கால ஓட்டத்தில் காணாமல் போனவை தொடரில்
நம் வாழ்வில் பயணித்த பல பொருட்கள் நம்மை விட்டு பிரிந்து பரணுக்கு
போனாலும் அதன் ஞாபக வடுக்கள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலுவதில்லை... அவைகள் வாழ்வில்
ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம்....
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் எட்டுமணி நேரம்
மட்டுமே மின்சாரம் இருக்கின்றது..
இரவில் ஆறு மணி நேரம் பகலில் ஒரு
மணி நேரம் என்பதாய் இருக்கின்றது... மக்கள் கற்கால வாழ்க்கைக்கு மாறிக்கொண்டு
இருக்கின்றார்கள் என்கின்றது தினம் வரும் பத்திரிக்கை செய்திகள்... இன்னும் கொஞ்ச
நாளில் கால ஓட்டத்தில் காணாமல் போனவை லிஸ்ட்டில்
மின்சாரமும் சேர்ந்து விடாமல்
இருக்க இறைவனை பிரார்த்திப்போம்....
மின்சாரம் இல்லாத காரணத்தால் மக்கள் ஆட்டுக்கல்
என்று அழைக்கபடும்... உரல் மற்றும்
அம்மிக்கல்லில் மாவரைக்க பயண்படுத்த தொடங்கி விட்டார்கள்..
உரலில் மாவாட்டுவது பெரிய கலை....முதலில் உரலை
நன்றாக கழுவி அதில் மண் மற்றும் தூசுக்களை அப்புறப்படுத்தி விட்டு, அம்மா
முட்டிக்கு மேல் புடவையை இழுத்து சொத சொத என
மடியில் புடவையை சேகரித்து வழித்துக்கொண்டு ஆட்டுக்கல் எதிரில்
உட்காருவாள்... பட்டினப்பொடி விளம்பர படத்தில் உட்காந்து இருக்கும் ஆண் பொம்மை போல
கம்பீரமாக உட்காருவாள்... பொதுவாக திருணம் ஆன பெண்கள் ஆட்டக்கல்லில் மாவாட்டும்
போது வயதுக்கு வந்த பக்கத்து வீட்டு பெண்கள்
உதவிக்கு வருவார்கள்...
முக்கியமாக மாவு ஆட்டும் போது மாவோடு சேர்த்து ஊர்
கிசு கிசுப்புகதைகளும் உளுந்து மற்றும் அரிசி மாவோடு சேர்த்து அதவும் மையும்....அதுவும் திருமணம்
ஆகாத பக்கத்து வீட்டு வயதுப்பெண்களுக்கு
டிவி இல்லாத அந்தகாலகாட்டங்களில் அந்த கிசு கிசு கதைகள் நல்ல டைம்பாஸ்....
முதலில் அம்மா உளுந்தை அரைக்க முனைவாள்...யாரும்
இல்லாத நேரத்தில் அம்மா
மாவு அரைக்க.... நான் மாவு அரைபட தள்ளிவிட்டுக்கொண்டு உதவி செய்வேன்... மாவை தள்ளி
விடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல... கை விரல்கள்
சிக்கிக்கொள்ளாமல் தள்ளி விட
வேண்டும்.. பொதுவாக அம்மா எனக்கு சினிமா
கதைகள் சுவாரஸ்யம் பொங்க சொல்லிக்கொண்டு இருப்பாள்...
(உரல் பற்றிய நல்ல ஆவணம் கீழே இருக்கும் இந்த பாடல்....)
கதை சுவாரஸ்யத்தில் அம்மா வாயை
பார்த்துக்கொண்டே நிறைய முறை கை விரல்களை
அரைபடும் இடத்தில் விட்டு அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொண்டு
இருக்கின்றேன்... மாவு அரைக்கும் நேரங்கள் பொதுவாக மாலை நேரங்களாகத்தான்
இருக்கும்....
ஆட்டுக்கல்லில் செமையாக தாவு தீர்க்க, வேலை வாங்கும் ஒரே விஷயம் அரிசி மாவு அரைப்பதுதான்.. காரணம் அரிசி எளிதில் மையாது... வேலை
வாங்கிக்கொண்டே போகும். ஆறு மணிக்கு மேல் வேலை இழுத்துக்கொண்டு போனால்... கொசு பின்னி எடுக்க ஆரம்பித்து
விடும்.. அதனால் வேலையை சூரியன்
மறைவதற்குள் முடித்தாக வேண்டும் என்று அம்மா வேர்வை சிந்த மாவு அரைப்பதில் வேகம் கூட்டுவாள்..
ஒரு கையால் மாவை லாவகமாக தள்ளிக்கொண்டு பேய்
போல் மாவு அரைக்கும் அம்மாவுக்கு முன் பக்கம் முகத்தில் விழுந்து இம்சை
கொடுக்கும் முடிகளை இழுத்து அவள் கேட்காமலே காது பக்கம் அனுப்பி வைப்பேன்...மாவு கையோடு எதையும் சரி
படுத்த முடியாது...
மாவு அரைக்கும் போது யாராவது வீட்டுக்கு ஆண்கள்
வந்தால் மார்பு தெரிய சேலை தழைந்து இருக்கும் போது அதை சரிப்படுத்துவதில் இருந்து, கைக்கு எட்டாமல்
முதுகில் ஊரும் மற்றும் நடைச்சல் ஏற்ப்படுத்தும் இடங்களை அம்மா சொல்ல சொல்ல....சீப்பு
வைத்து அந்த இடத்தை சொறிந்து விடுவேன்...
வினாயகர் சதுர்த்திக்கு, கொழுக்கட்ட்டை சுட
அரசி குத்த அல்லது அரிசி உப்புமா செய்ய அம்மா உரலில் உலக்கை கொண்டு
அரிசி குத்தும் அழகே அழகு.... அதுவும் கை மாற்றி கை மாற்றி ஒரு வித புயல் போன்ற காற்றை புஸ்
புஸ் என்று சத்தம் எழுப்பி அரிசி
குத்துவாள்... காரணம் அப்போது வேலை
செய்யும் அலுப்பு இருக்காது என்று
சொல்லவாள்...
கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.. சமாச்சாரம் இது...இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... ஆனால் இன்று பல வீடுகளில் சீரியல் சத்தம் மட்டுமே கேட்கின்றது.. இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...
அதே போல அம்மிக்கல் பெரிய வரப்பிரசாதம்....காலையில்
பழைய சாதத்துக்கு அம்மியில் பொட்டுக்கடலை,
இரண்டு தேங்காய் பத்தை.. நாலு காய்ஞ்ச மொளகாய் வைத்து அரைத்துக்கொடுக்கும் கெட்டி சட்டினிக்கு ஈடு இணையே இல்லை என்பேன்... ஹங்...அப்புறம்
ஒன்னு சொல்ல மறந்துட்டேன்... முன்பு
எல்லாம் மளிகைகடைகளில் தேங்காய் பத்தை கேட்டால் கீனி தருவார்கள்... இப்போது அப்படி விற்கின்றார்களா? இல்லையா என்பது
தெரியவில்லை... அதுவும் அந்த கீனி விற்கும் தேங்காய் பத்தை ஆளுக்கு ஏற்றத்து போல
மாறுபடும்.. நான் போய் கேட்டால் அண்ணாச்சி
சின்னதாக பத்தையை போட்டுகொடுப்பார்.. பக்கத்து வீட்டு அக்கா போய் கேட்டால் கொஞ்சம்
பெரிசாக இருக்கும்... அக்கா மனது போல...
அம்மி
உரல் கொத்தறதே.... அம்மி உரல் கொத்தறதே..... என்று தெருவில் கேட்ட வாக்கியங்கள்.. இன்று கிரைண்டர் கொத்தறதே
என்று மாறி விட்டது....
பொதுவாய் வீட்டுக்கு வெளியே கொல்லை புறங்களில்தான்.. இந்த அம்பி,உரல் ஆட்டக்கல்
போன்றவற்றை வைத்து இருப்பார்கள்.... என்ன தான் சுத்த பத்தமாக வைத்து இருந்தாலும் அது கொடுக்கும் ஈரப்பதத்திற்கு அதுக்கு அடியில் பூறான்கள் அதிகம் இளைப்பாறும்
இடமாக இருக்கும்.....
நிறைய கள்ளக்காதல் மற்றும் ஆத்திர அவசர கிராமபுற கொலைகளுக்கு உலக்கை, அம்மிக்கல்
போன்றவை கில்லிங் வெப்பனாக மாறி இருக்கின்றன...பூனாச்சி கிழவன் என்ற தாத்தா ஒரு வெறி
பிடித்த வெள்ளை நாயை உலக்கையால் நடு மண்டையில் அடித்தே கொன்று போட்டு
இருக்கின்றார்... கால ஓட்டத்தில் காணாமல் போனவை லிஸ்ட்டில் இருக்கும் உரல், உலக்கை,ஆட்டு உரல், ஆட்டுக்கல்,அம்மிக்கல். போன்றவற்றிக்கு பெயர்காரணம் எனக்கு தெரியவில்லை.....தெரிந்தால் சொல்லுங்கள்.. தெரிந்து கொள்வோம்....
என்னதான் கிரைண்டரில்
அரைத்த மாவாக இருந்தாலும் கையால் ஆட்டிப்போடும் மாவுக்குத் தனி ருசி இருக்கத்தான் செய்கின்றது என்று சிலர் சொல்லுவார்கள்...ஒரு வேளை உங்கள் அம்மா,மனைவி,அக்கா, தங்கை, பாட்டி,
அண்ணி,நாத்தனார், போன்றவர்கள் முதுகு விண்டு
மாவு அரைக்கும் போது எதெச்சையாக அவர்கள் வியர்வைதுளிகள் மாவில் கலந்து
இருக்கலாம்....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
EVER YOURS...
இதெல்லாம் காணாம போன பட்டியலில் இல்லை. மீண்டும் புத்துயிர் பெறும் பட்டியலில் இருக்கிறது. ஆனால் அந்த காலத்து பெண்கள் உடம்பு தடிமனாகாமல் இருக்க இந்த வேலைகள்தான் உதவியது. எவ்வளவு வேலைகள். தீபாவளி அன்று பொது உரல்,அம்மிகளில் எல்லா வீட்டு பெண்களும் அரைக்க ப்ளான் பண்ணி காலை மூணு மணிக்கு நீ,மூணரை மணிக்கு நான் என்று எழுந்திருப்பார்கள். ஆணுக்கு உடல் உழைப்பு வேலையில் குறைந்தது. பெண்ணுக்கு உடல் உழைப்பு வீட்டில் குறைந்தது. ஆனால் இருவருக்குமே வேலைகள் குறையவில்லை. அவை புத்தி உழைப்பு,மன உழைப்பாகவே இருக்கின்றன...
ReplyDeleteஇதெல்லாம் காணாம போன பட்டியலில் இல்லை. மீண்டும் புத்துயிர் பெறும் பட்டியலில் இருக்கிறது,கரண்ட் அண்ணாச்சி தான் எப்போ வரும் எப்போ போகும் தெரியாமல் இருக்கிறதே
ReplyDeleteசரியான பதிவு....சரியான நேரத்தில்....
ReplyDeleteஅப்படியே இந்த லிஸ்ட்ல மின்சாரத்தையும் சேத்துக்கங்க பாஸ்
இப்போ நம் தமிழ்நாட்டிற்கு தேவையான பதிவும் கூட..........
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Gud work in right time bro.
ReplyDelete\\என்னதான் கிரைண்டரில் அரைத்த மாவாக இருந்தாலும் கையால் ஆட்டிப்போடும் மாவுக்குத் தனி ருசி இருக்கத்தான் செய்கின்றது என்று சிலர் சொல்லுவார்கள்...ஒரு வேளை உங்கள் அம்மா,மனைவி,அக்கா, தங்கை, பாட்டி, அண்ணி,நாத்தனார், போன்றவர்கள் முதுகு விண்டு மாவு அரைக்கும் போது எதெச்சையாக அவர்கள் வியர்வைதுளிகள் மாவில் கலந்து இருக்கலாம்//
ReplyDeleteArumai...Arumai...
அம்மியில் அரைக்கிற சட்னி, துவையல்; ஆட்டுக்கல்லில் அரைத்த மாவின் இட்லி; தோசை, உரலில் இடித்த பொடிவகைகள் - இவற்றின் சுவையே அலாதிதான்! ரொம்பவே பெருமூச்சு விடச் செய்த இடுகை! அருமை!
ReplyDeleteJockey Anna
ReplyDeleteSomething is missing in your posts these days. I am afraid your blog will also be included in your “கால ஓட்டத்தில் காணாமல் போனவை.... “
Jockey Anna
ReplyDeleteSomething is missing in your posts these days. I am afraid your blog will aslo be included in your “கால ஓட்டத்தில் காணாமல் போனவை.... “
very nice article and the way it is described is really superb. Because of such hard work only, ladies did not get any health related problems Nowadays, you can see ladies suffering from arthiritis, muscle pull, cramps etc., etc., even when they are 40+
ReplyDelete