காதலுக்கு பொய் அழகு....
ஆனால் எனக்கு அழகாக பொய்
சொல்ல தெரியாது... ஒரு முறை பொய் சொல்லி செமையாக மாட்டிக்கொண்டு பேய் முழி
முழித்து இருக்கின்றேன்... பாண்டி பார்டர் கன்னியக்கோயலில் பியர் சாப்பிட்டு
விட்டு கடலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தேன்..
செல்போனில்....எங்க இருக்க? என்றாள்....
நான் திருவந்திபுரம் பஸ் ஏறிட்டேன் என்று சொன்னேன்... பத்து நிமிடம் பேசி
இருப்பாள்.... எந்த பஸ்ல இருக்க? நம்ம எஸ்விஎம்எஸ்லதான்... என்றேன்...யோவ்
எத்தனை வருஷம் நான் ஸ்கூலுக்கு அந்த பஸ்ல
போய் இருப்பேன்... பத்து செகன்ட்டுக்கு ஒரு ஸ்டாப்பு வரும்... ரெண்டு செக்கர்
இருப்பான் ,பட்டாணி கடை,கேர்ள்ஸ் ஹைஸ்கூல், பெருமாக்கோவில், எந்த ஸ்டாப்பு பேரும்
சொல்லலை....வாழ் வாழ்ன்னு கத்திக்கிட்டே இருப்பானுங்க.. ரெண்டு செக்கரும்
திடிர்ன்னு ஊமையாகிட்டானுங்களா? என்று கிடுக்கி கேள்வி கேட்டு வைக்க.. எனக்கு அடித்த பியர் எல்லாம் வியர்வையாக
வெளிவந்து ஆவியாகி போனது...
அதில் இருந்து அவளிடம் பெரிய பொய்கள்
சொல்லியதில்லை... அப்படியே சொன்னாலும் லாஜிக்கோடு எதிர்கேள்வி கேட்டால் அதுக்கு நான்கு
பதில்கள் தயாரித்து எனக்கு நானே பேசி அதன் பிறகே அந்த பொக்ளை அவிழ்த்து விட்டு
இருக்கின்றேன்.
சில தினங்களுக்கு முன் பழைய கதைகள்
பேசிக்கொண்டு இருந்த போது... நான் சொன்னதில் மொக்கையாக இருந்தாலும் நீ ரொம்ப ரசிச்ச விஷயம் என்ன என்று என் மனைவியிடம் கேட்டேன்......?
நாம ரெண்டு பேரும் எஸ்விஎம்எஸ் பஸ்ல இருக்கோம்...
வழக்கமா... அந்த பஸ் செமை கூட்டமாஇருக்கும் ஆனா நம்ம நேரம் கூட்டம் ரொம்ப கம்மியா
இருந்திச்சி... திருவந்திபுரம் கோவிலுக்கு போய்கிட்டு இருக்கோம்... எந்த பயமும்
இல்லாம என் பக்கத்துல வந்து நீ உட்கார்ந்துட்டே...எனக்கும்
எங்க இருந்து குருட்டு தைரியம் வந்துச்சின்னு தெரியலை... நான் எதுவும் பேசலை....
பாதிரிக்குப்பம் பஸ் ஸடாப்புல பத்து பேர்
எறங்கிட்டாங்க... மிச்ச பேரு பேட்டை ஸ்டாப்புல இறங்கிட்டாங்க..நீயும் நான்
மட்டும்தான் பஸ்ல.... நான் கேட்டேன்..? என்ன பஸ்ல யாரையும் காணோம்
என்றேன்...அதுக்கு நீ சொன்ன....நான்
என் லவ்வரோட பஸ்ல வந்துகிட்டு
இருக்கேன்... எந்த பய புள்ளையும் பஸ்ல எறக்கூடாதுன்னு உத்தரவு போட்டு இருக்கேன்னு சொன்னே.... நீ
சொன்னது செமை மொக்கையா இருந்தாலும் அன்னைக்கு
என்னவோ நீ அதை சொன்னப்ப ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி என்றாள்....
நானே அந்த சீனை ரீவைன்ட் பண்ணி பார்த்தேன்... செமையா உளறி
இருக்கேன்...ஆனா அதை இன்னும் எங்க வீட்டம்மா மறக்கலை... காதலுக்கு
இன்டெலக்சுவல், மெச்சூரிட்டி போன்ற
விஷயங்கள் எல்லா இடத்திலும் ஒர்க் அவுட் ஆகாது... சில இடங்களில் மானே தேனே பொன்மானேன்னு
சொல்லறது தப்பில்லை... 12 வருஷம் கழிச்சியும் அந்த மொக்கை சீனை மறக்காம
நினைவில் வைத்து இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்...அதனாலதான் சொல்லறேன்.. காதலுக்கு
பொய் அழகு....
வாழ்வில் சில முக்கிய தினங்களை எளிதில் யாரும்
மறந்து விடுவதில்லை.வருடத்தில் 365 தினங்களில், எல்லா நாட்களையும் நாம் நினைவில்
வைத்துக்கொள்வதில்லை ... ஆனால் ஒரு சில நாட்கள் மிக முக்கியமானவை.... எத்தனை
வருடங்கள் ஆனாலும் அந்த குறிப்பிட்ட தேதி
வரும் போது மனது உற்சாகமாக மாறிப்போகின்றது... அன்று நடந்த நிகழ்வுகளை பின்னோக்கி
மனது அசைபோட்டுப்பார்க்கின்றது......
இன்று
எங்களுக்கு திருமணநாள்....வழக்கம்
போல வருடா வருடம் மறக்காமல் வாழ்த்தும் அனைத்து நண்பர்களுக்கும் என்
நன்றிகள்...முக்கியமாக வருடா வருடம் காலையில் போன் செய்து வாழ்த்து சொல்லும்...பாளையங்கோட்டை அரசு பேருந்து
பணிமனையில் பணிபுரியும் வீரபாகு ராமலிங்கம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
போனவருடம் எழுதிய போஸ்ட்டை படித்தேன்...
எனக்கே சிரிப்பாக வந்தது.... வண்டியை
போட்டு விட்டு இறங்கியதும் அவன் ஓடிய
ஓட்டம் நினைவுக்கு வந்து சிரிப்பை தந்தது.. அதை வாசிக்க இங்கே கிளிக்கவும்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
உங்கள் இருவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய மணநாள் வாழ்த்துக்கள் சேகர்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மச்சி
ReplyDeleteஇன்றுபோல் என்றும் நலமாய் வாழ வாழ்த்துகள் ஜாக்கி.
ReplyDeleteHAPPY WISHES SIR
ReplyDeleteநன்றி, லக்கி, பாலா, வடிவேலன்
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி.. ட்ரீட் உண்டா இல்லையா என்பதை தனிமடலில் சொல்லவும்
ReplyDeleteமணநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள். எப்பவும் மகிழ்ச்சியோடு இருங்க .
ReplyDeleteஇன்று போல் என்றும் நலமாய் வாழ என் உளங்கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteஇன்று போல் என்றும் நலமாய் வாழ என் உளங்கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி :-)
ReplyDeletevazthukkal Jackie anna.....
ReplyDeletevazthukkal Jackie Anna....
ReplyDeleteஇன்றுபோல் என்றும் நலமாய் வாழ வாழ்த்துகள்!!
ReplyDeleteWishing you all the best and a best of the moments of happiness
ReplyDeleteஅன்பின் ஜாக்கி!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள்!!!
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் மச்சி
ReplyDeletevaazhthukkal jackei..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா:-)
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா !!
ReplyDeleteநானும் உங்க ஊரு (கடலூர் )
பொண்ணைதான் கல்யாணம்
பண்ணி இருக்கேன் ...
Wish you HAPPY MARRIED LIFE . . . .
ReplyDeleteWish you HAPPY MARRIED LIFE . . . .
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா... treat எப்போ... i'm at chennai only...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா... treat எப்போ...i'm at chennai only anna...
ReplyDeleteநிச்சயம் பொய் அழகுதான்..... நல்லாவே பொய் சொல்லி இருக்கீங்க! ரசிக்கக்கூடியதா இருக்கு!
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணேன்..!! :)
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்றும் மகிழ்வுடன் நலமாக வாழ வாழ்த்துகின்றேன்.
nalla eru nanpa
ReplyDeletenalla eru nanpa
ReplyDeleteBest Wishes
ReplyDeleteஇனிய மண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி ..
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteNalamudan Pallaandugal Inainthu Vaazha Vaazhthukkal Thola!!!
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeletewish u many more happy returns of the day.......
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா:-)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா:-)
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்றும் மகிழ்வுடன் நலமாக வாழ வாழ்த்துகின்றேன்.
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்றும் மகிழ்வுடன் நலமாக வாழ வாழ்த்துகின்றேன்.
இனிய திருமண நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள்
ReplyDeleteகொஞ்சம் பொய்யும் சொல்லலாம்; தப்பில்லை! :-)
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள் ஜாக்கி! வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க!
//நான் என் லவ்வரோட பஸ்ல வந்துகிட்டு இருக்கேன்... எந்த பய புள்ளையும் பஸ்ல எறக்கூடாதுன்னு உத்தரவு போட்டு இருக்கேன்// இது பொய் இல்லீங்க, கற்பனை!
ReplyDeleteவளத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!
வாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteகாதலுக்கும் கவிதைக்கும் பொய்தான் அழகு திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி சார்
ReplyDeleteகாதலுக்கும் கவிதைக்கும் பொய்தான் அழகு திருமண நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி சார்
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஅண்ணோ போட்டேவுல ரொம்ப ஸமாட்டா இருக்கீங்க
ReplyDeleteஅதைவிட உங்க காதல் வருடம் ஆக ஆக அதிகமாகிட்டே போகுது
காதலிச்சு வாழ்ந்து காட்டு அடிப்பாங்க பாரு சலியுட்
சரியான உதாணரம் நம்ம ஜாக்கி அண்ணே
காதலுக்கு பொய் அழகு. வாழ்க்கைக்கு மெய் தான் அஸ்திவாரம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் பிளாகை நீண்ட நாட்களாகப் படித்து வருகிறேன். சரளமான நடை. சிலசமயங்களில் மனதை பாரமாக்கி விடுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteவாழ்த்திய அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteஇன்றுபோல் என்றும் நலமாய் வாழ வாழ்த்துகள்!!
ReplyDeletevazhthukkal sir
ReplyDelete