Thandavam-2012/தாண்டவம்.திரைவிமர்சனம்.இந்தியில் யூடிவி தயாரித்த பர்பி படம் பெரும் வெற்றியை பெற்று இருக்கின்றது...
தமிழில்  பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முகமூடி  திரைப்படம் பெரிய வெற்றியை  கொடுக்கவில்லை என்றாலும் ஏதோ படம்  தப்பித்து விட்டது...யூடிவி  நிறுவனம் தயாரிக்கும் படங்கள் இந்தியில் பெரும் வெற்றி அடைவது போல  தமிழில் அடைவதில்லை  அது ஏன் என்று தெரியவில்லை..?

ஐயம் சாம் படத்தின் அப்பட்டமான காப்பி தெய்வமகன் என்று பெரிய சர்ச்சையை, அப்படத்தின் இயக்குனர் விஜய் சந்தித்தார்...அதன் பிறகு அவர் இயக்கி, அதே போல விக்ரம்  நடித்து  வெளியான தாண்டவம் படத்தின் கதை  எனது கதை என்று ஒரு உதவி இயக்குனர்  போர்க்கொடி உயர்த்த, இந்த பிரச்சனையில்  பெப்சியின் தலைவர் பொறுப்பில் இருந்த அமீர் விலகும் அளவுக்கு இந்த படத்தின் கதை பிரச்சனை அமைந்து  விட்டது.. சரி... அந்த அளவுக்கு படம் சுவாரயமா? என்று இப்போது பார்க்கலாம்.

===========

தாண்டவம் படத்தின் கதை.


இந்தியாவின் உளவுதுறையான ரா அமைப்பில் பணிபுரியும்  விக்ரம் 11/1 லண்டன் குண்டு வெடிப்பில் தன் மனைவியையும், தன் பார்வையையும்  இழக்கின்றார்...குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை தேடி  தேடி பழிவாங்குகின்றார்.. கண் தெரியாதவர் எப்படி  பழி வாங்கமுடியும்...? தியேட்டரில் போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

===========

 படத்தின் சுவாரஸ்யங்கள்.ராஜபாட்டை படத்தின் படு  தோல்விக்கு  அப்புறம் விக்ரம் ரொம்ப நம்பிக்கையோடு நடித்து  வெளி வந்து இருக்கும் படம்...

 விக்ரம் அவர் பாத்திரத்தை சிறப்பாகவே  செய்து இருக்கின்றார்...

அனுஷக்கா போர்ஷன் படத்தின்  பெரிய பலம்... முக்கியமாக கிராமத்து காட்சிகள் மற்றும் டெல்லி போர்ஷன்ஸ் படத்தில் ரசிக்க வைக்கின்றன...

ஜகபதி பாபு எப்படியும் கெட்ட வேலை செய்ய போகின்றார் என்பது முன்பே தெரிந்து விடுகின்றது...

 சந்தானம் டாக்சி டிரைவர் கேரக்டரில் நடித்து இருக்கின்றார்... பயங்கர சொதப்பல்.. ரசிப்பது போல இல்லை..   சிரிக்கவும் வைக்கவில்லை.. பெட்டர் லக் நெக்ஸ்ட்டைம் சந்தானம்.

 நாசர்... வீரக்கத்தி என்ற மிடுக்கு  லண்டன் போலிஸ் ஆபிசராக  நடித்து  இருக்கின்றார்... ஏதையாவது கண்டுபிடிப்பார் என்று ஆர்வமாக இருந்தால் அவர் எதையுமே கண்டுபிடிக்கவில்லை...

ஒளிப்பதிவு நீரவ்ஷா லண்டன் மற்றும் கிராமத்து காட்சிகளை மிக அழகாக படம் பிடித்து இருக்கின்றார்.

ஜீவி  பிரகாஷ் இசையில் பாடல்களை விட  படத்தில் அடிக்கடி  வரும் ஒரு பியானோ பீட்  ரசிக்கும் படி  இருக்கின்றது...

அனுஷ்க்கா வை பொண்ணு பார்க்க போற பேகார்ஷன்ல இருந்தே ஆரம்பிச்சி இருந்தா இந்த படம் கையகடிக்காம தப்பிச்சி இருக்கும்...முன்னாடி இரண்டு ரீலில் ஏற்படுத்திய  இருந்த பரபரப்பு படம் முழுக்க விரவி கிடக்க வேண்டும்....

 வேட்டையாடு விளையாடு  தன் மனைவியை  கொன்னவங்களை பழிவாங்கற கதைதான்... இரண்டு ரீலுதான் கமலினி வரும் லவ் புரேபோஸ் பண்ணுவார்.. ஒருடூயட், அது முடிஞ்சதும் கொலைகார பாவிங்கள் கமலினியை போட்டு தள்ளுவானுங்க.. உடனே பழிவாங்கும் மூடுக்கு நம்மையும் கூட்டி வந்துடுவாங்க.. இங்க முதல்ல பழி வாங்க   வேண்டும் என்று நல்ல விதமாக மூட் உருவாக்கியவர்கள்...திரைக்கதையில் அதை தொடர்ந்து பயணித்து செல்ல தவற விட்டு விட்டார்கள்...
==========

படத்தின் டிரைலர்.


============
படக்குழுவினர் விபரம்..

Directed by A. L. Vijay
Produced by
Ronnie Screwvala
Siddharth Roy Kapur
Screenplay by A. L. Vijay
Story by A. L. Vijay
Starring
Vikram
Jagapati Babu
Anushka Shetty
Amy Jackson
Lakshmi Rai
Music by G. V. Prakash Kumar
Cinematography Nirav Shah
Editing by Anthony
Studio UTV Motion Pictures
IBC Motion Pictures
Distributed by IBC Motion Pictures
Release date(s)
September 28, 2012[1]
Country India
Language Tamil


பைனல்கிக்..

தாண்டவம் ருத்ர தாண்டவம்  ஆடி இருக்க வேண்டும்... ஆனால் அப்படி ஆடவில்லை.. டைம்பாஸ்  படமாக ஒரு முறை பார்க்கலாம்..
======


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS... 

6 comments:

 1. தாண்டவம் படம் பார்க்காமல் தாண்டவும் .இது என்னோட கருத்து

  ReplyDelete
 2. விமர்சனம் இவ்வளவு சின்னதா இருக்கு ..:)

  ReplyDelete
 3. விக்ரம் ரொம்ப முத்தின பீசா தெரியுறார். விக்ரமோட Screen Presence ரொம்ப மோசம். ரோபோ ரஜினி இடமும், விஸ்வரூபம் கமல் இடமும் நீங்க கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு சீயான்...பெட்டெர் லக் நெக்ஸ்ட் time.

  ReplyDelete
 4. ஒங்க விமர்சனத்துலயே படத்தைப் பத்திப் புரிஞ்சிக்க முடியுது :) God Blessed and Me Escaped...

  ReplyDelete
 5. ஒங்க விமர்சனத்துலயே படத்தைப் பத்திப் புரிஞ்சிக்க முடியுது :) God Blessed and Me Escaped...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner