தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்ரீதேவி டாட்டா
காட்டி விட்டு போய் இதோடு 26 வருடங்கள் ஆகின்றன..
. அப்படியே காசி ராமேஸ்வரம்
போவார்ன்னு பார்த்தா திரும்ப நடிக்க வந்து நம்மை கடந்த காலத்தை நினைத்து பார்க்க வைத்து இருக்கின்றார்...
அதே முதுகு, அதே இடுப்பு, கண்கள், ஆப்பரேஷன் செய்த மூக்கு, உடம்பில் வனப்பு
இருந்தாலும், வாய்தான் குரங்கு குசாலா போல் இருக்கின்றது.... காலம் அந்த உடலை சின்னாபின்ன படுத்தி இருப்பதை பார்க்க
முடிகின்றது... சில கனவு தேவதைகளை கைரேகை
அழித்தவள்களையும் வயதாகி பார்க்காமல் இருப்பது நலம்..
குரு படத்தில் எந்தன் கண்ணில் எழுலகங்கள் வராய் கண்ணா வா...
நான் இன்று நானும் இல்லை என்ற பாடலில் புடவை தலைப்பை தவற விட்ட ஸ்ரீதேவி பிளாஷ்
கட்டில் நம் நினைவுக்கு வருவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை..... ஓகே ஜோக்ஸ் அப்பார்ட்....
கடலூர் , திருப்பாபுலியூர் ,செயின்ட் ஜோசப்
பள்ளி .....1990 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் எனது கிளாஸ் டீச்சர் முத்துக்குமாரசாமி ஆங்கில பாடம் நடத்திக்கொண்டு
இருக்கின்றார்.
நான் முதல் நாள்
பார்த்த திரைப்படத்தை நண்பர்களிடம்..சீன்
பை சீன் கதையாக விவரித்துக்கொண்டு இருக்கின்றேன்..
திடிர் என்று இந்த ஆள் என்ன பாடம் நடத்துகின்றார் என்ற கேள்வி ஏழ... பாடத்தை
கவனிக்க ஆரம்பிதேன்... அரைமணிநேரமாக அவர் உணர்ச்சி பூர்வமாய் பாடம் நடத்திக்கொண்டு
இருக்கின்றார்...
ரொம்ப நேரமாக கன்ஜூரர் கன்ஜூரர் என்று சொல்லிக்கொண்டு இருக்க கன்ஜூரர்
என்றால் என்ன? என்ற கேள்வி எனக்கு எழ..எனக்கு
பக்கத்தில் தத்தாத்திரேய பாலமுருகன் என்ற தடிமாடு
உட்கார்ந்து கொண்டு இருந்தது... அதனிடம்
கேட்டு வைத்தேன்.. கன்ஜூரர் என்றால் என்ன என்று? அந்த சனியன் புடிச்சவன் எனக்கு தெரியாது... நீ
வேனா வாத்தியார் கிட்ட கேளு என்றான்....
அந்த நாயிக்கு தெரியும்... என்னை மாட்டி விடனும் இல்லை...
கொஞ்சம் கூட
நான் யோசிக்கலை... சட்டுன்னு எழுந்து
அரைமணி நேரம் தொண்டை தண்ணி வத்த
பாடம் நடத்திய மனுஷன் கிட்ட... சார் கன்ஜூரர் என்றால் என்ன? என்றேன்..ஹங்.... உங்க
அப்பன்... என்றார்... அதாவது கன்ஜூரர் என்பவன் ஒரு மோடி வித்தைக்காரன் அவன் ஒரு கிராமத்துக்கு
வருகின்றான் என்று அந்த கதை போகும் .. அரைமணி
நேரமாக பாடம் நடத்தியவரிடம் இப்படி ஒரு
கேள்வியை கேட்டு வைத்தால்...?
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஆங்கிலத்தில்
42 மதிப்பெண்கள் பெற்று உலக சாதனை
நிகழ்த்தினேன்.
ஓத்தா இந்த
இங்கிலிசை கண்டு பிடிச்சவன் மட்டும் என் கையில கிடைச்சான் ....பருப்பு
பரதநாட்டியம் ஆடற அளவுக்கு உதைக்கனும்டா என்று பேசி இருக்கின்றோம்....
எந்த தேவிடியா பையன் இந்த ஆங்கிலத்தை
கண்டுடிபிடிச்சான் என்று திட்டாத குறையாக அந்த
தேர்வுக்கு போனாலே பயம் பிடிங்கி தின்னும், எப்படா பெல் அடிக்கும் பெப்பரை
கட்டிக்கொடுத்து எஸ்கேப் ஆகலாம் என்று தான்
மனது நினைக்கும்...
bat எனக்கு மூன்றாம் வகுப்பில்
தான் எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது..
அப்படியான ஒரு பள்ளியில்தான் நான் படித்தேன்...
ஆனால் இன்றைக்கு
ஆங்கிலம் என்னை மிரளவைக்கவில்லை...
அக்ஷ்ன் மற்றும் செக்ஸ் காட்சிகளுக்காக ஆங்கிலம் படம் பார்த்து ஆங்கிலம் புரிந்து
கொள்ள முடிந்தது... ஆனால் பேச தெரியாது... பேச சொன்னால் கை கால் எல்லாம் நடுக்கும்... அந்த பயத்தை போக்கியது
எனது காதலியான என் மனைவிதான்..... என்னிடத்தில்
ஆங்கிலத்தில் நிறைய பேசவாள்... அவளுக்கு இரண்டு விதமான ஆக்சென்ட் தெரியும்..யூ எஸ் இங்கிலிஷ்
மற்றும் யூகே இங்கிலிஷ்...ஒரு போதும் என்னை டிஸ்கரேஜ் செய்தது இல்லை...
பேச பேசதான்
ஆங்கிலம் வர ஆரம்பித்தது...கல்லூரியில் பாடம் எடுத்த போது ஆங்கிலம் பிடிபட்டது... .இன்று எனது பிளாக்கில் 300 திரைப்படங்களுக்கு
மேல் உலகபடங்கள் எழுதி இருக்கின்றேன்...ஆங்கில படங்கள் எழுதி இருக்கின்றேன்....
ஆனால் எட்டாம்வகுப்பு படிக்க்கும் போது
துளுக்க சமாதி மோட்டர் கொட்டகையில் எனது
பால்ய நண்பன் லஷ்மி நாராயணன் ஒரு மரத்தில் இரண்டு பறைவைகள் உட்கார்ந்து இருப்பதாக ஒரு படம் வரைந்தான்...
ஒரு பறவை ஐ லவ்யூ என்று
சொல்லியது... மற்றது ஜ லைக்யூ என்று சொல்வதாக படம் வரைந்தான்.. எனக்கு
ஐலவ்யூவுக்கு அர்த்தம் தெரிகின்றது..காரணம் பால்யகாலம் முதல் தமிழ் சினிமா அதைதான் ஸ்பஷ்ட்மாக கற்றுக்கொடுத்தது... ஐ லைக்யூ என்றால் என்ன என்று எனக்கு
தெரியவில்லை... இதுதான் என் நிலைமை....ஆனால் இன்று சப்டைட்டிலோ, இல்லாமலோ ஆங்கில
படங்களை பார்த்து புரிந்துகொள்ள முடிகின்றது...
சாட்டை படத்துல ஒரு டயலாக் வரும்....258 மொழிங்க
அழிஞ்சி போறதுக்கு காரணம்... இந்த ஆங்கில மொழிதான்...ஆனா உலகத்துல போட்டி போட அதை
கத்துக்கறதை தவிர வேற வழியில்லை....
ஆங்கிலம் ஒரு
மொழிதான் .. ஆனா அதுக்கு தென் இந்தியாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவம்
இருக்கே.... யப்பா சாமி.... பட்...ஊர் ஓடும் போது நாமும் ஓட வேண்டும் எனபது
பழ மொழி.... அதனால் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளுங்கள்... அது ஒரு மொழி
அவ்வளவே... பயம் வேண்டாம்... என்னோட அடுத்த
எய்ம்.. ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதவேண்டும்...தொடர்ச்சியாக ஆஸ் அயம்
சபரிங் பிரம் பீவர் என்ற வரிகளோடே எனது ஆங்கிலம் நொண்டி அடித்துக்கொண்டு இருப்பதை
என்னவென்று சொல்ல...
ஆங்கிலம்
தெரியாமல் ஒரு குடும்பதலைவி படும் பாட்டை மிக சுவாரஸ்யமாக விவரிக்கின்றது இந்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படம்..
ஆங்கிலம்எனக்கெல்லாம்
எட்டிக்காய் கசப்புதான்...35லிருந்து 41 எண்ணுக்குள் ஏதாவது ஒரு எண் தான்
ஆங்கிலத்தில் எனது மார்க்...
===========
English Vinglish-2012 படத்தின்ன் ஒன்லைன் என்ன?
ஆங்கிலம்
தெரியாத காரணத்தால் ஒரு குடும்ப தலைவி சந்திக்கும் பிரச்சனைதான் படத்தோட ஒன்லைன்.
==========
English Vinglish-2012 படத்தோட கதை என்ன?
ஸ்ரீதேவி (சசி)
இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா....
அன்பான கணவன், களிவான மாமியார் என்று திருப்பதி ஏழுமலையான் எந்த குறையும்
வைக்கவில்லை என்றாலும்.. சின்ன குறையாக அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற குறையை வைத்து விட்டான்...
பசங்க ஆங்கிலத்தில் பின்னி எடுக்குதுங்க.... புருசன் பீட்டர்தான்... பட் நம்ம
ஸ்ரீதேவிக்கு சுட்டு போட்டாலும் ஆங்கிலம் வரலை.. அவுங்க எப்படி ஆங்கிலம் கத்துகிட்டு ஜெயிச்சாங்க என்பதுதான்
படத்தோட கதை...
============
படத்தின் சுவாரஸ்யங்களில்
சில...
கேர்ள்ஸ் திங்
என்பது எந்த ஆனாலும் எளிதில் கண்டுகொள்ள
முடியாதது.... அதனால் தான் பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆள் இல்லை என்று ரட்சகன் படத்தில் வைரமுத்து சோனியா
சோனியா சாங்கில் ஒரு வரி எழுதி இருப்பார்....
பெண்மனது என்பது ஒரு ஆழ் கடல்... என்ன கொட்டிக்கிடக்கின்றது என்பது எவருக்கும்
தெரியாது.. ஆனாவ் பெண்ணை கொஞ்சம் மரியதையாய் நடத்தி விட்டால் போதும் அவள் அந்த ஆணை
தூக்கி தட்டாமாலை சுற்றுவாள்...
என்னதான் அன்னியோன்ய மயிரான புருசன் பொண்டாட்டியா இருந்தாலும், முழுசா
பொம்பளைய புருஞ்சிகிட்டேன் என்று எவனாலயும்
சொல்ல முடியாது...ஒரு அசெம்ஷன்தான் சொல்ல முடியும்... காரணம்.. பெண்கள் மிக
அதிக ரகசியங்களை தன்னுள் புதைத்து வைப்பவர்கள்..
பெண்கள்
இயக்கிய எல்லா படங்களும் பொதுவாக பில் குட் டைப் படங்களாகவே இந்திய சினிமாவில்
இருக்கின்றன...
இந்திரா...லவ் போர்ஷன் நன்றாக இருக்கும்...
கண்டநாள்
முதல்.... பிரியா, அமிர்கான் ஒய்ப் இயக்கிய
டோபிகாட்,இப்ப பாஸ்கி ஒய்ப் கவுரி ஷின்டே இயக்கிய இங்கிலிஸ் விங்கிலிஷ் என
வரிசையாக சொல்லிக்கொண்டு போகலாம்..
மைக்கேல்
ஜாக்சன் போல ஆடும் ஸ்ரீதேவி கேரக்டர் ஆச்சர்யபட வைக்கின்றது...லட்டு
பக்குவமாக பிடிக்கும் அந்த விரல்களை
பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.. அவ்வளவு அழகு..
பசங்க ஆங்கிலம் தெரியவில்லை என்று ஸ்ரீதேவியை
நக்கல் விடும் இடங்களில் மிக சிறப்பாக செய்து இருக்கின்றார்..
சின்ன பையன் ஸ்ரீதேவியிடம், அம்மா அக்கா சின்ன
ஸ்கர்ட் போட்டு காபி ஷாப் போய் இருக்குறா.... என்று சொல்லும் போது அதுவும் பாய்சோடு போய் இருக்கா
என்றதும் லக்கி பாய்ஸ் என்று சொல்வது மிக அழகு... இனி எதிர்காலத்தில் அப்படித்தான் அனுகவேண்டி
இருக்கும்...
அஜித் சின்ன
ரோலில் வந்தாலும் நிறைவாக
இருக்கின்றார்...ஒரு ஷாட்டில் அஜித்துக்கு வயதானது போலவும்... ஸ்ரீதேவி இன்னும்
இளமையாக இருப்பது போலவும் தோன்றுகின்றது...ச்சே.... நான் வாசன் ஐ கேருக்கு போக வேண்டும்.....
அமெரிக்காவில்
ஆங்கிலம் கற்றுக்கொள்ள போகும் இடத்தில்
கிடைக்கும் நண்பர்கள் செய்யும் கூத்துகள் சரவெடி.... முக்கியமாக ரஜினி ரசிகனாக
வரும்... ராமூர்த்தி கேரக்டர் செமை..
பிரியா ஆனந்த
கொடுத்த வேலையை சிறப்பாக செய்து
இருக்கின்றார்... ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் டேவிட்....அற்புதமான கேரக்டர்..
மொட்டை
மாடியில் விழப்போகம் ஸ்ரீதேவியை தாங்கி பிடிக்கும் பிரெஞ் சமையல்காரன் மீது காதல் அரும்பினாலும், தான் ஒரு
குடும்ப பெண்மணி என்பதை நினைத்து சட்டென
உதறி போட்டு ஓடுவதும் இந்திய செண்டிமென்ட்... ஆங்கில மற்றும் ஜரோப்பிய படமாக இருந்தால் அவனோடு செக்ஸ் வைத்துக்கொண்டு இருப்பாள்... இவ்வளவுநாட்கள்
குத்தி கிழித்த மனவேதனைக்கு அந்த
செக்ஸ் தீர்வாக இருந்து இருக்கும்...
அதுதான் நிதர்சனம்.. பட் இது திரைப்படம்... அதுவும் இந்திய படம்... பட் பிரியா ஆனந்திடம் ஸ்ரீதேவி சொல்லும் அந்த வசனம்
ஓகே..எனக்கு காதல் வேண்டாம்... மரியாதைதான் வேண்டும்... என்ற டயலாக் ஆப்ட்டாக
இருக்கின்றது...
அது மட்டும் அல்லாமல் ரொம்ப நாள் கழிச்சி என்னை உணரவச்சதுக்கு நன்றி என்று அவனக்கு ஸ்ரீதேவி நன்றி சொல்லும் இடம் அருமை.. மெச்சூர்ட் கேரக்டர்....
கணவன் தன் மனைவிக்கு ஆங்கிலம் தெரியாது என்று
பொது இடத்தில் சொல்லும் போது அவன் கை
பிடித்து இழுத்து மே ஐ என்று சொல்லும்
அந்த இடமும் அதன் பின் ஸ்ரீதேவி விஷ்
பண்ணும் டயலாக்குகள் மற்றும் நடிப்பு
அற்புதம்...
பொது இடத்தில்
அலுவலக பெண்ணை கட்டி பிடிக்கும் காட்சிக்கு ஸ்ரீதேவி தரும் பதில் சாட்டையடி...ஏர்போர்ட்டில் கட்டி பிடிக்க கணவன் வருகையில் விலகி போகும் ஸ்ரீதேவி கேரக்டர்
மூலம் முரண்பாடான இந்திய பெண்கள் வாழ்க்கை முறையை மிக அழகாக சொல்லி
இருக்கின்றார்... இயக்குனர் கவுரி ஷின்டே.
சித்தி நீ லட்டு பிடிக்க மட்டும் பொறக்கலை என்று சாட்டையடி வசனங்கள் படம் முழுக்க விரவி கிடக்கின்றன..
அமெரிக்காவை நன்றாக பிரித்து மேய்ந்து இருக்கின்றார்கள்..ஒளிப்பதிவு அருமை.. பாடல்கள் அப்படி ஒன்றும் சொல்க்கொள்வது போல இல்லை.,
அது என்ன இந்தியாவுக்கு மட்டும் சாதாவா சொல்லனும்.... அமெரிக்காவுக்கு மட்டும் த அமெரிக்கா என்று சொல்லனும் என்று வாரும் இடம் அழகோ அழகு... அதை மற்ற நாட்டவர் பாராட்டும் இடம் சூப்பர்...
ஸ்ரீதேவிக்கு விருது நிச்சயம்....
டோரண்டோ உலகபடவிழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றது குறிப்பிடதக்கது..
===========
படத்தின்
டிரைலர்.
==========
படக்குழுவினர்
விபரம்.
Directed by Gauri Shinde
Produced by Sunil Lulla
R. Balki
Rakesh Jhunjhunwala
R. K. Damani
Screenplay by Gauri Shinde
Story by Gauri Shinde
Starring
Sridevi
Mehdi Nebbou
Priya Anand
Adil Hussain
Music by Amit Trivedi
Cinematography Laxman Utekar
Editing by Hemanti Sarkar
Studio Hope Productions
IBC Spotlight
Distributed by Eros International
IBC Motion Pictures
Release date(s)
14 September 2012 (Toronto Film Festival)
5 October 2012 (India)
Running time 129 minutes
Country India
Language Hindi(Original)
Tamil(Original)
Telugu
==============
பைனல் கிக்...
ஆங்கிலம்
தெரியாமல் தட்டி தடுமாறிதான் பெரும்பாலோனோர் வந்து இருப்போம்... அவ்வளவு ஏன் எங்க
தலைவர் ஜாக்கி ஹாலிவுட் படத்துல நடிக்க சொல்ல இந்த ஆங்கிலம் அவரை என்னமாய் படுத்து
எடுத்துச்சி தெரியுமா-? இது ஒரு யூனிவர்சல் பிரச்சனை.. அதனால் எந்த ஊர்ல இந்த படத்தை போட்டாலும் நல்லா கல்லா கட்டும்... அதுக்கு ஏத்தது போல
செண்டிமென்ட் தூவல்கள் படம் நெடுக இருக்கின்றது.முக்கியமாக உங்கள் பிள்ளைகளை அழைத்து சென்று
காட்டுங்கள்... அப்படி ஒரு நல்ல திரைப்படம் இது.... இந்த படம் பார்த்தே
தீரவேண்டிய பில் குட் மூவி..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
சிறப்பான விமர்சனம் ஜாக்கி.
ReplyDeleteஸ்ரீ....
ReplyDelete"சில கனவு தேவதைகளை கைரேகை அழித்தவள்களையும் வயதாகி பார்க்காமல் இருப்பது நலம்.."
Supper.....Lines.....
ReplyDelete"சில கனவு தேவதைகளை கைரேகை அழித்தவள்களையும் வயதாகி பார்க்காமல் இருப்பது நலம்.. "
sir...me also frm cuddalore,thirupadiripuliyur...
ReplyDeleteஅண்ணே விமர்சனம் அருமை அதைவிட உங்கள் ஆங்கில அனுபவம் மிகவும் அருமை கலக்கிட்டிங்க போங்க
ReplyDeleteபத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஆங்கிலத்தில் 42 மதிப்பெண்கள் பெற்று உலக சாதனை நிகழ்த்தினேன்.
correct ta
அடியேனும் ஸ்ரீதேவியின் பரமவிசிறி! உங்க விமர்சனத்தையும் வாசித்து விட்டேன். அடுத்துப் பார்த்து விட வேண்டியதுதான்!
ReplyDeleteexcellent review movie superb
ReplyDeleteசில கனவு தேவதைகளை கைரேகை அழித்தவள்களையும் வயதாகி பார்க்காமல் இருப்பது நலம்.. What is this Sir.....?
ReplyDeleteGud review Jackie
ReplyDeleteGud review Jackie
ReplyDeleteவிமர்சனம் அருமை ஜாக்கி.
ReplyDelete//அக்ஷ்ன் மற்றும் செக்ஸ் காட்சிகளுக்காக ஆங்கிலம் படம் பார்த்து ஆங்கிலம் புரிந்து கொள்ள முடிந்தது//
இதே காரணங்களுக்காக படம் பார்த்து என்னால் முக்கல் முனகல்களை மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. உங்களுக்கு கற்பூர புத்தி போல. எனக்கு அந்த கொடுப்பினை இல்லை.
balki's wife direction not a baski
ReplyDeleteஜாக்கி, நல்ல ரிவ்யூ. நீங்க கம்மியன்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளியில் படிச்சீங்களா..ஆமாம்னா நான் உங்களோட ஸ்கூல் ஜூனியர். கலக்கறீங்க சீனியர்.
ReplyDelete