Stolen -2012 கடத்தப்பட்ட மகள், பத்து மில்லியன் பணம், பண்ணிரண்டு மணிநேரம் மட்டும்.உடனடியாக என்ன செய்யலாம்...?


நாயர் கடையில் டீ வாங்கி குடிக்கலாம்...

பாக்கு பிரித்து வாயில் கொட்டி எச்சில் துப்பலாம்...

 இருவர் எச்சிலும் கொழ கொழக்க  முத்தமிடலாம்...

சிறுநீர்  கழித்து ஜிப்பு போடலாம்....

மூக்கு சளியை சிந்தலாம்...

பிரேசியர் அவுத்து நைட்டிக்கு மாறலாம்...

எடிஎம்மில் பணம்  எடுக்கலாம்....

டிவி ஆன் செய்து ஜெயா டிவி பார்க்கலாம்...

 பளபளக்க லிப்ஸ்ட்டிக் போடலாம்....

கிழிந்த நிரோத்தை தூர  எரியலாம்....

சப்ப  தொடர்பு கொள்ளவும்னு ரயில் டாய்லட்டில் எழுதலாம்...

 திநகர் பிரமண்டமாய் எதிரில் ஆட்டோ பிடிக்கலாம்...

 எதிரியை முகவாய் கட்டையில் குத்தலாம்...

பிரியாணி சாப்பிட்டு விட்டு பல் குத்தலாம்.....

சத்தியம் தியேட்டர் இருட்டில் காதலி மார்பு  தடவலாம்.... 

எல்லாம் லாம்தான்...  மேலே குறிப்பிட்டவை எல்லாம் உடனே செய்பவை...

ஆனால்12 மணி நேரத்தில் என்ன செய்யலாம்..?????.

ஒரு பெண்ணை உஷார் பண்ணலாம்...

இண்டர்வியூ அட்டன்ட் செய்து அப்பாயின்மென்ட் வாங்கலாம்...

வென்னையில் இருந்து கோவைக்கு அரசு பேருந்தில்  பயணிக்கலாம்...

ரேஷன் கார்டுக்கு நாயை அலையாலாம்...

கலைஞரை திட்டலாம்...

ஜெவுக்கு பம்மலாம்....

சின்மயிக்கு டுவிட் பண்ணலாம்...

பிரபலமாக இருந்தாலும் மொக்கையாக கருத்து சொல்லலாம்....

சமுக வலைதளத்தில் பொங்கலாம்...

அல்லது என்னை போல மொக்கையாக பிளாக் எழுதலாம்...

அல்லது இந்த ஜாக்கியை கலாய்க்கலாம்...

குட்... ஆனால் 12 மணி   நேரத்தில் பத்து மில்லயன் டாலர்.... ரெடி செய்வது சாத்தியமா? 

பிசினஸ்மேனுக்கு ஓகே... ஆனால் எட்டு வருடம் சிறையில் இருந்து வெளிவரும் அன்றே பத்து மில்லியன் பணம்  கொடுறான்னு கேட்டா எவன் கொடுப்பான்...ஓ ஷிட்..?  எப்படிங்க..  இப்படி மனசாட்சி இல்லாம கேட்க முடியிது? கேட்டுட்டானுங்க... அதுவும் யாரு தெரியுமா? 14 வருஷம் கூடவே இருந்த பிரண்டு.....

=============

Stolen -2012 படத்தின் ஒன்லைன் என்ன?


எட்டு வருடம் ஜெயிலில் இருந்து  வெளியே வந்தவுடன் அவன் மகளை கடத்தி 12  மணிநேநரம் டைம் பத்து மில்லியன் டாலர் பணம் வேண்டும் என்று  கேட்டால்? அதான் படத்தோட  ஒன்லைன்.

=============
Stolen -2012 படத்தின் கதை என்ன?


நிக்கோலஸ் கேஜ்(வில்) அவரோட பிரண்ட் வின்சென்ட், ரெண்டு பேரும்  திருடனுங்க...ஒரு பேங்கை   கொள்ளை அடிச்சி பத்து மில்லியன் டாலரோட ரெண்டு  தப்பிக்கும் போது  சொதப்பல் ஆயி வின்சென்ட்டுக்கு கால் போயிடுது.. நிக்கோலசை ஜெயிலில் போட்டுடறாங்க..

.ஆனா வின்சென்ட்  அந்த கொள்ளை அடிச்ச பத்து மில்லியின் டாலார்  நிக்கோலஸ் கிட்ட இருக்கும்னு அவன் வெளியே வந்தஉடன் அவன் மகளை கடத்தறான்..ஆனா  பணம் நிக்கோலஸ் கிட்ட  இல்லை.... போலிஸ் கூட அவன் கிட்ட அடிச்ச பத்து மில்லியன் பணம் இருக்கும்ன்னு நினைச்சி துரத்தறாங்க... அவன் மகளை எப்படி தன் பிரண்டுகிட்ட இருந்து  காப்பாத்தறாங்கன்றதுதான் இந்த படத்தோட கதை...


===============
படத்தின் சுவாரஸ்யங்கள்..

 எட்டு வருடம் கழித்து  தன் மகளை பார்க்க போகும் போதும் சரி, மகள் நிகோலசை காயப்படுத்தும் போதும் சரி..... கேஜ் பின்னுகின்றார்.

மகள் கடத்தப்ட்டு விட்டால் என்பது தெரிந்து பர பர வென்று ஆதாரங்களை தேடி அலைவதில் திரைக்கதை பரபரக்கின்றது....

கார்னிவல் நடுவில்  நடக்கும் அந்த  டாக்சி சேசிங் அருமை...

12 மணி நேரத்தில் உப்புமா ரெடி செய்வது போல ஒரு பேங்கை கொள்ளை அடிப்பது போலான காட்சிகள் எதிர்ப்பார்க்காத ஒன்று...

மற்றபடி எல்லாம் சொல்லி விட்டால் படம் பார்க்க இன்ரெஸ்ட் இருக்காது... அதனால் படத்தை பாருங்கள்...

=============
படத்தின் டிரைலர்..


==================
படக்குழுவினர் விபரம்.

Directed by Simon West
Produced by Jesse Kennedy
Matthew Joynes
René Besson
Written by David Guggenheim
Starring Nicolas Cage
Danny Huston
Malin Åkerman
M.C. Gainey
Sami Gayle
Mark Valley
Josh Lucas


Music by Mark Isham
Cinematography Jim Whitaker
Editing by Glen Scantlebury
Studio Millennium Entertainment
Nu Image Films
Saturn Films
Wonderland Sound and Vision
Distributed by Millennium Films
Release date(s)
September 14, 2012
Running time 96 minutes
Country United States
Language English
Budget $35 million
Box office $304,318=================
பைனல் கிக்.

புளு ஸ்டிரிக் அப்படின்னு ஒரு படம்... அந்த படத்தை  வாசிக்கஇங்கே கிளிக்கவும்... அதுவும் ராப்பரி படம் தான் ... பட் அற்புதமான கமெடி கிரைம் படம்.. அது போலான திரைக்கதை ஆனால் கொஞ்சம் நகாசு பார்த்த டிக்கரிங், வெல்டிங் பட்டிபார்த்து சீரியஸ் கிரைம் மூவீயாக மாற்றி விட்டார்கள்....  என்னதான் டிக்கியில் கடத்தினாலும் தட்டினால் வெளியே கண்டிப்பாக கேட்கும்.. ஆனால் அந்த கார்னிவல் சவுண்டை  வைத்து லாஜிக்  சேர்த்து இருக்கின்றார்கள்....விமர்சகர்கள் இந்த படம் பெயிலியர் படம்னு சொல்லறாங்க...படம் வெளியான இரண்டாவது வாரமே படத்தை தூக்கிட்டாங்க... பட் ஒன்னு மே இல்லாம போர் அடிக்கும் போது இந்த படத்தை பார்க்கலாம்...கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான் இந்த ஸ்டோலன்....சின்ன சின்ன சுவாரஸ்யங்களுக்காக.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...


8 comments:

 1. சுவாரஸ்யமாய் ஒரு பட அறிமுகம்! நன்று!

  ReplyDelete
 2. Please see Malayalam Moveis : Melvilasam, Chapa Kurusu, Usthad Hotel

  ReplyDelete
 3. Please See malayalam Movies : Melvilasam, Chapakurusu, Usthad Hotel

  ReplyDelete
 4. Boss Paycheck appadinnu oru padam irukku... padam failure... aana antha padam romba viruviruppa irukum ... sila padangal yen failure aaguthunlaam theriyaathu boss...

  ReplyDelete
 5. நீங்க சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி என்ற பலான கதைய சமீபத்தில் படித்தீர்களா?

  ReplyDelete
 6. Mel Gibson's 'payback' is also an excellent movie, Jackie... இதே மாதிரி கதைக்களன் கொண்டது. ஜெயிலி இருந்து வரும் ஒருவன், ஒத்த பைசாயில்லாமல் தன்னை மாட்டிவிட்டவர்களிடம் எப்படி காசை அல்லுகிறான் என்பதே ஒன்லைன்.. கண்டிப்பாக நீங்களும் பார்த்திருப்பீங்க என நினைக்கிறேன்...

  ReplyDelete
 7. மலையாள படம் ’உஸ்தாட் ஹோட்டல்’ - ஒரு மிகச்சிரந்த படம். நானும் எனது பிளாக்கில் எழுதியுள்ளேன்... சந்தர்ப்பம் இருப்பின் படித்து உங்க கருத்தை சொல்லுங்கள்..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner