இருக்கற நாலு முடியை
திருத்திக்க பார்பர்
ஷாப்புக்கு போனேன்...சின்ன பையன்தான் அந்த ஷாப்பு ஓனர்... போனதும் பச்சை சிரிப்பு சிரிச்சான்.. என்ன சார் வழக்கம் போல
கட்டிங் ஷேவிங்கான்னு கேட்டான்...அவன் மனசுல நினைச்சி இருக்கலாம்....ஓத்தா என்ன
இருக்குன்னு இந்த ஆளு கட்டிங் ஷேவிங்கின்னு மனசாட்டி இல்லாம சொல்லறானேன்னு
நினைச்சி இருக்கலாம்..... ஆனா நிறைய முடி தலையில வச்சிகிட்டு அலும்பு பண்ணறவனை
விட... நாலு முடி வச்சி இருக்கறவன்தான் அ ஷேப் பண்ணி பாதுகாக்கனும்னு அந்த
பயபுள்ளைக்கு எங்க புரிய போவுது.....?
அங்க இருந்த விலையில்லா டிவியில சன் மீயூசிக்ல
தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாட்டுல முதல்
மெட்டுலயே விஜய் தமன்னா பேன்ட்டை கழட்ட முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தார்.... அதுல
மெய் மறந்து போய்கிட்டு இருக்கும் போது...
அந்த கேள்வியை மனசாட்சி இல்லாம அந்த பார்பர் பையன் என்கிட்ட கேட்டு இருக்க
கூடாது.. நானும் சட்டுன்னு அதிமுக
அமைச்சர்கள் மாதிரி என்ன ஏதுன்னு காதுல வாங்காம மண்டைய மண்டைய ஆட்டி இருக்க
கூடாது...
ஓகே லெட் மி கம்மிங்டுத பாயிண்ட். ஆயில் மசாஜ்
செய்யட்டுமான்னு அந்த பையன் மனசாட்டி இல்லாம கேட்டு வைக்க.. நானும் தலையை
ஆட்டிவிட்டேன்...எனக்கும் ஆயில் மசாஜ் பார்பர் ஷாப்புல இதான் முதல் அனுபவம்...
என்ன பண்ணுவாங்கன்னு கூட எனக்கு
தெரியாது.,...குளுமை குளுமை கூல்
கூல் நவரத்னா எண்ணெயை தலையில அப்படியே
கபால்ன்னு என் கபாலத்துல
ஊத்தினான்..தடுப்பே இல்லாத பாறையில
ஊத்தினது போல நாலாபக்கமும் வழிய... அவன் கையால என் தலையில வயக்காட்டுல
பாத்தி கட்டறது போல பாத்தி கட்டினான்...
முதல்ல பரபரன்னு தேய்க்க ஆரம்பிச்சு, தலையில
தேய்க்கற தேய்ப்புல பொறி பறந்து மின்சாரம் தயாரிச்சி தமிழ்நாடு முழுக்க சப்ளை
பண்ணறவன் போல அப்படி ஒரு ஆக்ட்டிவா தலையை பர பரன்னு தேய்க்க ஆரம்பிச்சான்...அப்படியே
தலையை பிராண்ட ஆரம்பித்தான்...குறிப்பா தலையை சொறிந்தான் என்ற பதம்தான் சரியாக
இருக்கும்...ரொம்ப சொகமா இருந்திச்சி.. திடிர்ன்னு ஒரு பயம்.... எங்காயாவது அதிகமா சொறிஞ்சி ரத்தம் கித்தம்
வந்துடுச்சின்னா? அதனால போதும்னு கையை காட்டினேன்..
அதுக்கு அப்புறம் அவன் செஞ்சதுதான் என்
வாழ்க்கையில் என்னால என்னைக்கும் மறக்க முடியாத படி செஞ்சிட்டான்... மிருதங்கம் டெஸ்ட் பண்ணறது போல இரண்டு விரலால சட்ன்னு தலையில ஒரு பக்கம் வச்சான்... ஊர்ல
பொங்க பானை வாங்க அப்படித்தான் தட்டி பார்ப்பாங்க...அப்படி ஒரு சவுண்டுதான் வந்துச்சி... எனக்கு அதுதான் சட்டுன்னு
ஞாபகம் வந்துச்சி... தட் தட் தட் தட் ன்னு அம்மா இல்லாத புள்ளைய தலையில அடிக்கறது
போல வேகமாலஅடிக்க ஆரம்பிச்சான்...ச்சே மசாஜ் செய்ய ஆரம்பித்தான்.
கொஞ்சம் கொஞ்சமா தலை எங்கும் மிருதங்க விரல்கள்
பரவின.. என் தல ஏற்படுத்திய சத்தம்
அவனுக்கு உற்சாகம் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.... சும்மா புந்து விளையாட
ஆரம்பித்தான்...30 நொடியில் என் தலை அவன் ஆளுகைக்கு உட்பட்டு விட்டது...
தடார் மாடார் என்று பல சப்தங்களை எனக்கே தெரியாமல் என் தலையில் இருந்தே எழுப்பினான்...எனக்கு ஒரு நிமிடத்துக்கு சொகமாக இருந்தது.. அடுத்து ஒரு நிமிடத்தில் வேண்டும் என்றே செய்வது போல எனக்கு பட்டது..ஆனாலும் அவனை கண்ணாடியில் பார்த்த போது..... தில்லான மோகனாம்பாள் படத்துல பாலய்யா மெய் மறந்து தவில் வாசிப்பது போலவும், ஜாகீர் உசேன் முடி சிலுப்பி என்னை வெறுப்பேற்ற தபேலா வாசிப்பது போலவும் மனத்திரையில் ஷாட் கட்டில் வந்து போனது....
தடார் மாடார் என்று பல சப்தங்களை எனக்கே தெரியாமல் என் தலையில் இருந்தே எழுப்பினான்...எனக்கு ஒரு நிமிடத்துக்கு சொகமாக இருந்தது.. அடுத்து ஒரு நிமிடத்தில் வேண்டும் என்றே செய்வது போல எனக்கு பட்டது..ஆனாலும் அவனை கண்ணாடியில் பார்த்த போது..... தில்லான மோகனாம்பாள் படத்துல பாலய்யா மெய் மறந்து தவில் வாசிப்பது போலவும், ஜாகீர் உசேன் முடி சிலுப்பி என்னை வெறுப்பேற்ற தபேலா வாசிப்பது போலவும் மனத்திரையில் ஷாட் கட்டில் வந்து போனது....
காது மடல், கழுத்து என்று நீவி விட
ஆரம்பித்தான்... நடு முதுகில் தண்டு வடத்தில் கும் கும் என்ற குத்தியபடி முகுளம்
வரை போயே போய் விட்டான்...எப்படி சார் இருந்திச்சி என்றான்... செமையா
இருந்திச்சா?... என்று கேட்க... நான்
ஙே என்று விழித்த படி சூப்பர்
என்றேன்...200 ரூபாய் கொடுத்தேன்...60 ரூபாய் மீதம் கொடுத்தான்....
நல்லவேளை மீதமாவது குடுத்தானே என்று
நினைத்தக்கொண்டேன்.... சாதாரணமாக பெண்கள் பியூட்டி பார்லரில் அளவு பார்த்து ஹேர்
கட் செய்து விடவே 200 ரூபாய் மனசாட்சி இல்லாமல் வாங்கும் போது இது பரவாயில்லை
என்று மனதுக்கு பட்டது...மண்டை எங்கும் வலி வியாபித்து இருந்தது...ஆயில் மசாஜ்
சொகமா, வலியா என்று என்னால் பிரிக்க முடியவில்லை...
சரக்கு புல்லாக அடித்து விட்டு கொத்து விட்ட பிறகு இனம் புரியாத சூழலில் மனமும், உடலும் இருக்குமே அப்படித்தான் எனக்கு இந்த ஆயில் மசாஜ் பட்டது... அடுத்த முறை அனுஷ்கா ஆடினாலும் ஆயில் மசாஜ் சார் என்று கேட்கும் போது வேண்டாம் என்று மறுத்து விடலாம் என்று இருக்கின்றேன்.
சரக்கு புல்லாக அடித்து விட்டு கொத்து விட்ட பிறகு இனம் புரியாத சூழலில் மனமும், உடலும் இருக்குமே அப்படித்தான் எனக்கு இந்த ஆயில் மசாஜ் பட்டது... அடுத்த முறை அனுஷ்கா ஆடினாலும் ஆயில் மசாஜ் சார் என்று கேட்கும் போது வேண்டாம் என்று மறுத்து விடலாம் என்று இருக்கின்றேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
சுகமான சுமைகளோ?
ReplyDeleteஅருமையான நகைச்சுவை. சூப்பர்ப் சேகர்.
ReplyDeleteஹா ஹா தமன்னா.....
ReplyDeleteசெம ரைட்டப் ஜாக்கி. அட்டகாசம்.
ReplyDeleteஅனுபவம் புதிது
ReplyDeleteசிரித்து முடியவில்லை.
ReplyDeleteகுளுமை கூல் கூல் நவரத்னா எண்ணெயை தலையில அப்படியே கபால்ன்னு என் கபாலத்துல ஊத்தினான்..தடுப்பே இல்லாத பாறையில ஊத்தினது போல நாலாபக்கமும் வழிய... அவன் கையால என் தலையில வயக்காட்டுல பாத்தி கட்டறது போல பாத்தி கட்டினான்...
ReplyDeleteஅருமையான காமெடி படம் பார்த்த பிலிங்
super
ReplyDelete.தடுப்பே இல்லாத பாறையில ஊத்தினது போல நாலாபக்கமும் வழிய... அவன் கையால என் தலையில வயக்காட்டுல பாத்தி கட்டறது போல பாத்தி கட்டினான்...//
ReplyDeleteவர்ணனைல பின்றீங்க!
Best!
ReplyDeleteஆயில் மசாஜ்-க்கு பிறகு ஒரு வெந்நீர் குளியல் போட்டு பாருங்கள். மிக சுகமான தூக்கம் வரும் :-)
ReplyDeleteசூப்பர் ஜாக்கி. உங்க தலைய பாத்ததும், பயபுள்ள முழங்காலுக்கு மூவ் தடவற மாதிரி ஈசியான வேலை மாட்டிருச்சின்னு நினைச்சு ஆட்டைய போட்டுட்டான் போல. அவன் செஞ்ச வேலை, குடுத்த 140 ரூவாக்கு ஒர்த்தோ இல்லையோ... ஆனா அதை வச்சு எழுதின பதிவுக்கு நிச்சயம் ஒர்த். நல்ல கலகலப்பான அனுபவம்.
ReplyDeleteஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் படிக்க படிக்க, சிரிச்சு மாளல ஜாக்கி சார்..-பயபுள்ள
ReplyDeleteசெம ரைட்டப் ஜாக்கியண்ணே.. சூப்பர்.
ReplyDeleteஅண்ணா செம செம .. சிரிச்சிட்டே இருந்தேன் கலக்கல் பதிவு :))
ReplyDeleteஜாக்கிசார் சூப்பர் போங்க, சொரிமுத்து ஐய்யனார் கோவில் ஆற்றங்கரையில் எனது நண்பர் ஒருவர் இதயம் நல்லெண்ணைய்யை என் தலையில் தேய்த்து அவர் உடலில் இதயமே இல்லாமல் என் தலையில் விளையாடிய ஞாபகம் எனக்கு வந்துவிட்டது..
ReplyDeleteஅண்ணே நீ ஒரு இலக்கியவாதின்னு உலகுக்கு அறிவிக்க வேண்டிய நேரம் வந்துட்டு....
ReplyDeleteசிரித்து முடியல சார்.... அது எப்பிடி சார் நீங்க நல்லவன் என்று அவனுக்கு தெரிந்தது.......
ReplyDeleteஅடுத்த முறை அனுஷ்கா ஆடினாலும் ஆயில் மசாஜ் சார் என்று கேட்கும் போது வேண்டாம் என்று மறுத்து விடலாம் என்று இருக்கின்றேன்
ReplyDeleteஹி ஹி ஹி சுப்பர்
Super
ReplyDeleteI follow ur blogs regularly. You might have written many comedy blogs, but this really v v spl. Could not control my laugh till the end. Pls keep writing. "முதல்ல பரபரன்னு தேய்க்க ஆரம்பிச்சு, தலையில தேய்க்கற தேய்ப்புல பொறி பறந்து மின்சாரம் தயாரிச்சி தமிழ்நாடு முழுக்க சப்ளை பண்ணறவன் போல அப்படி ஒரு ஆக்ட்டிவா தலையை பர பரன்னு தேய்க்க ஆரம்பிச்சான்.." Amazing
ReplyDeleteகுடுத்த 140 ரூவாக்கு ஒர்த்தோ இல்லையோ... ஆனா அதை வச்சு எழுதின பதிவுக்கு நிச்சயம் ஒர்த். நல்ல கலகலப்பான அனுபவம்.
ReplyDeleteமுத்துகுமரனின் கருத்துக்கு ஆமோதிக்கிறேன்.
But one thing, அந்த Barber-ன் Approach-ம் உங்க Acceptance-ம் கலந்த இந்த பதிவை இரசிச்சு சிரிச்சேன்.
Be careful with north indian barber, The will twist your neck - Suluukku edukkura mathiri..It is dangerous
ReplyDeleteதமன்னாவ பாத்து ஜொள்ளு விட்டதுக்கு தலைல தட்டி அனுப்பினான் பையன் . இந்த ஒன் லைன் ஸ்டோரிக்கு அருமையான திரைக்கதை.
ReplyDelete