Premium Rush-2012/பிரிமியம் ரஷ்...ஆக்ஷன் சரவெடி.
சென்னை அண்ணாசாலையில் சைக்கிளை  ஓட்டுவது என்றால்  கொள்ளை பிரியம்..
.நெய்வேலியில் சைக்கிள் ஓட்டுவதும்  எனக்கு ரொம்ப பிடிக்கும் பாண்டிச்சேரியில் சைக்கிள்  ஓட்டுவது கூட ஓகே... ஆனால் எங்கள் ஊர் கடலூரில்  சைக்கிள் ஓட்டுவது என்றால் ஓக்காலிக்கும்... உவ்வே...  அப்படி பட்ட சாலைகள்...சென்னையில் எனத சைக்கிள் தென் சென்னையில் சுற்றாத தெருக்களே இல்லை....வளசரவாக்கம் திருநகர் அனெக்சில் இருந்து மோட்சம் தியேட்டருக்கு  வாரத்தில் இரண்டு நாட்கள்  செகன்ட் ஷோ போய் விட்டு வருவேன்... அதே போல தேவி , சந்தியம் காசினோ, எல்லா இடங்களுக்கும் சைக்கிள்தான்...ஆனால் மழையில்  தமிழகத்தில் சைக்கிள் ஓட்டுவது அபாயகரமான விஷயம்தான்...


சென்னையில் முதல் முறையாக வந்து  கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் போது, தினத்தநதியில்  ஆட்கள் தேவை பக்கத்தை புரட்டுகையில்... அவ்வப்போது  கூரியர் வேலைக்கு ஆட்கள் தேவை என்கின்ற வியம்பரங்கள் அடிக்கடி கண்ணில்  தென்படும். ஆனால் கூரியர் வேலைக்கு கண்டிப்பாக  சைக்கிள் தேவை என்று சொல்லிவிட்டார்கள்.. ஆனால் என்னிடம்  அப்போது சைக்கிள் இல்லை... சைக்கிள்  இருந்து இருந்தால் கண்டிப்பாக  கூரியர் பாய் ஆகி இருப்பேன்...நியூயார்க்  நகரம் வாகன போக்குவரத்தில் நிரம்பி வழியும் நகரம்... வெகு விரைவாக தபால் பட்டுவாடக்கள்  செய்ய  சைக்கிள்வாலாக்களையே கூரியர் நிறுவனங்கள் பெரிதும் நம்பி இருக்கின்றார்கள்...  அப்படி ஒரு கூரியர்  நிறுவனத்தில் சைக்கிள்வாலாவாக  வேலை செய்யும் ஒருவனின் வாழ்வில்  நடக்கும்.... ஒன்றரை மணிநேரப்போராட்டம்தான் இந்த படம்...
=================

Premium Rush-2012/பிரிமியம் ரஷ்... படத்தின்  ஒன்லைன்....


தினம்  கூரியர் டெலிவரி செய்பவன் வாழ்வில் ஒன்றரை மணிநேர போராட்டம்தான் படத்தின் ஒன்லைன்.


===============


Premium Rush-2012/பிரிமியம் ரஷ்... படத்தின்  கதை என்ன?


Joseph Gordon-Levitt (Wilee) நியூயார்க்கில் இயங்கும் ஒரு  கூரியர் நிறுவனத்தின் டேலிவர் பாய்....கையில காசு வாயில தோசை கணக்கா... அவசரத்துக்கு ஏற்றது  போல சார்ஜ் வாங்கிக்கொள்வான்.... அவனது எக்ஸ் கேர்ள்பிரண்ட் Dania Ramirez (Vanessa) அறையில் ஒரு சைனிஸ் ரூம் மெட் இருக்கின்றாள்... அவள் இரண்டு வருடம் அமெரிக்காவில் சேமித்து வைத்த பணத்தை வைத்து தனது தாயையும் மகனையும் அமெரிக்காவுக்கு அழைத்து  வர ஒரு ஹவாலா குருப்பிடம் பணம் கொடுக்கின்றாள்... அவள்  பணம் கட்டியதுக்கு அத்தாட்சியாக ஒரு  சின்ன டிக்கெட் கொடுக்கப்படுகின்றது.. அந்த சீட்டை  சிஸ்டர் சான் என்பளிடம் கொடுக்க வேண்டும்... 


அந்த டிக்கெட் பார்த்து  சரி பார்த்து விட்டு சிஸ்டர் சான்  சைனாவுக்கு போன்  செய்து,  அவள் ஏஜென்டிடம் சொன்னால்தான்....அவளது தாயையும் மகனையும் கப்பலில் அமெரிக்கா வர அனுமதிப்பார்கள்... கப்பல் சைனாவில் புறப்பட தயாராக இருக்கின்றது.. 


ஒன்றரை மணி நேரத்தில் சிஸ்டர் சானிடம் டிக்கெட் சேர்ப்பிக்க பட வேண்டும்... அவள் கூரியர் நிறுவனத்துக்கு கால் செய்து அந்த டிக்கெட்டையும் அட்ரசையும் கொடுக்கின்றாள்... ஜோசப்  அந்த டிக்கெட்டை ஒன்றரை மணி  நேரத்தில் நியூயார் நகர தெரக்களில் சைக்கிளில் பயணித்து  சிஸ்டர் சானிடம் அந்த  டிக்கெட்டை கொடுக்க வேண்டும்.ஆனால் அந்த டிக்கெட்டை அபகரிக்க  சூதாட்டதில் அடிக்ட் ஆன போலிஸ்  ஆபிசர்  துரத்துகின்றான்.... அந்த டிக்கெட் உரியவரிடம் சரியான   நேரத்தில் போய் சேர்ந்த்தா? அந்த போலிஸ் ஆபிசர் என் அந்த டிக்கெட்டை பிடுங்க துரத்துகின்றான் போன் கேள்விகளுக்கு தியேட்டரில் படத்தை பார்த்து விடை தெரிந்துக்கொள்ளுங்கள்..


===================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
2000 ஆம் ஆண்டு சைக்கிலாஜிக்கல் ஹாரர் பிலிமான சீக்ரேட் வின்டோவ் திரைபடத்தை இயக்கிய இயக்குனர் David Koepp  செம பார்மில் இந்த படத்தை இயக்கி இருக்கின்றார். கண்டிப்பாக அவசியம் சீக்ரேட் வின்டோ  பாருங்கள்.... சான்சே இல்லாத சஸ்பென்ஸ்  திரில்லர்  அந்த திரைப்படம்... ஜானிடெப் எழுத்தாளராக நடித்து இருப்பார்.... டோண்ட் மிஸ்  இட்.


கூரியர் பாயாக Joseph Gordon-Levitt பின்னி இருக்கின்றார்... நியூயார் நகர தெருக்களில் சைக்கிள் பரபரக்கும் காட்சிகள் அற்புதமாக எடுத்து இருக்கின்றார்....2010  ஆக்ஸ்ட் ஒன்னாம் தேதி Joseph Gordon-Levitt  நேரம் சரியில்லை போலும்...    படப்பிடிப்பில் உண்மையிலேயே ஒரு டாக்சியில் பின் பக்கம்   மோதி வின்ஷில்ட்  உடைந்து 31 தையல்கள் கையில் போட்டு அதன் பின் தேறி படப்பிடிப்பில் கலந்து கொண்டு இந்த படத்தை நடித்து முடித்தார்..


நியூயார்க்கில் படபிடிப்பு அதுவும் பிசியான சாலைகளில் நடத்துவது  சாதாரண காரியம் அல்ல...ஆனால் மிக அற்புதமாக நடத்தி  இருக்கின்றார்கள்...


படத்தில் கண்டிநுட்டி  என்பது ரொம்ப முக்கியம்....ஹேர் ஸ்டைலில் இருந்து காதில் போட்டு இருக்கும் சின்ன  ஸ்டட் வரை  அசிஸ்டென்ட் டைரக்டர்கள் குறிப்பு எடுப்பார்கள்...ஆனால் இதில் நாயகி Dania Ramirez ரூபத்தில்  கண்டினுட்டி மிஸ் ஆகி இருக்கின்றது.. ஒரு பிரா அதன் மேல் சின்ன சிலிப் போட்டு கூரியர் உமனாக நடித்து இருக்கின்றார்....ஒரு சில ஷாட்டுகளில் மார்பு காம்புகள் விடைத்தும் வெளியே தெரிகின்றன... ஒரே சீனின்  அடுத்த ஷாட்டுகளில் சாதாரணமாகவும்  இருக்கின்றன..  இதை எந்த அசிஸ்டென்ட் டைரக்டராலேயும் எதுவும்  செய்ய முடியாது...  பொதுவாக  வேர்த்தது போல காட்ட அவருக்கு ஸ்பிரே அடிக்கும் போது உடம்பு சிலிர்த்து  இப்படி நிகழ வாய்ப்புகள் மிக அதிகம்.....  


 இந்த படத்தின் பெரிய பலம் கேமராமேன் Mitchell Amundsen மற்றும் எடிட்டர்Derek Ambrosi படத்துக்கு பில்லர் என்று கூட சொல்ல்லாம்... மிக அழகான  காட்சி படுத்தி சரியாக கத்திரித்து பரபரப்பாக்கி இருக்கின்றார்கள்...

ஸ்பீட் மற்றும் செல்லுலர் படத்துக்கு பிறகு  பர பர திரைக்கதை கொண்ட படத்தை பார்க்கும் காரணத்தால் இந்த படம் உங்களை கட்டிப்போடும்....

சிக்னலில் எந்த பக்கம் போனால் என்ன ஆகும் என்று கற்பனையில் கணக்கு போட்டு சைக்கிள் ஓட்டும் இடங்கள் மிக அருமை...

அந்த  அளவுக்கு சின்ன வீல் ரிம் கொண்ட சைக்கிள்கள் நம்ம ஊர் ரோட்டில் போனால்  அரை கிலோ மீட்டரிலேயே பென்ட் ஆகி விடும்.
.
உலகம் எங்கும் இந்த படம் வசூலை வாரிக்குவித்துக்கொண்டு இருக்கின்றது...

=============
படத்தின் டிரைலர்..


===============
படக்குழுவினர் விபரம்...

Directed by David Koepp
Produced by Gavin Polone
Written by David Koepp
John Kamps
Starring Joseph Gordon-Levitt
Michael Shannon
Aaron Tveit
Dania Ramirez
Music by David Sardy
Cinematography Mitchell Amundsen
Editing by Derek Ambrosi
Jill Savitt[3]
Distributed by Columbia Pictures
Release date(s)
August 24, 2012
Running time 91 minutes
Country United States
Language English
Budget $35 million
Box office $28,056,620


================
தியேட்டர் டிஸ்கி..

மகளீர் மட்டும் படத்துக்கு பிறகு சென்னை தேவி பாலா தியேட்டருக்கு சென்றேன்.. நடந்து போகும் போதே நம்  நிழல் திரையில் விழுந்து தொலைக்கின்றது.. எதிரில் உட்கார்ந்து இருப்பவன் தலை மறைக்கின்றது... என்ன சீட் அரேஞ் மென்ட்டோ...கருமம்.. ஒன்னு சீட்டை டவுன் பண்ணுங்க.. இல்லை ஸ்கீரினை மேல ஏத்தி  வைங்க..
எனக்கு பின்னால்   உட்கார்ந்து  இருந்த பெண் எக்ஸ்கியூஸ் உங்க தலை எனக்கு மறைக்குது என்று தொடர்ந்து இம்சை கொடுக்க.. திரைக்கு  முன்னால் ஆறாவது  ரோவில் போய் உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தேன்...
கார்த்தி டெங்கு ஒழிப்பு அரசு விளம்பரத்தில்  கொசுவை  ஒழிக்க வழி சொன்னார்...

================
பைனல் கிக்
பரபரப்பான இந்த திரைக்கதைக்காக  இந்த படம் பார்த்தே தீரவேண்டிய  திரைப்படம்.. நடுவில்  சின்னதாக போர் அடிப்பது போன்ற  சின்ன பிரம்மை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.. நிறைய சைக்கிள் சேசையே காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள் என்ற அயர்ச்சி ஏற்படுகின்றது.. அதுவும் லைட்டாக...குடும்பத்தோடு பார்த்து இந்த படத்தை என்ஜாய் செய்யலாம்... முடிவில் அந்த சைனிஸ்  சின்ன பையன் மழையில் நிற்கும் காட்சியில் நம் மனம் நெகிழுகின்றது....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. //பொதுவாக வேர்த்தது போல காட்ட அவருக்கு ஸ்பிரே அடிக்கும் போது உடம்பு சிலிர்த்து இப்படி நிகழ வாய்ப்புகள் மிக அதிகம்..... // அட அட அட ... என்ன ஒரு கண்டுபிடிப்பு ,, என்ன ஒரு ஒரு நுணுக்கமான ஆய்வு...ஆஹா ஓஹோ ...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner