ஊரார் பேசும் பேச்சுக்காகதான் அதை ஆம் என்று சொல்வது போல் இருப்பதும்...நீ வச்சிகிட்டு இருக்கியா என்று வடிவுக்கரசி துடைப்பத்தால் அடிக்கும் வரை ராதாவுக்கும் அது போல் எண்ணம் இல்லை அடித்த பிறகுதான் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவள் நினைப்பதாக சொல்லி இருப்பது இய்க்குனரின் அனுபவத்திறனுக்கு ஒரு சான்று....


இப்போது பல படங்களில காமெடி கேரக்டர் செய்யும் ஒளிப்பதிவாளர் இளவரசு இந்த படத்தல் அசி்ஸ்டென்ட் கேமராமேனாக பணியற்றியவர்... படத்தின் டேர்னிங் பாயிண்டாக இருக்கும் ராதா, சிவாஜி இருவரும் சந்தையில் எடுக்கும் போட்டோ எடுக்கும் போட்டோகிராபராக நடித்து இருப்பார்...இன்னொருவர் தனபால் இவர் பாராதிராஜா உறவுக்காரர் என்று நினைக்கின்றேன்... ஜெயாடிவியில் பணி புரிந்தார்.. சில நாட்களுக்கு முன் சென்னை பிரசாத் டெலிசினிலேபில் பார்த்தேன்...

ஒரு காதலை எந்த விகல்பமும் இல்லாமல் மனது மட்டும் முக்கியம் என்று காட்டிய அந்த துணிவு பாராதிராஜவை பாராட்டியே ஆக வேண்டும்....

எல்லா கிராமத்துலேயும் ஜனகராஜ் போல் ஒரு கேரக்டர் இருக்கும்....

வெட்டி வேரு வாசம் பாடலில் மான்டேஜ் ஷாட்டுகள் பிரமாதம்... அதுவே ஒரு கவிதையாய் இருக்கும்...

இந்த படத்தில் சிவாஜி எப்படி பெண்களிடம் வம்பு செய்வாரோ அது போலவே என் அப்பாவும் எல்லா ஊர் பெண்களிடமும் கிண்டலாக பேசுவார்....



இந்த படத்தை பார்த்து விட்டு வந்து என் அம்மா வீட்டில் சிலாகித்து பேசும் போதே எனக்கு தெரிந்து விட்டது இந்த படம் பெரிய அளவில் பேசபடும் என்று... அப்போது எனக்கு வயது பத்து....என்னிடம் இந்த படத்தின் முழு கதையை அம்மா என்னிடம் சொல்லி இருக்கின்றாள்...சிவாஜி நடிப்பை சிலாகித்து சொல்லி வியந்து போய் இருக்கி்ன்றாள்..
இந்த படம் தமிழில் பார்த்தே தீர வேண்டிய படம்.... ஒரு கிராமத்து வாழ்க்கை வாழ இந்த படத்தை பார்ககவும்...

விருதுகள்..

1985 National Film Awards (India)

* Won - Silver Lotus Award - Best Lyricist - Vairamuthu
* Won - Silver Lotus Award - Best Regional Film (Tamil) - Muthal Mariyathai - Bharathiraja

படத்தின் டிரைலர்... இளையராஜவின் பின்னனி இசையும்...




படத்தில் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு பாடல்



படக்குழுவினர் விபரம்

Directed by Bharathiraja
Produced by Bharathiraja
Written by Bharathiraja
Starring Sivaji Ganesan
Radha
Sathyaraj
Vadivukkarasi
Music by Ilaiyaraaja
Release date(s) 1985
Running time 160 mins
Language Tamil


அன்புடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

20 comments:

  1. yes, sivaji is a great actor no doudt in that! but reason we don't know is he was not still won national award for his acting ?!

    ReplyDelete
  2. ”தெய்வமகன்” படத்தில் சிவாஜி-மேஜர் சம்பந்தப்பட்ட இந்தக் குறிப்பிட்ட காட்சியை, தொழில்நுட்ப விவரங்களுடனும் வர்ணனைகளுடனும் ஒரு குட்டி ஆய்வே செய்திருக்கீங்க ஜாக்கி! சிவாஜியைப் பற்றிய ஒரு அருமையான நினைவுகூரல்!சிவாஜியின் ஒரு மாஸ்டர்-பீஸ் ‘தெய்வமகன்’

    ReplyDelete
  3. வாவ்... சார். அட்டகாசமான விமர்சனம். மறுபடியும் அந்தக் காட்சியைப் பாக்க வெச்சுட்டீங்க. தாங்ஸ் சார்.

    சிவாஜி உள்ள வந்து இருட்டுல இருந்து விலகி வெளிச்சத்தில் முகம் காட்டுவது அருமை. முன்னாடி பாத்தப்போ இவ்ளோ நுணுக்கமாப் பாக்கலை. நன்றி சார்.

    உணர்சியே இல்லாம முகத்தை வெச்சுக்கிறதும் கடினம். உணர்ச்சிகளைச் சரியாக் காட்டுறதும் கடினம். ரெண்டையும் சரியாகச் செய்கிறவனே நல்ல நடிகன்.

    நடிகர் திலகத்தின் படங்களை இன்று பாக்குறவங்களுக்கு மிகை நடிப்பாத்தான் தெரியும். அது மிகத்தவறான கருத்து.

    ஏ.ஆர்.ரஹ்மானைப் போல எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாட்டோ அந்த அளவுக்கு அபத்தம் சிவாஜியின் நடிப்பை மிகைநடிப்பு என்று எளிதாக ஒதுக்கித் தள்ளுவது.

    நாடகத்திலிருந்து சினிமா பிறந்து வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு வருகையில் பழையதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

    முதல்மரியாதை என்ன சார், பூப்பறிக்க வருகிறோம் படத்தைப் பார்க்கச் சொல்லுங்க... அதுவும் மிகைநடிப்புன்னா அதச் சொல்றவனுக்கே நடிப்புன்னா என்னன்னே தெரியாம இருக்கனும்.

    தமிழ்நாட்டுல இன்னைக்கும் சிவன்னா, கர்ணன்னா, வ.உ.சிதம்பரம்பிள்ளைன்னா, பாரதியார்னா, அப்பர்னா, நம்மாள்வார்னா, நாதஸ்வரக்கலைஞன்னா, மிருதங்க வித்வான்னா... அது நடிகர் திலகம் மட்டுமே. எத்தனையோ பேர் பாதிரியாரா நடிச்சாங்க. ஆனா வெள்ளைரோஜா படத்துல நடிகர்திலகம் பாதிரியாரா வரும்போதுதான் உண்மையான பாதிரியாரை விட அன்பையும் அருளையும் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

    நான் நடிகர் திலகத்தின் ரசிகன். இதை எங்கும் எப்பொழுதும் சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமைதான்.

    ReplyDelete
  4. வாவ்... சார். அட்டகாசமான விமர்சனம். மறுபடியும் அந்தக் காட்சியைப் பாக்க வெச்சுட்டீங்க. தாங்ஸ் சார்.

    சிவாஜி உள்ள வந்து இருட்டுல இருந்து விலகி வெளிச்சத்தில் முகம் காட்டுவது அருமை. முன்னாடி பாத்தப்போ இவ்ளோ நுணுக்கமாப் பாக்கலை. நன்றி சார்.

    உணர்சியே இல்லாம முகத்தை வெச்சுக்கிறதும் கடினம். உணர்ச்சிகளைச் சரியாக் காட்டுறதும் கடினம். ரெண்டையும் சரியாகச் செய்கிறவனே நல்ல நடிகன்.

    நடிகர் திலகத்தின் படங்களை இன்று பாக்குறவங்களுக்கு மிகை நடிப்பாத்தான் தெரியும். அது மிகத்தவறான கருத்து.

    ஏ.ஆர்.ரஹ்மானைப் போல எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாட்டோ அந்த அளவுக்கு அபத்தம் சிவாஜியின் நடிப்பை மிகைநடிப்பு என்று எளிதாக ஒதுக்கித் தள்ளுவது.

    நாடகத்திலிருந்து சினிமா பிறந்து வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு வருகையில் பழையதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

    முதல்மரியாதை என்ன சார், பூப்பறிக்க வருகிறோம் படத்தைப் பார்க்கச் சொல்லுங்க... அதுவும் மிகைநடிப்புன்னா அதச் சொல்றவனுக்கே நடிப்புன்னா என்னன்னே தெரியாம இருக்கனும்.

    தமிழ்நாட்டுல இன்னைக்கும் சிவன்னா, கர்ணன்னா, வ.உ.சிதம்பரம்பிள்ளைன்னா, பாரதியார்னா, அப்பர்னா, நம்மாள்வார்னா, நாதஸ்வரக்கலைஞன்னா, மிருதங்க வித்வான்னா... அது நடிகர் திலகம் மட்டுமே. எத்தனையோ பேர் பாதிரியாரா நடிச்சாங்க. ஆனா வெள்ளைரோஜா படத்துல நடிகர்திலகம் பாதிரியாரா வரும்போதுதான் உண்மையான பாதிரியாரை விட அன்பையும் அருளையும் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

    நான் நடிகர் திலகத்தின் ரசிகன். இதை எங்கும் எப்பொழுதும் சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமைதான்.

    ReplyDelete
  5. Jackie, please see Sampoorna Ramayanam movie in which Sivaji acted as Bharathan. Even his hand gestures to the charioteer spoke volumes! Rajaji's only comment to the press after watching this movie was just, "I saw Bharathan" ("Bharathanai parthaen")! I have seen many of Sivaji's movies from my younger days. Now, whenever I see any of Sivaji's movies (remember Sivaji's majestic look and walking style as Lord Shiva in 'Thiru Vilayadal), I continue to be awestruck. Absolutely no parallel to Sivaji. We miss him a lot. For me, he was like more than a family member. Thanks for your write up on Sivaji's another master piece 'Deiva Magan'.

    ReplyDelete
  6. விமர்சனம் ...ரொம்ப நல்ல இருக்கு ... நீங்க பலே பாண்டியா படம் முடிஞ்சா பாருங்க பாஸ் பாஸ்... அந்த படத்திலே சிவாஜி, எம். ஆர். ராதா நடிப்பு,வசனம்/காமெடி அருமை...

    ReplyDelete
  7. உலக சினிமா என்று பெயர் வைத்துகொண்டு ஹே ராம் போன்ற யாருமே பார்க்காத படத்தை பற்றி பத்து பதினைந்து பதிவுகள் எழுதி அதிலும் ஒன்று கூட உருப்படி இல்லாமல் படத்தில் இல்லாத சங்கதிகளை ஆ வூ என்று செயற்கையாக பாராட்டும் சிலருக்கு மத்தியில் தமிழ் சினிமாவின் மிக சிறந்த படங்களில் ஒன்றான தெய்வ மகன் பற்றியும் சிவாஜி என்கிற தமிழின் ஒரே நடிகனை பற்றியும் சிறப்பாக எழுதி இருப்பது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் வியக்கும் அந்த காட்சி விஷயம் அறிந்த சிலரால் மட்டுமே பேசப்படும். மற்றவர்கள் வழக்கம் போல மூன்று சிவாஜியும் ஒரே பிரேமில் இருக்கும் காட்சியைத்தான் பெரிதாக பேசுவார்கள். பெண் ஹர் படத்தில் துவக்கத்தில் எதிரியாக மாறப்போகும் இரண்டு நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சியை வைத்தே இந்த காட்சி உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு அடிபட்டது.இருந்தும் சிவாஜி சுந்தரராஜன் நடிப்பு அபாரம்தான். சிவாஜியின் நடிப்பை மிகை என்று சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். சிவாஜி இல்லாத தமிழ் சினிமா அந்த இருபது வருட காலகட்டத்தில் என்ன விதமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்தால் பயங்கரமாக இருக்கிறது.சிவாஜியின் நடிப்பு தமிழ் சினிமாவுக்கு பல பரிணாமங்களை கொடுத்திருகிறது. உலகின் தலை சிறந்த நடிகர் என்று பொதுவாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்லன் பிராண்டோவாலே பாராட்டப்பட்டவர் சிவாஜி என்பது ஒரு கூடுதல் சிறப்பு.

    ReplyDelete
  8. உலக சினிமா என்று பெயர் வைத்துகொண்டு ஹே ராம் போன்ற யாருமே பார்க்காத படத்தை பற்றி பத்து பதினைந்து பதிவுகள் எழுதி அதிலும் ஒன்று கூட உருப்படி இல்லாமல் படத்தில் இல்லாத சங்கதிகளை ஆ வூ என்று செயற்கையாக பாராட்டும் சிலருக்கு மத்தியில் தமிழ் சினிமாவின் மிக சிறந்த படங்களில் ஒன்றான தெய்வ மகன் பற்றியும் சிவாஜி என்கிற தமிழின் ஒரே நடிகனை பற்றியும் சிறப்பாக எழுதி இருப்பது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் வியக்கும் அந்த காட்சி விஷயம் அறிந்த சிலரால் மட்டுமே பேசப்படும். மற்றவர்கள் வழக்கம் போல மூன்று சிவாஜியும் ஒரே பிரேமில் இருக்கும் காட்சியைத்தான் பெரிதாக பேசுவார்கள். பெண் ஹர் படத்தில் துவக்கத்தில் எதிரியாக மாறப்போகும் இரண்டு நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சியை வைத்தே இந்த காட்சி உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு அடிபட்டது.இருந்தும் சிவாஜி சுந்தரராஜன் நடிப்பு அபாரம்தான். சிவாஜியின் நடிப்பை மிகை என்று சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். சிவாஜி இல்லாத தமிழ் சினிமா அந்த இருபது வருட காலகட்டத்தில் என்ன விதமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்தால் பயங்கரமாக இருக்கிறது.சிவாஜியின் நடிப்பு தமிழ் சினிமாவுக்கு பல பரிணாமங்களை கொடுத்திருகிறது. உலகின் தலை சிறந்த நடிகர் என்று பொதுவாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்லன் பிராண்டோவாலே பாராட்டப்பட்டவர் சிவாஜி என்பது ஒரு கூடுதல் சிறப்பு.

    ReplyDelete
  9. பின்னுட்ட மிட்ட அனைவருக்கும் நன்றி....

    அன்பின் காரிகன்..
    யாரை குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றீர்கள் என்பது புரிகின்றது...ஆனால் ரசனைகள் எல்லோருக்கும் வேறானவை.. இந்த காட்சியையே குப்பை என்று சொல்லுபவர்களும் உண்டு... அது போலத்தான் ஹேராம் திரைப்படத்தை பற்றி நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்...

    எனக்கு மிகவும் பிடித்த படம் ஹேராம்... அந்த திரைப்படத்தில் உள்ள உழைப்பும், சின்ன சின்ன விஷயத்துக்கு கூட கமல் காம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல், இயக்கிய விஷயங்களை நான் அறிவேன்.....ஹேராம் படத்துக்கு ஷூட்டிங் போய் விட்டு அங்கே வேலை பார்த்து வந்தவர்கள் அப்படத்தின் மேங்கிங் பற்றி சிலாகித்து என்னிடம் பேசியது எனக்கு தெரியும்...

    உங்களுக்கு கமல் பிடிக்கவில்லையா? அல்லது உலக சினிமா ரசிகனை பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை..

    சிவாஜிக்கு பிறகு நடிப்பிலும் சரி... தொழில்நுட்பத்திலம் சரி... சினிமா அதிகம் தெரிந்த ஒரே தமிழ் நடிகர்.. கமல் மட்டுமே....

    ஹேராம்திரைப்படம்... பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமலிடம்.. நிறைய பேருக்கு படம் புரியவில்லையே என்று கேள்வி கேட்ட போது..? கமல் சொன்ன பதில் என்ன தெரியுமா?

    அது படைத்தவனின் தவறு அல்ல என்று சொல்லி விட்டு போய் விட்டார்....


    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவருக்கும் இருக்கும் ரசனை வேறானது என்ற கருத்துடன் உடன்படுபவர்கள் எனக்கு பிடித்தது உனக்கும் பிடிக்கவேண்டும் என்று தன் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்க மாட்டார்கள். சிலர் அப்படி செய்யும் போதுதான் விவாதம் வளருகிறது.கண்டிப்பாக நீங்கள் அப்படிப்பட்டவர் கிடையாது. ஒரு நடிகனை ஆச்சர்ய கண்களோடு பார்த்த நாட்கள் முடிந்துபோய்விட்டன. எனவே கமலை பிடிக்குமா பிடிக்காதா என்ற கேள்வியே எழ வாய்ப்பில்லை. என்னை பொறுத்தவரை தமிழில் வந்த இரண்டு படங்களை உலகத்தரம் என்று சொல்வேன். ஒன்று ருத்ரையா இயக்கிய அவள் அப்படித்தான். இரண்டாவது மிக முக்கியமான படம்..1954 லில் வந்த அந்த நாள். அந்த படத்தை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அதையும் சிலாகித்து எழுதுங்கள். எஸ் பாலச்சந்தர் ஒரு மேதை என்பதில் சந்தேகமே இல்லை. சிவாஜியின் நடிப்பு ஒரு மகா வியப்பு.

      Delete
  10. காரிகன்..

    "ஹேராம்" படத்திற்கு நேற்று எவ்வளவு ஸ்பான்சர்கள் தெரியுமா?

    கமல் என்ற கலைஞன் சிவாஜி என்ற நடிகனை ஓவர் டேக் செய்துட்டாரே என்ற உங்கள் வயிற்றெரிச்சல் புரிகிறது....

    உங்களை போன்றவர்களை மேலும் புலம்ப வைக்க விரைவில் "விஸ்வரூபம்"

    ReplyDelete

  11. காரிகன்,

    சிவாஜி தன் மிகை நடிப்பை வெளிப்படுத்ததாது இரண்டே இரண்டு படத்தில் தான்....
    1. முதல் மரியாதை
    2. தேவர் மகன்

    ReplyDelete
  12. கமலஹாசனை தனது அடையாளமாக வைத்திருக்கும் ஒரு நபர் கமல் சிவாஜியை மிஞ்சிவிட்டார் என்று சொல்வதில் வியப்பேதும் இல்லை. இன்னும் பத்து வருடங்கள் பின்னே விக்ரம் அல்லது சூர்யா கமலை தாண்டி சென்று விட்டார் என்று சொல்ல ஒரு கூட்டம் வரும். அந்தந்த தலைமுறைக்கான நடிகர்களை உயர்த்தி பேசுவது இயல்பானதுதான். இருந்தும் சிவாஜி-கமல் ஒப்பீடு தவிர்க்க முடியாதது. சிவாஜியை மிஞ்சிவிட்டார் கமல் என்பது ஒரு சராசரி கமல் ரசிகரின் ஆசை அல்லது விருப்பம் என்பதே உண்மை. சிவாஜி தன்னுடைய சிறப்பான நடிப்பை தன் ஆரம்பகால படங்களிலேயே கொடுத்துவிட்டார் என்பதை அவரின் பல படங்களை பார்த்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். அப்படி இல்லாமல் அவர் கடைசியாக நடித்த இரண்டு படங்களை குறிப்பிட்டு அவரின் பெஸ்ட் என்று மதிப்பீடு செய்வது மகா முட்டாள்தனமானது. ஒருவேளை நண்பர் சிவாஜியின் அந்த இரண்டு படங்களை மட்டும்தான் பார்த்திருக்கலாம். இது போன்ற சிறுபிள்ளைதனமான ஒப்பீடுகளை தெரிவித்து உங்கள் மேதாவிலாசத்தை வெளிச்சம் போட்டு காட்டாமல் கமலின் பெஸ்ட் எது என்று லிஸ்ட் போடவும்.அதிலாவது ஏதாவது உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  13. ஜாக்கி,
    பின்னிட்டீங்க .. பெருசு பத்தி சும்மா டக்கரா சொன்னீங்க .

    சண்டியர்,
    நானும் கமல் ரசிகன் தான் ..ஆனாலும் சொல்லுறேன் ..சும்மா தமாசு பண்ணாதீங்க :)

    ReplyDelete
  14. //நான் நடிகர் திலகத்தின் ரசிகன். //
    நானும் .

    ReplyDelete
  15. //கமல் என்ற கலைஞன் சிவாஜி என்ற நடிகனை ஓவர் டேக் செய்துட்டாரே //
    சண்டியர்,
    நானும் கமல் ரசிகன் தான் .ஆனாலும் சொல்லுறேன் ..தமாசு பண்ணாதீங்க.

    முதல் மரியாதைக்கு முன்னால நீங்க படமே பார்த்ததில்லையா ? பராசக்தி -ல இருந்து ஆரம்பிக்கப்பு ..சந்தேகம்ணா உங்க உலக நாயகன் கிட்ட அவரு எப்படி சிவாஜி ரசிகனாராருண்ணு கேட்டுகிங்க

    ReplyDelete
    Replies
    1. ஜோ... நான் குறிப்பிட்டது சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்யாத படங்களை பற்றி....

      Delete
  16. காரிகன், கமல் மேலேயும், உ சி ர மேலேயும் உங்களுக்கு இருக்குற காண்டு புரியுது. ஆனா இவ்வளவு நாள் கழிச்சும், சம்பந்தம் இல்லாம, இங்கேயும் உங்க சொம்பை தூக்கிட்டு வந்து 'தீர்ப்பு' சொல்றது கொஞ்சம் ஓவரு.

    யாருமே பார்க்காத படம் நல்ல படம் இல்லைன்னு சொல்றதுல இருந்தே தெரியுது, உங்க 'அதிமேதாவித்தனம்'. ஒரு வேளை உங்களுக்கு 'கந்தசாமியும்', 'சிறுத்தையும்' காவியங்களா இருந்து இருக்கலாம். அதுக்காக உங்களை மாதிரி உலக அனுபவம் உள்ள மேதைங்க எல்லாம் ஹே ராமை குறை சொன்னா, பாவம் கமல் மாதிரி ஒரு 'வளர்ந்து வர்ற' கலைஞருக்கு எவ்வளவு கஷ்டம்.

    ReplyDelete
  17. Thank you Jackie Sekar for writing about our beloved NT's DeivaMahan. I have enjoyed each of your word describing about NT and Major scene, what a scene and performance. No one is going to overtake NT or not even a single scene from 300+ movies.

    Long live NT fame.

    Cheers,
    Sathish

    ReplyDelete
  18. I also enjoyed kamal movies. but don`t compare with NT.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner