Maattrraan-2012 மாற்றான்/ சினிமாவிமர்சனம்.



நாளைய சிறப்பு நிகழ்ச்சிகள் :

5 மணிக்கு எழுந்திருச்சா குளிக்கிறோம். அதையும் தாண்டி எழுந்தா அப்படியே சென்ட் அடிச்சிட்டு கிளம்புறோம். 6 மணிக்கு மாற்றான் தியேட்டர் உள்ள போறோம். 6.01க்கு டிவிட் போட ஆரம்பிக்கிறோம். 7.15க்கு இன்டர்வெல்ல பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுறோம். 9 மணிக்கு வலைமனையில் "மாற்றான்-தோற்றான்" இல்லைன்னா "மாற்றான்-வென்றான்"னு பிளாக் போடுறோம். இதை கூட செய்யலைன்னா இன்ஸ்டால்மென்ட்ல வாங்குன ஆன்டிராய்ட் போனுக்கும் இன்டெர்நெட்டுக்கு கட்டுற மாச பணத்துக்கும் அப்புறம் என்ன மரியாதை ?

நேற்று இரவு தம்பி  வலைமனை சுகுமார் இப்படித்தான் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார்.... அந்த அளவுக்கு  சமூக வலைதளங்களில் சினிமா நல்லா இருக்கா இல்லையா என்பதை சொல்ல பெருங்கூட்டமே இப்போது இருக்கின்றது நக்கலாக சுகுமார் சொன்னாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை....


முன்பு எல்லாம் பத்திரிக்கையாளர் சந்திப்பு காட்சிகளை  படம் வெளிவரும் தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்பே திரையிட்டு காட்டினார்கள்.. ஆனால் தற்போது அப்படி எல்லாம் இல்லை.. பத்திரிக்கையாளர்களே படத்தை பற்றி சமுக வலைதளங்களில் செய்தி பரப்ப...  ரிலிஸ் தினத்தன்று காலைக்காட்சிக்கு வரும் கூட்டத்தையே  நொண்டி அடிக்க வைத்து விடுகின்றார்கள். என்பதால் பத்திரிக்கையாளர் காட்சிகளை படம் வெளியான அன்று மதியம்   திரையிட ஆரம்பித்து விட்டார்கள்.

சூப்பர் நாவல் அட்டை படத்துக்கு போட்டோ எடுத்த பழக்க தோஷமோ என்னமோ.... தொடர்ந்து கிரைம் திரில்லர் வகை திரைப்படங்களை கொடுத்துக்கொண்டு வருகின்றார் இயக்குனர் கேவி ஆனந்... அயன் வெற்றிக்கு  பிறகு தனக்கு  பக்கபலமாக இருக்கும் அதே டீமோடு களம் இறங்கி இருக்கின்றார்... கேமராமேன் மட்டும் தன் சிஷ்யகோடிகளில் ஒருவரான  சவுந்தரை களம் இறக்கி இருக்கின்றார்...


 ஏற்கனவே இதே ஜார்னரில் சாருலாதா, இருவன் போன்ற படங்கள் வந்து படக்குழுவினருக்கு பீதியை  கிளப்ப அந்த படங்கள் வந்த வேகத்தில் பொட்டிக்கட்டிக்கொண்டதில் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டு இருப்பார்கள்..

சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எழுத்தாளர்கள் சுபாவிடம் ஒரு கேள்வியை கேட்டேன்.. ஆறாம்  விரல் இருக்கும்  பெண்ணையோ பையனையோ பார்க்கும் போது அது ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்... அதுவும் ஒட்டி பிறந்தவர்கள் எனும் போது பரிதாபம்தானே வரும் ஆனால்  அவர்கள்  மேல் காதல்  எப்படி வரும்?  என்று நான்  கேட்ட போது...இல்லை நிச்சயம் காதல் வரும் காரணம் அவர்கள் இருவரும் ரசிப்பது போல கேரக்டர்கள் செதுக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் நிச்சயம் அவர்கள் மீது காதல் வரும் என்றார்கள்....  

அவர்கள் சொன்னது போல காதல் வருமா? என்ற ஆவலில் படம் பார்க்க   சென்றேன். சரி அதெல்லாம் விட்டு தள்ளுங்கள்... படம் எப்படி இருக்குன்னு இப்ப பார்ப்போம்.

==========

Maattrraan-2012 மாற்றான்/ படத்தின் ஒன்லைன்..

கன்ஜாயின் டுவீன்ஸ் பிரதர்கள் சூர்யா... எப்படி பிறந்தார்கள்... என் பிறந்தார்கள் என்பதை   விரிவாய் சொல்லுவதே படத்தின்  ஒன்லைன்..
==============

Maattrraan-2012 மாற்றான்/ படத்தின் கதை.

கன்ஜாயின் டுவின்ஸ்   சூர்யா  (விமலன் மற்றும் அகில்) விமலன் கேரக்டர்.. சாப்ட் கேரக்டர்...ஆகில் கேரக்டர் ஜாலி பீரிக் கேரக்டர்.. இவர்களுடைய தந்தை பேமசாக விற்பனையாகும் எனர்ஜியான் பால் பவுடர் தயாரிப்பின்  தொழில் அதிபர்...ஜாலியாக போய் கொண்டு இருக்கும் வாழ்வில் மொழிப்பெயர்ப்பாளர் காஜல் (அஞ்சலி)உடன் வரும் வெள்ளைக்கார பெண் இருவர் வாழ்விலும் குறுக்கிட... கதை வேறு பக்கம் பயணிக்க ஆரம்பிக்கின்றது... அது என்ன என்பதை  வெண்திரையில் பாருங்கள்.
=========

படத்தின்சுவாரஸ்யங்களில் சில..

கான்ஜாயின்ஸ் டுவின்ஸ் மேல் பரிதாப்ம் வருவதற்கு பதில் காதல் வருதற்கு காரணம்... கார்பரேட் தனமாக வாழ்க்கை இருக்கும் போது பரிதாபம் வராமல் காதல்  கண்டிப்பாக வருகின்றது..  இதுவே குடிசை பகுதியில் இந்த கன்ஜாயின் டுவின்ஸ் இருந்து இருந்தால் பரிதாபம்தான்  வந்து இருக்கும்... ரைட்டர் சொன்னது சரிதான்.. இரண்டு சூர்யாவும் ரசிக்க வைத்து இருக்கின்றார்கள். சூர்யாவின் உழைப்புக்கு ஹேட்ஸ் ஆப்...
மெருகு ஏறுதல் என்றால் என்ன?

பொம்மலாட்டம் படத்தில் நான்கு  நாட்கள் சாப்பிடாமல் முகம் முழுக்க ஒருமென் சோகம் இருப்பது போல இருந்த காஜல்....மெல்ல மெல்லதெலுங்கு உலகம்  தத்து எடுத்துக்கொள்ள செமை பாலிஷாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கின்றார்... இதற்குதான் மெருகு ஏறுதல் என்று அர்த்தம்.... சான்சே இல்லை கொடி இடையுடன் ஆடும் போது என் பெருத்த வயிற்றின் மீது கோபம் கோபமாக வந்து தொலைக்கின்றது....

முதல் பாதி செமை கலக்கல்....முக்கியமாக ஆன்ட்டி உங்க வீட்டுக்காரர் அந்த பெண்ணோட கடலை போட்டுக்கிட்டு இருக்கார் என்று சூர்யா சொல்ல.... எல்லாம்  பேச்சுதான் அது மரவட்டை என்று சொல்லும் இடத்தில் ரைட்டர் குசும்பு எட்டிப்பார்கின்றது..


அதே போல அந்த  பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு பேரும் ஒரே பொண்ணை கல்யாணம் பண்ணா எப்படி என்று யோசிக்கும் இடங்கள் கல கல.....இண்டர்வெல் பிளாக் வரை ஓகே... பட் இரண்டபம் பாதியை இயக்குனர் இப்படி நீட்டி முழங்கி இருக்கவேண்டாம்...
கேமராமேன் சவுந்தர் மற்றும் சூர்யாவின் உழைப்பு...அமேஸ்மன்ட் பார்க் சண்டைகாட்சியில் நிரூபித்து இருக்கின்றார்கள்.. அப்படியே எடிட்டர் ஆன்டனியும் தன் பங்குக்கு பேயாட்டம் ஆடி இருக்கின்றார்...


பாடல்கள் பெரிதாய் தேறவில்லை.. அந்த வெளிநாட்டு டுயட் பாடல்காட்சியும் லொக்கஷேனும் அந்த அருவியும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கின்றது...

சுபாவின் வசனங்கள் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் பல காட்சிகளில் பளிச் ரகம்.

கன்ஜாயின்ஸ் டுவீன்ஸ்  பற்றிய இந்த கதையை அந்த படத்தில் இருந்து சுட்டார்கள் இந்த படத்தில் இருந்து  சுட்டார்கள் என்று இயக்குனரை வலைதளங்களில் போட்டு தாக்கிக்கொண்டு இருக்க, பெருத்த சவாலாக சாருலாதா வேற களம் இறங்க... அதிலிருந்து மாறுபட்ட  திரைக்கதையை கொடுக்கவேண்டும் என்று நீட்டி முழங்கி இருப்பது இடைவேளைக்கு பிறகு  நன்றாகவே தெரிகின்றது....

==============
படத்தின் டிரைலர்..

============
படக்குழுவினர் விபரம்.

Directed by K. V. Anand
Produced by Kalpathi S. Aghoram
Written by K. V. Anand
Subha
Starring Suriya
Kajal Aggarwal
Sachin Khedekar


Music by Harris Jayaraj
Cinematography S. Sounder Rajan
Editing by Anthony
Studio AGS Entertainment
Distributed by Eros International[1]
Thameen Movies (Kerala) [2]
Gemini Film Circuit (Overseas)
Release date(s)
12 October 2012[3]
Running time 172 minutes [4]
Country India
Language Tamil
Telugu
Budget 175 crore 


===============
பைனல்கிக்..
நிறைய பொருட் செலவு.... ஒன்றரை வருட உழைப்பு...,முதல் பாதி ஓகே.நிறைய லாஜிக் ஓட்டைகள். இரண்டாம் பாதியை அப்படியே வைத்து பார்த்தால் படம் டைம்பாஸ்படம்தான்...ஆனால் இரண்டாம் பாதியின் நீட்டி முழங்குதலை......... முக்கியமாக உக்ரேன் மேட்டரை டிரிம் செய்தால்  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்...

=============

குறிப்பு... 

ஆரம்பத்தில் சுகுமார் என்ன சொன்னாருன்னு  பார்த்தோம்.... படம் பார்த்துட்டு அவர் என்ன சொன்னார்ன்னா?

 மாற்றான்' -  இடைவேளை வரை வித்யாசமான ட்ரீட்மென்ட். கே.வி.ஆனந்த் + சுபாவிற்கே உரிய டிவிஸ்ட் அன்ட் டர்ன்ஸ் அடித்து பரபரவென செல்கிறது.  இன்டெர்வெல் பிளாக்கில் நிறைய எதிர்பார்ப்பை தூண்டிவிடும் அளவிற்கு இரண்டாம் பாதி ஈடுகொடுக்காமல் சர்ரென்று தேய்கிறது.

எனிவே.. 'கோ', 'அயன்' என எதைப்பற்றியும் யோசிக்காமல்,  எதையும் எதிர்பார்க்காமல். சுபாவின் சூப்பர் நாவலை சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பார்த்தால் எப்படி இருக்கும் என்கிற மனபக்குவத்தோடு பார்த்ததால் மாற்றானை ரசித்தேன்! 

========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
EVER YOURS...

9 comments:

  1. //5 மணிக்கு எழுந்திருச்சா குளிக்கிறோம். அதையும் தாண்டி எழுந்தா அப்படியே சென்ட் அடிச்சிட்டு கிளம்புறோம்.//
    hahahahahhahahahha :)

    ReplyDelete
  2. கொடி இடையுடன் ஆடும் போது என் பெருத்த வயிற்றின் மீது கோபம் கோபமாக வந்து தொலைக்கின்றது....
    ////

    :)))))

    ReplyDelete
  3. வாவ்... தல .. தன்யனானேன்.. ரொம்ப நன்றி...!!!

    ReplyDelete
  4. வாவ் தல.. தன்யனானேன்... மிக்க நன்றி...

    ReplyDelete
  5. ஜாக்கி, ஒரே பதிவுல உங்க விமர்சனத்தையும் சுகுமார் விமர்சனத்தையும் சேர்த்து கொடுத்துட்டீங்க... இந்த படம் ஹிட் ஆகிரும், ஆனால் சூர்யா கொஞ்சம் கவனமா இருக்கனும், அஜித், விஜய், விக்ரம் மாதிரி இவரும் கதை விசயத்துல சொதப்ப தொடங்கிட்டாரு....

    ReplyDelete
  6. ஜாக்கி, நா உங்க மோஸ்ட் போஸ்ட் எல்லாம் பாத்துடுவேன். ஆல் குட். உங்க கிட்ட பிடிச்ச விஷயம் ஸ்டோரி லைன் புல் லா சொல்லாம பெஸ்ட் விமர்சனம் கொடுக்குறது. யு டிட் தி பெஸ்ட் ஹீயர். நா மூவி பார்த்தேன்... பார்க்கலாம் வகையறா, முதல் பாதிக்காக கண்டிப்பா.

    ReplyDelete
  7. Jackie .. u forgot to add ulaga cinema in post title :-)

    ReplyDelete
  8. Jackie, u forgot to add ulaga cinema in post title :-)

    ReplyDelete
  9. தானைத்தலைவி காஜலின் கை ரெண்டும் பயங்கரமா இருக்கு. வேற படம் போடுங்க ஜாக்கி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner