உப்புக்காத்து...22



 ஒரு சின்ன பிளாஷ் பேக்...

நேற்று ஞாயிறு/17/09/2012) மாலை நாலுமணிவாக்கில் ஏ ஆர் ரகுமான் வீடு இருக்கும் சூப்பராயன் நகரில் இருந்து பவர் ஹவுஸ் பக்கம் போய்க்கொண்டு இருந்தேன். பவர் ஹவுஸ் பஸ் ஸ்டாப்புக்கு முன்னாடி இருக்கும் சமுதாய நலக்கூடம் இருக்கும் வளைவில் மிக மெதுவாக வளைந்தேன். எதிரில் ராங் ரூட்டில் ஆட்டோ... பட்டென்று டிஸ்க் பிரேக் அடிக்க, படிதாண்டா பத்தினியாய் ஒரு இன்ச் கூட நகராமல் என் பைக்கின் முன் சக்கரம் நின்று விட, நின்று இடத்தில் சின்ன கல் இருந்த இருந்தது...,அது தன் மீது ஒரு நொடி கூட நிற்க அனுமதி கொடுக்காத காரணத்தால், நானும் எனது பைக்கும், புவியீர்ப்பு விசைக்கு எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் சொத் என்று ரோட்டில் தேய்த்துக்கொண்டு விழுந்தோம்...


 இடப்பக்க மார்பில் நல்ல உள் அடி... இடது கையில் முழங்கை அருகில் சின்னதாக சில்லரை சிராய்ப்புடன் மார்டன் ஆர்ட் ஓவியம் வரைந்து வைத்து இருக்கின்றது. தோளில் டி ஷர்ட் கிழிந்து போய் விட்டது...டிஷர்ட் மற்றும் பேன்டினால் இடுப்பு மற்றும் தொடையில் மார்டன் ஆர்ட் சிராய்ப்பை உருவாக்க விடாமல் தடுத்து விட்டன. பெண்களுக்காவது பொம்மிஸ் நைட்டி போட்டால்தான் அவர்கள் குடும்ப தலைவியாக உணருவார்கள்.... சின்ன விபத்து நடந்தால் கூட ஆண்கள் எதிர்கால பயத்தை நினைத்து குடும்ப தலைவனாக உணருகின்றார்கள் என்பதே இந்த விபத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்... என் மனைவி டெட்டால் வைத்து காயங்களை துடைக்கும் போது நான் வேதனையில் துடிக்க, யாழினி உதடு வெதும்பி கதறியதுதான் பார்க்க கொடுமையாக இருந்தது.... சட்டென தூக்கி விட்ட பெயர் தெரியாத அந்த இளைஞனுக்கும் செல்லையும் கூலிங்கிளாசையும் பொறிக்கி எடுத்து வந்து என்னிடம் கொடுத்த அந்த சுடிதார் பெண்ணுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....இதுவும் கடந்து போகும்.........:-(


 இரண்டு  வாரங்கள் ஆகி விட்டது  சில்லரை வாங்கி..முழங்கையில்  கிடைத்த விழுப்புண்கள்  மெல்ல ஆறிக்கொண்டு இருக்கின்றன...டாக்டரிடம் அப்போதே காட்டி எதுவும் இல்லை என்று சொல்லி விட்டார்...நெஞ்சில் பெரிய வீக்கமோ அல்லது தொட்டால் உயிர் போகும் வலியோ இல்லை என்றாலும்  திரும்பி படுக்கும் போது எல்லாம் வலி   நெஞ்சில் இருந்து கொண்டே இருக்க, அப்படியே சரியாகி விடும் என்று நம்பிக்கொண்டு இருந்தேன்...ஹஸ்க் என்று தும்பிய போது நெஞ்சில் அடிபட்ட இடத்தில்  வலி உயிர் போனது...  தம்பி  டாக்டர் அலைகள்  பாலா விடம் போன் செய்து சொன்னேன். அண்ணே gh க்கு வந்துடுங்க.. ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்துடலாம் என்றான்.. நண்பர் டாக்டர் புருனோ சிடி ஸ்கேனே எடுத்து பார்த்துடலாம்னு சொன்னார்... பாலாவை சந்திக்க ஜிஎச்க்கு போனேன்.


முதல் முறையாக சென்னை ஜிஎச்க்கு போனேன்..கடலூர் ஜிஎச்சுக்கு எந்த ஜுரம் வந்தாலும் சின்ன வயதில் அம்மா அங்கேதான் அழைத்து போவார்கள்... சென்னை ஜி ஹெச்,மக்களால் மிக பரபரப்பாய் இயங்கி கொண்டு இருந்தது.

 ஒபி சீட்டு போட்டு எக்ஸ்ரே அறைக்கு கூட்டிக்கொண்டு போனான்.. சட்டையை கழட்ட சொன்னார்கள்... கூச்சமாக இருந்தது..சதுரமான ஒரு இரும்பு சட்டத்துக்கு எதிரில் மார்பை  வைத்து மூச்சை  இழுத்து பிடித்துக்கொண்டு  எதிரில் இருக்கும்  இரண்டு கம்பிளை புணர்வது போல கட்டிக்கொண்ட நிற்க சொன்னார்கள்....நின்ன 5 செகன்டில் கிளம்ப சொன்னார்கள்... எக்ஸ்ரே எடுத்து விட்டார்களாம்..


 பத்து நிமிஷத்துல ரிசல்ட் கிடைக்கும் வார்டுல கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு... போயிட்டு வந்துடலாம் என்று சொன்னான்.... ஆர்தோ பில்டிங்கில் ஆறாவது மாடி ஏறினோம்...லிப்ட் இல்லை...பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டு அது... டாக்டர் இது எங்க அண்ண்ன் ஜாக்கிசேகர் என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தான்...டூட்டி டாக்டர் எனக்கு முகமன் கூறினார்.. எனக்கு பெருமையாக இருந்த்து....

சில ரிப்போர்ட் எடுத்து படித்தான்... சிலதை ஹெம்முராபியின் சித்திர வடிவ எழுத்தில்  சில குறிப்புகள் எழுதி வைத்தான்.

கைகளுக்கு கிளவுஸ்  போட்டுக்கொண்டான்.... பாரதி எங்கே.... என்று அழைக்க.. ஒஒரு கிராமத்து பெண்மணிக்கு பின்னால் இருந்து ஏழு வயது  பெண் குழந்தை   ஒன்று முகம் வெளிரி  வெளி வந்தாள்... அவள் கொள்ளை அழகாக  இருந்தால்...உதாரணத்துக்கு விஜயகாந் படத்தில் கருப்பு நிலா ........... என்று ஒரு பெண்  பாடுமே... ஆங் சின்ன வயசு மோனிஷா.... அது போல அந்த பெண் இருந்தாள்... பயத்தில் முகம் வெளிரி இருந்தது.  மெல்ல திரும்பினாள்... ஆம் அவளுக்கு வலக்கையில்  முக்கால் வாசி இல்லை.... பெரிய கட்டு போட்டு இருந்தது.. எனக்கு அந்த பெண் குழந்தையை பார்த்த்து பக் என்று  இருந்தது...


பாரதிக்கு கட்டு பிரிக்கலாம என்று பாலா மெல்ல முன்னேறினான்... வேணாம் எனக்கு கட்டு பிரிக்க வேணாம், என்று கதற ஆரம்பித்தாள்... அம்மா டாக்டர்  கிட்ட சொல்லுங்கம்மா எனக்கு  கட்டு பிரிக்க வேணாம் என்று கதற ஆரம்பித்தாள்.. குழந்தையின்  பொறுக்க முடியாத வலி தந்த பயத்தில் கட்டில்  கை வைக்கும் முன்பே அவள் கதற ஆரம்பித்தாள்...

பாலா மெல்ல அந்த குழந்தையிடம் முன்னேறினான்... வலிக்கவே வலிக்கமா பாரதிக்கு இப்ப கட்டு பிரிக்க போறேன். என்றான். துண்டான கையின்  நுனிப்பகுதியில் கட்டு மேல் கை வைத்ததுதான் தாமதம் வீல் என்று அழ ஆரம்பித்து விட்டாள்.. அப்பா  அப்பா நீயாவது சொல்லுப்பா என்று அவள் அழுது ஆராற்ற.. அந்த தகப்பன் செய்வதறியது நின்றுக்கொண்டு இருந்தான்...


மெல்ல கட்டை அவிழ்க்க அவிழ்க்க  கை துண்டித்து   தையல் போட்ட இடத்தில் ஒட்டிக் கொண்டு இருந்த பஞ்சை அவன்  நெருங்க.. அவள் வேனாம் போ எனக்கு கட்டு மாத்த வேணாம் என்று கதறிக்கொண்டு இருந்தாள்... பாலா  மெல்ல பஞ்சை எடுத்தான்...வலக்கையில் ஊசி போடும்  இடத்துக்கு கீழே ஒரு இஞ்சு அளவுக்குதான் கை இருந்தது...

 அரிசி மூட்டையின்  நுனிப்பகுதியில்   தைத்து இருப்பது போல.... தையல் போட்டு இருந்தார்கள்... தைத்த நரம்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக நீட்டிக்கொண்டு இருந்தது... நுனிப்பகுதி கன்னிப்போய் இருந்தது....பாலா அந்த இடத்தை  தொட்டதும்  உயிர் போகும் வலியில் துடித்தாள்...எனக்கு அந்த கதறல் கண்ணிரை வர வழைத்தது..... போ போ எட்ட போங்க.. ஐயோ அம்மா  வலிக்குதே... அம்மா வேணாம்னு சொல்லும்மா என்று வலியில் குழந்தை கதறியது...

மெல்ல கன்னிப்போன இடத்தை தொட்டு அழுத்தினான்... சீழ் ஏதாவது வருகின்றதா என்று செக்  செய்தான்... பஞ்சில்  டிங்சர் நனைத்து காயத்தை சுற்றி ஒற்றி எடுத்தான்.. காயத்தில் நன்றாக டிஞ்சர் பட  ஒற்றி எடுத்தான்... அவள் எழுப்பிய  வலி கதறலில் வார்டில் இருக்கும் எல்லோரும் எங்கேயும் நகராமல் பாரதியை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்...


குழந்தை கையை தொங்க போட்டுக்கொண்டு இருந்தால் ரத்த ஓட்டம் கீழே வந்த இது போல கன்னி போகும், அதனால் கையை சில மணி நேரமாவது  மேல் நோக்கி வைத்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு புது பஞ்சை காயத்துக்கு மேல் வைத்து கட்டு போட ஆரம்பிக்க திரும்பவும் குழந்தை  அழ ஆரம்பித்தது... வார்டில் அட்மிட் ஆகி இருக்கும் சின்ன பையன்கள் அவள் எதிரில் வந்த நிற்க.. அவள் அழுகையை அவன்கள் பார்த்து விட்டால் பின்பு தன்னை வெறுப்பு ஏற்றுவார்கள் என்று டாக்டர் அவன்களை வெரட்டுக்கு என்று அந்த கதறிலின் ஊடே கத்திக்கொண்டு இருந்தாள்... கட்டை  அவிழ்த்துக்கொள்ளாமல்  இருக்கு  முடிச்சுகளை நன்றாக இருக்கி போட்டு விட்டு, சில குறிப்புகள் எழுதிக்கொண்டு இருந்தான்... பதினைந்து நிமிடம் கழிந்து பாரதி அவனிடம் வந்து விளையாடிக்கொண்டு இருந்தாள்....

நானும் அவனும் மாடிப்படியில் இருந்து கீழே இறங்க  ஆரம்பித்தோம்....எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது சான் எதுவும் பேசவிவ்லை...மவுனித்த படி நடந்தேன்.. அவனே ஆரம்பித்தான்.. வேலூர் பக்கம் பாரதிக்கு.... அவங்க அப்பா   அம்மா  இரண்டு பேரும் சென்னையில் இங்க கொலுத்து வேலை செஞ்சி பணம் அனுப்பறாங்க.... குழந்தையை  தன் அப்பா அம்மா கிட்ட பார்த்துக்க  சொல்லிகிட்டு இங்க ரெண்டு பேரும்  பாரதிக்காக உழைக்கறாங்க.....

 இரண்டு வாரத்துக்கு முன்ன குழந்தை விளையாடும் போது தவறி விழுந்து   வலக்கை பிராக்சர் ஆயிடுச்சி...   தன் புள்ளைகிட்ட சொன்னா திட்டுவானேன்னு   பயந்து போன பாரதி தாத்தா... அக்கம் பக்கத்துல சொன்னவங்க பேச்சை  கேட்டு புத்தூர் மாவு கட்டு போட்டு இருக்காங்க...மற்று முறை மருத்துவத்துல சிலருக்கு செட் ஆகும் சிலருக்கு  செட் ஆகாது....நாலு நாள் கழிச்சி  .  பிள்ளையா பெற்றோர் பார்க்க போனப்பதான் விஷயம் தெரிஞ்சி ஜிஎச்சக்கு தூக்கிட்டு வந்தாங்க...

கட்டை அவிழ்த்து பார்த்தா....கை அழுகி போய் இருக்கு...  ஒன்னும் பண்ண முடியலை பாரதி உயிரை காப்பாற்ற கை முட்டிக்கு மேல ஒரு இஞ்சு விட்டு கட் பண்ணவேண்டியதாயிடுச்சி...  இதை பார்த்த பாரதி தாத்தா தன்னால தன் பேத்தி கை போயிடுச்சேன்னு ஹார்ட் அட்டாக் வந்து இதே ஜிஎச்ல அட்மிட் ஆயி இருக்காரு என்று   சொன்ன போது... எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...

 ஆனா மாசத்துக்கு இப்படி ஒரு கேஸ்  கண்டிப்பா ஜிஎச்சுக்கு வந்து கொண்டுதான் இருக்கு என்ன செய்ய... புத்தூர் கட்டு போட போகாதிங்கன்னு சொன்னா எங்க கேட்கறாங்க.,.. அதே வார்டுல ஸ்டீபன்னு ஒரு சின்ன பையனை பார்த்திங்க இல்லை.. அந்த பையனுக்கு புத்தூர் கட்டு போட்டு இருக்காங்க.. ஆனா கை மடக்கவே முடியலை வலைஞ்ச பொசிஷன்லே அந்த கையை வச்சிகிட்டு அந்த பய திரியறான்... அவனுக்கு இன்னும் ஆப்பரேஷனுக்கு டேட் இன்னும் பிக்ஸ் பண்ணலை என்றான்...புத்தூர் கட்டு போடறவன் எங்க எம்பிபிஎஸ் முடிச்சான்... அவனுக்கு என்ன தெரியும்..?.எதோ  சில பேருக்கு சரியாகி இருக்கும்.. ஆனால்  எல்லாருக்கும் செட் ஆகாது... அப்படியே சரியானாலும் ஷேப் கோனால இருக்கும் .. எங்க.... சொன்னா மக்கள் கேட்டாதானே? என்று ஆத்திரத்தில் அலுத்துக்கொண்டான்..  எக்ஸ்ரே ரிச்ல்ட் வாங்கி கொண்டு சீனியர் டாக்டரிடம்  டிஸ்கஸ் செய்தான்... அண்ணே ஒன்னும் இல்லை. கம்ளீட் ரெஸ்ட் எடுத்தா போதும்.... ஒரு மாசத்துக்கு வெயிட் மட்டும் தூக்காதிங்க.. என்று எக்ஸ்ரேவை  கையில்  திணித்தான்...


புகை கிளம்பிய படி ஆம்புலன்ஸ் ஒன்று கடக்க, அது எழுப்பி புழுதியில் எனக்கு தும்பல் வந்தது.... வலி இருந்தது... என்ன அண்ணே வலிக்குதா என்றான்...? பாரதி கதறிய வலியை விட எனக்கு இந்த வலி பெரியதாய் தோன வில்லை என்பதால் அவனிடம் வலி இல்லையே என்றேன்.
அவனிடம்  விடைபெற்று  வண்டியை ஸ்டார்ட் செய்தேன்...பாரதியின் எதிர்காலத்தை நினைத்து பார்த்தாலே எனக்கு  மனம் மிக வலித்தது...


சென்ட்ரல்  எதிரில் இருக்கும் சிக்னலில் வண்டியை நிறுத்தினேன்.. சென்ட்ரல் நோக்கி ரயில் பிடிக்கும் அவசரத்தில் மக்கள் ஓடிக்கொண்டு இருந்தார்கள்.. வலப்பக்கம் திரும்பி அரசு மருத்துவமனையை பார்த்தேன்....100 கோடியில் புணரமைக்கப்பட்டு  மருத்துவமனை கட்டிடம் நிறைய வேதனைக்கதைகளை  சுமந்துக்கொண்டு ,எதிரில் ரயில் பிடிக்க பரபரப்பாய் ஓடும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

 

30 comments:

  1. அரசு மருத்துவமனையில் மற்றுமொரு ஈரமான மனிதனாக அலைகள் பாலாவை பார்க்கிறேன்..படிக்க கனமாக இருக்கிறது ஜாக்கி.,.. பாரதி நலம் பெற வேண்டும்...நன்றி பாலா...உங்கள் மருத்துவ சேவை தொடரட்டும்...

    ReplyDelete
  2. முருகா, வலிகளும் வேதனைகளும் யாருக்கும் தராமல் இருக்கக் கூடாதா! ச்சே! என்னடா கடவுள் நீ!

    ReplyDelete
  3. ஜாக்கி...நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்..ஆறாம் மாடியில் தான் நம்ம டாகடர் புருனோவின் அலுவலகம் உள்ளது.

    ReplyDelete
  4. மனிதர்கள் பக்குவ படுவது இரண்டு இடங்கள். ஒன்று சுடுகாடு மற்றொன்று மருத்துவமனை .

    ReplyDelete
  5. Very touching post Jackie. This is what I want from you.

    ReplyDelete
  6. வேதனையான தருணம்

    ReplyDelete
  7. என் நண்பரின் கால் பரிபோன போதும் இதே நிலையை அனுபவித்துள்ளேன்
    கண்டிப்பா அண்ணே உங்களின் மனதின் வேதனை

    நிறைய வேதனைக்கதைகளை சுமந்துக்கொண்டு இருக்கின்றது GH ஆனால் வெளியே வந்தவுடன் நாமும் மக்களுடன் ஓட தொடங்கிவிடுகிறோம்

    ReplyDelete
  8. Take care Jackie. A Hospital experience is always a life changing one.

    ReplyDelete
  9. தங்கள் எழுத்தின் மூலம் சம்பவ இடத்திற்கே வாசகர்களை அழைத்து செல்கிறீர்கள்

    ReplyDelete
  10. இதுவரையிலான பதிவுகளிளேயே இதுதான் உங்கள் உள்ளத்திலிருந்து உந்தப்பட்ட பதிவாய் கருதுகிறேன். காரணம் பாரதியின் இடத்தில் உங்கள் மகளை பொருத்திப்பார்த்துஇருகிறீர்கள் என்று நினைக்கிறேன், எனவேதான் இந்தப்பதிவு மிகவும் நெகிழ்வாயும் நெஞ்சைத்தொடுவதாயும் உள்ள்து.

    ReplyDelete
  11. //100 கோடியில் புணரமைக்கப்பட்டு மருத்தவமனை கட்டிடம் நிறைய வேதனைக்கதைகளை சுமந்துக்கொண்டு ,எதிரில் ரயில் பிடிக்க பரபரப்பாய் ஓடும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.//


    ReplyDelete
  12. ///100 கோடியில் புணரமைக்கப்பட்டு மருத்தவமனை கட்டிடம் நிறைய வேதனைக்கதைகளை சுமந்துக்கொண்டு ,எதிரில் ரயில் பிடிக்க பரபரப்பாய் ஓடும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது///

    No more words to explain..

    ReplyDelete
  13. மிகச் சிறந்த பதிவுண்ணே. செண்ட்டிமெண்டுகளுக்குள் கட்டுப்படாத நானே கூட சற்று கலங்கி விட்டேன்.

    ReplyDelete
  14.     படிக்கும் போதே நெஞ்சம் கணக்கிறது! பகிர்வுக்கு மிக்க நன்றி sir!

    ReplyDelete
  15. ஓரு வலி ஒரு மனிதனை செதுக்கு கிறது.பல பாடங்களை கத்துதருகிறது.

    ReplyDelete
  16. கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்... நெகிழ்ச்சிக்கும், நெஞ்சை தொடுவதோடு மட்டுமில்லாமல்.... புத்தூர் கட்டு போட வேண்டாம் என்ற விழிப்புனர்வை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்று வேதனையோடு எழுதியது இது...

    நன்றி.

    ReplyDelete
  17. நேற்றுதான் நானும் பைக்கில் விழுந்து காலில் சிறு சிராய்ப்போடு தப்பித்தேன்! புதுசா இப்போதான் கியர் வண்டி ஓட்ட ஆரம்பித்து இருக்கிறேன்! பாரதியின் வலி இங்கே கண்ணீர் வரவழைத்தது!

    ReplyDelete
  18. Hospital experience will show te real world
    It wil tel te cruel story - most of te times
    Touching post
    U r back after a while

    ReplyDelete
  19. மனசு ரெம்ப வலிக்குது சார். நீங்க நின்னு பார்த்த மாதிரி என்னால் நிக்க முடியுமோ தெரியவில்லை. என்ன தான் சொன்னாலும் டாக்டர்கள் உண்மையிலேயே தெய்வங்கள் சார்.

    ReplyDelete
  20. GH இல் இல்லாத வசதிகளே இல்லை.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு எல்லாம் மேலானது, அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் கருவிகள், எல்லாம் இருந்தும் வரும் மக்களிடம் நல்ல பேர் இல்லையே? என்ன காரணம்? வரும் மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப பணி செய்ய ஆட்கள் (டாக்டரகளையும் சேர்த்துதான்) இல்லாததுதான்!!!!இது நான் சொல்லல. அங்குள்ள எல்லோரும் சொன்னது!!! தெரிந்தவர்கள் இருந்தால் எல்லா சிகிச்சையும் முறையாக கிடைக்கும்....அது வரும் எல்லா நோயாளி(மக்கள்)களுக்கு என்று கிடைக்குமோ?

    ReplyDelete
  21. ஜாக்கி.,.. பாரதி நலம் பெற வேண்டும்...நன்றி பாலா...உங்கள் மருத்துவ சேவை தொடரட்டும்...

    ReplyDelete
  22. ஜாக்கி.,.. பாரதி நலம் பெற வேண்டும்...நன்றி பாலா...உங்கள் மருத்துவ சேவை தொடரட்டும்...

    ReplyDelete
  23. Jackie,

    I am happy to hear that you are doing well, despite the accident.

    My heart is very heavy after reading about Bhratahi. I pray that she recovers well and continue to lead a successful life despite her handicap.

    ReplyDelete
  24. Jackie,

    I am happy to hear that you are doing well, despite the accident.

    My heart is very heavy after reading about Bhratahi. I pray that she recovers well and continue to lead a successful life despite her handicap.

    ReplyDelete
  25. ”ஒரு விபத்தின் காயங்களும் சில மனித உணர்வுகளின் இரணங்களும்” இப்படியும் தலைப்பு இருந்திருக்கலாம் ஜாக்கி சார்.

    பல தடவை நானும் சென்னை பொது மருத்துவமனைக்கு சென்றிடுக்கிறேன் அங்குள்ள துயரங்களின் இரணங்கள் சொல்லி(ல்) மாளாது, குற்றவாளிகளை தண்டிக்க அங்கு ஒரு மாதம் சேவை செய்ய சொன்னால் போதும் குற்றங்கள் குறைவது திண்ணம்.

    TAKE CARE OF JAAKKI SAAR.

    ReplyDelete
  26. Erandu manam vendu, Valikal sumakka..
    Still ur living to understand others pains and reliefs..
    Great JACKIE !!!!

    ReplyDelete
  27. பாலா உங்கள் மருத்துவ பணி மென் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner